கூடாரைவல்லி

மார்கழி, ஆண்டாள், திருப்பாவை என்றாலே ஸ்ரீவில்லிபுத்தூர்தான் நம்முடைய நினைவுக்கு வரும். அங்கு மார்கழி மாதம் முழுவதுமே சிறப்பான முறையில் விழாக்கோலம் பூண்டிருந்தாலும், மார்கழி மாதம் வரும் கூடாரைவல்லித் திருநாள் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் கருவறை மண்டபத்துக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில், சிறப்பான அலங்காரங்களுடன் ஆண்டாள் நாச்சியார் திருக்காட்சி அளிப்பார். அழகுத் தமிழில் அருமையான பாசுரங்களைக் கொண்டு அரங்கனை ஆண்ட ஆண்டாளை அன்றைய தினம் சேவிப்பது திருமகளை நேரிலேயே தரிசிப்பதற்கு நிகரானது. இந்த விசேஷ நாளில் ஆண்டாள் பாடியதைப்போலவே மொத்தம் 108 பாத்திரங்களில் அக்காரவடிசலும், வெண்ணெயும் வைக்கப்பட்டிருக்கும். கூடாரைவல்லி திருநாளின் சிறப்பு அம்சமே இந்த அக்காரவடிசல் மற்றும் வெண்ணெய் நைவேத்தியம்தான்.

Leave a Comment