கோஜாகரி பூர்ணிமாவின் மகத்துவம் !

 

1.திதி

கோஜாகரி பௌர்ணமி உற்சவம் புரட்டாசி பௌர்ணமியில் கொண்டாடப்படுகிறது.

2. இதிகாசம்

இன்றைய தினம் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் வ்ரஜ பூமியில் ராஸோத்ஸவம் கொண்டாடினான் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

3. மகத்துவம்

அ. வருடத்தின் இன்றைய தினத்தில் சந்திரன் பூமிக்கு வெகு அருகில் உள்ளது. அதனால் சந்திரம் பெரியதாக தெரிகிறது. மூல சந்திர தத்துவம், நமக்கு கண்ணுக்கு தெரிகிற சந்திரனை பிரதிநிதியாக கொண்டது; இந்த சந்திரனைப் போன்றே சந்திர தத்துவமும் குளிர்ச்சியானது; மனதிற்கு இதத்தை தருவது. சாதகர்கள், சந்திரனிடமுள்ள குளுமையை தெய்வ அவதாரங்களில் அனுபவிப்பதால் ராமசந்திரன், கிருஷ்ணசந்திரன் போன்ற பெயர்களால் ராமனை கிருஷ்ணனை அழைக்கிறோம். சந்திரனின் இந்த குணநலனால்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் ஸ்ரீமத்பகவத்கீதையில் ‘நக்ஷத்திரங்களில் நான் சந்திரனாக உள்ளேன்’ (அத்தியாயம் 10, ஸ்லோகம் 21) என்று கூறியுள்ளான்.

ஆ. நடுஇரவில் ஸ்ரீ லக்ஷ்மி சந்திரனிலிருந்து பூமிக்கு இறங்கி வந்து ‘கோ ஜாகரி?’ அதாவது ‘யார் விழித்திருக்கிறார்கள்?’ என பார்த்து அவர்களுக்கு தன தானிய செல்வங்களை அருளுகிறாள்.

இ. இன்றைய தினம் பிரம்மாண்டத்தில் ஆதிசக்தியின் ஒரு வெளிப்பட்ட ரூபமான ஸ்ரீ லக்ஷ்மியின் இச்சாசக்தி அதிர்வலைகள் செயல்பாட்டில் உள்ளன. இன்றைய தினம் செல்வத்தை சேகரிக்க வேண்டும் என்ற ஸகாம சிந்தனைக்கு பூரணத்துவம் கிடைக்கிறது. ஸ்ரீலக்ஷ்மி தேவியின் அருளால் ஸ்தூல தேஹம், மனோதேஹம் ஆகியவை தூய்மையாக உதவி கிடைப்பதுடன் மனமும் சந்தோஷத்தால் நிரம்புகிறது. இன்றைய தினம் செய்யக்கூடிய காரியங்களுக்கு முக்கியமாக செல்வத்தை சேகரிக்கும் காரியத்திற்கு பலம் கிடைக்கிறது.

ஈ. இன்றைய தினம் சந்திரம் பூமிக்கு மிக அருகில் அதாவது கோஜாகரி மலைக்கு மிக அருகில் வருகிறது. அதனால் இந்த பௌர்ணமியை ‘கோஜாகரி பௌர்ணமி’ எனக் கூடுகின்றனர்.

உ. கோஜாகரி பௌர்ணமியில் சூழலில் வெளிப்படும் அதிர்வலைகள்

அதிர்வலைகள் பிரமாணம் (சதவிகிதம்)
ஆன்மீக உணர்வு 25
சைதன்யம் 20
ஆனந்தம் 30
சாந்தி 25
மொத்தம் 100

4. உள்ளர்த்தம்

கோஜாகரி அன்று இரவு யார் கண் விழித்திருக்கிராரோ, யார் விழிப்புணர்வுடன் இருக்கிறாரோ அவருக்கு அமுதத்தைப் பருகும் பயன் கிடைக்கிறது! கோஜாகர் = கோ + ஓஜ் + ஆகர். இன்றைய தினம் சந்திர கிரணங்களின் மூலம் எல்லோருக்கும் ஆத்மசக்தி ரூபமான (ஓஜ்) ஆனந்தம், ஆத்மானந்தம், பிரம்மானந்தம் நிரம்ப நிரம்ப கிடைக்கிறது; ஆனால் இந்த அமுதத்தைப் பருகுவதற்கு யார் கண் விழித்திருக்கிறார்கள்?  என ரிஷிகள் கேட்கிறார்கள். அதாவது யார் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர், யாருக்கு இதன் மகத்துவம் தெரியும்? யார் விழிப்புணர்வுடன் இருக்கிறாரோ அவருக்கே இதன் மகத்துவம் தெரியும், அவருக்கே அமுதத்தைப் பருகும் பயனும் கிடைக்கும்!’ – பரம் பூஜ்ய பரசுராம் பாண்டே மகாராஜ், ஸனாதன் ஆஸ்ரமம், தேவத், பன்வேல்.

தகவல் : ஸனாதனின் ஆங்கில நூல் ‘பண்டிகைகள், தார்மீக விதிகள் மற்றும் விரதங்கள்’

Leave a Comment