காரடையான் நோன்பு

சதி சாவித்திரி வழியில் இந்த நோன்பு மாசி மாத முடிவில் மீனா சங்க்ரமம் அன்று நூற்றப்படுகிறது. அன்று தரையில் கோலம் போட்டு வாழையிலை இட்டு அதில் காரடை, ஒரு கொழுக்கட்டை, சிறிது வெண்ணெய், வெத்திலை பாக்கு, 2 வாழைப்பழங்கள், அரளிப் பூக்கள் மற்றும் நோன்பு சரடு வைத்து நைவேத்தியம் செய்கிறார்கள். பின் கணவனின் தீர்க்காயுளுக்காக இந்த ஸ்லோகம் சொல்லப்படுகிறது –

‘தோரம் கிருண்ஹாமி சுபகே ஸ ஹரித்ராம் தராம்யஹம்; பர்த்து ஆயுஷ்ய சித்யர்த்தம் சுப்ரீதா பவஸர்வதா.’

இதன் அர்த்தம் : ஹே அம்பா, மஞ்சளோடு கூடிய கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்கிறேன். என் கணவனுக்கு நீண்ட ஆயுள் அளித்து என்னிடம் எப்பொழுதும் ப்ரியமாக இரு.’

 

வடசாவித்ரி விரதத்தை எவ்வாறு மேற்கொள்வது ?

முதலில் சுமங்கலியான பெண் ‘எனக்கும் என் கணவருக்கும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கிடைக்கட்டும்’ என சங்கல்பம் எடுக்கிறாள்.

பிறகு அரசமரத்திற்கு ஷோடச உபசாரம் செய்கிறாள்.

பூஜையில் அபிஷேகம் முடிந்தபின் அரசமரத்தை சுற்றி கயிறால் மூன்றுமுறை பிரதட்சிணமாக சுற்றவும்.

பூஜையின் முடிவில் ‘அகண்ட சௌபாக்கியத்தை தா, என்னோடு கூட கணவர், குழந்தைகள், பேரக் குழந்தைகளுக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யத்தை தா, அதோடு தனதான்யம், வம்சவிருத்தி ஏற்படும்படி செய்’ என சாவித்திரி மற்றும் பிரம்மதேவனிடம் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

Leave a Comment