பாரதத்தை ‘சுஜலாம் சுபலாமாக’ மாற்றுவதற்கு ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கைத் துறை முன்வர வேண்டியது அவசியம் !

1. மனிதர்களின் ஆன்மீக முன்னேற்ற
கண்ணோட்டத்தில் பத்திரிக்கையாளர்கள்
தங்களின் கடமையை செய்வது மிகவும் அவசியம்!

பாராளுமன்றம், நீதித்துறை, அரசாங்கம் மற்றும் பத்திரிக்கைத் துறை ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் ஆதார தூண்களாகும்.
சுதந்திர பாரதத்தின் 71-வது வருட காலத்தில் பத்திரிக்கையாளர்கள், மக்களின் நலனை முன்னிறுத்தும் விதமாக இயங்காததன் காரணமாக காங்கிரஸ் அரசியல்வாதிகள், ஜனநாயக ஆட்சி என்ற பெயரில் சர்வாதிகார ஆட்சியே புரிந்து வந்துள்ளனர். இதனால் ஒரு காலத்தில் ‘சுஜலாம் சுபலாமாக’ செல்வ செழிப்புடன் இருந்த பாரதம் இன்று அதோகதிக்கு, எல்லா துறைகளிலும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாரதத்தின் இந்நிலையை மாற்றி மறுபடியும் ஆன்மீக ரீதியாக உன்னத நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
அதற்கு பத்திரிக்கையாளர்கள் மக்களின் ஆன்மீக முன்னேற்றத்தை மனதில் கொண்டு அதன்படி தங்களின் கடமையை நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிறது. இதன் முதல்படியாக பத்திரிக்கைத்துறை தங்களின் கடமைகள் என்னென்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

 

2. அரசியல்வாதிகள் தேர்தல் சமயத்தில் மக்களுக்கு
கொடுத்த வாக்குறுதிகளை பின்னர் நிறைவேற்றாததை
பத்திரிக்கைத்துறை தான் வெளிக்கொணர வேண்டும்!

அரசாட்சியில் உள்ளவர்கள் உணவுப் பொருட்கள், சாலைவழிகள், மின்சாரம், குடிதண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை உரிய நேரத்தில் உரிய நபர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும். துரதிர்ஷ்டவசமாக குடிமக்களுக்கு இந்த தேவைகளை பூர்த்தி செய்ய இன்றைய ஆட்சியாளர்கள் தவறி விட்டனர். விரல் விட்டு எண்ணக்கூடிய ஆட்சியாளர்களே ஓரளவிற்கு தங்களின் கடமையை நிறைவேற்ற முயற்சிக்கின்றனர். பெரும்பான்மையான ஆட்சியாளர்கள் வெறும் வெற்று உறுதிமொழிகளை அள்ளி வீசி பொதுநலன் செயல்பாடுகளை கைவிட்டு சுயநலமாக செயல்படுகின்றனர். இதற்கு, ‘தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை அன்பொழுக அள்ளி வீசும் அரசியல்வாதிகள் ஏன் அவற்றை நிறைவேற்றவில்லை?’ என்பதை பத்திரிக்கைத் துறை வெளிக்கொணர வேண்டும்.

 

3. அரசியல்வாதிகள் மனிதனின்
ஆன்மீக நலனில் தடங்கல்கள் ஏற்படுத்துவது
பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் அவசியம்!

சுதந்திரம் அடைந்ததிலிருந்து அரசியல்வாதிகள் மனிதனின் ஆன்மீக நலனில் பல தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். உதா. கோவில்களை உடைத்தல்; கோவில்களை அரசுடைமையாக்கி அதன் நிர்வாகத்தை அயோக்கிய நபர்களிடம் ஒப்படைத்தல்; கோவில்களின் பணத்தை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்துதல்; மனித வாழ்வின் கண்ணோட்டத்தில் தர்மத்திற்கு புறம்பான விஷயங்களை தடை செய்யாமல் அந்த செயல்களை ஊக்குவித்தல்; மனித வாழ்வில் தீய விளைவுகளை ஏற்படுத்தும் பொருட்களை தடை செய்யாதிருத்தல், உதா. மது, போதைப் பொருட்கள், ‘சன்பர்ன்’, பசுவதை, பட்டாசுகள், மசூதிகளில் கூம்பு வடிவு ஒலிபெருக்கிகள்,
தொலைகாட்சியில் அயோக்கிய கண்ணோட்டத்தைத் தரும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புதல், ‘இன்டர்நெட்’-ஐ அதர்ம விஷயங்களுக்கு பயன்படுத்துதல், சினிமா மற்றும் நாடகங்கள் மூலமாக சரித்திரத்தை உண்மைக்கு புறம்பாக திரித்துக் காண்பித்தல், பாட புத்தகங்கள் மூலம் தவறான கருத்துக்களை கற்றுத் தருதல், வருங்கால சந்ததியினரை திறனுள்ளவராக உருவாக்குவதற்காக கல்வித் திட்டத்தை சீர் படுத்தாமல் மெகாலே கல்வித்திட்டத்தை அப்படியே பின்பற்றுதல், பதவி கிடைப்பதற்காக மற்றவரின் அடிவருடுதல், சரியான சட்டங்களை அமல்படுத்தாமல்
இருத்தல், டி.ஆர்.பி. கூடுவதற்காக வேண்டி தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்றவை. இவ்விஷயங்கள் சம்பந்தமாக பத்திரிக்கைத்துறை சரியான கண்ணோட்டத்தை சாதாரண மக்களுக்கு வழங்கி அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 

