மூதாதையர்களால் ஏற்படும் கஷ்டங்கள் தூர விலக பித்ருபக்ஷ காலத்தில் செய்ய வேண்டிய தத்தரின் திருத்தப்பட்ட நாமஜபம்!

ஸாதகர்களுக்கான குறிப்பு

‘தற்போது பல ஸாதகர்களுக்கு தீய சக்திகளால் கஷ்டங்கள் ஏற்படுகின்றன. பித்ருபக்ஷ காலத்தில் (10 – 25 செப்டம்பர் வரை) இந்த கஷ்டங்கள் அதிகரிக்கலாம் என்பதால் இந்த குறிப்பிட்ட காலத்தில் தினமும் திருத்தப்பட்ட நாமஜபமான ‘ஓம்  ஓம் ஸ்ரீகுருதேவ தத்த ஓம்’ என்ற நாமஜபத்தை செய்து வரலாம். இதற்கு முன்பு குறிப்பிட்டுள்ளதுபோல் இறுதியில் இரு ‘ஓம்’ கூறாமல் ஒருமுறை ‘ஓம்’ கூற வேண்டும். இந்த நாமஜபம் Sanatan.org என்ற வலைதளத்தில் உள்ளது.

திருத்தப்பட்ட நாமஜபத்தின் லிங்க் –

https://www.sanatan.org/tamil/2270.html

இந்த நாமஜபத்தை குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது செய்ய வேண்டும். எந்த ஸாதகர் தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்கள் தூர விலகுவதற்கு ஆன்மீக உபாயங்களை செய்கிறாரோ, அவர் அந்த உபாய நாமஜபத்துடன் கூட இந்த தத்த நாமஜபத்தை குறைந்தபட்சம் 1 மணி நேரத்திற்காகவாவது செய்ய வேண்டும். தத்த நாமஜபத்தை செய்யும்போது கைகளின் ஐந்து விரல் நுனிகளை ஒன்றாக சேர்த்து அநாஹத மற்றும் மணிபூரக சக்கரத்தில் நியாஸ் செய்யவும்.

எந்த ஸாதகர் ஆன்மீக உபாயங்களை செய்வதில்லையோ அவர் தனிப்பட்ட செயல்களான குளிக்கும்போது சுத்தப்படுத்தும் சேவை செய்யும்போது ஆகிய நேரங்களில் தத்த நாமஜபத்தை குறைந்தபட்சம் 1 மணி நேரம் செய்யலாம். ஆனால் மூதாதையர்களால் கஷ்டங்களை உணர்ந்தால் அவர்களும் உட்கார்ந்து முத்திரை செய்து தத்த நாமஜபத்தை செய்வது நல்லது.

–            (ஸத்குரு) டாக்டர் முகுல் காட்கில், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (14.9.2022)

‘ஓம் ஓம் ஸ்ரீ குருதேவ தத்த ஓம் |‘

இந்த, ஒலிப்பதிவு செய்யப்பட்ட புதிய நாமஜபம் ஸனாதன் ஸன்ஸ்தாவின்
வலைத்தளத்திலும் ‘ஸனாதன் சைதன்யவாணி ஆப்’பிலும் உள்ளது !

‘ஸனாதன் சைதன்யவாணி ஆப்’பை பதிவிறக்க

https://www.sanatan.org/Chaitanyavani

தீய சக்திகள் : சூழலில் நல்ல சக்திகள் மற்றும் தீய சக்திகள் செயல்பாட்டில் உள்ளன. நல்ல சக்திகள் நல்ல காரியங்களுக்கு உதவி செய்கின்றன, ஆனால் தீய சக்திகள் கஷ்டங்களைத் தருகின்றன. முற்காலத்தில் ரிஷிகள் முனிவர்கள் யாகங்கள் செய்யும்போது ராக்ஷசர்கள் பெரும் தடங்கல்களை ஏற்படுத்தினர் என்று வேத புராணங்களில் படித்துள்ளோம். அதர்வண வேதத்தில் பல இடங்களில் தீய சக்திகளை உதா. அசுரர், ராக்ஷசர், பிசாசுகள் அதேபோல் கரணி, பானாமதி ஆகியவற்றை எதிர்ப்பதற்கான மந்திரங்கள் தரப்பட்டுள்ளன. தீய சக்திகள் தரும் கஷ்டங்களிலிருந்து நிவாரணம் பெறவும் பல்வேறு ஆன்மீக உபாயங்களை வேதம் முதலான தர்ம கிரந்தங்கள் கூறுகின்றன.

 

 

Leave a Comment