தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து நிவாரணம் பெற ஆளுமை குறைகள் மற்றும் அகம்பாவம் ஆகியவற்றைக் களைவது மிகவும் முக்கியமானது

தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்கள்
மற்றும் ஆளுமை குறைகள் இவற்றுக்கு உள்ள சம்பந்தம்

ஆளுமை குறைகளால் ஒருவரின் மனோதேஹத்தில் சூட்சும காயம் ஏற்படுகிறது. சூட்சும காயத்திலிருந்து ரஜ அதிர்வலைகள் வெளிப்படுகின்றன. ரஜ அதிர்வலைகளால் தீய சக்திகள் உடனே அவரிடம் ஈர்க்கப்படுகின்றன. அதனால் தீய சக்திகள் சுலபமாக அவருக்குள்ளே சென்று நீண்ட காலம் இருக்க முடிகிறது, அதோடு தனக்கென்று ஒரு ஸ்தானத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. அதனால் அவரிடம் ஆளுமை குறைகள் என்பது அவரின் உடலில் தீய சக்திகள் ஏற்படுத்திய ஸ்தானங்கள் ஆகும். – திரு ராம் ஹோனப், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா.

ஆளுமை குறைகள் எவ்வளவு
அதிகமாக உள்ளதோ அந்த அளவிற்கு
தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்களும் அதிகமாக இருக்கும்

ஆளுமை குறைகள் அதிகமுள்ள நபரிடம் தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்களும் அதிக அளவு இருக்கும், உதாரணத்திற்கு ஒருவரிடம் எரிச்சல்படும் சுபாவம் இருந்தால் தீய சக்தி அவரை சிறு விஷயங்களுக்கும் எரிச்சல்பட வைக்கும். அதனால் அவருக்கு மனஸ்தாபம் ஏற்பட்டு மனம் சஞ்சலப்படுகிறது, நம்பிக்கை இழக்கிறது, மற்றவரிடமிருந்து தூர விலகுகிறது.

ஆளுமை குறைகள் உள்ளவருக்கு தீய
சக்திகளால் ஏற்படும் கஷ்டங்களை குறைப்பது கடினம்

தீய சக்திகளின் பாதிப்பு உள்ளவர்களில் 60 முதல் 70 சதவிகிதம் வரை அவர்களிடமுள்ள ஆளுமை குறைகளால் அதிக அளவு கஷ்டங்கள் ஏற்படுகின்றன. (சிலருக்கு, ஸமஷ்டி ஸாதனை செய்வதாலும் அல்லது அதிருப்தி அடைந்த மூதாதையராலும் அதிக அளவு கஷ்டங்கள் ஏற்படுகின்றன.) ஆளுமை குறைகள் அதிகமுள்ளவருக்கு, தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்கள் சுலபத்தில் குறைவதில்லை. ஒருவரிடமுள்ள ஆளுமை குறைகளால், தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து நிவாரணம் பெற செய்யப்படும் நாமஜபம் போன்ற உபாயங்கள் அந்த அளவிற்கு பலனைத் தருவதில்லை.

ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட ஆளுமை
குறைகள் மற்றும் அகம்பாவத்தைப்
போக்குதல் மிகவும் முக்கியமானது

1. ஸத்யயுகத்தில் மனித குலத்திடம் ஆளுமை குறைகள் மற்றும் அகம்பாவம் இல்லை. த்ரேதா மற்றும் த்வாபர யுகங்களில் மனிதர்களின் ஆளுமை குறைகள் மற்றும் அகம்பாவம் அதிகரிக்க ஆரம்பித்தன என்றாலும் ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருந்தன. இன்று கலியுகத்தில் மனித குலத்தின் ஆளுமை குறைகள் மற்றும் அகம்பாவம் பெருமளவு அதிகரித்திருப்பதால் பலருக்கு ஆன்மீக ஸாதனையில் முன்னேற்றம் ஏற்படுவது இல்லை.

2. கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம், ஹடயோகம், குண்டலினியோகம் போன்ற எந்த ஒரு யோக வழியிலும் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட ஆளுமை குறைகள் மற்றும் அகம்பாவத்தை குறைப்பது மிகவும் அவசியம். ஆளுமை குறைகள் மற்றும் அகம்பாவம் சிறிதளவு குறைந்த பின்பே உண்மையில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட ஆரம்பிக்கிறது.

சுருக்கமாக ஸாதகர் எந்த யோக வழியைப் பின்பற்றினாலும் விரைவான ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட முதலில் அவர் ஆளுமை குறைகள் மற்றும் அகம்பாவத்தை குறைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தீய சக்திகள் கொடுக்கும்
கஷ்டங்களின் சில லக்ஷணங்கள்

உடல்ரீதியான லக்ஷணங்கள்

காரணமே இல்லாமல் சோர்ந்து போவது (பிராணசக்தி குறைவது), உடலில் வேதனை ஏற்படுவது, தலை பாரமாவது, மயக்கம் வருவது, வயிற்றை கலக்குவது, பசி ஏற்படாமல் இருப்பது, உடலின் பல அங்கங்களில் (தலை, வயிறு போன்றவை) வியாதி ஏற்படுவது மற்றும் தீவிரமாவது, கழுத்தை நெரிப்பதாக உணர்வது, மார்பில் அழுத்தத்தை உணர்வது, தலைமுடியில் அடிக்கடி பேன் தொந்தரவு ஏற்படுவது, உடலில் கொப்புளங்கள் ஏற்படுவது, மருந்துகள் உட்கொண்டும், பத்தியங்கள் இருந்தும் கூட பல மாதங்களாக, வருடங்களாக நோய் குணமாகாமல் இருப்பது போன்றவை.

