ஹிந்து தர்மத்தின் மீதுள்ள தாக்குதல்களும் ‘ஹிந்து ராஷ்ட்ர’த்தை ஸ்தாபனம் செய்வதன் அவசியமும்!

தற்போது உலகில் 152 கிறிஸ்துவ நாடுகளும் 52 இஸ்லாமிய நாடுகளும் 14 பௌத்த நாடுகளும் ஒரு யூத நாடும் உள்ளன. இருந்தாலும் உலகின் நான்காவது பெரிய தர்மத்தை சேர்ந்த ஹிந்துக்களுக்கென்று ஒரு தனி சுதந்திர நாடும் இல்லை. இந்தியாவில் சராசரி 100 கோடி ஹிந்துக்கள் வாழ்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு தனி சுதந்திர நாடு இல்லாதது அதிர்ச்சியடைய வைக்கிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கேற்ப இக்காரணத்தால் ஹிந்துக்கள் பல வழிகளில் தீய விளைவுகளை சந்திக்க வேண்டி உள்ளது. இக்கட்டுரையில் இது பற்றிய விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன.

ஹிந்துக்களின் நம்பிக்கை
பீடங்களின் மீது தொடர்ந்து நடக்கும் தாக்குதல்

பல வருடங்களாக ஹிந்துக்கள் மற்றும் ஹிந்துக்களின் நம்பிக்கை பீடங்களின் மீது தாக்குதல் நடத்தும் சூழ்ச்சி திட்டமிட்டு நடந்து வருகின்றன. சுதந்திரத்திற்கு பின்னர், காங்கிரஸ் கட்சி இந்த தேசத்தை 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்துள்ளது. அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிந்துக்களின் மீது ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்கள் இப்பொழுது ஹிந்துத்வ ஆட்சியான பாஜக ஆட்சி வந்து பிறகும் நிறுத்தப்படவில்லை. காங்கிரஸ் அரசு மும்பையிலுள்ள ஸ்ரீ சித்திவிநாயக் கோவில், ஷிர்டியிலுள்ள ஸ்ரீ சாய்பாபா கோவில், துள்ஜாபூரிலுள்ள ஸ்ரீ துள்ஜாபவானி கோவில் போன்ற பல கோவில்களை அரசுடைமை ஆக்கியுள்ளது. அதேபோல் கர்நாடகா, தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் கோவில்களை எடுத்துக் கொண்டுள்ளன. பெரும் நம்பிக்கையுடன் பக்தர்கள் அளிக்கும் காணிக்கைப் பணத்தையும் கோவில் சொத்துக்களையும் கொள்ளையடிக்கும் பாவச் செயலை ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். கோவில்களின் பணம் ஹிந்து தர்ம விஷயங்களுக்காக மட்டும் செலவழிக்கப்பட வேண்டும்; ஆனால் இப்பணம் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்காக செலவழிக்கப்படுகின்றது. மதசார்பற்ற அரசு என பறை சாற்றிக் கொள்ளும் அரசாங்கம் கோவில்களை மட்டுமே கையகப்படுத்துகின்றன; சர்ச்சுகளையும் மசூதிகளையும் இவர்கள் தொடுவதே இல்லை. இது மட்டுமல்லாமல் எல்லா அரசுத் துறைகளும் தனியார் துறையிடம் விடப்படும்போது ஏன் கோவில்களை மட்டும் இவர்கள் அரசுடைமை ஆக்கிக் கொள்கிறார்கள்? இக்கேள்வியை ஹிந்துக்கள் அரசாங்கத்திடம் கேட்க வேண்டும். கோவில்கள் என்பன சைதன்யம் மற்றும் ஸாத்வீகத் தன்மையின் பிறப்பிடமாகும். மன சாந்தியைத் தரும் கேந்திரமாகும். ஆனால் கோவில்கள் அரசுடைமை ஆக்கப்பட்டவுடன் அங்கு ஊழலும் ஆரம்பிக்கிறது. இதன் விளைவாக கோவில்களின் ஸாத்வீகத் தன்மை நஷ்டமடைகிறது. இது ஹிந்துக்களின் நம்பிக்கை பீடங்கள் மீது நடத்தப்படும் பெரும் தாக்குதல் ஆகும்.
துரதிர்ஷ்டவசமாக, ஹிந்துக்களின் வாக்குகளால் பதவிக்கு வந்துள்ள பாஜக ஆட்சியிலும் இந்த சூழ்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது. ஹிந்துக்களின் நம்பிக்கை கேந்திரமான மகாராஷ்ட்ராவிலுள்ள ஷனி ஷிங்நாபூர், கேரளாவிலுள்ள சபரிமலை கோவில் போன்ற இடங்களில் குறிப்பிட்ட வயதிற்குரிய பெண்கள் வரக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனாலும் முற்போக்குவாதிகள் என தங்களைக் கூறிக் கொள்பவர்கள், பெண்-உரிமைப் போராளிகள், நாஸ்திகவாத அமைப்புகள் ஆகியோரின் அழுத்தத்தால் அரசாங்கம் இவ்விதியை மீறி கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்ப சுவாமி நைஷ்டிக பிரம்மச்சாரி. அதனால் 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் அக்கோவிலுக்கு வரக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. மாதவிடாய் வயது வரம்பில் உள்ள பெண்களுக்கே இந்த தடை உத்தரவு. ஆனால் இந்த பாரம்பரியம், பெண்ணுரிமை என்ற பெயரில் மிதிக்கப்பட்டு அத்துடன் ஹிந்துக்களின் மத உணர்வுகளும் மிதிக்கப்பட்டுள்ளன.

