கோவாவில் நடந்த 8–வது அகில பாரதீய ஹிந்து ராஷ்ட்ர மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கை

27 மே : ‘ஹிந்து ராஷ்ட்ர’ கோரிக்கை அரசியல்
சாசனத்திற்கு உட்பட்டதே; ‘செக்யுலர்’ என்ற
வார்த்தை சாசனத்திற்கு புறம்பாக புகுத்தப்பட்டதே!

ரமேஷ் ஷிண்டே, தேசிய செய்தி தொடர்பாளர்,
ஹிந்து ஜனஜாக்ருதி ஸமிதி

ராம்நாதி (கோவா) – நம் தேசத்தின் அரசியல் சாசன சட்டம் ‘செக்யுலர்’ என்பதாகக் கூறப்படுகிறது; இருந்தாலும் ஆர்டிகல் 370 படி ஜம்மு காஷ்மீரில் இதே ‘செக்யுலர்’ வார்த்தையை புகுத்த எதிர்ப்பு உள்ளது. அதன் பலனாக, ஒரு வினோத சூழ்நிலை உருவாகியுள்ளது – நம் தேசம் செக்யுலர், ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் செக்யுலர் இல்லை. இந்தியாவிலுள்ள அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் இருக்கும் பட்சத்தில், மத சுதந்திரம் இருக்கும் பட்சத்தில் ‘ஹிந்து ராஷ்ட்ர’ கோரிக்கை எவ்வாறு சாசன சட்டத்திற்கு புறம்பாக இருக்க முடியும்? இத்துடன் ஒப்பிடும்போது திருமதி இந்திரா காந்தி 1976-ல் அரசியல் சாசன சட்டத்தில் 42-வது திருத்தமாக ‘செக்யுலர்’ மற்றும் ‘சோஷலிஸ்ட்’ வார்த்தைகளை எமர்ஜென்சி சமயத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெயிலில் இருக்கும்போது புகுத்தியதுதான் சாசன சட்டத்திற்கு புறம்பானது. நீதித்துறை மற்றும் தகவல்-தொடர்பு துறையினரின் உரிமைகளும் அச்சமயம் ஒடுக்கப்பட்டது. இதற்கு மாறாக, ‘ஹிந்து ராஷ்ட்ர’ என்ற சிந்தனை காலம் காலமாக இருந்து வருவது, முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்கியது மற்றும் அனைத்துலகின் நலனையும் கருத்தில் கொண்டது. சுவாமி விவேகானந்தர் கூறுகிறார், ‘தர்மத்திலேயே நம் முன்னேற்றத்தின் ஆத்மா உள்ளது’. அதனால் இன்று பாரதத்திற்கு உலகியல் அடிப்படையான முன்னேற்றம் அல்ல, மாறாக தர்மத்தை ஆதாரமாகக் கொண்ட முன்னேற்றமே தேவை என்று ஹிந்து ஜனஜாக்ருதி சமிதியின் தேசிய செய்தி தொடர்பாளரான திரு ரமேஷ் ஷிண்டே அவர்கள் 27 மே அன்று ராம்னாதி கோவிலில் உள்ள ஸ்ரீ வித்யாதிராஜ் சபா அரங்கத்தில் நடந்த ‘தேசிய வக்கீல்களின் கூட்ட’த்தில் கூறினார். அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்ட முறையில் ஹிந்துத்வத்திற்காக போராடும் ‘ஹிந்து விதிக்ஞ பரிஷத்’-ன் தேசிய செயலாளரான வக்கீல் சஞ்சீவ் புனலேகர் அவர்களை கைது செய்ததை எதிர்த்து தீர்மானம் ஒருமனதுடன் நிறைவேற்றப்பட்டது.

சீனியர் வக்கீல் ஹரி சங்கர் ஜெயின் கூறினார், ‘இன்று ‘செக்யுலர்’ என்ற வார்த்தை சிறுபான்மையினரை திருப்திப்படுத்த மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. செக்யுலரிசத்தைப் பார்த்து மக்கள் வெறுப்படைந்துள்ளனர். பெரும்பான்மை ஹிந்து ஓட்டுக்களுடன் வெற்றி பெற்றுள்ள பாஜக அரசு ஹிந்து நலனுக்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஹிந்துத்வத்திற்காக பாடுபடுகிறோம் என்று ஹிந்து வக்கீல்கள் பெருமிதத்துடன் சொல்ல வேண்டும்.’

28 மே : அன்புள்ள வியாபாரிகளே,
‘ஹிந்து ராஷ்ட்ரம்’ அமைக்க தேவையான நிதி
உதவிக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்! – ஸத்குரு (டாக்டர்) சாருதத்த பிங்களே

‘வியாபாரிகளுக்கான முக்கிய கடமைகள், தர்மப்படி வியாபாரம் செய்வதன் மூலம் சமூக சேவை செய்து உரிய வரிகளை செலுத்துவதால் தேசத்தின் நிதி நிலையையும் வலுவடையச் செய்வது ஆகும். மேவாரை சேர்ந்த மகாராணா பிரதாப் அவரின் ராஜ்யத்தைத் திரும்பப் பெற யுத்தத்தை அறிவித்தபோது வியாபாரியான பாமாஷா தன் பண பலத்தை அதற்கு பக்கபலமாக தந்து உதவினார். ‘ஹிந்து ராஷ்ட்ர’த்தை ஸ்தாபனம் செய்வது என்பது தர்மப்படியான ஆதர்ச ராஷ்ட்ரத்தை உருவாக்குவது ஆகும். இந்த மகத்தான காரியத்தை செய்து முடிக்க வியாபாரிகள் தங்களின் பணபலத்தால் உதவும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்’, என்று ஹிந்து ஜனஜாக்ருதி சமிதியின் தேசிய வழிகாட்டியான ஸத்குரு டாக்டர் சாருதத்த பிங்களே அவர்கள் கூறினார்கள். 8-வது அகில பாரதீய ஹிந்து ராஷ்ட்ர மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த ‘உத்யோகபதி பரிஷத்’-ல் அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

