ஸத்குரு ராஜன் ஷிண்டே அவர்கள், ஆளுமை குறைகளைக் களைவதற்காக ஸாதகர்களுக்கு அளித்த வழிகாட்டுதல் – 1

ஸாதகர்களின் வ்யஷ்டி ஸாதனையுடன் கூட ஸமஷ்டி ஸாதனைக்கான முயற்சியும் ஆழ்ந்த ஆர்வத்துடன் பக்தியுணர்வுடன் நடப்பதற்கு அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கி எல்லா விதங்களிலும் ஆதார தூணாக விளங்கும் ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே !

ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே அவர்களின் வ்யஷ்டி ஸாதனை சம்பந்தமான வழிகாட்டுதல் மற்ற ஸாதகர்களுக்கும் உதவும் என்று தொகுத்தளித்துள்ளார் டாக்டர் மாயா பாடீல் 

ஸத்குரு ராஜன் ஷிண்டே அவர்கள்

 

1. வ்யஷ்டி ஸாதனையின் மதிப்பாய்வு தருவதற்காக
உட்காருவதற்கு முன்பும் பின்பும் உள்ள ஸாதகர்களின் நிலை

‘ஸத்குரு தாதா மதிப்பாய்வு (Review of sadhana) செய்யும் சமயத்தில் கூறும் அனைத்து குறிப்புகளையும் ‘நமக்கு நாமே மதிப்பாய்வு செய்கிறோம்’ என்ற ஆன்மீக உணர்வுடன் செயல்படுத்தினால் அதனால் உங்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். எனக்கு ஸத்குரு தாதா அவர்கள் எடுக்கும் ஸாதகர்களின் மதிப்பாய்வு நேரத்தில் அங்கு அமரும் பொன்னான வாய்ப்பு கிடைத்ததால் மதிப்பாய்வுக்கு வருவதற்கு முன் உள்ள ஸாதகர்களின் நிலை, ஸத்குரு தாதா ஸாதகர்கள் மூலமாக நடத்துவித்த முயற்சி மற்றும் அதனால் ஸாதகர்களிடம் ஏற்பட்ட மாற்றம் ஆகிய எல்லாவற்றையும் அருகில் இருந்து அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.

1 அ. மதிப்பாய்வு செய்ய வருமுன் ஸாதகர்களிடம்
வ்யஷ்டி ஸாதனை செய்வது சம்பந்தமாக இருந்த உதாசீன போக்கு!

ஸத்குரு தாதா செய்து வரும் வ்யஷ்டி ஸாதனையின் மதிப்பாய்விற்காக உட்காருவதற்கு முன்பு ஸாதகர்களிடம் வ்யஷ்டி ஸாதனைக்கான முயற்சி தொடர்ந்து நடைபெறவில்லை. அதனால் பல ஸாதகர்களின் மனங்களில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டிருந்தது. ‘என்னால் முயற்சி செய்ய முடியவில்லை’, என்று ஒவ்வொரு ஸாதகருக்கும் மன வருத்தம் ஏற்பட்டது. சிலரிடம் இதுபற்றி எதிர்மறை எண்ணங்களும் எழுந்தன. ‘இவற்றை எல்லாம் என்னால் செய்ய முடியாது’, என்று சில ஸாதகர்களுக்கு தோன்றியது, மற்றும் சிலருக்கு ‘என்னிடம் நிறைய சேவை இருப்பதால் என்னால் வ்யஷ்டி ஸாதனையின் எல்லா முயற்சிகளையும் செய்ய முடிவதில்லை’, எனத் தோன்றியது.

1 ஆ. ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே வ்யஷ்டி
ஸாதனையின் மதிப்பாய்வை எடுக்கத் துவங்கிய பின்னர் சில
நாட்களுக்குள்ளேயே ஸாதகர்களிடம் ஏற்பட்ட நேர்மறை மாற்றம் !

