ஹிந்து ராஷ்ட்ரம் சம்பந்தமாக வருங்கால செயல்பாடுகள் பற்றிய வழிகாட்டுதல்!

(எட்டாவது அகில பாரதீய ஹிந்து ராஷ்ட்ர மாநாட்டில் ஸத்குரு (டாக்டர்) சாருதத்த பிங்களே அவர்கள் தந்த வழிகாட்டுதல்)

1. முன்னுரை

தர்மபந்துக்களே, இந்த ‘அகில பாரதீய ஹிந்து ராஷ்ட்ர மாநாட்டில்’ சிந்துவிலிருந்து சேது வரை வசிக்கும், பாரதத்தின் வருங்காலத்தைப் பற்றி சிந்தனை செய்யும் மற்றும் செயல்பாட்டிலுள்ள ஹிந்துத்வவாதிகள் அனைவரும் ஒருங்கிணைந்துள்ளோம். உங்களின் பங்கேற்பால் கடந்த 7 நாட்களில் ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனம் பற்றிய சிந்தனைகளின் அமுதக் கடைசல் நடந்தது. எவ்வாறு தயிர் அல்லது மோரைக் கடையும்போது அதிலிருந்து வெண்ணெய் திரள்கிறதோ அதுபோன்று மாநாட்டில் நடந்த சிந்தனை கடைசலால் ஒரு நாள் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை கச்சத்திலிருந்து காமரூபம் வரை ஆசேது ஹிமாலய பிரதேசம் முழுவதும் ‘ஹிந்து ராஷ்ட்ர’மாக அறிவிக்கப்படும் என்பது சர்வ நிச்சயம். நீங்கள் அனைவரும் இங்கிருந்து கிளம்புவதற்கு முன்பாக நான் சில எண்ணங்களை உங்களின் முன் வைக்க ஆசைப்படுகிறேன்.

2. ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனத்தின் திசை!

கடந்த 7 நாட்களாக நடந்த விஷயங்கள் மூலமாக ‘ஹிந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன?’ மற்றும் ‘ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனம் ஏன் அவசியம்?’, போன்றவை பற்றி உங்களின் மனங்களில் எவ்வித சந்தேகமும் இருக்காது என்று நம்புகிறேன். இப்பொழுது மேலே செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

2 அ. மஹாபுருஷர்களின் லட்சியங்கள் அத்வைதமானவை என்பதை மனதில் உள்வாங்கி நாம் காரியங்களை செய்ய வேண்டும்! : ‘உலகிற்கு வழிகாட்டுதல் வழங்கக்கூடிய தகுதி பிரம்மஞானிகளான மஹாபுருஷர்களுக்கே உண்டு’, என்பது பகவானின் மங்கள வாக்கு. ஆதி சங்கராச்சாரியார் மற்றும் சுவாமி தயானந்தர் ஆகியோர் ‘வைதிக பாரதத்தையும்’, சுவாமி விவேகானந்தர் ‘விழிப்படைந்த பாரதத்தையும்’, தர்மசாம்ராட் கரபாத்ர சுவாமிஜி மகாராஜ் ‘ராம ராஜ்யத்தையும்’, வீர ஸாவர்க்கர் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ‘ஹிந்து ராஷ்ட்ரத்தையும்’, பண்டிட் ஸ்ரீராம் சர்மா ‘யுக நிர்மாணத்தையும்’, பராத்பர குரு டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே ‘ஈச்வரீய ராஜ்யத்தையும்’ நம் கண் முன்னே லட்சியமாக வைத்துள்ளனர். இவர்களின் வார்த்தைகள் வெவ்வேறாக இருந்தாலும் அவர்களின் சிந்தனை ஒன்றேயாக அதாவது ஆதர்ச ராஷ்ட்ர ஸன்ஸ்தாபனமாக இருக்கிறது. நாம் அனைவரும் இந்த பல்வேறு ராஷ்ட்ர புருஷர்களின் அடியொட்டி சமூகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நம் முன்னால் இந்த மஹாபுருஷர்கள் எந்த லட்சியத்தை வைத்தனரோ அதே லட்சியத்தை நாமும் பின்பற்றுவதால் இன்று இந்த ‘அகில பாரதீய ஹிந்து ராஷ்ட்ர மாநாட்டில்’ குழுமியுள்ளோம். கடந்த 7 நாட்களாக ‘நம் அனைவரின் லட்சியங்களில் அத்வைதம் உள்ளது’ என்ற அநுபூதியை அனுபவித்துள்ளோம். மேலும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். சுயநலம் மிக்க அஹங்காரம் உடைய அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து நம் பாரதத்தை ஆள முடியுமென்றால் சம சிந்தனையுடைய ஆன்மீக ஸம்ப்ரதாயங்கள், ஸன்ஸ்தாக்கள் மற்றும் ஹிந்துத்வவாதிகள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்தால் அவர்களால் ஹிந்து ராஷ்ட்ரத்தை ஸ்தாபனம் செய்ய முடியும் என்பது சர்வ நிச்சயம்!