தமிழ்நாட்டை சேர்ந்த பிரச்சனைகள்

இத்தருணத்தில் திரு ரமேஷ் ஷிண்டே கூறினார், ‘லோக் சபா தேர்தலின்போது நடிகர் கமலஹாசன், ‘ஹிந்துக்கள் தீவிரவாதிகள்’ என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியபோது ‘தீவிரவாதிகள் எல்லா மதங்களிலும் உள்ளனர்’ என்றார். மேலும் ‘ஹிந்து என்ற வார்த்தை வேதத்தில் இல்லை’ என்றும் கூறினார். தலைவர்களும் கலைஞர்களும் அவர்களின் காரியத்தை மட்டும் கவனிப்பது நல்லது. அவர்கள் தர்மத்தை பற்றிப் பேசக் கூடாது. அதனால் இது போன்ற வக்ர சிந்தனைகளை உடனுக்குடன் எதிர்த்தாக வேண்டும்.’
உத்யோகபதி மாநாட்டை குத்துவிளக்கேற்றி ஸத்குரு (டாக்டர்) சாருதத்த பிங்களே, பூஜ்ய பிரதீப் கெம்கா, திரு. சஞ்சீவ் குமார் மற்றும் திரு. கருணாபதி துபே ஆகியோர் துவங்கி வைத்தனர்.

வக்கீல் சஞ்சீவ் புனலேகர் கைதை எதிர்த்து
பார் கௌன்சில்களில் எதிர்ப்புக் குரல் ஒலிக்கும்!

‘டாக்டர் நரேந்திர தாபோல்கரை கொலை செய்ய உபயோகித்த துப்பாக்கியை அழித்து விட சொன்னார்’ என்று சரத் கலாச்கர் கூறினார் என்பதன் பேரில் சட்ட விரோதமாக சிபிஐ ஸ்தாபனம், வக்கீல் சஞ்சீவ் புனலேகரை கைது செய்துள்ளது. இரண்டாவது நாள் நடந்த மாநாட்டில் பாரதத்தின் எல்லா மாநிலங்களிலிருந்தும் வந்துள்ள உண்மையுள்ள ஹிந்து வக்கீல்கள் அவரவர்களின் பார் கௌன்சில்களில் வக்கீல் சஞ்சீவ் புனலேகரின் சட்ட விரோத கைதைப் பற்றி எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக உறுதி கூறினர். அத்துடன் இது பற்றி பிரதம மந்திரி, சிபிஐ, உச்ச நீதிபதி ஆகியோருக்கும் கடிதங்கள் எழுதப்போவதாக அறிவித்தனர். இம்மாநாட்டில் ‘ஹிந்து ஃப்ரண்ட் ஃபார் ஜஸ்டிஸ்’-ன் செய்தி தொடர்பாளரும் உச்ச நீதிமன்றத்தின் வக்கீலுமான வக்கீல் விஷ்ணு சங்கர் ஜெயின், வாரணாசி ‘இண்டியா வித் விஸ்டம் க்ரூப்’-ஐ சார்ந்த வக்கீல் கமலேஷ் சந்திர திரிபாதி, ஹிந்து விதிக்ஞ பரிஷத்-ன் தலைவர் வக்கீல் வீரேந்திர இச்சல்கரஞ்சிகர் மற்றும் உப-தலைவர் வக்கீல் அம்ருதேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

காலை நிகழ்ச்சியின்பொது வக்கீல் வீரேந்திர இச்சல்கரஞ்சிகர் அவர்கள் ஹிந்து ஸ்தாபனங்களின் மீது வீசப்படும் பொய் குற்றச்சாட்டுகளைப் பற்றி விளக்கினார். அவர் கூறினார், ‘டாக்டர் தாபோல்கர், காம்ரேட் பான்சாரே, கல்புர்கி, கெளரி லங்கேஷ் ஆகியோரின் கொலைகளைப் பற்றி பெரும் கூச்சல் எழும்புகிறது; ஆனால் கம்யுனிச ஆதரவுடன் நக்சலைட்டுகள் இதுவரை கொன்று குவித்துள்ள 12,000-க்கும் மேற்பட்ட குற்றமற்ற குடிமக்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. குற்றமற்ற ஹிந்துக்களை அனாவசியமாக கைது செய்யும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக டாக்டர் வீரேந்திரசிங் தாவடே, சமீர் கேக்வாட், விக்ரம் பாவே, வக்கீல் சஞ்சீவ் புனலேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருந்தாலும் இறுதியாக உண்மை வெளிவந்தே தீரும். இத்தருணத்தில் பல வக்கீல்கள் தேசத்தையும் தர்மத்தையும் காப்பாற்றுவதற்காகவும் சமூகத்தில் நிலவும் தீய இயல்புகளை அழிப்பதற்காகவும் சட்டப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி பகிர்ந்து கொண்டனர்.