ஸத்குரு தாதா முதலில் ஸாதகர்களை நேர்மறை உணர்வுள்ளவர்களாகவும் மன அழுத்தம் இல்லாதவர்களாகவும் மாற்றுகிறார். அவர் ஸாதகர்களிடம் ‘மனதில் வ்யஷ்டி ஸாதனை செய்யும் பழக்கத்தை எவ்வாறு ஏற்படுத்துவது?’ என்பதை கற்றுத் தருகிறார். ஸாதகர்கள் மூலமாக வ்யஷ்டி ஸாதனை தொடர்ந்து நடக்கவில்லை என்றால் ‘தொடர்ந்து நடப்பதற்கு எவ்வாறு முயற்சிப்பது?’ என்பதையும் கற்றுத் தருகிறார். அதன் மூலம் தொடர்ந்து முயற்சி செய்வதற்கான ஊக்கம் ஸாதகர்களிடம் ஏற்பட்டு சில நாட்களுக்குள்ளாகவே அவர்களிடம் நல்ல மாற்றம் காணப்படுகின்றது. ஸாதகர்கள் வ்யஷ்டி ஸாதனைக்கான முயற்சியை விருப்பத்துடன் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

 

2. ஸத்குரு ராஜேந்திர தாதா
மதிப்பாய்வின் மூலமாக ஸாதகர்களின்
வ்யஷ்டி ஸாதனை நன்கு நடைபெற செய்யும் உதவிகள்

2 அ. ஸாதகர்களின் செயல்பாடு நடப்பதற்கு ஊக்கம் அளித்தல்

இதற்காக ஸத்குரு ராஜேந்திர தாதா கீழே குறிப்பிட்டவாறு ஸாதகர்களுக்கு உதவி செய்கிறார்.

டாக்டர் மாயா பாடீல்

1. ஸாதகர்கள் எந்த நிலையில் உள்ளனரோ அதை ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வழிகாட்டுதல் வழங்கி முயற்சி செய்யக் கூறுதல்

2. ஸாதகர்கள் செயல்பாட்டில் ஈடுபட எப்பொழுதும் உற்சாகம் அளித்தல்

3. ஸாதகர்களுக்கு ஆரம்பத்தில் ஆன்மீக உணர்வு பிரயோகம் மற்றும் சுய ஆலோசனை செயல்முறை அதிகபட்ச அளவு நடந்திட முயற்சி செய்யுமாறு உற்சாகம் அளித்தல் மற்றும் அவற்றின் மகத்துவத்தை ஸாதகர்களின் மனங்களில் பதிய வைத்தல்

4. ‘வ்யஷ்டி ஸாதனையின் உள்ளே எந்த முயற்சியை மேற்கொள்ளப் போகிறீர்கள்?’, என்பது சம்பந்தமாக ஸாதகர்கள் முதலில் ஒரு இலக்கை வைத்துக் கொள்ளுமாறு கூறுதல்

5. ஸாதகர்களின் மனங்களில் தவறான கண்ணோட்டம் இருந்தால் அவர்களை அது சம்பந்தமாக சிந்தனை செய்யுமாறு கூறி அவர்களை நேர்மறை கண்ணோட்டத்திற்கு கொண்டு வருதல்

6. ஆன்மீக கஷ்டம் உள்ள ஸாதகர்களிடம் அவர்களின் நிலையைப் புரிந்து கொண்டு அவர்களைத் தொடர்ந்து நல்ல மாற்றம் உண்டாகும்படியான ஆன்மீக உபாயம் செய்யுமாறு கூறுதல்

2 ஆ. ஸாதகர்களின் மனநிலையை புரிந்து கொள்ளுதல்

முதல் மதிப்பாய்வில் ஸத்குரு தாதா எல்லோரிடமும் அரைமணி நேரம் பேசுவார். அவர் ஸாதகர்களை செயல்படுமாறு ஊக்குவிப்பார். அவர் ஒவ்வொரு ஸாதகரிடமும் அவர்களது வ்யஷ்டி ஸாதனையின் நிலையைப் பற்றி எழுத சொல்லுவார்; அதில் தீவிர மற்றும் மத்யம நிலையில் உள்ள ஆளுமை குறைகளை மற்றும் அஹம்பாவத்தின் வெளிப்பாடுகளை குறிப்பெடுக்க சொல்லுவார். ஸாதகர்களுக்கு ஏற்படும் தடங்கல்கள், அவர்களின் மனங்களில் ஏற்படும் மன அழுத்த சிந்தனைகள், ஸாதகர்களின் ஆளுமை குறைகள் மற்றும் அவர்கள் கொடுக்கும் சுய ஆலோசனைகள், அத்துடன் ‘ஸாதகர்கள் எங்கு தேக்கமடைகிரார்கள்’, பற்றிய சிந்தனை போன்றவற்றை எழுத சொல்லுவார். இவற்றின் மூலம் அவரால் ஸாதகர்களின் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது.

