கோவில் தரிசனத்தின் சரியான முறை (முழு செயல்பாடு)

கோவிலுக்கு செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றி விளக்கும் கட்டுரை…

பிரார்த்தனையில் நேரும் தவறுகள்

பெரும்பாலமான மக்கள் தங்கள் விருப்பம் பூர்த்தியாவதற்கும், தங்கள் கோரிக்கை நிறைவேறுவதற்குமே பிரார்த்தனை செய்கிறார்கள்; ஆனால் தங்கள் கோரிக்கை நிறைவேறியதும் கடவுளுக்கு நன்றி செலுத்த மறந்து விடுகிறார்கள்.

பிரார்த்தனை

அதிகாலையில் வீட்டு வாசலை சாவி கொண்டு திறக்கும் முன்பும், மீண்டும் இரவில் பூட்டும்போதும் பிரார்த்தனையுடன் செய்வதில் ஒரு உன்னதமான தத்துவம் உள்ளது. நமது அன்றாட அவசர வாழ்க்கையின் நெரிசலில் நாம் நமது நிம்மதியை இழந்து விடுகிறோம். இழந்த மனநிம்மதியை நாம் மறுபடி பிரார்த்தனை மூலம் பெறலாம்.

பிரார்த்தனையின் முக்கியத்துவம்

தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொண்டு, விரும்பிய ஒரு செயலை செய்வோமானால், அந்த தெய்வத்தின் ஆசி கிடைக்கிறது. மேலும் நமது ஆத்ம பலமும் தன்னம்பிக்கையும் வளர்கிறது. அதன் பயனாக அச்செயல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றப்படுகிறது.

யாரிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்?

நாமஜபத்தைப் போலவே பிரார்த்தனையையும் தெய்வத்திருவுரு முன்னேயோ, வீட்டிலோ, வெளி வராண்டாவிலோ, அலுவலகத்திலோ, வயலிலோ, பள்ளியிலோ, ஹோட்டலிலோ, மருத்துவமனையிலோ, பிரயாணத்தின்போதோ, உட்கார்ந்திருக்கும்போதோ, படுக்கையில் படுத்துக் கொண்டோ எந்த நிலையிலும் செய்யலாம்.

பிரார்த்தனையின் உதாரணங்கள்

பிரார்த்தனைகளின் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவரவர்கள் தங்கள் ஆன்மீக உணர்விற்கேற்ற வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்யலாம். அப்போதைய மனோநிலைக்-கேற்ப வார்த்தைகளை மாற்றியும் பிரார்த்தனை செய்யலாம்.

பிரார்த்தனையின் பல வகைகள்

நிஷ்காம பிரார்த்தனை என்பது உலக ரீதியான வாழ்க்கையில் எந்தப் பலனையும் எதிர்பார்க்காதது. நிஷ்காம பிரார்த்தனையில் கடவுளிடம் சரணாகதி செய்வது ஒன்றே முக்கிய குறிக்கோளாக இருக்கும்.

பிரார்த்தனையின் நன்மைகள்

விஞ்ஞான முறையிலான பரிசோதனை மூலமும், பிரார்த்தனையின் பலனாக, உலக வாழ்க்கை நன்மைகளையும், ஆன்மீக நன்மைகளையும், ஒரு தனி மனிதன் அடைய முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.