ஹிந்து கலாச்சாரப்படி பிறந்த நாள் கொண்டாடுவதன் மகத்துவம்

தற்போது நாம் அனைவரும் எவ்வாறு பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் முழு பலனைப் பெற பிறந்த நாளை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

 

பிறந்த நாளைக் கொண்டாடுவதென்பது, கடந்த வருடத்தில் ஆன்மீக ஸாதனை செய்ய முடிந்ததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தி, வரப் போகும் வருடத்தில் இறையருள் வேண்டி பிரார்த்தனை செய்வதாகும். ஆங்கில தேதிப்படி கொண்டாடாமல் ஹிந்து பஞ்சாங்கப்படி, அதாவது அவரவர் பிறந்த நட்சத்திரப்படி பிறந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம் அதிக பயன் ஏற்படுகிறது. ஹிந்து பஞ்சாங்கப்படியான தேதியில் பிரம்மாண்டத்திலுள்ள அதிர்வலைகளும், பிறந்த நாள் கொண்டாடுபவரின் அதிர்வலைகளும் ஒத்துப் போகின்றன. அன்றைய தினம், பெரியவர்கள், உறவினர்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கும் நல்லாசிகளால் அதிகபட்ச நன்மை ஏற்படுகிறது. அன்றைய தினம் பிரம்மாண்டத்திலுள்ள அதிர்வலைகள் அன்று பிறந்தவரின் தன்மைகளோடு ஒத்துப் போவதால் அன்று செய்யப்படும் ஸாத்வீக சைதன்யம் நிரம்பிய சடங்குகள் அந்நபரின் ஆழ்மனதில் பதிகின்றது. அதனால், வருங்காலத்தில் ஏற்படக் கூடிய எந்த கஷ்ட நஷ்டத்தையும் தங்குதடையையும் எதிர் கொள்ளக் கூடிய ஆத்மபலம் பெருகுகிறது.

மேற்கத்திய வழக்கப்படி ஆங்கில தேதியில், கேக் மீது மெழுகுவர்த்தி ஏற்றுவதால், சுற்றுப்புறச் சூழலில் கருப்பு அதிர்வலைகள் பரவி, அச்சூழலை மாசுபடுத்துகின்றன. கத்தியைக் கொண்டு கேக்கை வெட்டுவதால் தமோ குண (தீய) அதிர்வலைகள் அதைச் சுற்றி ஏற்படுகின்றன. அதனால், கேக்கை வெட்டுபவரின் மீது தமோ குண அதிர்வலைகள் சூழ்ந்து கொள்கின்றன. அவருடைய புத்தியைச் சுற்றி கருப்பு ஆவரணம் ஏற்படுகிறது. தமோகுண கருப்பு ஆவரணத்தால் மாயாவி அதிர்வலைகள் வெளிப்படுகின்றன. அதனால், கேக் வெட்டுபவருக்கு ஒரு மாயை நிறைந்த சுகம் ஏற்படுகிறது. அதன் மூலம் தீய சக்திகள் அவரின் மனம், புத்தியை தாக்குகின்றன. நமது ஹிந்து தர்மப்படி எப்போதும் நல்ல நாளன்று விளக்கை ஏற்றுவதே உகந்த, மங்களகரமான, தெய்வீக செயலாகும். எப்போதும் விளக்கை ஊதி அணைக்க மாட்டோம்.

 

1. சம்பந்தப்பட்ட உடல்

ஆங்கில வழக்கப்படி : உடல் மட்டும்
ஹிந்து வழக்கப்படி  : உடல் – 5%, சூட்சும உடல் – 95%

 

2. உடலின் மேல் ஏற்படும் விளைவு

ஆங்கில வழக்கப்படி: உடலோடு மட்டும் சம்பந்தப்பட்டிருப்பதால் ஸாத்வீக அதிர்வலைகளின் பயன் மிகக் குறைவே. அதனால் ரஜ-தம ஆவரணம் குறையாது. ஹிந்து வழக்கப்படி : சூட்சும உடலின் சாத்வீகத் தன்மை அதிகரிக்கின்றது.

ஹிந்து வழக்கப்படி : அன்றைய தினம் முழுவதும் சாத்வீக அதிர்வலைகள் தொடர்ந்து கிடைப்பதால் ஸ்தூல உடலின் சுத்தி ஏற்படுகிறது. ஆரத்தி எடுப்பதன் மூலம் சுஷும்னா நாடி விழிப்படைகிறது. 60% மேலே ஆன்மீக நிலை எட்டியவருக்கு அன்று முழுவதும் சுஷும்னா நாடி விழிப்படைந்த நிலையிலேயே இருக்கிறது.

 

3. ஹிந்து கலாச்சாரப்படி பிறந்த நாளை கொண்டாடும் முறை

1. எண்ணெய் தேய்த்து ஆடைகளோடு மங்கள ஸ்நானம் செய்ய வேண்டும். ‘கங்கையின் புனித நீர் என் உடல் மற்றும் மனதை தூய்மைப்படுத்துகிறது’ என்ற  உணர்வோடு குளிக்க வேண்டும்.

2. குளித்த பின் புத்தாடைகள்  உடுத்த வேண்டும்.

3. பெற்றோருக்கும் பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்ய வேண்டும்.

4. குலதெய்வத்திற்கு  உள்ளார்ந்த பக்தியோடு அபிஷேகம் மற்றும் பூஜை செய்ய வேண்டும்.

5. ஆரத்தி செய்யும் போது செய்பவர் மற்றும் செய்யப்படுபவர் ஆகிய இருவரும், ‘எங்கள் மூலமாக இறைவனே இச்செயலை செய்து எங்களுக்கு அருளாசி வழங்குகிறார்’ என்ற பக்தியுணர்வைக் கொள்ள வேண்டும். ஆரத்தி முடிந்தவுடன் அக்ஷதையை தலையிலிட வேண்டும்.

6. பரிசு கொடுப்பவர், ‘நான் கொடுக்கிறேன்’ என்ற அகம்பாவத்தை விட்டு விட்டு ப்ரதிபலனை எதிர்பாராமல் கொடுக்க வேண்டும். பரிசு வாங்குபவரும் ‘இது இறைவனின் வரப்ரசாதம்’ என்ற உணர்வோடு வாங்க வேண்டும். அப்பொழுது தான் கொடுக்கல்-வாங்கல் கணக்கு வழக்கு ஏற்படாது.

7. குளிக்கும் போது உடுத்திய உடையை ஒரு பக்தருக்கோ, நாடு மற்றும் தர்மத்திற்காக உழைப்பவருக்கோ தானமாக கொடுக்க வேண்டும். இந்த விதமாக நம் உன்னத பாரத கலாச்சாரப்படி பிறந்த நாள் கொண்டாடுவதன் மூலம் அதிக நன்மை விளைகிறது.

தகவல் : ஸனாதனின் தமிழ் நூல் ‘குடும்ப, தார்மீக மற்றும் சமூக காரியங்களின் சாஸ்திரம்’

 

Leave a Comment