2 ஆ. குரு, கிரந்தம் மற்றும் கோவிந்தன் ஆகியவற்றை மனதில் பதித்து செயல்படுவோம்! : தர்மஸன்ஸ்தாபன காரியத்தில் குரு, கிரந்தம் மற்றும் கோவிந்தன் ஆகியோரின் பங்கு மகத்துவபூர்ணமானது.

2 ஆ 1. குரு : குருவின் வழிகாட்டுதலால் நாம் ராஷ்ட்ர – தர்ம ஸன்ஸ்தாபன காரியங்களில் ஈடுபடுகிறோம். இது நம்முடைய பாக்கியமே. ஆன்மீக அதிகாரியான குரு முக்காலமும் உணர்ந்தவர் ஆகிறார்; அதனால் அவரால் தர்மஸன்ஸ்தாபனத்திற்காக காலத்திற்கேற்ற வழிகாட்டுதலை தர முடிகிறது. மகாபாரத காலத்தில் தர்மராஜ்யத்திற்காக ஜகத்குரு பகவான் ஸ்ரீகிருஷ்ணன் வழிகாட்டுதல் வழங்கினார். ஹிந்தவி ஸ்வராஜ்யத்தை நிர்மாணித்த சத்ரபதி சிவாஜி மகாராஜுக்கு ராஷ்ட்ரகுரு ஸமர்த்த ராம்தாஸ் சுவாமிகளின் வழிகாட்டுதல் கிடைத்தது. தர்மவெற்றி கிடைப்பதற்கு ஸ்ரீகுருவின் ஆசீர்வாதம் மிகவும் அவசியம்; அதனால் மகான்கள் மற்றும் குருமார்களின் வழிகாட்டுதலின்படி காரியங்களை செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்!

2 ஆ 2. கிரந்தம் : ஸனாதன தர்ம கிரந்தங்கள் ஹிந்து தர்மத்தின் ஞானசக்தியாகும். தனுர்வேதம் (உபவேதம்), மனுஸ்ம்ருதி, ப்ருஹஸ்பதிநீதி, சுக்ரநீதி, யோகவாசிஷ்டம், ராமாயணம், மகாபாரதத்தின் சாந்திபர்வம் ஆகிய தர்ம கிரந்தங்களில் ‘ராஜ்யத்தை எவ்வாறு நடத்துவது?’ என்பது பற்றிய வழிகாட்டுதல் உள்ளது. ஆங்கிலேயர் பாரதத்திற்கு வருவதற்கு முன்பே இங்கு நம்முடைய கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் பிரசித்தமாக இருந்தது. அதில், நீரில் வாழும் மீன் எப்பொழுது தண்ணீர் குடிக்கிறது என்பது தெரிவதில்லையோ அப்படியே அரசுப் பணியில் இருக்கும் நபர் எப்பொழுது பணத்தை முழுங்குகிறார் என்பதும் தெரிவதில்லை என்று எழுதப்பட்டுள்ளது. இது போன்றவர்களை தண்டிப்பதற்கு ஆர்ய சாணக்யர் ‘பிரதேஷ்டா’ என்னும் அமைப்பை, அதாவது இன்றைய மொழியில் ‘ஊழல் ஒழிப்பு இலாகா’ (ஆண்ட்டி கரப்ஷன் பீரோ) ஆரம்பிக்க அறிவுறுத்தினார். அக்காலத்தில் ஒரு சாதாரண மனிதனுக்கு ஊழல் செய்ததற்காக 1 வருட தண்டனை கிடைத்தது என்றால் ‘பிரதேஷ்டா’ அதிகாரி ஊழல் செய்தால் அவருக்கு 10 வருடங்கள் தண்டனை கிடைத்தது. நீதிபதியும் ஊழலில் ஈடுபட்டால் அவருடைய முழு சொத்தையும் அரசாங்கம் பறிமுதல் செய்து அவரையும் நாடுகடத்தி விடும். மிகப் பெரிய குற்றமாயிருந்தால் நீதிபதிக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. சுதந்திரம் கிடைத்த பின் இந்த 70 ஆண்டுகளில் நீதித்துறையில் மிகப் பெரிய ஊழல்கள் நடந்திருந்தாலும் ஒரே ஒரு நீதிபதி மீதுதான் விசாரணை நடந்து வருகிறது. பல நீதிபதிகள் ஊழல் செய்துள்ளனர் என்பது வெளிவந்தாலும் இதுவரை அவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது எம்மாதிரியான அமைப்புமுறை? இக்காரணத்தால் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரமே அரசு நிர்வாகத்திற்கு ஆதாரமாக இருக்க வேண்டும்.

