ஸ்ரீராமனின் நாமஜபம் : ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம

பகவான் ஸ்ரீராமன்

பக்தியுணர்வு விரைவில் ஏற்படவும் தெய்வ தத்துவத்தின் அதிகபட்ச பயன் ஏற்படவும் நாமத்தின் உச்சாரணம் சரியானபடி இருப்பது அவசியம். நீங்கள் இப்பொழுது ஸ்ரீராமனின் நாமஜபத்தை எப்படி செய்வது என்பதைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

 ஸ்ரீ ராமனின் தாரக (காக்கும்) நாமஜபம்

 

 

ஸ்ரீராமனின் நாமஜப-படிவம்

ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம : ஸ்ரீராமனின் நாமஜபத்தின் அர்த்தம்

‘ராமனைக் காட்டிலும் பெரிது ராமநாமம்’ எனக் கூறுவர். ‘ராமனின் ஒரு நாமம் விஷ்ணுஸஹஸ்ரநாமத்திற்கு ஒப்பானது’ என்று ராம நாமத்தின் மகிமையை சாக்ஷாத் சிவன் போற்றியுள்ளார். தெய்வத்தின் நாமஜபத்தை ஆன்மீக உணர்வுபூர்வமாக செய்தால் அந்த நாமஜபம் தெய்வத்தை சென்றடைகிறது. நாமஜபத்தை செய்யும்போது அர்த்தம் புரிந்து செய்தால் மேலும் ஆன்மீக உணர்வுபூர்வமாக செய்ய முடியும். அதற்கு “ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம’ என்ற இந்த நாமஜபத்தின் அர்த்தத்தை தெரிந்து கொள்வோம். ‘ஸ்ரீராம’ என்பது ஸ்ரீராமனை அழைப்பதாகும். ‘ஜய ராம’ என்பது ஸ்துதி வாசகமாகும் மற்றும் ‘ஜய ஜய ராம’ என்பது சரணாகதியைக் குறிக்கின்ற வார்த்தையாகும். ‘ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம’ என்ற இந்த நாமஜபத்தை செய்யும்போது ஜபத்தில் காக்கும் உணர்வு வருவதற்கு ஒவ்வொரு வார்த்தையையும் தீர்க்கமாக உச்சரிக்க வேண்டும். எந்த ஒரு வார்த்தையின் மீதும் அழுத்தம் தரக் கூடாது. ஒவ்வொரு வார்த்தையையும் மென்மையாக உச்சரிக்க வேண்டும். இப்போது நீங்களும் இம்முறையில் நாமஜபத்தை செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். தெய்வத்தின் காக்கும் மற்றும் அழிக்கும் ரூபம் சம்பந்தமான நாமஜபம் என்பது காக்கும் அல்லது அழிக்கும் நாமஜபமாகும்.

ராமதத்துவத்தின் அதிகபட்ச பயனைப் பெறுங்கள்!

இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏனைய தினங்களைக் காட்டிலும் ஸ்ரீராமநவமி அன்று ஸ்ரீராம தத்துவம் ஆயிரம் மடங்கு அதிக செயல்பாட்டில் உள்ளது. அதனால் அன்றைய திதியில் ‘ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம’ என்ற நாமஜபத்தை அதிகபட்சம் செய்யுங்கள் மற்றும் ஸ்ரீராம தத்துவத்தின் பூரண பயனைப் பெறுங்கள்!

மகான்களின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட நாமஜபம்!

இங்கு கொடுக்கப்பட்டுள்ள நாமஜபத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் பராத்பர குரு டாக்டர் ஜெயந்த் ஆடவலே அவர்களின் வழிகாட்டுதலின்படி ‘ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராம’ என்ற நாமஜபத்தை ஸனாதனின் பெண் ஸாதகர் குமாரி. தேஜல் பாத்ரிகர் அவர்கள் சாஸ்த்ரீய பிரயோகத்தின் மூலமாக உருவாக்கியுள்ளார்.

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘ஸ்ரீராம்’

Leave a Comment