சித்திரை மாத தமிழ் வருடப் பிறப்பு

இயற்கை காரணம்

காலங்களில் நான் வஸந்தம் என்று பகவான் கிருஷ்ணன் கூறியுள்ளபடி, இளந்தளிரும் பூக்களும் பூத்துக் குலுங்கும் ரம்மியமான காலம் இது.

சரித்திரக் காரணம்

ராமனால் வாலி வதம் நடந்த தினம். ராவணாதிகளை அழித்து, ஸ்ரீராமனாக அயோத்திக்கு திரும்பிய தினம். ஷாலிவாஹன ஸகாப்தம் ஆரம்பித்த தினம்.

ஆன்மீக காரணம்

ப்ரம்மா இன்றே ப்ரபஞ்சத்தைப் படைத்தார். ஸத்ய யுகம் ஆரம்பித்த தினம். மூன்றரை முஹூர்த்தங்களில் ஒரு சுப முஹூர்த்தம் இன்றைய தினமாகும்.

உலகமளாவிய கொண்டாட்டம்

தமிழ் புத்தாண்டு, வசந்த கால ஆரம்பத்தில் சித்திரை மாத முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத வருடப்பிறப்பு தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் கொண்டாடப்படுகின்றது. அதே நாளில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம், கேரளா, மணிப்பூர், திரிபுரா, பீகார், ஓடிஸா,பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தராக்கண்ட், ஹிமாசல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களோடு கூட நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து மற்றும் இலங்கையிலும் புத்தாண்டு வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன.

திரு இலங்கைத் தமிழர்களும் தமிழ்ப் புத்தாண்டன்று முதல் பண நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இதை கை-விசேஷம் எனக் கூறுகின்றனர்.

சங்க இலக்கியத்தில் தமிழ்ப் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டை பற்றி சங்க இலக்கிய நூல்களிலும் கூறப்பட்டுள்ளன. நெடுநல்வாடையில் நக்கீரர், சூரியன் ஒவ்வொரு வருடமும் மேஷ ராசி சித்திரை மாதத்தில் ஆரம்பித்து மற்ற 11 ராசிகளையும் சுற்றி வருகிறார் என எழுதியுள்ளார். புறநானூறு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களிலும் தமிழ் புத்தாண்டு பற்றி எழுதப்பட்டுள்ளன.

கோவில்களில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

கோவில் நகரமான மதுரையில் மீனாக்ஷி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டில் திருவிடைமருதூரிலும் கும்பகோணத்திலும் தேர்த் திருவிழா நடைபெறுகின்றன.

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் வழிமுறை

புத்தாண்டுக்கு முந்தைய தினம் ஒரு தட்டில் முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, தங்க-வெள்ளி நாணயங்கள், ஆபரணங்கள், மலர்கள் ஆகியவற்றை நிரப்பி கண்ணாடி முன் வைப்பது வழக்கம். இது கேரளாவில் கொண்டாடப்படும் விஷுவை ஒத்தது. வருட ஆரம்பத்தில் இதைப் பார்ப்பது மிகவும் சுபம் என்பது நம்பிக்கை. வீட்டு வாயிலில் பல வடிவமைப்புகளில் கோலங்கள் போடும் வழக்கமும் உள்ளது.சித்திரை மாத புத்தாண்டை தமிழ் மக்கள் விருந்துடன் கொண்டாடுகின்றனர். விருந்தில் முக்கியமாக வேப்பம் பூ, வெல்லம், சேர்த்த மாங்காய் பச்சடி பரிமாறப்படுகிறது. இதில் அறுசுவைகளும் அடங்கியது போல் நம் வாழ்விலும் அனைத்து இன்ப துன்பங்களையும் சமநிலைப் பாங்குடன் நோக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

2019-ல் வரப் போகும் சித்திரை மாத தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ஸ்ரீ விகாரி ஆகும்.

2 thoughts on “சித்திரை மாத தமிழ் வருடப் பிறப்பு”

  1. இதில் கூறப்படுவது தமிழ் பயன்பாடு அல்ல. அவை ஆந்திர மற்றும் கேரள முறை

    Reply
    • இயற்கை காரணங்கள், சரித்திர காரணங்கள், ஆன்மீக காரணங்கள் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானவை. வழிபடும் முறைகளில் வித்தியாசம் இருந்தாலும் அனைத்து மாநிலங்களிலும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுவதன் மகத்துவம் இங்கு விளக்கப்பட்டுள்ளது. நன்றி இந்துமதி அவர்களே!

      Reply

Leave a Comment