4. முற்காலத்தில் குருகுல கல்விமுறை
பின்பற்றப்பட்டு ராஜாக்கள் ஸாதனைக்கு
அதிக மகத்துவம் அளித்து அரசாட்சி செலுத்தியதால்
ராஜ்யத்திலுள்ள மக்களும் ஆனந்தமாக வாழ்ந்தனர்.

முற்காலத்தில் குருகுல கல்விமுறை இருந்ததால் ராஜாக்கள் ஆன்மீக பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அரசாட்சி நடத்தி வந்தனர். ராஜாக்கள் கொடை வள்ளல்களாக இருந்தனர். ‘மக்களை இன்புற்று வைத்திருக்க வேண்டும்’ என்பதே அவர்களின் கடமையாக இருந்து வந்தது. ராஜாக்கள் தர்மவழி நடப்பவர்களாக
இருந்ததால் அவர்களும் வானப்ரஸ்தம் மற்றும் சந்நியாச ஆச்ரமங்களை முறைப்படி மேற்கொண்டு ஆன்மீக ஸாதனை செய்வதற்காக ஆட்சியை விட்டு வெளியே வந்தனர். அதனால் அவர்களின் அரசாட்சியும் தார்மீகமாக இருந்தது. ராஜ்யத்திலுள்ள அனைத்து குடிமக்களும் தர்ம வழி நடப்பவர்களாக இருந்ததால் அவர்களும் பாவ-புண்ணியத்திற்கு கட்டுப்பட்டு நடந்தனர். இக்காரணங்களால் குடிமக்கள் இயல்பாகவே ஆனந்தமாக வாழ்ந்தனர். ஆத்மபலத்தினால் அவர்களால் எந்தவொரு தனிப்பட்ட அல்லது தேச அளவிலான கஷ்டங்களையும் எதிர்கொள்ள முடிந்தது.

5. இன்றைய பத்திரிக்கையாளர்கள்
‘பணமே பிரதானம்’ என்ற கண்ணோட்டத்துடன்
பணத்தை வாங்கிக் கொண்டு ‘பெய்ட் ந்யூஸ்’ தயாரித்து
மக்களுக்கு வழங்குவதால் இன்று சமூக நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது!

பத்திரிக்கைத்துறை மூலமாக எந்த மாதிரியான கண்ணோட்டம் வெளிப்படுகிறதோ அதுவே மக்களிடையே பரவுகிறது. இன்றைய பத்திரிக்கையாளர்கள் பணத்தையே குறியாகக் கொண்டு ‘பொய் செய்திகளை’ ஜோடித்து வழங்குகின்றனர். இவ்வாறான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குதல், காம வேட்கையைத் தூண்டும் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்குதல் போன்ற சீர்கேடுகளால் சமூகம் இன்றைய சீர்கெட்ட நிலைக்கு தாழ்ந்து விட்டது. ஒவ்வொருவரும் இன்பத்தைத் தேடி அலைகின்றனர்; ஆனால் அவர்களுக்கு உண்மை எது என்பது தெரியாமல் இது போன்ற அயோக்கிய விஷயங்களின் மூலம் இன்பத்தை நுகர முயல்கின்றனர். உண்மை இலக்கை மறந்து இவ்வாறு மதிமயங்கி சிற்றின்பத்தில் மூழ்குகின்றனர்.
எவ்வாறு கண்ணோட்டம் உள்ளதோ அவ்வாறு செயல் நடப்பதால் சரியான கண்ணோட்டம் இல்லாத நிலையில், வாழ்க்கை நெறிமுறை என்ன என்பது அறியாத நிலையில் இன்று எல்லா இடங்களிலும் மிக மோசமான நிலை நிலவுகிறது. சரியான வழியைக் காண்பிக்கும் குரு இல்லாத காரணத்தால் இவ்வாறான தாழ்ந்த நிலை நிலவுகிறது. சுகத்தைத் தேடி மனிதன் பாவ காரியங்களை செய்து அதற்குரிய நரக வேதனையை தான்தான் அனுபவிக்க வேண்டும் என்பதையும் மறக்கிறான்.