மனோரீதியான லக்ஷணங்கள்

காரணம் இல்லாமல் கோவம் ஏற்படுதல் மற்றும் எரிச்சல் ஏற்படுதல், மனதில் எதிர்மறை எண்ணங்கள், நம்பிக்கையின்மை ஏற்பட்டு மனம் நிலைகொள்ளாமல் தவித்தல், எந்நேரமும் மன அழுத்தத்தை உணர்வது; அதீத பயம் ஏற்படுவது; உற்சாகமில்லாமல் இருப்பது; ஸாதனையில் வழிநடத்துவோர், தெய்வங்கள் மற்றும் ஸாதனை சம்பந்தமாக விகல்பங்கள் தோன்றுவது; ஸேவை மற்றும் ஆன்மீக உபாயம் செய்வதற்கு முற்படும்போது உடனே பசியுணர்வு உண்டாகி உண்பதற்காக செல்லுவது அல்லது வேறு ஏதாவது செய்ய முற்படுவது; அதனால் ஸேவை அல்லது ஆன்மீக உபாயம் செய்யாமல் போவது; சுய விருப்பங்கள் மற்றும் மற்றவர்களிடம் நமக்குள்ள எதிர்பார்ப்புகள் ஆகியவை திடீரென்று அதிகமாதல் போன்றவை.

புத்தி சம்பந்தமான லக்ஷணங்கள்

திடீரென்று தலை மரத்தது போன்ற உணர்வு ஏற்பட்டு சிந்தனை செய்ய முடியாமல் போவது, குழப்பம் ஏற்படுவது, முன்னால் இருப்பவர் பேசுவதை புரிந்து கொள்ள முடியாமல் போவது, முடிவெடுக்கும் திறன் இருந்தும் முடிவு எடுக்க முடியாமல் திணறுவது அல்லது சரியில்லாத முடிவை எடுப்பது, அதன் மூலம் கஷ்டங்கள் ஏற்படுவது போன்றவை.

குடும்பம் சம்பந்தமான லக்ஷணங்கள்

எப்பொழுதும் சின்ன சின்ன விஷயங்களுக்காக குடும்பத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு ஒருவரோடு ஒருவர் மனக்கசப்பு, விரோதம், சந்தேகம் கொள்ளுதல்; குடும்பத்தில் சிலர் போதைக்கு அடிமையாதல்; குடும்பத்தில் யாருக்காகவாவது மாறி மாறி வியாதி ஏற்படுதல்; குடும்பத்தினருக்கு சிறு விபத்துக்கள் ஏற்படுதல்; சிலருக்கு அகால மரணம் சம்பவித்தல், தொடர்ந்து இறப்பு நிகழ்தல் போன்றவை.

மற்ற லக்ஷணங்கள்

காரணமில்லாமல் சிறு குழந்தைகள் ஏதாவது ஒரு திசை நோக்கி பார்த்து பயப்படுவது, அடிக்கடி பயங்கர கனவுகள் ஏற்படுவது, ஸாத்வீக மனிதர்கள் மத்தியில் இருக்க வேண்டாம் என தோன்றுவது, காரணமில்லாமல் உடைகள் கிழிவது அல்லது தீப்பற்றி எரிவது, ஏதாவது ஒரு ஸ்தோத்திரம் படிக்கும்போது காரணமில்லாமல் கொட்டாவி ஏற்படுவது, திடீரென்று ஸாதனை செய்ய வேண்டாம் எனத் தோன்றுவது போன்றவை.

ஸாதகர்களின் வ்யஷ்டி ஸாதனையுடன் கூட ஸமஷ்டி ஸாதனைக்கான முயற்சியும் ஆழ்ந்த ஆர்வத்துடன் பக்தியுணர்வுடன் நடப்பதற்கு அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கி எல்லா விதங்களிலும் ஆதார தூணாக விளங்குபவர் ஸனாதனின் ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே ! ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே அவர்களின் வ்யஷ்டி ஸாதனை சம்பந்தமான வழிகாட்டுதல் மற்ற ஸாதகர்களுக்கும் உதவும் என்று தொகுத்தளித்துள்ளார் டாக்டர் மாயா பாடீல் ! படியுங்கள், பயனடையுங்கள் !

அதற்கான லிங்க் : ஸத்குரு ராஜன் ஷிண்டே அவர்கள், ஆளுமை குறைகளைக் களைவதற்காக ஸாதகர்களுக்கு அளித்த வழிகாட்டுதல் – 1 

தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு பெறவும் நம் ஆளுமை குறைகளைக் களைந்து அஹம்பாவத்தைப் போக்கவும் ஆன்மீக பயிற்சி செய்வது மிகவும் அவசியமாகிறது. கலியுகத்தின் இப்போதைய காலத்திற்கேற்ற எளிமையான விரைவில் பயன் தரும் ஆன்மீக பயிற்சி ‘குருக்ருபாயோகம்’ ஆகும். பக்தியோகம், கர்மயோகம் மற்றும் ஞானயோகம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த உத்தம யோகம் இது. குருவின் அருள் இல்லாமல் இறைவனை அடைய முடியாது. அத்தகைய குருவின் மகத்துவம் மற்றும் குருக்ருபாயோகத்தின் மகத்துவம் பற்றி

தெரிந்து கொள்ள பார்வையிடுங்கள் : குரு

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘ஏன் மற்றும் எந்த நாமஜபத்தை செய்ய வேண்டும்?’

Leave a Comment