29 மே – பாஜக அரசு ஸ்ரீராமர் கோவில் பற்றி கூறிய
உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும்! – ஸத்குரு
(டாக்டர்) சாருதத்த பிங்களே, தேசிய வழிகாட்டி, ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி

ராம்நாதி (கோவா) – அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டுவதைப் பற்றிய கோரிக்கையை கேட்காமல் உச்ச நீதிமன்றம் தாமதிக்கும் போக்கை கைக்கொண்டுள்ளது. பாஜக அரசு அவர்களின் கடந்த நான்கு வருட ஆட்சிக் காலத்திலேயே ஸ்ரீராமர் கோவிலை கட்டுவார்கள் என ஹிந்துக்கள் எதிர்பார்த்தனர். இதற்கு முந்தைய தேர்தலின்போதும் ஸ்ரீராமர் கோவிலைக் கட்டுவதாக பாஜக கட்சி உறுதிமொழி அளித்திருந்தது. அதனால் மக்கள் அவர்களின் மீது வைத்துள்ள நம்பிக்கையை பொய்க்கவிடாமல் அரசு அவர்கள் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும், என்ற கோரிக்கையை ஹிந்து ஜனஜாக்ருதி ஸமிதியின் தேசிய வழிகாட்டியான ஸத்குரு டாக்டர் சாருதத்த பிங்களே முன் வைத்தார். அவர் மேலும் கூறினார், ‘பாஜக அரசு அலாஹாபாத்தை ‘பிரயாக்ராஜ்’ என பெயர் மாற்றம் செய்துள்ளது மிக நல்ல காரியம் மற்றும் மிகத் திறமையாக கும்பமேளாவை ஏற்பாடு செய்திருந்தனர். இருந்தாலும் ஸ்ரீராமர் கோவிலைக் கட்டித் தரவில்லை என்றால் ஹிந்துக்களின் நம்பிக்கையை அவர்கள் இழப்பர்.

ஸ்ரீராமர் கோவில் கட்டப்படவில்லை என்றால் நாடு
தழுவிய பெரும் போராட்டத்தை ஹிந்து சமூகம் முன் நிறுத்தும்!
– வக்கீல் ஹரி சங்கர் ஜெயின், தலைவர், ‘ஹிந்து ஃப்ரண்ட் ஃபார் ஜஸ்டிஸ்’

ஸ்ரீராமர் கோவில் என்பது ஹிந்துக்களின் பெருமிதத்திற்குரிய ஒரு விஷயம். 2014-ல் ஸ்ரீராமர் கோவில் பற்றி பாஜக அரசு தந்திருந்த தனது உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. ஹிந்துத்வ நலனிற்காக திரும்பவும் செயல்பட வேண்டும் என்பதற்காகவே ஹிந்துக்கள் திரு நரேந்திர மோடியை மறுபடியும் பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால் இப்பொழுதாவது பாஜக அரசு ஸ்ரீராமர் கோவில் பற்றிய சட்டத்தை அமல்படுத்தி ஸ்ரீராமர் கோவில் எழும்புவதற்கு அடிகோல வேண்டும். கோவில் கட்டப்படாவிட்டால், ஹிந்துக்கள் கொதித்தெழுந்து நாடு தழுவிய பெரும் போராட்டம் ஆரம்பிக்கப்படும்.

இன்றைய நீதித்துறை நீதி வழங்குவதிலிருந்து
பிறழ்கிறது! – ராஜேந்திர வர்மா, வக்கீல், உச்ச நீதிமன்றம்

இன்றைய நீதித்துறை நீதி வழங்குவதில்லை, அது வழங்குவதெல்லாம் வெறும் தீர்ப்புகளே! ஸ்ரீராமர் கோவில் பிரச்சனையை நீதிமன்றத்தின் மூலமாக தீர்க்க முடியாது. அதையும் தாண்டிய நிலையில் பிரச்சனைக்கான தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு ஹிந்து சக்தி பெரும் திரளாக ஒருங்கிணைய வேண்டும். ஆன்மீக சக்தியின் மூலமாகவே உண்மையான சமூக முன்னேற்றமும் தேச முன்னேற்றமும் நிகழும். சிறுபான்மையினரை திருப்தி செய்வது என்பது பெரும் சூழ்ச்சி.

30 மே – பங்களாதேஷில் உள்ள ஹிந்துக்களின்
மீது நடத்தப்படும் அட்டூழியங்களை எதிர்த்து
இறுதி வரை போராடுவேன்! – வக்கீல் ரபீந்திர
கோஷ், தலைவர், ‘பங்களாதேஷ் மைனாரிட்டி வாட்ச்’

ராம்நாதி (கோவா) – ‘பங்களாதேஷில் உள்ள ஹிந்துக்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. ஹிந்து பெண்களை கற்பழித்தல், ஹிந்து வீடுகளை சூறையாடுதல், நெருப்பு வைத்தல், கோவில்களை இடித்தல் போன்றவை சர்வ சாதாரணமாக நடக்கும் தினசரி நிகழ்வுகளாகி விட்டன. பங்களாதேஷ் உருவானபோது 18-20% ஆக இருந்த ஹிந்து மக்கட்தொகை இப்பொழுது 1-8% ஆக குறைந்து விட்டது. ஹிந்துக்களை பாதுகாப்பதில் பங்களாதேஷ் அரசு எந்த அக்கறையும் எடுத்துக் கொள்வதில்லை. இந்திய அரசாங்கம் தன் செயலாமையை தவிர்த்து பங்களாதேஷில் உள்ள ஹிந்துக்களைப் பாதுகாக்க முனைய வேண்டும். ஹிந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.
‘உலக ஹிந்து சங்க’த்தின் அகில உலக தலைவரான திரு. அஜய் சிங் கூறினார், ‘ஹிந்துக்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஹிந்துக்கள் ஒருங்கிணைய வேண்டும். ஹிந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் தர்மபோதனை வழங்குவதிலும் ஹிந்து ஜனஜாக்ருதி ஸமிதி உன்னத காரியங்களை செய்து வருகிறது.’