நம்மிடம் ராஜசாஸ்திரத்துடன் கூட நியாயசாஸ்திரம், தர்மசாஸ்திரம் போன்ற சாஸ்திரங்கள் மற்றும் ஆச்சார்யர் பாரத்வாஜர் உருவாக்கிய விமான சாஸ்திரம் போன்ற அதிநுட்ப ஞானம் செறிந்த விசால பரம்பரை உள்ளது. ஐரோப்பியரின் விஞ்ஞானம் பாரதத்திற்குள் நுழையும் முன்னரே பாரதத்தில் தங்கம் உருவாக்கப்பட்டது, வெள்ளி உருவாக்கப்பட்டது, புஷ்பக விமானம் பறக்கவிடப்பட்டது, உயர்ந்த ரக வஸ்திரங்கள் தயாரிக்கப்பட்டன. இத்தகைய உயர்ந்த ஞானத்தைக் கொண்டு ஹிந்து ராஷ்ட்ரத்தை நடக்கக் கூடிய திறனும் நம்மிடம் இருந்தது.

ஸனாதன் ஸன்ஸ்தாவும் வரக் கூடிய ஆயிரம் வருடங்களுக்கு மனித குலத்திற்கு வழிகாட்டுதல் வழங்குவதற்காக கலியுகத்தின் விஞ்ஞான மொழியில் 312 நூல்கள் வெளியிட்டுள்ளது. அவற்றின் 75 லட்சம் பிரதிகள் நம் நாட்டிலும் அயல் நாடுகளிலும் 11-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளன. இதில் ஸாதனை, ஆன்மீகம், தர்மம், தெய்வங்களின் உபாசனை, கலை, ஆயுர்வேதம், ராஷ்ட்ர அமைப்பு மற்றும் தர்மஸன்ஸ்தாபனம் ஆகியவற்றைப் பற்றிய வழிகாட்டுதல்கள் உள்ளன. இன்றும்  பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் பராத்பர குரு டாக்டர் ஆடவலேஜி அவர்களின் வழிகாட்டுதலின்படி தொகுக்கப்பட்டு வருகின்றன.

2 ஆ 3. கோவிந்தன் : இது பகவான் கிருஷ்ணனின் பக்திரூபமாகும். ஆதி சங்கராச்சாரியார் ‘பஜ கோவிந்தம்’ என்ற உபதேசத்தை நமக்கு அளித்திருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணனிடம் பக்தி செய்வது சுலபமானது, பல நன்மைகளைத் தரக் கூடியது. பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தர்மஸன்ஸ்தாபனத்தின் தெய்வம். ‘யதா யதா ஹி தர்மஸ்ய.. ‘ என்பது பகவானின் வாக்கு. நாமும் தார்மீக கஷ்டங்கள் நிறைந்துள்ள இக்காலத்தில் தர்மஸன்ஸ்தாபனம் அதாவது ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனம் என்ற காரியத்தில் ஈடுபட்டு வருகிறோம். இக்காரியத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் மீது பக்தி கொண்டிருக்கும் காரணத்தால் நிச்சயமாக அவரின் ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கும். வரக்கூடிய காலம் மிகவும் பயங்கரமானதாக இருக்கும். இக்காலத்தில் உயிர் தரித்திருப்பதற்கு கூட ஸ்ரீகிருஷ்ணன் மீது பக்தி வைப்பது அவசியம்; ஏனென்றால் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பகவத் கீதையில் இவ்வாறு கூறியுள்ளார்,

‘ந மே பக்த: பிரணஷ்யதி’, அதாவது ‘என்னுடைய பக்தனுக்கு அழிவே இல்லை!’