2 இ. ஸாதகர்களுக்கு மதிப்பாய்வு
பற்றிய மன அழுத்தம் ஏற்பட்டால் அதனுடைய
காரணத்தை அறிந்து கொண்டு மன அழுத்தத்திலிருந்து விடுவித்தல்

அவர் ஸாதகர்களிடம் ‘நான் மதிப்பாய்வு எடுக்கப் போகிறேன் என்று யாருக்கெல்லாம் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது?’, என்று விசாரிப்பதுடன் அந்த மன அழுத்தத்தையும் தூர விலக்குவார். அச்சமயம் ‘பல ஸாதகர்களுக்கு அழுத்தம் ஏற்படாமல் ஆனந்தமே ஏற்படுகிறது’ என்பதை உணர முடிகிறது. ஸாதகர்களுக்கு பிறகு எப்பொழுதாவது எந்த ஒரு காரணத்தினாலோ மீண்டும் மன அழுத்தம் ஏற்பட்டால் அவர்கள் உடனே அதைப் பகிர்ந்து கொள்ளுமாறு கூறுவார். அவர் முதல் மதிப்பாய்வின் போதே ஸாதகர்களை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கிறார் மற்றும் ‘தொடர்ந்து முயற்சி செய்தால் உங்களால் ஆனந்தமாக இருக்க முடியும்’ என்ற உத்தரவாதத்தையும் தருகிறார்.

2 ஈ. வ்யஷ்டி ஸாதனைக்கான முயற்சியில்
ஒரு இலக்கை வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துதல்

அவர் ஸாதகர்களிடம் ‘வ்யஷ்டி ஸாதனைக்காக எம்மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்?’ என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளுவார். அத்துடன், ஸாதகர்களிடம் அவர்களின் சக்திக்கேற்றவாறு முயற்சிகளை செய்யுமாறு கூறுவதுடன் அதை அடைவதற்கான உற்சாகத்தையும் வழங்குவார்.

2 உ. ஸாதகர்களிடம் அவர்களால் சஹஜமாக
செய்யக் கூடிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கூறுவார்

ஸத்குரு ராஜேந்திர தாதா வ்யஷ்டி ஸாதனையின் மதிப்பாய்வு எடுக்கும்போது முதல் மாதத்தில் யாரிடமும் எந்த கட்டுப்பாடையும் விதிப்பதில்லை. அவர் ஒவ்வொருவரிடமும் வ்யஷ்டி ஸாதனையின் அங்கமாக உள்ள எந்த முயற்சி சஹஜமாக செய்ய முடியுமோ அதை செய்து அது பற்றிய மதிப்பாய்வை தினமும் ‘வாட்ஸ்அப்’ மூலமாக அனுப்புமாறு கூறுவார். ஸத்குரு தாதா ஸாதகர்களுக்கு எந்த கட்டுப்பாட்டையும் விதிக்காவிட்டாலும் வ்யஷ்டி ஸாதனையின் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு ஸாதகருக்கும் ஏற்படுகிறது.

2 ஊ. ஆன்மீக உணர்வு விழிப்படைய செய்ய
வேண்டிய முயற்சியின் மகத்துவத்தை மனதில் பதிய வைத்தல்

அவர் ஸாதகர்களிடம் ‘ஆன்மீக உணர்வு விழிப்படைவதற்கான முயற்சி தினசரியும் அதிகபட்ச அளவும் நடக்கிறதா?’ என்று கவனிக்க சொல்லுவார். அவர் ஸாதகர்களின் மனங்களில் ஆன்மீக உணர்வு விழிப்படைய செய்யும் முயற்சி ஆழப் பதியுமாறு பல்வேறு உதாரணங்களைத் தருவார். ஆன்மீக உணர்வு விழிப்படைய செய்யும் ஒவ்வொரு முயற்சியும் மனதில் நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றன.

2 எ. தெய்வத்துடன் தொடர்பில் இருப்பதற்கான
இலக்கைக் கொண்டு முயற்சி செய்யுமாறு கூறுவார்

‘மனதில் வ்யஷ்டி ஸாதனை செய்யும் வழக்கத்தை ஏற்படுத்துதல், குருதேவரை நினைத்தல், 5 முதல் 10 விஷயங்கள் பற்றி ஆன்மீக உணர்வு பிரயோகம் செய்தல், அதேபோல் ஒவ்வொரு காரியத்தை செய்யும்போதும் இறைவனை பற்றி சிந்தித்தல்’, ஆகியவற்றை பயிலுமாறு கூறுவார். அதற்கான இலக்கை நிர்ணயம் செய்து முயற்சி செய்யுமாறு ஸாதகர்களை ஊக்கப்படுத்துவார்.

