பிரார்த்தனை

அதிகாலையில் வீட்டு வாசலை சாவி கொண்டு திறக்கும் முன்பும், மீண்டும் இரவில் பூட்டும்போதும் பிரார்த்தனையுடன் செய்வதில் ஒரு உன்னதமான தத்துவம் உள்ளது. நமது அன்றாட அவசர வாழ்க்கையின் நெரிசலில் நாம் நமது நிம்மதியை இழந்து விடுகிறோம். இழந்த மனநிம்மதியை நாம் மறுபடி பிரார்த்தனை மூலம் பெறலாம். நமது பிரார்த்தனை நமது நம்பிக்கையை வலுப்படுத்தி இறைவனின் அருளையும் ஆசியையும் பெற்றுத் தருவதால், பிரார்த்தனையின் மூலம் முடியாததையும் சாதித்துக் காட்டலாம். விஞ்ஞானிகளாலும் பிரார்த்தனையின் முக்கியத்துவம் ஒப்புக் கொள்ளப்-பட்டிருக்கிறது. ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் மாசாரு இமோடோஎன்ற விஞ்ஞானி பிரார்த்தனையின் மூலம் நல்ல ஆரோக்கியத்தைப் பெற இயலும் என்று கூறுகிறார். கடவுள் தத்துவத்தை உணருவதற்கான ஸாதனா மார்க்கத்தில் செல்லும் ஸாதகர்களுக்கு, இறைவனுடன் இடையறாது தொடர்பு கொள்வதற்கு பிரார்த்தனை ஒரு விலைமதிப்பற்ற கருவியாக துணை புரிகிறது.

 

தோற்றமும் அர்த்தமும்

தோற்றம் : வேண்டுதல் என்பது ஸம்ஸ்க்ருத மொழியில் பிரார்த்தனா என்று சொல்லப்படுகிறது. பிரார்த்தனை என்பது இரண்டு வார்த்தைகளின் சேர்க்கையாகும். அதாவது ‘பிரா’ என்றால் ‘இடைவிடாது, தொடர்ந்து’ என்றும் ‘அர்த்தா’ என்றால் ‘வேண்டுவது’ என்றும் பொருள்.

அர்த்தம் : பணிவோடு, அடங்கா ஆர்வத்தோடு நாம் இஷ்டப்பட்டதை இறைவனிடம் வேண்டுவதே பிரார்த்தனையாகும். பிரார்த்தனை என்பதில் மரியாதை, அன்பு, வேண்டுதல், நம்பிக்கை மற்றும் பக்திபாவம் ஆகிய யாவும் அடக்கம். பிரார்த்தனை மூலம் நாம் இறைவனிடம் நமது திக்கற்ற நிலைமையையும், சரணாகதியையும், என்னால் ஆவது ஒன்றுமில்லை நான் உனது கைக்கருவி என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
– வைத்யாசார்யா டாக்டர் வசந்த பாலாஜி ஆடவலே, செம்பூர், மும்பை (1980)

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘பிரார்த்தனை’

Leave a Comment