கொரோனாவை சாக்காக வைத்து நாஸ்திகவாதிகள் ஹிந்து தர்மத்தின் மீது உமிழும் வெறுப்பு மிகுந்த கண்டனம் மற்றும் அதற்கான தக்க பதிலடி!

கொரோனாவை சாக்காக வைத்து நாஸ்திகவாதிகள் ஹிந்து தர்மத்தின் மீது வெறுப்பு மிகுந்த கண்டனத்தை உமிழும் செய்தி சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இந்த செய்திக்கான தக்க பதிலடியை ஹிந்து ஜனஜாக்ருதி ஸமிதியின் தேசீய செய்தி தொடர்பாளரான திரு. ரமேஷ் ஷிண்டே அவர்கள் தந்துள்ளார்கள். இதன் உதவி கொண்டு ஒவ்வொரு ஹிந்துவும் நாஸ்திகவாதிகளின் வாயை அடக்குவது சாத்தியமாகும்.

நாஸ்திகவாதிகள் பரப்பும்
வெறுப்பு மிகுந்த செய்திகள்!

‘பார்த்தீர்களா… கொரோனா
எப்படி மனிதர்களை பயமுறுத்தியுள்ளது என்று…’

1. அடிக்கடி கோவில், மசூதி, சர்ச் என்று நம்பிக்கையுடன் செல்லும் மனிதர்கள் இன்று ஏன் பயந்துபோய் செயலிழந்து உள்ளனர்?

2. 33 கோடி தெய்வங்கள் இருந்தும் கூட ஷிர்டி, திருப்பதி, வாரணாசி இன்று வெறிச்சோடி உள்ளது.

3. எவ்வளவு பெரிய சைத்தானையே விரட்டியடித்த கடவுளின் பிரதிநிதியின் மக்கா-மதினா இன்று காலியாக உள்ளது.

4. அவதார இயேசுபாபா, மேரி மாதா இருந்தும் தேவாலயங்கள் வெற்றிடமாக உள்ளன.

5. மக்கள் கற்சிலை தெய்வங்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் போலும்; அதனால் இன்று விஞ்ஞான ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவர்களைப் பார்த்து ஆறுதல் அடைகின்றனர்.

6. இயற்கையால் எப்பொழுது மனிதர்களின் அட்டகாசத்தை சகித்துக் கொள்ள இயலவில்லையோ அப்பொழுது அது கொரோனா போன்ற சூட்சும கிருமிகளை பூமிக்கு அனுப்புகிறது; அப்பொழுதே இவர்களுக்கு டாக்டர்கள், விஞ்ஞானம், வைத்திய சாஸ்திரம் பற்றிய நினைவு வருகிறது…!’

திரு. ரமேஷ் ஷிண்டே
அவர்கள் அளித்துள்ள தக்க பதிலடி!

‘கொரோனாவால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன என்ற செய்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர் இந்த நாஸ்திகவாதிகள். உடனே அவர்கள் ஹிந்து தர்மத்தின் கையாலாகாத தன்மையையும் விஞ்ஞானத்தின் மகத்துவத்தைப் பற்றியும்  தகவல்களை அனுப்ப ஆரம்பித்துள்ளனர். உண்மையான காரணங்கள் இவர்களுக்கு ஏதேனும் சிறிதாவது தெரியுமா?

1. இன்று கொரோனா பிரச்சனைக்கு வைத்தியத் துறையிலும் எவ்வித பதிலும் இல்லை. அதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இக்காரணத்தால்தான் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்கள் இதுவரை பலியாகியுள்ளனர். விஞ்ஞானமும் இதற்கு முன் தோற்றுப்போய் விட்டதல்லவா!

2. கொரோனா சம்பந்தமாக இன்று என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறப்படுகிறதோ அவற்றை ஹிந்து தர்மம் ஆதி காலத்திலிருந்தே கூறி வந்துள்ளது. ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றுவதுதான் ‘முற்போக்குத்தனம்’ என்றுதானே இவர்கள் கூறி வந்துள்ளனர்?

3. கொரோனாவை யார் உண்டாக்கினார்கள்? தர்மத்தால் நிச்சயமாக உண்டாகவில்லை. நீங்கள் போற்றும் விஞ்ஞானம் தன் எல்லைகளை கட்டுப்பாடுகளை மீறியதால் கொரோனா உருவாயிற்று என்பது தெளிவாகியுள்ளது.

4. கொரோனா மூலமாக வெறும் கோவில்கள் மட்டுமா மூடப்பட்டுள்ளன? இல்லையே! விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொழுதுபோக்கு ஸ்தலங்கள், மால்கள், பள்ளிகள் அரசு அலுவலகங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட்டுள்ளனவே. அது யாரின் குற்றம்? தெய்வத்தின் குற்றமா?

5. கோவில்கள் ஆகிய அனைத்தையும் மூட சொல்லி உத்தரவிட்டுள்ளது அரசு. அதற்கு கட்டுப்பட்டே பக்தர்கள் கோவில்களுக்கு செல்வதில்லையே தவிர பயத்தினால் அல்ல!

6. முன்னேறிய நாடுகள், ‘ஹிந்து தர்மத்தை கடைபிடிப்பதால் நோய் தொற்றுவதில்லை’ என உணர்ந்துள்ளனர். யார் இந்த பாரதத்தை 150 ஆண்டுகள் ஆண்டு ஹிந்து தர்மத்தை அழிக்க எல்லா விதங்களிலும் முயன்றனரோ அவர்களின் பிரதிநிதியான பிரின்ஸ் சார்லஸ் இன்று கைகளைக் கூப்பி ‘நமஸ்காரம்’ செய்கிறார். இது தர்மத்தின் சிறப்பு அல்லாமல் வேறு என்ன?

7. முன்னேற்றத்தில் உச்சியில் இருக்கும் நாடுகள் கூட இன்று இந்த கொரோனா விஷ அணுவிற்கான மாற்று மருந்து கண்டு பிடிக்கவில்லை; ஆனால் தர்மசாஸ்திரங்களில் ஒன்றான ‘சரக சம்ஹிதை’ ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இது போன்ற சமூகத்திலுள்ள தொற்று நோய்களுக்கான தகுந்த நிவாரணங்களை கண்டுபிடித்து வைத்துள்ளனர்; அவை இன்றும் பொருந்தும். அதி உன்னதமானது விஞ்ஞானமா அல்லது தர்மமா?

8. உலகின் அதிக மக்கட்தொகை உள்ள நாடான, அதி நவீன விஞ்ஞான முன்னேற்றம் அடைந்த நாடான சீனாவில் லக்ஷக்கணக்கான மக்களுக்கு இந்த தொற்றுநோய் அதி விரைவில் பரவியுள்ளது. ஆனால் அதிக மக்கட்தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ள மற்றும் சீனாவைக் காட்டிலும் பௌதிக முன்னேற்றத்தில் பின் தங்கியுள்ள பாரதத்தில் சில நூறு நபர்கள் எண்ணிக்கை என்ற அளவில் கட்டுப்பாட்டில் உள்ளன. அது விஞ்ஞானத்தாலா அல்லது தர்மவழி நடத்தல், ஆன்மீகம், மகான்களின் ஸாத்வீக பூமி, அக்னிஹோத்ரம் மற்றும் யாக யக்ஞங்கள் ஆகிய இக்காரணங்களாலா?

– திரு. ரமேஷ் ஷிண்டே, தேசீய செய்தி தொடர்பாளர், ஹிந்து ஜனஜாக்ருதி ஸமிதி.

 

 

Leave a Comment