முக்கிய நிகழ்வு

மராட்டி செய்தி சானலான ‘ஏபிபி மாஸா’ ‘ஸ்வாதந்த்ரிய வீர் ஸாவரக்கர் – ஒரு நாயகனா அல்லது வில்லனா?’ என்ற நிகழ்ச்சியை ஸாவர்க்கரின் நினைவு நாளான 28 மே அன்று வெளியிட்டு கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளது. இதே செய்தி சானல் ‘ஒரு நாயகனா அல்லது வில்லனா?’ என்ற கேள்வியை மோகன்தாஸ் காந்தி அல்லது ஜவஹர்லால் நேரு மீது எழுப்புமா என்று மாநாட்டில் கேட்கப்பட்டது. அத்துடன் பாஜக அரசு ஸாவர்க்கர் தாய்நாட்டிற்காக செய்துள்ள ஈடு இணையற்ற தியாகத்தை மரியாதை செய்து அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்றும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

31 மே – தமிழ்நாட்டில் ஹிந்துக்களின்படுகொலைகள்
சம்பந்தமாக கமலஹாசன் ஏன் மௌனம் சாதிக்கிறார்?

ஜி. ராதாகிருஷ்ணன், மாநில தலைவர், சிவசேனை, சென்னை, தமிழ்நாடு

ராம்நாதி (கோவா) – ‘நாதுராம் கோட்சே சுதந்திர இந்தியாவின் முதல் ஹிந்து தீவிரவாதி’, என்று கமலஹாசன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; அத்துடன் ஸ்ரீலங்காவிலும் ஹிந்துக்களின் படுகொலைகள் நடக்கின்றன; ஆனால் இது பற்றி பேச கமலஹாசனுக்கு தைரியம் கிடையாது. இது போன்றவர்களை ஹிந்துக்கள் முழுவதுமாக நிராகரிக்க வேண்டும். ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து கமலஹாசனுக்கு தீவிர எதிர்ப்பு தெரிவித்தபோது ‘என்னுடைய மகளும் ஹிந்து தர்ம தத்துவங்களை பயில்கிறாள்’ என்று அவர் கூற வேண்டியிருந்தது’, என்று தனது உரையில் சிவசேனையின் மாநில தலைவரான திரு. ஜி. ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறினார். அவர் 31 மே அன்று ஸ்ரீ ராம்நாதி கோவிலில் உள்ள ஸ்ரீ வித்யாதிராஜ் சபா அரங்கில் நடந்து வரும் ‘எட்டாவது அகில பாரதீய ஹிந்து ராஷ்ட்ர மாநாட்டின்’ மூன்றாவது நாளில் நடந்த ‘பல்வேறு மாநிலங்களில் ஹிந்துக்களின் இன்றைய பரிதாப நிலை’ என்ற தலைப்பில் நடந்த உரையாடல்களில் ‘தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஹிந்து விரோத போக்கும் அதற்கான நிவாரணமும்’ என்ற விஷயம் சம்பந்தமாக உரையாற்றினார்.

வங்காளத்தில் ஆன்மீக சக்தியால் மாற்றம் ஏற்பட்டுள்ளது!
– டாக்டர் சிவநாராயண் சென், ஆசிரியர், ‘ட்ரூத்’ பத்திரிக்கை

அதே தினத்தில் வங்காளத்தின் ‘ட்ரூத்’ பத்திரிக்கையின் ஆசிரியரும் ‘சாஸ்திர-தர்ம பிரசார் சபா’வின் தலைவருமான டாக்டர் சிவநாராயண் சென் அவர்கள் கூறினார், ‘வங்காளத்தில் ஹிந்துக்கள் வாழ்க்கை நடத்துவதே கடினமாகி விட்டது. இந்நிலையில் வங்காளத்தில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் ஆன்மீக சக்தியால் ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் உண்மையான காரணம் அதுதான்.’ அஸ்ஸாமிலுள்ள சுவாமி விவேகானந்த கேந்திராவின் திருமதி ராணு போரா அவர்கள், ‘பங்களாதேஷிலிருந்து பெரும் அளவில் மாற்று மதத்தினர் அஸ்ஸாம் மாநிலத்திற்குள் நுழைகின்றனர். அஸ்ஸாமின் 9 ஜில்லாக்களில் மாற்று மதத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அங்கு அவர்களின் எண்ணிக்கை 80% -க்கும் அதிகமாக உள்ளன’ என்று கூறினார்.
அன்றைய தின நிகழ்ச்சியில் ஹிந்து ஜனஜாக்ருதி சமிதியின் கிழக்கு மற்றும் வட-கிழக்கு பாரதத்தின் வழிகாட்டியான பூஜ்ய நீலேஷ் சிங்க்பால் அவர்கள் பிரயாக்-ல் நடந்த கும்பமேளாவில் ‘ஹிந்து ராஷ்ட்ர விழிப்புணர்வு ஏற்பட செய்யப்பட்ட காரியங்களைப்’ பற்றிய விவரங்களைத் தந்தார். ஸனாதன் ஸன்ஸ்தாவின் தர்மபிரசாரகர் ஸத்குரு நந்தகுமார் ஜாதவ் அவர்கள் ‘ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனத்திற்காக தற்காப்பு பயிற்சி வகுப்புகளை எடுப்பதன் மகத்துவம் மற்றும் சமூக சிந்தனையின் திசை’ பற்றி வழிகாட்டுதல் வழங்கினார்.