ஸ்ரீகிருஷ்ணனின் பக்தி ஸாதனை செய்வதன் சுலபமான வழி எப்பொழுதும் ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற நாமஜபத்தை சொல்வது. கால மகத்துவத்தின்படி வருடம் 2023 வரை ஸ்ரீகிருஷ்ண நாமஜபத்தையும் அதன் பிறகு ஸ்ரீராமனின் நாமஜபத்தையும் சொல்வது ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனத்திற்காக பாடுபடுபவர்களின் ஸாதனைக்கு ஏற்றதாக இருக்கும்.
குரு, கிரந்தம், கோவிந்தன் ஆகியவற்றைப் பின்பற்றி ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனத்திற்காக காரியங்களில் ஈடுபடுவதே காலத்திற்கேற்ற யோக்யமான ஸாதனையாகும்.

2 இ. ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனத்தில் உடலால், மனதால்-புத்தியால் மற்றும் ஆன்மீக நிலையில் செய்யப்பட வேண்டிய காரியங்களின் காலத்திற்கேற்ற அளவை மனதில் கொண்டு அக்காரியங்களை செய்ய வேண்டும்! : வரக்கூடிய நான்கு வருடங்களில், அதாவது 2019 முதல் 2023 வரையுள்ள காலகட்டத்தில், ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபன கண்ணோட்டத்தில் உடலால் காரியங்களை செய்ய வேண்டிய அவசியம் 50%, மனதால்-புத்தியால் காரியங்களை செய்வதன் அவசியம் 30% மற்றும் ஆன்மீக நிலையில் காரியங்களை செய்ய வேண்டிய அவசியம் 20% உள்ளது.

2 இ 1. ஆன்மீக நிலையில் காரியங்கள் : இவ்வருடம் ஸனாதன் ஸன்ஸ்தாவின் வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி காரியங்கள் செய்யும் மகான்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டி விடும். அவர்கள் ஆன்மீக நிலையில் செயல்பட்டு வருவார்கள். ‘நாம் உடல் பலத்தால் மற்றும் எண்ணிக்கை பலத்தின் ஆதாரத்தில் ஹிந்து ராஷ்ட்ரத்தை ஸ்தாபனம் செய்வோம்’, என்று சொல்பவர்கள் ஒன்றை கவனத்தில் கொள்வது இல்லை. அதாவது உடல் பலம் மற்றும் எண்ணிக்கை பலம் அதிகம் கொண்ட கௌரவர்களையும், மொகலாயர்களையும் முறையே ஸ்ரீகிருஷ்ணனின் ஆசீர்வாதத்தால் பாண்டவர்களும் ஸமர்த்த ராமதாஸ் சுவாமிகளின் ஆசீர்வாதத்தால் சத்ரபதி சிவாஜி மகாராஜும் தோற்கடித்தனர் மற்றும் ஸாத்வீக ராஜ்யத்தை ஸ்தாபனம் செய்தனர். கடவுளின் அவதாரம் மற்றும் மகான்களின் ஸங்கல்பத்தில் உள்ள சைதன்யத்தால் இக்காரியங்கள் சாத்தியமாகும். ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனத்திற்கான தார்மீக போராட்டங்களுக்காக யாக-யக்ஞாதிகள் செய்யும் யாகம் வளர்ப்பவர்களும் மகத்துவம் வாய்ந்தவர்களே. யாக-யக்ஞங்களால் சுற்றுப்புற சூழல் ஸாத்வீகமாகிறது. இக்காரணத்தால் ரஜ-தம நிறைந்த எதிரி அழிக்கப்படுகிறான்.