 

6. பத்திரிக்கையாளரின் கடமை

‘84 லக்ஷ உயிர் வகைகளைக் கடந்த பின்னரே ஒரு ஜீவனுக்கு மனிதப்பிறவி கிடைக்கிறது. அதன் மூலம் இறைவன் தந்தருளிய பூமியின் இயற்கை வளங்களை உபயோகித்து உடலைப் பேண வேண்டும். குருவின் வழிகாட்டுதலின்படி ஸாதனை செய்து இறைவனை அடைவதை வாழ்வின் இலக்காகக் கொண்டு நமக்கு நாமே நன்மை செய்து கொள்ள வேண்டும். இதுவே வாழ்வின் நோக்கம்.
‘இந்த முக்கிய மூலாதாரமான கருத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் இயங்குகிறதா ?’ என்பதை கண்காணித்து இந்த தர்ம வழியிலிருந்து பிறழ்ந்தால் அரசாங்கத்திற்கு எடுத்துரைத்து மறுபடியும் தர்ம வழியில் நடக்க செய்வது என்பது பத்திரிக்கைத்துறையின் கடமையாகிறது. ஏனென்றால் பத்திரிக்கைத்துறையே ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது.

 

7. தினப்பத்திரிக்கைகள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை
வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது !

அ. மக்கள் தேர்ந்தெடுத்துள்ள பிரதிநிதிகளின் கடமைகள்

ஆ. ‘பல்வேறு பாகங்களிலுள்ள ஆட்சியாளர்கள் எந்தெந்த கடமைகளை நிறைவேற்றவில்லை மற்றும் எந்தெந்த கடமைகளை நிறைவேற்றியுள்ளனர் என்பதன் தொகுப்பு செய்தி

இ. தேசத்தின் ஏதாவது ஒரு பாகத்தில் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ‘ஸன்பர்ன்’ போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டால் ‘இது சம்பந்தமாக அங்குள்ள அரசியல்
பிரதிநிதிகளின் கருத்து என்ன?, மற்றும் ‘இந்நிகழ்ச்சி நடக்காமலிருக்க அவர்கள் என்ன முயற்சியை மேற்கொண்டார்கள்’ என்பதைப் பற்றியும் செய்திகளை வெளியிட்டு இது போன்ற நிகழ்ச்சிகள் ஏன் நடத்த விடக் கூடாது என்பது பற்றி கூறி அரசின் மீது அழுத்தத்தை கொண்டு வர வேண்டும்.

ஈ. சமூகத்தினருக்கு தீங்கு விளைவிக்கும் நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்துவோம் என்று தரப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என்றால் அது பற்றிய செய்தியை வெளியிடுதல்

உ. ‘ஆட்சியாளர்கள் மக்களின் கஷ்டங்களை தீர்க்காமல் அலட்சியம் செய்கிறார்கள்’ என்பது பற்றிய செய்திகளை வெளியிடுதல்

ஊ. சமூகத்திற்கு தேவையான விஷயங்களைப் பற்றி ஆட்சியாளர்களிடம் நேர்காணல் செய்து அதை ஒளிபரப்புதல்

 

8. பத்திரிக்கையாளர் எவ்வாறு இருக்க வேண்டும்?

அ. மக்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய இருவருக்கும் பாலமாக இருத்தல்

ஆ. மக்கள் நல காரியங்களை ஆட்சியாளர்கள் மூலம் நடத்துவித்தல்

இ. மக்களின் தூதுவர்களாக ரிஷி முனிவர்களைப் போன்று எதிர்பார்ப்பில்லாமல் காரியங்கள் செய்தல்

ஈ. மக்களின் வாழ்வில் பிரதானமான அங்கமாக விளங்குதல்

உ. மக்களின் கஷ்டங்களைத் தீர்ப்பவர்களாக, அவர்களின் நண்பர்களாக, நலவிரும்பிகளாக, ஆத்மார்த்தமாக அன்பு செலுத்துபவர்களாக இருத்தல்

ஊ. ‘மக்களின் பிரதிநிதிகளாக’ கடமை வீரர்களாக, சத்தியத்தை கடைபிடிப்பவர்களாக காரியம் செய்தல்

எ. அரசாங்கத்தின் மீது அங்குசத்தை உபயோகித்து காரியம் செய்தல்

ஏ. மக்கள் தங்களின் கடமைகளை சரிவர நிறைவேற்ற அவர்களை நினைவுறுத்துதல்

ஐ. அரசு மக்களுக்கு வழங்கும் சலுகைகளின் பட்டியலை வெளியிட்டு மக்களிடம் அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

 

9. அரசாங்கத்திடம் நல்ல மாற்றங்களை
வரவழைக்க பத்திரிக்கையாளர்கள் மகத்துவம்
நிறைந்த கருத்தை முன் வைப்பது அவசியமாகிறது !