1 ஜுன் – மாநில அரசு அபகரித்துள்ள
கோவில் சொத்துக்களை உடனடியாக மீட்க
வேண்டியது அவசியம்! – திரு. ரமேஷ் டி. ஆர்.,
தலைவர், கோவில் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு

ஹிந்து கோவில்களை அரசுடைமையிலிருந்து விடுவிக்கும் விஷயம் பற்றி திரு. ரமேஷ் அவர்கள் கூறினார், ‘இந்திய அரசியல் சாசன சட்டத்தின் ஆர்டிகல் 25-ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை மத உரிமைகள் ஹிந்துக்களுக்கும் உண்டு. அதேபோல் மத அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீது எந்த கட்டுப்பாடோ மதசார்போ திணிக்கப்படக் கூடாது என்று ஆர்டிகல் 29(1) தெளிவாக கூறுகிறது. இந்த உரிமைகள் சிறுபான்மை மதத்தினருக்கே உண்டு என நினைப்பது தவறு.

பாரதத்தின் பல மாநில அரசுகள் வெறும் ஹிந்து கோவில்களை வழிபடும் இடங்களை கையகப்படுத்தி அவற்றின் தார்மீக சொத்துக்களை கால வரையறை அற்ற அளவு தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. எந்தெந்த மாநில அரசுகள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் ஹிந்துக்களுக்கு சொந்தமான கோவில் சொத்துக்களை வைத்துள்ளனரோ அவற்றை உடனடியாக அததற்குரிய ஹிந்து சம்ப்ரதாயங்களின் முக்கிய நிர்வாகியிடம் ஒப்படைக்க வேண்டும். ‘

வரும் நாட்களில் ஸனாதனின் குற்றமற்ற தன்மை
நிரூபிக்கப்படும்! – ரமேஷ் ஷிண்டே, ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி

டாக்டர் நரேந்திர தாபோல்கர் அறக்கட்டளையின் முறைகேடுகளையும் கோவிந்த் பான்சாரேவிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கியில் மார்க்சிஸ்ட் கம்யுனிச்ட் கட்சி செலுத்தியிருந்த சட்ட விரோத பணமுதலீட்டைப் பற்றியும் ஸனாதன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அதனால் முற்போக்குவாதிகள் என தங்களை கூறிக் கொள்பவர்கள் விசாரணை நிறுவனங்களுடன் கூட்டிணைந்து ஸனாதன் ஸன்ஸ்தாவையும் ஹிந்து ஜனஜாக்ருதி சமிதியையும் பலிகடாவாக்க முயற்சிக்கின்றனர். ‘கோபல்ஸ் டெக்னிக்’ ஐ உபயோகித்து ஸனாதனை ஒரு தீவிரவாதி ஸ்தாபனம் என முத்திரை குத்த முயலுகின்றனர்.

இடதுசாரிகள் கேரளாவிலும் கர்நாடகாவிலும் பல ஹிந்து தலைவர்களையும் காரியகர்த்தாக்களையும் கொன்று குவித்துள்ளனர். இவ்விஷயங்கள் சர்ச்சை செய்யப்படவில்லை; அனால் தாபோல்கர், பான்சாரே, கெளரி லங்கேஷ், கல்புர்கி ஆகியோரின் கொலைகள் மட்டுமே நடந்துள்ளன என்பது போன்று சித்தரித்து ஹிந்து ஸ்தாபனங்களை தீவிரவாதிகளாக காட்டும் சூழ்ச்சி நடந்து வருகிறது. நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு தேவையான அத்தாட்சிகள் இல்லாததால் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருந்தாலும் வரக் கூடிய காலங்களில் ஸனாதனின் குற்றமற்ற தன்மை நிரூபிக்கப் படும்.

சிறப்பு நிகழ்வு : பல மாநிலங்களிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் வந்து பங்கேற்ற 30-க்கும் மேற்பட்ட வக்கீல்கள், சிபிஐ- யால் சட்ட விரோத முறையில் கைது செய்யப்பட்டுள்ள வக்கீல் சஞ்சீவ் புனலேகர் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை முன்வைத்தனர்.

2 ஜூன் – சோஷியல் மீடியாவிற்காக புத்திபூர்வ
வீரர்களை உருவாக்குவோம்! – திருமதி ரீது ரதோர், தில்லி

ராம்நாதி (கோவா) – ஹிந்துக்களின் மீது நடக்கும் அட்டூழியங்களை எதிர்த்து குரல் கொடுக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்கள். ஹிந்து ராஷ்ட்ர செய்தியையும் தத்துவத்தையும் மக்களிடையே பரப்ப நவீன மீடியா வசதிகளை நாம் கையாள வேண்டும். தற்காலத்தில் நீதித்துறை, கல்வித்துறை போன்ற முக்கிய துறைகளின் தலைமை பொறுப்புகள் இடதுசாரிகளின் கைகளில் உள்ளது. அவர்களின் சிந்தனையை முறியடிக்கவும் ஹிந்து ராஷ்ட்ர சிந்தனையை மக்களின் மனங்களில் விதைக்கவும் நாம் ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சோஷியல் மீடியாக்களை அபரிமிதமாக பயன்படுத்த வேண்டும். சோஷியல் மீடியா மூலமாக ஹிந்து ராஷ்ட்ரத்திற்காக செயல்படக் கூடிய புத்திபூர்வ வீரர்களை நாம் உருவாக்க முடியும்.