 

3. ஒரு மாதத்திற்குள்ளாக
ஸாதகர்களிடம் அடிப்படை மாற்றங்கள்
ஏற்பட்டு வ்யஷ்டி ஸாதனைக்கான முயற்சி
பற்றிய நேர்மறை எண்ணமும் ஏற்படுதல்

ஸாதகர்கள் ஒரு மாதம் இது போன்று முயற்சி செய்த பின்னர் ‘ஸாதகர்களிடம் அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது’ என்பது தெரிய வருகிறது. ‘வ்யஷ்டி ஸாதனைக்கான முயற்சியை தினசரி என்னால் செய்ய முடியவில்லை’, என நினைக்கும் ஸாதகர்களுக்கும் சில வாரங்களில் முயற்சி செய்வது சாத்தியமாகிறது. ஸாதகர்களின் மனங்களில் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவதும் குறைகிறது.

மற்ற ஸாதகர்களும் மேற்கூறிய குறிப்புகளின்படி தங்களின் நிலையை எழுதி ‘நான் எங்கு பின்தங்கி உள்ளேன்?’, என்பதை தொடர்ந்து பயின்று முயற்சி செய்யும்போது, ஆன்மீக உணர்வு விழிப்படைய செய்வதற்கான முயற்சியை அதிகரிக்கும்போது அவர்களின் நிலையும் மாற ஆரம்பிக்கிறது. ஆன்மீக உணர்வு விழிப்படைய செய்யப்படும் முயற்சிகளால் மனம் எப்பொழுதும் நேர்மறையாக எண்ணுவதற்கு உதவி கிடைக்கிறது.

 

4. ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே
அவர்கள் ஸாதகர்களின் வ்யஷ்டி ஸாதனையின்
மதிப்பாய்வை எடுக்கும் சிறப்பு மிக்க வழிமுறை !

4 அ. மதிப்பாய்வு எடுப்பதற்கு
முன்பு ஸாதகர்கள் எழுதியுள்ள ஆளுமை
குறைகளின் அட்டவணையைப் படித்து அவர்கள்
மதிப்பாய்வின்போது சொல்ல வேண்டிய தவறுகளை தேர்ந்தெடுத்தல்

ஸத்குரு தாதா மதிப்பாய்வு எடுப்பதற்கு முன் தினம் ஸாதகர்கள் எழுதி வைத்துள்ள ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தின் அட்டவணையைப் பார்வையிடுவார். அதன் மூலம் அந்த வாரம் ஸாதகர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்வார். மதிப்பாய்வு ஸத்சங்கத்தில் ஸாதகர்கள் கூற வேண்டிய தவறுகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து அவர்களை வழிநடத்துவார். ஸாதகர்கள் தவறுகளை சரியான முறையில் எழுதாவிட்டாலும் சரியான ஆளுமை குறையை தேர்ந்தெடுக்காவிட்டாலும் சுய ஆலோசனைகளை சரியான முறையில் கொடுக்காவிட்டாலும் அல்லது ஏதாவது ஒரு ஆளுமை குறையால் பல தவறுகள் நேர்ந்தாலும் அதை உடனே சுட்டிக்காட்டி பிறகு ‘ஸாதகர்கள் மூலமாக எம்மாதிரியான தவறு நிகழ்ந்துள்ளது?’ என்பதைக் கூறி ஸாதகர்கள் அந்த குறிப்பிட்ட தவறுகளைப் பற்றி மதிப்பாய்வின்போது கூறும்படி கூறுவார்.