மக்களுக்கு ஏற்படும் சங்கடங்களை தினசரி அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்விஷயங்கள் தினப்பத்திரிக்கை மூலமாக விரைவில் அரசை சென்றடையும். அதன் மூலம் அரசாங்கம் அது சம்பந்தமான நிவாரண திட்டத்தை செயல்படுத்த இயலும். லோகமான்ய திலகரைப் போன்று மக்களின் சங்கடங்களை தீர்க்க பத்திரிக்கைகள் ஆழ்ந்த ஆர்வத்துடன் முனைய வேண்டும்; காரணம் பத்திரிக்கைத்துறை என்பது மக்கள் மற்றும் அரசுக்கு இடையே உள்ள பாலமாகும்.

 

10. சமூகத்திற்கு தர்மபோதனை வழங்குவதற்கும்
அவர்களின் ஆத்மபலத்தை அதிகப்படுத்துவதற்கும்
ஆன்மீக விஷயங்களை சமூகத்தினருக்கு தொடர்ந்து அளிப்பது அவசியம்!

சுதந்திரத்திற்கு பின்னர் நம் நாட்டின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் கீழ் நோக்கி பயணித்து வருகிறது. இதன் பலனை ஒவ்வொரு குடிமகனும் அனுபவிக்க வேண்டி உள்ளது. குடிமக்களின் கவலை தீர அவர்களுக்கு அடிப்படை பொருளாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது  அவசியமாகிறது. அது நிறைவேறிய பின்னரே அவர்களால் ஆன்மீக ஸாதனை பற்றி சிந்திக்க முடியும். சமூகத்தினர் ஆன்மீக ஸாதனையில் ஈடுபடுவது மிகவும் அவசியமாகிறது. ஏனென்றால் ஸாதனை என்பது ஹிந்து தர்ம வழி நடப்பதாகும்!  இவ்வாறு நடந்தால்தான் ஒட்டுமொத்த சமூகமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். இதற்கு பத்திரிக்கைத்துறை ‘சமூகத்தினரின் அடிப்படை பொருளாதார வசதிகள் விரைவில் வழங்கப்பட்டதா?’ என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் தர்மபோதனை வழங்கவும், சமூகத்தினரின் ஆத்மபலத்தை அதிகப்படுத்தவும் முனைய வேண்டும். காரணம் ஆத்மபலத்தின் மூலமே அனைத்து காரியங்களும் நடக்கின்றன. அதை விட்டுவிட்டு தற்பொழுது ‘நான்
காரியம் செய்கிறேன்’ என்ற தோரணையில் காரியங்கள் செய்யப்படுவதால் இத்தகைய பரிதாபகர நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

 

11. உண்மையான ஜனநாயகம்

சமூகத்தினரிடையே தானாகவே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்; மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ‘தேசத்தின் நிலவும் கஷ்டங்களைப் பற்றிய உண்மையான செய்தியைத் தருவதே பத்திரிக்கைத்துறையினரின் கடமையாகிறது. இதுவே உண்மையான ஜனநாயகம்!

12. பத்திரிக்கைத்துறை தங்களின் கடமையை சரிவர செய்தால் அது அகில மனிதகுல நலனுக்கு வித்திடும்!

மேற்கூறியவற்றிலிருந்து ஒன்று விளங்குகிறது, ‘மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் ஸனாதன் பிரபாத் மற்றும் ஏனைய சில பத்திரிக்கைகள் நிறைவேற்றுவது தெரிகிறது. இவர்களைப் போன்றே மற்ற எல்லா பத்திரிக்கைகளும் முயற்சி எடுத்து சமூகத்தில் சைதன்யத்தை பரவச் செய்து எங்கும் சைதன்ய மயமான
சூழல் உருவாக்க முயற்சிப்பது மிகவும் அவசியம். இதன் மூலமாகத்தான் பாரதம் ‘சுஜலாம் சுபலாமாக’ மாறும். பத்திரிக்கையாளர்கள் தங்களின் தார்மீக கடமையை செவ்வனே செய்தால் அது அகில மனித குலத்திற்கே பெரும் நன்மை பயப்பதாக அமையும்.’

– (பராத்பர குரு) பரசுராம் பாண்டே (மகாராஜ்), ஸனாதன் ஆஸ்ரமம், தேவத், பன்வேல். (16.10.2017)

Leave a Comment