சோஷியல் மீடியா மூலமாக கிடைக்கும் தகவல்களை பகிரும் முன் அவற்றின் உண்மையை ஆய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்! – திருமதி ரதி ஹெக்டே, இணை ஆசிரியர், ‘IndusScroll.com’ வலைத்தளம், மும்பை.

ஆங்கிலேயர் இந்தியாவிற்குள் நுழைந்த பின்பு கிறிஸ்துவ சின்னங்களான சாண்டா கிளாஸ், எக்ஸ்மஸ் ட்ரீ போன்றவைகளே ஹிந்துக்களின் முன்னால் விளம்பரமாக்கப்பட்டன. அதன் பலனாக, மூன்று தலைமுறைகளாக வழிமுறையில் இருந்த வந்துள்ள ஹிந்து சின்னங்களும் சிந்தனைகளும் மறைந்து போயின. எனவே குழந்தைகளுக்கு பஞ்சதந்திரம், மகாபாரதம் போன்றவற்றை சிறு வயதிலிருந்தே போதிக்க வேண்டும். சோஷியல் மீடியாவில் பல பொய் வதந்திகள் உலா வருகின்றன. அதை அப்படியே நாம் பரப்பினால் நம்முடைய நம்பகத்தன்மை போய்விடும். அதனால் எந்த ஒரு சோஷியல் மீடியா தகவலையும் அதன் உண்மையை தெரிந்து கொண்ட பின்னரே பகிர வேண்டும். இத்தருணத்தில் திருமதி மீனாக்ஷி ஷரன் கூறினார், ‘கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் ஹிந்து கலாச்சாரத்தை தாக்கினர்; அதன் விளைவாக உண்மை சரித்திரம் மறைந்து விட்டது. அதற்கு பதிலடியாக ஹிந்துக்கள் சோஷியல் மீடியா மூலமாக ஹிந்து சமூகத்திற்கு ஹிந்து கலாச்சாரத்தைப் பற்றிய உண்மையான விவரங்களை வெளிக் கொணர வேண்டும்.’

3 ஜூன் – அரசாங்கம் ஹிந்து கோவில்களை
கையகப்படுத்துவதை எதிர்த்து தேசமளாவிய
‘கோவில் வழிபாடு பாதுகாப்பு போராட்டம்’ ஆரம்பம்!

பானாஜி (கோவா) – 27 மே முதல் 4-ம் ஜூன் வரை கோவாவில் நடந்து முடிந்த ‘8-வது அகில பாரதீய ஹிந்து ராஷ்ட்ர மாநாட்டில்’ 25 இந்திய மாநிலங்களிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் 174 ஹிந்து ஸ்தாபனங்களை சேர்ந்த 520 பிரதிநிதிகள் பங்கேற்றுக் கொண்டார்கள். தேச அளவில் அகில உலக அளவில் ஹிந்துக்களை பாதிக்கும் பிரச்சனைகளை, (கோவில்கள் அரசுடைமை ஆக்குவது உட்பட) விரிவாக அலசி ஆராய்வதற்கு இது ஒரு பொது மேடையாக உதவியது. உச்ச நீதிமன்றம் இருமுறை செக்யுலர் அரசான இந்திய அரசாங்கம் எவ்வாறு கோவில்களை மட்டும் கையகப்படுத்தலாம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஹிந்துக்களுக்கு சொந்தமான கோவில்களை மட்டுமே அரசுடைமையாக்க முந்தும் அரசு ஏன் சர்ச்சுகள், மசூதிகளின் பக்கம் கூட போவதில்லை? அரசு கையகப்படுத்தியுள்ள கோவில்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளன. பல கோவில் நிர்வாக அறக்கட்டளைகள் ஊழல்கள் நிறைந்ததாக காணப்படுகின்றன. அரசுடைமை ஆக்கப்பட்ட கோவில்களின் பாரம்பரியம், சம்ப்ரதாயங்கள் மற்றும் சடங்கு வழிபாட்டு முறைகள் ஆகியவை மாற்றப்படுகின்றன. ஒரு உண்மையான ஹிந்துவால் இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாது. ஹோட்டல் மனோசாந்தியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஹிந்து ஜனஜாக்ருதி சமிதியின் தேசிய வழிகாட்டியான ஸத்குரு சாருதத்த பிங்களே அவர்கள், ‘கோவில்களுக்காக ஹிந்துக்களை உள்ளடக்கிய ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும்; இக்குழுவில் சங்கராச்சாரியார்கள், தர்மாச்சார்யர்கள், தர்மப்பற்றுள்ள வக்கீல்கள், ஹிந்து தர்ம ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அங்கத்தினர்களாக நியமிக்கப்பட வேண்டும். கோவில்கள் சம்பந்தப்பட்ட நிர்ணயங்களை செக்யுலர் அரசு தீர்மானிக்காமல் இக்குழுவே தீர்மானிக்க வேண்டும். இக்கூட்டத்தில் ஓடிஸா, பாரத் ரக்ஷா மன்ச்-ன் திரு அனில் தீர், தில்லி ‘ஹிந்து சார்டர்’-ஐ சேர்ந்த திருமதி ரீது ராதோர், ஸனாதன் ஸன்ஸ்தாவின் தேசிய செய்தி தொடர்பாளரான திரு. சேத்தன் ராஜஹன்ஸ், ஹிந்து ஜனஜாக்ருதி சமிதியின் தேசிய செய்தி தொடர்பாளரான திரு. ரமேஷ் ஷிண்டே ஆகியோரும் பங்கேற்றனர்.
மேலும் ஸத்குரு டாக்டர் பிங்களே அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம், ‘சட்டத்தின் கண்ணோட்டப்படியும் ஹிந்து கோவில்களை அரசுடைமை ஆக்குவதற்கு அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் உச்ச நீதிமன்றம், கோவில்களை அரசுடைமை ஆக்கி நீண்ட காலத்திற்கு வைத்துக் கொள்ளும் அதிகாரம் செக்யுலர் அரசாங்கத்திற்கு கிடையாது என தெளிவுபடுத்தியுள்ளது. அத்துடன் கோவில் நிலங்களை அரசு தனக்கு சொந்தமான நிலங்களாக கருதக் கூடாது. கோவில் நிர்வாகத்தில் ஏதாவது தவறு ஏற்பட்டால் குறுகிய காலத்திற்கு அரசு ஒரு அதிகாரியை நியமித்து அதை சரி செய்து பின் அந்த கோவில் சம்ப்ரதாயத்தினரிடமே ஒப்படைக்க வேண்டும். ஆனால் இன்று உண்மையில் கோவில் சொத்துக்களை அரசு அபகரிக்கிறது. செக்யுலரிசம் என்ற போர்வை போர்த்தி கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்கும் இன்றைய கஜினிகளை களையெடுக்க வேண்டும். அதனால் தேசம் முழுவதும் உள்ள தர்மபற்றுள்ள ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து ‘கோவில் வழிபாடு பாதுகாப்பு போராட்ட’த்தை துவங்க உள்ளனர்.’
திரு. சேத்தன் ராஜஹன்ஸ் கூறினார், ‘ஹிந்து தர்மத்தின் மீது நடக்கும் பல்வேறு தாக்குதல்களை எதிர்த்து முறியடிக்க நாங்கள் தகவல் கோரும் உரிமை சட்டத்தை முழுமையாக பயன்படுத்தப் போகிறோம். கோவில் பாதுகாப்பிற்காக பல இடங்களில் கூட்டங்களையும் போராட்டங்களையும் ஏற்பாடு செய்யப் போகிறோம். கோவில் நிர்வாக அறக்கட்டளை மற்றும் கோவில் பூசாரிகளுடன் இணைந்து கூட்டங்களை நடத்தப் போகிறோம். அத்துடன் கோவில்கள் மூலமாக தர்மபோதனை வழங்க இருக்கிறோம். இவை அனைத்தும் ‘கோவில் வழிபாடு பாதுகாப்பு போராட்டத்தின்’ கீழ் ஏற்பாடு செய்யப்படும்.’