ராமர் கோவில் கட்டுவதில்
பாஜக அரசு காட்டும் மெத்தனம்

மொகலாயர்கள் இந்தியாவை படையெடுத்து பல லக்ஷக்கணக்கான கோவில்களை தரைமட்டமாக்கியுள்ளனர். ஹிந்து பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர் மற்றும் ஹிந்துக்களை பலவந்த மதமாற்றம் செய்துள்ளனர். பாபர், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை இடித்து அங்கு மசூதி கட்டினான். இதற்கான பல சான்றுகள் உள்ளன; இருந்தாலும் இன்றுவரை அங்கு ராமர் கோவிலை எழுப்ப முடியவில்லை. இன்றும் பிரபு ஸ்ரீராமர் கோவிலுக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. ‘மந்திர் வஹி பனாயேங்கே’ (கோவிலை அங்கேயே கட்டுவோம்) என்ற கோஷத்தை எழுப்பி பாஜக ஹிந்து வாக்குகளை சேகரித்தது; இருந்தாலும் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரும் ராமர் கோவில் எழுப்பப்படவில்லை. அவ்வப்பொழுது பாஜக அளித்த வெத்து உறுதிமொழிகளால் ஹிந்துக்கள் காக்க வைக்கப்பட்டுள்ளனர். அதன் பலனாக ஹிந்துக்கள் பாஜக மீது நம்பிக்கை இழந்துள்ளனர். ராமர் கோவிலை எந்த அரசியல் கட்சியாலும் கட்டித் தர இயலாது என்று ஹிந்துக்களுக்கு நன்றாக புரிந்து விட்டது. ‘ஹிந்து ராஷ்ட்ரம்’ அமைந்த பின்பே ராமர் கோவில் கட்டப்படும். அதனால் ஹிந்து ராஷ்ட்ரத்தை உடனடியாக அமைப்பது இன்றியமையாததாகி விட்டது.