4 ஆ. மதிப்பாய்வின்போது எல்லா ஸாதகர்களின்
எண்ணப்போக்கையும் அறிந்து கொண்டு வழிகாட்டுதல்

ஸாதகர்கள் ஸத்சங்கத்தில் தவறுகளை வாசித்துக் காட்டும்போது ‘நடந்த தவறை சரி செய்வதற்கு எம்மாதிரியான முயற்சிகள் எடுக்கப்படும்?’ என்பது பற்றி முதலில் ஸாதகர்களிடம் விசாரிப்பார். ஸாதகர்கள் ஏதாவது சொல்வதற்கு விட்டுப்போனால் ஸத்குரு தாதா தானே அதை சொல்லுவார். இது போன்று அந்தத் தவறு மறுமுறை ஏற்படாவண்ணம் செய்ய வேண்டிய முயற்சிகள் பற்றி விரிவான விவாதம் நிகழும். அனைத்து ஸாதகர்களையும் இதில் பங்கேற்க வைப்பார். அதன் மூலம் ஒரு ஸாதகரின் தவறு கூறப்படும்போது அனைத்து ஸாதகர்களாலும் கற்க முடிகிறது. மதிப்பாய்வு ஆரம்பித்த பின்னர் ஸத்குரு தாதா வெகு குறைவாகவே பேசுவார். ஸாதகர்களிடம் எல்லாவற்றையும் கூற ஊக்குவிப்பார். இது போன்று அவர் ஸாதகர்களை மெருகேற்றுவார்.

4 இ. சரியான முறையில் தவறுகளை எழுவதன்
மகத்துவத்தை ஸாதகர்களின் மனங்களில் பதிய வைத்தல்

அவர் ஸாதகர்களிடம் ‘சரியான முறையில் தவறுகளை எவ்வாறு எழுதுவது?’ என்பதைக் கூறுவார். பெரும்பாலும் ஸாதகர்கள், தவறுகள் எவ்வாறு நடந்ததோ அவ்வாறே எழுதாமல் தன் கருத்தையும் சேர்த்து எழுதி அல்லது சுருக்கமாக எழுதுவார்கள். அதனால் ‘எந்த நிலையில் என்ன தவறு நிகழ்ந்தது?’ என்பதை புரிந்து கொள்வது கடினம். உதாரணத்திற்கு ஒரு ஸாதகர் ‘நான் காலையில் சேவை செய்வதற்கு தாமதமாக சென்றேன்’ என்ற தவறை எழுதி அதற்கு ‘ஆளுமை குறை – நேரந்தவறாமை இல்லாதது’ என எழுதியிருந்தார். ஸத்குரு தாதா இதைப் பற்றி அந்த ஸாதகரிடம் விசாரித்தபோது அந்த ஸாதகர் இரவு வெகு நேரம் கடந்து உறங்கியதால் காலை தாமதமாக எழுந்தார் என்பது தெரிய வந்தது. அந்த ஸாதகர் இரவில் அனாவசியமாக பேசி நேரத்தை வீணாக்கியதால் இரவு தாமதமாக உறங்கியுள்ளார். அந்த ஸாதகர் தவறைப் பற்றி சரியான முறையில் எழுதாததால் அதற்கான ஆளுமை குறையும் சரியாக தேர்ந்தெடுக்கவில்லை மற்றும் அதற்கான சுய ஆலோசனையும் சரியான முறையில் கொடுக்கவில்லை.

தவறை சரியான முறையில் எழுதும்போது ஆளுமை குறையின் ஆணி வேருக்கு செல்ல முடியும், அத்துடன் அதற்கான சரியான நிவாரண முறையை தேர்ந்தெடுத்து சுய ஆலோசனையும் வழங்க முடியும். ஸாதகர்கள் சரியான சுய ஆலோசனை வழங்கினால் விரைவில் மாற்றம் ஏற்படும்.

‘ஸாதகர்கள் தவறு மற்றும் அதற்குரிய சுய ஆலோசனையை சரியான முறையில் எழுதுவது’ என்ற செயல்முறை எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது, என்பதை எல்லோரின் மனங்களிலும் பதிய வைத்தார்.

4 ஈ. சுய ஆலோசனையை சரியான முறையில் வடிவமைக்கக் கற்றுத் தருதல்

4 ஈ 1. ‘சுய ஆலோசனை சரியான முறையில் இருந்தால் மனதின் நிலையில் விரைவில் மாற்றம் ஏற்படும்’ என்ற கருத்தை தெளிவாக்குதல்

‘சுய ஆலோசனை தருவது என்பது மனதிற்கு சரியானபடி சிந்தனை செய்யவும் செயல்படுத்தவும் திரும்பத் திரும்ப நினைவுறுத்துவது ஆகும். இந்த சிந்தனை மற்றும் செயல்பாடு எவ்வளவு தெளிவாக உள்ளதோ அவ்வளவு விரைவில் மனதளவில் மாற்றம் ஏற்படும். மனம் சிறு சலுகை எடுத்துக் கொண்டாலோ அல்லது செயல்படுத்த இயலாத கண்ணோட்டம் இருந்தாலோ மாற்றம் ஏற்பட வெகு காலம் பிடிக்கும்’, என்பதை ஸத்குரு தாதா அவர்கள் உதாரணங்களின் மூலம் தெளிவாகக் கூறுவார்.