8-வது அகில பாரதீய ஹிந்து
ராஷ்ட்ர மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

இந்தியாவை ‘ஹிந்து ராஷ்ட்ர’மாக அறிவித்திட மாநாட்டில் பங்கு கொள்ளும் அனைத்து ஹிந்து ஸ்தாபனங்களும் ஒருங்கிணைந்து சட்டப்படி செயல்படும். சட்டவிரோதமாக புகுத்தப்பட்ட ‘செக்யுலர்’ வார்த்தை அகற்றப்பட்டு ‘ஆன்மிகம்’ என்ற வார்த்தை புகுத்தப்பட்டு ‘ஹிந்து ராஷ்ட்ர’மாக இந்தியா அறிவிக்கப்படும்.

நேபாளத்தை ஹிந்து ராஷ்ட்ரமாக அறிவிக்க வேண்டும் என்ற நேபாளி ஹிந்துக்களின் கோரிக்கையை இம்மாநாடு முழுமையாக ஆதரிக்கிறது.

ஹிந்து சமூகத்தினரின் ஒட்டுமொத்த உணர்வை மதித்து மத்திய அரசு அயோத்யாவில் ஸ்ரீராமர் கோவிலை எழுப்ப வேண்டும் மற்றும் பசுவதை தடை சட்டம் மற்றும் மதமாற்ற தடை சட்டம் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் ஹிந்துக்களின் மீது நடக்கும் அட்டூழியங்களைப் பற்றி இந்திய அரசாங்கமும் மனித உரிமைக் கழகமும் ஆய்வு நடத்திட வேண்டும். பாகிஸ்தான், பங்களாதேஷில் கொடுமைகளுக்கு உள்ளான ஹிந்துக்களுக்கு பாரதம் அடைக்கலம் தந்து அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.

காஷ்மீர் ஹிந்துக்களை மறுபடியும் காஷ்மீரில் குடியேற்ற ‘பனூன் காஷ்மீர்’ என்ற பெயரில் ஒரு யூனியன் டெரிடரி அமைக்கப்பட வேண்டும். அரசியல் சாசன சட்டத்திலுள்ள ஆர்டிகல் 370 மற்றும் ஆர்டிகல் 35-அ உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

இந்தியா முழுவதும் அரசுடைமை ஆக்கப்பட்ட கோவில்கள் மறுபடியும் பக்தர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கோவில்களின் சம்ப்ரதாயம் சடங்கு வழிபாடுகள் சம்பந்தமாக தீர்மானங்களை எடுப்பதற்கு ஒரு மத்திய நிர்வாகக் குழு அமைக்கப்பட வேண்டும்.

அயல்நாட்டு ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்களைக் கொண்ட நகரங்கள், டவுன்கள், தெருக்கள் ஆகியவற்றின் பெயர் மாற்றம் ஏற்பட மத்திய அரசு உடனடியாக தீர்மானிக்க வேண்டும். இந்தியாவின் உன்னத கலாச்சார பாரம்பரியத்திற்கு ஏற்ற பெயர்களைத் தீர்மானிப்பதற்கு ஒரு ‘பெயர்கள் தீர்மானிக்கும் மத்தியக் குழு’ அமைக்கப்பட வேண்டும்.