அதிகரித்துள்ள பசுவதை மற்றும்
பசு பாதுகாவலர்கள் மீது அநீதியான நடவடிக்கை

கோமாதா ஹிந்துக்களின் பூஜைக்குரிய ஒன்று. பல தார்மீக சடங்குகளில் கோபூஜை நடைபெறுகிறது. ஆனால் ஹிந்துக்களை புண்படுத்தும் விதமாக மதவெறியர்களால் பெரும் அளவில் பசுவதை நடைபெற்று வருகிறது. இன்று வரை எந்த அரசாங்கத்தாலும் பசுவதையை தடுத்த நிறுத்த முடியவில்லை. பசுவதை தடைசட்டம் உள்ள மகாராஷ்ட்ராவில் பல இடங்களில் பசுவதை நடைபெறுகிறது. பகிரங்கமாக பசுமாமிசம் பல இடங்களில் வாகனங்களில் கடத்தப்படுகிறது. இது தொடர்ந்து நடந்தால் சில வருடங்களில் பசுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும். அடுத்த தலைமுறையினர் பாடப் புத்தகங்களிலுள்ள படங்களைப் பார்த்துத்தான் பசுக்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் நிலைமை வந்து விடும். இதுவும் ஹிந்து தர்மத்தின் மீதான மகத்தான தாக்குதல் ஆகும். பசுவதையைப் பற்றியும் பசுமாமிச கடத்தல் பற்றியும் ஹிந்துத்வவாதிகள் காவல்துறையிடம் புகார் பதிவு செய்தால் அவர்கள் அதைப் புறக்கணிக்கின்றனர். அதே ஹிந்துத்வவாதிகள் தாங்களே பசுவைப் பாதுகாக்க நடவடிக்கையில் இறங்கினால் இதே காவல்துறை அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கின்றனர். மகாராஷ்ட்ரா ளோடே பரசுராம் என்ற இடத்தில் நடக்கும் பசுவதையை எதிர்த்து தொடர்ந்து கொடுக்கப்பட்ட அனைத்து புகார்களையும் காவல்துறையினர் புறக்கணித்தனர். அதன் விளைவாக ஹிந்துத்வவாதிகள் போராட்டத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. அப்பொழுது அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தனர் காவல்துறை. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களே இவ்வாறு நடந்து கொள்கின்றனர். காங்கிரஸ், பாஜக எது அரசாட்சியில் இருந்தாலும் காவல்துறையினர் சகிப்புத்தன்மையுடைய ஹிந்துக்களையே கட்டுப்படுத்த முயல்கின்றனர்.

பொய் வழக்குகளின் மூலம் ஹிந்து
மகான்களையும் ஹிந்துத்வவாதிகளையும் மட்டுமே துன்புறுத்தும் அரசு

காங்கிரஸ் ஆட்சியின்போது பொய் வழக்குகளின் மூலம் ஹிந்து மகான்களின் மீது அவதூறு செய்யப்பட்டது; இருந்தாலும் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரும் ஹிந்துக்களின் மீது இழைக்கப்படும் அநீதிகள் நிற்கவில்லை. ஹிந்துக்கள் அல்லாத சமூகத்தின் மதத் தலைவர்கள் மீது இது போன்ற நடவடிக்கைகளை பாஜக ஆட்சி எடுத்ததாக தெரியவில்லை. அதோடு மட்டுமல்லாமல் பாஜக அரசு எந்த முகாந்தரமும் இல்லாமல் தாபோல்கர், பான்சரே, கல்புர்கி ஆகியோரின் கொலை வழக்குகளில் குற்றமற்ற ஹிந்துக்களை, ஸனாதனின் ஸாதகர்களை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளது. இதுவரை அரசால் குற்றம் சாட்டியவர்கள் மீது எந்த நிரூபணமும் காட்ட இயலவில்லை; ஆனால் அவர்களை இன்னமும் ஜெயிலில் வைத்து மானசீக சித்ரவதை செய்து வருகின்றனர். இதுவரை ஸனாதன் மீது எந்த குற்ற வழக்கும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாத நிலையில் ஸாதகர்கள் மீது தேவையில்லாமல் போலீஸ் விசாரணை நடத்தி அவர்களுக்கு பெரும் மன வேதனையை அளித்து வருகின்றனர். இவ்வாறாக ஹிந்து தர்மத்தின் மீதும் மகான்கள் மற்றும் ஹிந்துத்வவாதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

ஹிந்துக்களின் மீதுள்ள தாக்குதல்களை
தடுத்து நிறுத்தக் கூடிய ஒரே நிரந்தர
வழி ‘ஹிந்து ராஷ்ட்ர’த்தை அமைப்பதுதான்!

