பிரார்த்தனையின் நன்மைகள்

அ. உலக நன்மை, ஆன்மீக நன்மை ஏற்படுதல்

விஞ்ஞான முறையிலான பரிசோதனை மூலமும், பிரார்த்தனையின் பலனாக, உலக வாழ்க்கை நன்மைகளையும், ஆன்மீக நன்மைகளையும், ஒரு தனி மனிதன் அடைய முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. (மாதாந்திர ருஷி ப்ரஸாத் நவம்பர் 2010)

 

ஆ. செயல், எண்ணம், சுபாவம் ஆகிய மூன்று
நிலைகளிலும் பிரார்த்தனை நன்மை அளிக்கிறது

1. செயல்

பிரார்த்தனையோடு செய்யப்படும் செயல் ஆன்மீக உணர்வோடு செய்யப்படுவதால் தவறுகள் தவிர்க்கப்பட்டுக் மிகவும் குறைகின்றன. எனவே குரு அல்லது இறைவனின் எதிர்பார்ப்பின்படி ஸேவை சிறப்பாக அமைகின்றது.

2. எண்ணம்

மனம் பரபரப்போடு செயல்படும்போது எண்ணங்கள் எல்லையற்று எழுகின்றன. எண்ணங்களால் மனோலயம் ஏற்படுவது தடைபடுகிறது. விரும்பத் தகாத எண்ணங்கள் மனதில் எழும்போதும் மனதின் சக்தி விரயமாகின்றது. இவைகளை எல்லாம் தடுப்பதற்கு பிரார்த்தனை உதவுகிறது. மேலும் பிரார்த்தனை கவலைகளைக் குறைத்து மனதின் சிந்தனையை அதிகரிக்கிறது.

3. சுபாவம்

தவறாமல் தொடர்ந்து பிரார்த்தனை செய்வதால் அது ஆழ்மனதில் பதிந்து மனம் சிந்திக்க ஆரம்பிக்கின்றது. அதனால் அந்த நபருக்கோ, ஸாதகருக்கோ மனம் உள்முகமாகத் திரும்புகிறது.

 

இ. மன அழுத்தம் நீங்குதல்

1. மன அழுத்தம் ஏற்படும்போது, பிரார்த்தனை மூலம் இறைவனை நினைவுகூர்வதால், மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதோடு கூட நாமஜபம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் எழுகிறது.

2. பிரார்த்தனையோடு நாம் செய்யும் செயலோ அல்லது ஸேவையோ கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுவதால் மன அழுத்தம் ஏற்படுவதில்லை.

– குமாரி பக்தி பார்கர், ஸனாதன் ஆஸ்ரமம், தேவத், பன்வேல், மஹாராஷ்ட்ரா (சைத்ர க்ருஷ்ணா 4, கலியுக வருடம் 5111, 13.4.2009)

 

ஈ. அஹம்பாவம் குறைத்தல்

மனித வாழ்வில் அஹம்பாவம், துக்கத்தை ஏற்படுத்துகிறது. பிரார்த்தனை மூலமாக மனிதன் ஸர்வ வல்லமை படைத்த இறைவனிடம் சரணடைகிறான். பிரார்த்தனை மூலமாக அவன் கடவுளிடம் மன்றாடுகிறான். இது அவனது அஹம்பாவம் விரைவில் குறைய உதவுகிறது.

 

உ. மனோலயம், புத்திலயம் ஏற்படுதல்

ஆத்மநிவேதனமும், (சரணாகதி பாவத்துடன் இறைவனுடன் உரையாடுவது) தொடர்ந்து பிரார்த்தனை செய்வதும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதும், நம் மனோலயமும் புத்திலயமும் விரைவில் ஏற்பட உதவுகிறது. – ப. பூ. டாக்டர் ஆடவலே (5.12.2007)

 

ஊ. இறைவனோ குருவோ மன்னித்தருளுதல்

ஒருவன் தவறு செய்யும்போது இறைவனிடமோ குருவினிடமோ சரணாகதி செய்து பிரார்த்திப்பதால் அவர்கள், அவனுடைய தவறை மன்னிக்கிறார்கள்.

 

Leave a Comment