கார்த்திகை ஏகாதசி

 

கார்த்திகை சுத்த ஏகாதசியில் பகவான் உறக்கத்திலிருந்து எழுகிறார் (செயல்பாடு ஆரம்பம்) என்பதால் அதை ‘பிரபோதினி ஏகாதசி’ என்பர். அன்று இரவில் ஸ்ரீவிஷ்ணுவிற்கு வில்வ தளங்களை சமர்ப்பிப்பர். சிவனுக்கு துளசி தளங்களை சமர்ப்பிப்பர். இதை ‘ஹரிஹர அத்வைதம்’ என்பர்.

பண்டரிபுரத்தின் வாரி

வாரகரி சம்ப்ரதாயம் என்பது வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் மிக முக்கியம் வாய்ந்தது. இந்த சம்ப்ரதாயத்தில், வருடந்தோறும் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அதாவது எப்பொழுது தீக்ஷை கிடைக்கிறதோ அப்பொழுது வாரி செய்வர். இந்த வாரியை மேற்கொள்வதால் உடல் மூலமாக தவம் நடப்பதாக ஆகிறது.

Leave a Comment