சுருக்கமாக ஹிந்து பெரும்பான்மை இந்தியாவில் எந்த கட்சியின் ஆட்சியாளர்களும் ஹிந்துக்களுக்கு நீதி வழங்கவில்லை என்பதுதான் உண்மை. இது போன்ற நிலை நீடித்தால் சிறிது சிறிதாக ஹிந்துக்கள் அழிக்கப்படுவார்கள். ஹிந்துக்களின் மீது நடக்கும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும் ஹிந்துக்களுக்கு நீதி வழங்கவும் ஹிந்துக்களை ஒன்றுபடுத்தி ‘ஹிந்து ராஷ்ட்ர’த்தை அமைப்பது அத்தியாவசியமாகிறது.

‘ஹிந்து ராஷ்ட்ர’த்தை புனர் நிர்மாணம்
செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
‘அகில பாரதீய ஹிந்து மாநாடு’!

ஹிந்துக்களை ஒன்றுபடுத்தி ‘ஹிந்து ராஷ்ட்ர’த்தை புனர் நிர்மாணம் செய்யும் உன்னத நோக்கத்துடன் ஹிந்து ஜனஜாக்ருதி ஸமிதி 8-வது அகில பாரதீய ஹிந்து மாநாட்டை 27 மே முதல் 8-ம் ஜூன் வரை போண்டா, கோவாவிலுள்ள ஸ்ரீ ராம்நாதி கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்துள்ளது. இது மாநாட்டின் எட்டாவது வருடம். ஹிந்து ஜனஜாக்ருதி ஸமிதி, வருடம் 2012 முதல் தார்மீக அடிப்படையில் அமைந்த ‘ஹிந்து ராஷ்ட்ர’த்தை அமைப்பதற்காக அகில பாரதீய ஹிந்து மாநாடுகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த மாநாட்டில் ஹிந்து சமூகத்தின் பல்வேறு அங்கங்களான ஹிந்து அமைப்புகள், சம்ப்ரதாயங்கள், மகான்கள், வக்கீல்கள், சிந்தனைவாதிகள் போன்றவர்களுக்கு ‘ஹிந்து ராஷ்ட்ர’த்தை அமைப்பதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது. இந்த மாநாடுகளின் மூலம் உறுதிபட்டுள்ள நூற்றுக்கணக்கான ஹிந்து ஸ்தாபனங்களின் ஒற்றுமை, ‘ஹிந்து ராஷ்ட்ர’ நிர்மாணத்தை நோக்கி எடுத்து வைக்கும் நம்பிக்கை தரும் அடியாகும். இந்த எட்டாவது மாநாட்டில் 25 மாநிலங்களிலிருந்து 250 ஹிந்து ஸ்தாபனங்களும் மற்றும் நேபால், பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்காவிலிருந்தும் பங்கேற்க உள்ளனர். 27 மே முதல் 8-ம் ஜூன் வரை நடைபெறும் எட்டாவது மாநாட்டின் ஒரு பகுதியாக 27, 28 மே அன்று ஹிந்து வக்கீல்களின் மாநாடும், 28-ம் மே அன்று வணிகர்களின் மாநாடும், 29 மே முதல் 4-ம் ஜூன் வரை அகில பாரதீய ஹிந்து மாநாடும், 5 – 8-ம் ஜூன் வரை நான்காவது ஹிந்து ராஷ்ட்ர அமைப்பாளர்களுக்கான பயிற்சி முகாமும் நடைபெற உள்ளன.

நன்றியுடன்,

ரமேஷ் ஷிண்டே,

தேசீய செய்தி தொடர்பாளர், ஹிந்து ஜனஜாக்ருதி ஸமிதி.

Leave a Comment