முற்போக்குவாதிகளின் கொலைகள் சம்பந்தமாக ஸனாதன் ஸன்ஸ்தாவின் குற்றமற்ற ஸாதகர்கள், விசாரணை ஸ்தாபனங்களால் சித்ரவதை செய்யப்படாமல் இருக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ‘காவி தீவிரவாதம்’ என்ற கற்பனை பதம் தடை செய்யப்பட வேண்டும்.

ஸ்ரீராம் சேனாவின் தலைவர் திரு. பிரமோத் முதாலிக் கோவா மாநிலத்திற்குள் வரக் கூடாது என்று சட்டத்தை தவறாக பயன்படுத்தி அரசியல் சாசனத்திற்கு விரோதமான விதிக்கப்பட்ட தடை உத்தரவை இந்த 8-வது அகில பாரதீய ஹிந்து ராஷ்ட்ர மாநாடு கடுமையாக எதிர்க்கிறது.

ஹிந்து விதிக்ஞ பரிஷத்-தின் தேசிய செயலாளர் வக்கீல் சஞ்சீவ் புனலேகர் மற்றும் பரிஷத்தின் ஆர்.டி.ஐ. செயல்வீரர் திரு. விக்ரம் பாவே ஆகியோரை சிபிஐ கைது செய்ததை இந்த மாநாடு எதிர்க்கிறது. அவர்களை முழு மரியாதையுடன் உடனே விடுதலை செய்ய வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.

தமிழ்நாடு மாநிலம் ஜம்மு-காஷ்மீர் வழியில்
சென்று கொண்டிருக்கிறது!
– திரு. அர்ஜுன் சம்பத், ஹிந்து மக்கள் கட்சி, தமிழ்நாடு

இதற்கு முன்பிருந்த நாஸ்திகவாத திமுக அரசால் தமிழ்நாட்டின் நிலை ஜம்மு-காஷ்மீரின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஹிந்து-விரோத, இந்தியா-விரோத சக்திகளின் கை ஓங்கி உள்ளது. ஜிஹாதி தீவிரவாதிகள் சுதந்திரமாக உலவுகிறார்கள். இதுவரை 173 ஹிந்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்; ஆனால் ஒருவரும் இதை எதிர்த்து குரல் எழுப்புவதில்லை. மக்கள் மிகக் கடுமையாக இதை எதிர்த்து போராட வேண்டும்.’

கர்நாடக உயர் நீதிமன்ற வக்கீல் திரு. அம்ருதேஷ் கூறினார், ‘பான்சாரே, டாக்டர் தாபோல்கர், கெளரி லங்கேஷ் ஆகியோரின் கொலைக்கு பின்னால் உள்ள உண்மை வெளியே வரக்கூடாது என்பதற்காக சிபிஐ வக்கீல் சஞ்சீவ் புனலேகர் அவர்களை கைது செய்துள்ளது. இந்த செயலை நான் மிகக் கடுமையாக கண்டிக்கிறன் மற்றும் மத்திய அரசு உடனடியாக அவரை விடுதலை செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன்.

4 ஜூன் – 8-வது அகில பாரதீய ஹிந்து ராஷ்ட்ர மாநாட்டின் நிறைவு நாள்

‘ஐ எஸ் ஐ எஸ்’ தீவிரவாதிகளுக்கு ஏ ஐ எம் ஐ எம்-ன் ஒவைசி வெளிப்படையான ஆதரவு!

– பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ராஜா சிங், ஹைதராபாத்

ராம்நாதி (கோவா) – ‘2002-ல் ஹைதராபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட ‘ஐ எஸ் ஐ எஸ்’ தீவிரவாதிகளுக்கு ஒவைசி ஆதரவு தெரிவித்தார். பிறகு 1-ம் ஜூன் 2018 அன்று 12 ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்; அதன் பலனாக என்னையும் ஸ்ரீ பாக்யலக்ஷ்மி கோவிலையும் தாக்கும் அவர்களின் சூழ்ச்சி தடுக்கப்பட்டது. தேசிய விசாரணை கமிஷனால் கைது செய்யப்பட்ட அனைத்து தீவிரவாதிகளுக்கும் ஒவைசி ஆதரவு தருவதாக அறிவித்தார். இது போன்ற அழுத்தமான சூழ்நிலையிலும் ஹிந்துக்களின் ஒற்றுமை அங்கு ஓங்கி வருகிறது. முன்பு தெலுங்கானாவில் பசு வதை தங்கு தடையின்றி நடந்து வந்தன. எங்களின் பணி ஆரம்பித்த பின்பு பக்ரீத்-ஈத்திற்கு முன்பு காவல்துறை அதிக எச்சரிக்கையுடன் தாங்களே செயல்பட ஆரம்பித்துள்ளனர். எல்லைகளை கண்காணிப்பது, பசுக்களை கடத்துபவரை கைப்பற்றுவது போன்றவற்றை செய்கின்றனர். இதுதான் ஹிந்து ஒற்றுமையின் சக்தி. ஹிந்துத்வ பணியை திறம்பட செய்தால் சரித்திரம் நம்மை நினைவு கொள்ளும்.’

உண்மையுள்ள,

ரமேஷ் ஷிண்டே, தேசிய செய்தி தொடர்பாளர்,
ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி.

Leave a Comment