4 ஈ 2. சுய ஆலோசனை பலனளிப்பதாக இருத்தல் வேண்டும்!

அவர் ஸாதகர்களின் மனங்களில் சுய ஆலோசனையின் ஒவ்வொரு வார்த்தையும் வாக்கியமும் சரியான முறையில் இருப்பதன் அவசியத்தை பதிய வைத்தார். அதனால் ‘தவறு, நிகழ்வு, அதிலுள்ள ஆளுமை குறை மற்றும் தவறு நடக்கும்போதிருந்த மனதின் நிலை, ஆகிய எல்லாவற்றையும் கவனத்துடன் பயின்று பின்பு சுய ஆலோசனையை வடிவமைத்தால் அதன் மூலம் மனதில் விரைவான மாற்றம் நிகழும்’ என்பதை கற்றுக் கொள்ள முடிந்தது மற்றும் ‘சுய ஆலோசனையை வடிவமைக்கும்போது எம்மாதிரியான தவறுகளை தவிர்க்க வேண்டும்?’ என்பதும் கவனத்திற்கு வருகிறது.

4 ஈ 3. சுய ஆலோசனையை எளிய சாதாரண மொழியில் வடிவமைத்தல்

சுய ஆலோசனையை சாதாரண எளிய நடையில் வடிவமைக்க வேண்டும், உதாரணத்திற்கு ‘எதிர்பார்ப்பு இருத்தல்’ என்ற அஹத்தின் ஒரு கூற்றிற்கு சுய ஆலோசனையை வடிவமைக்கும்போது ஸாதகர்கள் பெரும்பாலும் ‘நான் எதிர்பார்ப்பில்லாமல் சொல்வேன்’, என எழுதுகிறார்கள். ‘எதிர்பார்ப்பில்லாமல்’ என்றால் எவ்வாறு?’ என்பது மனதிற்கு தெரிவதில்லை. நம் மூலமாக நடந்த தவறுக்கு ஏற்றபடி ‘நான் அன்புடன் சொல்வேன், அமைதியாக சொல்வேன், வெளிப்படையாக சொல்வேன், தெளிவாக திரும்பத் திரும்ப சொல்வேன்’, என்பது போன்ற சரியான செயல்முறையை எழுதுவதால் மனதில் ‘சரியானபடி எவ்வாறு செயல்படுவது?’ என்பது தெளிவாகத் தெரிகிறது, அதன் மூலம் விரைவாக மாற்றமும் நிகழ்கிறது.

4 ஈ 4. சுய ஆலோசனையின் கண்ணோட்டம் மனதிற்கு விளங்குவதாகவும் மனம் ஒப்புக்கொள்ளும்படியாகவும் இருத்தல் வேண்டும்!

சுய ஆலோசனையில் கண்ணோட்டம் வழங்கும்போது ‘அது செயல்படுத்தக் கூடியதாக இருப்பதுடன் கூட மனதளவிலும் ஒப்புக் கொள்ளும்படியாக அமைய வேண்டும்’, உதாரணத்திற்கு ஸாதகர் எழுதுகிறார், ‘ஸ்ரீகிருஷ்ணன் மற்ற சக ஸாதகர்கள் மூலமாக சொல்கிறார்’ என்ற கண்ணோட்டத்தைக் கொள்வேன்.’ ஆனால் அந்த ஸாதகர் ‘ஸ்ரீகிருஷ்ணன் மற்ற ஸாதகர்களின் மூலமாக சொல்கிறார்’ என்ற நிலையை எப்பொழுதும் அனுபவித்தது இல்லை, அத்துடன் ‘சக ஸாதகர்கள் சொல்வது எப்பொழுதும் சரியாகத்தான் இருக்கும்’ என்ற நிலையும் அவரிடம் இல்லை. அதனால் சக ஸாதகர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை. அதற்குப் பதிலாக ‘ஸ்ரீகிருஷ்ணன், என்னுடைய ஆளுமை குறைகள் களையப்பட வேண்டும் என்பதற்காக சக ஸாதகர்களை அனுப்பியுள்ளார்’, என்ற ஆன்மீக உணர்வுடன் அவர்களின் சொல்லைக் கேட்பேன்’ என்ற முறையில் அவர் மனது ஏற்கும்படியான புரிந்து கொள்ளும்படியான கண்ணோட்டத்தை வழங்கினால் மனம் அதை ஒப்புக் கொண்டு பிறகு விரைவில் மாற்றமும் ஏற்படும்.

