ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸ்தாபகரான ஸச்சிதானந்த பரபிரம்ம (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே அவர்களின் குருபூர்ணிமா செய்தி! (2024)

காலத்திற்கேற்றபடி குரு தத்துவம் எதிர்பார்க்கும் குரு தக்ஷிணை என்னவென்றால் குருபூர்ணிமா அன்று ஹிந்து தர்மத்திற்காகவும் ஹிந்து ராஷ்ட்ரத்திற்காகவும் உடல், மனம் மற்றும் செல்வத்தை தியாகம் செய்ய ஸங்கல்பம் எடுத்துக் கொள்ளுதல் ஆகும்.

குருபூர்ணிமா என்பது பகவானிடம் வெளிப்படுத்தப்படும் நன்றியுணர்வு மற்றும் தனக்குள் அதிகப்படுத்தும் சைதன்யம்!

சேவை செய்யும்போது ‘இது பகவானின் சைதன்யத்தாலேயே நடைபெறுகிறது’, என்ற ஆன்மீக உணர்வைக் கொள்ளும்போது மனதில் வேறு சந்தேகங்கள் விகல்பங்கள் எழாது.

குருபூர்ணிமா என்பது பரபிரம்ம ஸ்வரூபமான ஸ்ரீகிருஷ்ணனின் ஆதிசக்தியின் பூஜை !

சைதன்யம் எங்கும் நிறைந்துள்ளது மற்றும் அதுவே குரு ஸ்வரூபத்தில் செயல்படுகிறது. குருபூர்ணிமா என்பது அதனின் காரியம் அதுவே நடத்திக் கொள்ளப் போகிறது. நாம் வெறும் பார்வையாளர்களே.