பிரார்த்தனையின் முக்கியத்துவம்

அ. தெய்வத்திடம் அன்பையும்
மரியாதையையும் வளர்த்துக் கொள்ளுதல்

பரம்பொருளிடமும் ஏனைய தெய்வங்களிடமும் நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதும் மரியாதையையும் அன்பையும் செலுத்துவதுமே நமது பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். மேலும் பிரார்த்தனையானது, பரம்பொருள், ஏனைய தெய்வங்கள், குரு ஆகியோர் நம் மூலம் எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொள்ளப் போகிறார்கள் என்ற உணர்வையும் தோற்றுவிக்கிறது.

 

ஆ. எடுத்த காரியத்தில் வெற்றி

தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொண்டு, விரும்பிய ஒரு செயலை செய்வோமானால், அந்த தெய்வத்தின் ஆசி கிடைக்கிறது. மேலும் நமது ஆத்ம பலமும் தன்னம்பிக்கையும் வளர்கிறது. அதன் பயனாக அச்செயல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றப்படுகிறது.

 

இ. மனச்சாந்தி ஏற்படுகிறது

பிரார்த்தனைக்குப் பிறகு ஒரு செயலைச் செய்வதால், மனதில் நிம்மதி குடிகொள்கிறது. அமைதியான, உறுதியான மன நிலையுடன் செய்யும் வேலை நன்கு முடிகிறது.
– குமாரி அனுராதா வாடேகர், ஸனாதன் ஸன்ஸ்தா (23.5.2009)

 

ஈ. பூஜிப்பவரை ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்திற்கு
முன்னேற்றக் கூடிய சுலபமான வழிபாட்டு முறை

தினஸரி நடைமுறை வாழ்க்கை நெரிசலிலிருந்து விடுபட்டு மனநிம்மதி பெற மக்கள் கடவுளை வழிபடத் துவங்கி நாளடைவில் இறைவனின் உண்மை தத்துவத்தை உணரத் துவங்குகின்றனர். பெரும்பாலான மக்கள், தினஸரி பூஜா விதிகளும், மத சம்பந்தமான சடங்குகளும் அடங்கிய கர்மகாண்டத்தின் ஒரு பிரிவிலேயே வாழ்நாளை கழித்து விடுகிறார்கள். கர்மகாண்ட முறைப்படி பூஜிப்பது ஸ்தூல அளவிலேயே நின்று விடும். ஆனால் இறைவனோ, சூட்சுமமானவர். எனவே நாம் இறைவனை அடைவதற்காக செய்யப்படும் பூஜை நம்மை ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்திற்கு முன்னேற்றுவதாக இருக்க வேண்டும். நாம் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்வது மனதளவில் உள்ளது. எனவே பிரார்த்தனை செய்வது நம்மை ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்திற்கு அழைத்துச் செல்ல உதவும் சுலபமான வழிபாட்டு முறையாகும்.

 

உ. கடவுளைத் தொடர்பு
கொள்ள உதவும் சுலபமான வழிமுறை

ஸாதனை (ஆன்மீகப் பயிற்சி) மேற்கொள்ளும்போது கடவுளுடன் தொடர்பு கொண்டிருத்தல் மிகவும் அவசியம். குறைந்த இடைவெளியில் தவறாமல் பிரார்த்தனை செய்வதன் மூலம் இறைவனுடனான நமது தொடர்பை சுலபமாக நிரந்தரமாக்கிக் கொள்ளலாம்.

 

ஊ. தெய்வத்திடம் நம்பிக்கையும்
ஆன்மீக உணர்வும் உண்டாதல்

பிரார்த்தனையின் காரணமாக இறைவன் நம் மீது க்ருபையைப் பொழிகிறான். அதனால் நமக்கு அனுபூதிகள் ஏற்படுகின்றன. இது நம்முள் தெய்வ நம்பிக்கையும் ஆன்மீக உணர்வும் பெருக உதவுகிறது.

 

எ. கூட்டுப்பிரார்த்தனையின் முக்கியத்துவம்

குழந்தைகள் ஒன்றுகூடி கூட்டுப்பிரார்த்தனை செய்து இறைவனை வழிபடும் செயல், குறிப்பிடத்தக்க இனிமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி, சுற்றுப்புற சூழலைப் புனிதமாக்குகிறது. அந்த சமயங்களில் மனம் அந்த சப்த அலைகளில் ஒன்றுபட்டு அதனால் ஞாபகசக்தியும் கேட்கும் திறனும் கூடுகிறது. எனவே பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் கூட்டுப்பிரார்த்தனை மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. (மாதாந்திர ருஷி ப்ரசாத் நவம்பர் 2010)

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘பிரார்த்தனை’

Leave a Comment