4 ஈ 5. தத்துவ நிலையைக் காட்டிலும் மானசீக நிலையில் சுய ஆலோசனை வழங்கும்போது அதிக பயன் ஏற்படுகிறது

நாம் மனதிற்கு சில சம்பவங்களில் ஆன்மீக கண்ணோட்டத்தை வழங்க இயலும். மற்ற சமயங்களில் மனதின் நிலைக்கு ஏற்றவாறு மானசீக நிலையில் கண்ணோட்டம் வழங்குவது நல்லது. ஆன்மீக நிலையில் கண்ணோட்டம் வழங்குவது என்பது படிப்பதற்கு நன்றாக இருக்கும்; ஆனால் நம்மால் அந்த நிலைக்கு செல்ல முடியாததால் பயன் ஏதும் ஏற்படாது.

மனதிற்கு எந்த அளவு எளிமையாக, புரியும்படியாக தெளிவாக சொல்ல முடியுமோ அப்படி சொல்லும்போது அந்த அளவிற்கு செயல்படுத்தவும் முடியும். இல்லையென்றால் சுய ஆலோசனை என்பது வெறும் தத்துவ நிலையில் மட்டுமே இருக்கும். அதை ஒவ்வொரு ஸாதகரும் உணரும்படி செய்தார்.

நாம் வடிவமைக்கும் சுய ஆலோசனை 90 முதல் 95 சதவிகிதம் தவறானதாக உள்ளது. அதனால் அந்த சுய ஆலோசனைகளால் மனதில் நல்ல மாற்றம் ஏற்படுவது இல்லை. நமக்குத் தோன்றுகிறது, ‘நான் சுய ஆலோசனை வழங்குகிறேன், ஆனால் ‘நாம் மனதிற்கு அளிக்கும் சுய ஆலோசனை சரியானபடி இல்லாததால் எதிர்பார்த்த காலத்திற்குள் மாற்றம் ஏற்படவில்லை’ என்பது நம் கவனத்திற்கு வருவதில்லை. அதனால் இந்த செயல்முறையில் ஈடுபாடு குறைந்து செய்ய வேண்டுமே என்பதற்காக செய்து வருகிறோம்.

4 உ. ‘இறைவனுக்கு என்ன பிடிக்கும்?’ மற்றும் ‘இறைவனின் உதவியைப் பெற
வேண்டும்’ என்ற இரு எண்ணப் பதிவுகளை மனதில் பதிய வைக்க ஸாதகர்களை ஊக்குவித்தல் மற்றும் ஸத்குரு தாதாவின் ஆழ்ந்த ஆர்வத்தால் ஸாதகர்களுக்கு
இறைவனின் உதவி கிடைத்து அவர்களின் நிலையில் நல்ல மாறுதல் ஏற்படுதல்

ஸத்குரு தாதா அவர்கள் ‘ஸாதகர்கள் எதனால் உற்சாகமில்லாமல் இருக்கிறார்கள்?’, என்பதைப் பற்றி விரிவாக பயின்றுள்ளார். அவர் ஸாதகர்களிடம் ‘மனம் எதனால் உற்சாகமில்லாமல் போகிறதோ அவ்விஷயத்தை முழுவதுமாக தவிர்த்து நேர்மறையாக இருந்து கொண்டு எவ்வாறு முயற்சி செய்வது?’ என்பதை செயல்பாட்டு முறையில் மிக எளிய வழிமுறையில் சொல்லிக் கொடுப்பார். அதனால் ஒவ்வொரு ஸாதகரிடமும் தன்னம்பிக்கை அதிகமாகிறது. ஸாதகர்கள் எவ்வளவு தவறுகள் செய்தாலும் யாராவது ஒரு ஸாதகர் எதுவும் செய்வதில்லை அல்லது எதுவும் செய்ய விருப்பப்படவில்லை என்றாலும் ஸாதகர்களிடம் நேர்மறை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதிலுள்ள மகத்தான ரகசியம் என்னவென்றால், ஒவ்வொரு ஸாதகருக்கும் ‘இறைவனுக்கு என்ன பிடிக்கும்?’, மற்றும் ‘இறைவனின் உதவியை நாட வேண்டும்’ என்ற இரு சிந்தனைகளும் மனதில் ஸன்ஸ்காரங்களாகி விட்டன. அதனால் ‘தெய்வமே வந்து ஸாதகர்களின் நிலையை மாற்றுகிறது’, என்பது கவனத்திற்கு வருகிறது. ஸத்குரு தாதாவிடம் தீவிர ஆர்வம் இருப்பதால் ஸாதகர்களுக்கு விரைவில் இறைவனின் உதவி கிடைக்கிறது. ஸாதகர்கள் அதற்காக சிறப்பான முயற்சி செய்யத் தேவையிருப்பதில்லை.

ஸாதகர்கள் நிலைகொள்ளாமல் தவித்தல், அவநம்பிக்கை, எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் ஸத்குரு தாதா சில தினங்களுக்குள்ளேயே அந்த ஸாதகர்களை நேர்மறை எண்ணம் கொண்டவர்களாக, உற்சாகமுள்ளவர்களாக மற்றும் வ்யஷ்டி ஸாதனையின் செயல்முறையை ஆனந்தமாக செய்யக்கூடிய நிலைக்கு உயர்த்துகிறார். ஸாதகர்களின் மேல் உள்ள ஆன்மீக அன்பினால் இது அவருக்கு சாத்தியமாகிறது.

4 ஊ. ஸாதகர்களின் தவறான மனோநிலையைப் புரிந்து
கொண்டு அதைப் பற்றி சிந்தனை செய்யுமாறு கூறி செயல்பட வைத்தல்

4 ஊ 1. ஸாதகர்களுக்கு சிந்தனை செய்வதற்கு விஷயத்தைக் கொடுத்து அதன்படி செயல்படுமாறு அறிவுறுத்துதல்

ஸாதகர்களின் வ்யஷ்டி மதிப்பாய்வு எடுக்க ஆரம்பித்தவுடன் ஸத்குரு தாதாவிற்கு ஸாதகர்களிடமுள்ள தவறான எண்ணங்கள் கவனத்திற்கு வருகின்றன. ‘ஸாதகர்களுக்கு எந்த விஷயத்தைப் பற்றி அல்லது எந்த குறிப்பு பற்றிய தவறான எண்ணவோட்டம் உள்ளது?’, என்பதை கவனித்து அந்த ஸாதகருக்கு அதற்கேற்றாற்போல் ஒவ்வொரு வாரமும் வீட்டுப்பயிற்சி அளிப்பார். அவர் ஸாதகர்களுக்கு கீழே குறிப்பிட்டது போல் ஒரு விஷயத்தைக் கொடுத்து அதைப் பற்றி சிந்தனை செய்யக் கூறி அதன்படியே செயல்படவும் சொல்வார்.

அ. தவறை மற்றவரிடம் சொல்வதன் நன்மை மற்றும் சொல்லாமல் இருப்பதால் ஏற்படும் தீமை

ஆ. தவறை சொல்லாமல் இருப்பதன் பின்னால் உள்ள தவறான சிந்தனை, அதற்கான கண்ணோட்டம் மற்றும் உபாயம் பற்றிய சிந்தனை

இ. ‘தவறு சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படுகிறதா? அப்படி இல்லையென்றால் வேறு எந்த காரணத்திற்காக ஏற்படுகிறது?’, என்பதைப் பற்றி ஆராய்தல்

ஈ. நிலைமையை ஏற்றுக் கொள்ளுதல்

உ. ‘வெவ்வேறு சிந்தனைகளையும் வெவ்வேறு இயல்புகளையும் கொண்ட ஸாதகர்களை ஒருங்கிணைத்து எதற்காக இறைவன் சேவை செய்ய வைக்கிறார்?’, என்பதைப் பற்றி சிந்தித்தல். (தொடரும்…)

– டாக்டர் (கு.) மாயா பாடீல், ஸனாதன் ஆச்ரமம், தேவத், பன்வேல். (26.7.2018)

Leave a Comment