2 இ 2. மானசீக-புத்தி அளவிலான காரியங்கள் : ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்பது மானசீக அளவிலான காரியம் ஆகும். விழிப்புணர்வு காரியங்களில் நடக்கும் சொற்பொழிவுகள், உரையாடல்கள், சபாக்கள் போன்ற நிகழ்ச்சிகளின் மூலமாக நாம் ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனத்தைப் பற்றி அறிவிக்க வேண்டும். விழிப்புணர்வு மூலமாக நல்ல முறையில் ஹிந்து ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும் என்பதை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளோம். இன்று மிகவும் முனைப்பு ஏற்பட்டுள்ள காலத்தை நாம் அனுபவிக்கிறோம். ஹிந்துக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மீடியாக்கள் ஹிந்துக்களின் மீது நடக்கும் அட்டூழியங்களை மறைத்தாலும் ‘சோஷியல் மீடியா’ தளத்தின் மூலமாக செய்திகள் பிரசாரம் ஆவதால் இன்று ஹிந்துக்கள் விழிப்படைந்து சிந்தனை செய்ய ஆரம்பித்துள்ளனர். இதை பாதகமான காலத்தின் ஒரு ஸாதகமான தன்மை என்று கூட கூறலாம். விழிப்படைந்துள்ள ஹிந்துக்களை ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் பக்கம் சார விடாமல் ஹிந்து ராஷ்ட்ர சிந்தனையை நோக்கி திசை திருப்புவது நம் அனைவரின் கடமையாகிறது.
புத்திபூர்வ நிலையின் காரியம் என்னவென்றால் ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபன காரியங்களில் ஈடுபடுவோருக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குதல் ஆகும். சிந்தனையாளர்கள் சிந்தனை அளவிலும், வக்கீல்கள் சட்டபூர்வமான முறையிலும், அனுபவம் மிக்க முதிர்ந்த ஹிந்து ஒருங்கிணைப்பாளர்கள் ஒருங்கிணைக்கும் நிலையிலும் வழிகாட்டுதல் வழங்கினால் ஹிந்து ராஷ்ட்ர காரியங்களில் ஈடுபடுவோருக்கு சரியான திசையில் முன்னேறுவது சுலபமாயிருக்கும். இதை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் வருங்காலத்திலும் அதிக பலனளிக்கும் வகையில் செயல்பட முடியும்.

2 இ 3. உடலளவில் காரியங்கள் : வரக்கூடிய நான்கு வருடங்களில் பெரிய அளவில் காரியங்களை செய்ய வேண்டி உள்ளது. ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபன காரியங்களை செய்யும்போது முதல் எதிர்ப்பு தேசதுரோக தர்மதுரோக ஹிந்துக்களிடமிருந்து வரும். அதன் பின்பு ஹிந்து தர்ம விரோதிகளான தீவிரவாதிகளிடமிருந்து எதிர்ப்பு வரும். எந்த ஒரு கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் சிறிது சிறிதாக அராஜகம் அதிகமாகும். இந்த அராஜகத்தை எந்த அரசியல் கட்சியாலும் தடுத்து நிறுத்த முடியாது. எப்பொழுது அராஜகம் தலை தூக்குகிறதோ அப்பொழுது தேசத்தின் உள்நாட்டு வெளிநாட்டு எல்லைகள் பாதுகாப்பற்றதாகி விடும். எல்லைக்கு அப்பாலிருந்து தாக்குதல்கள், உள்நாட்டு தாக்குதல்கள் ஆகிய கஷ்டங்கள் ஏற்படும். இத்தகைய காலகட்டத்தில் உடலளவில் காரியங்கள் செய்வது மகத்துவம் நிறைந்ததாக இருக்கும். போராட்டம் இல்லாமல் எதுவும் கிடைக்காது. பாரதத்திற்கு சுதந்திரமும் போராட்டத்திற்கு பின்னரே கிடைத்தது.
வரக்கூடிய நான்கு வருடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் திட்டமிட்டு கால வரையறையிட்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தோமானால் நமக்கு ஹிந்து ராஷ்ட்ரம் கிடைக்கும் என்பது சர்வ நிச்சயம்!

3. வரக்கூடிய யுத்தகாலத்திற்கு தயாராக இருங்கள்!

இன்று தேசம் மற்றும் தர்ம கண்ணோட்டத்தில் ஆபத்துக் காலம் நடந்து கொண்டிருக்கிறது. இயற்கைப் பேரழிவுகள் தொடர்ந்து நடைபெறுதல்; தேசத்துரோகிகளின் தர்மதுரோகிகளின் கை ஓங்குதல்; அரசியல் அதிகாரம் ஆட்டம் காணும்படியான சூழ்நிலை உருவாதல்; சமூகம், ராஷ்ட்ரம் மற்றும் தர்ம நலனுக்கான சுப காரியங்களில் தடங்கல்கள் ஏற்படுவது போன்றவை ஆபத்துக் காலத்தின் உலகியல் லட்சணங்களாகும். இக்காலத்தில் சாதாரண மனிதர்களின் தினசரி வாழ்க்கை போராட்டத்திற்கு உள்ளாகிறது. குருபூர்ணிமாவிற்குப் பிறகு சில மாதங்களில் ஆபத்துக் காலத்தின் தீவிரத்தன்மை அதிகரிக்கும். இந்த ஆபத்துக் காலத்திற்குப் பிறகு அடுத்த வருட ஆரம்பத்தில் பாரதம் யுத்தகாலத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஜாதி-மதம் என்ற பெயரில் உள்நாட்டு கலவரங்களை மூளச் செய்ய தேச விரோத சக்திகள் சூழ்ச்சி செய்வார்கள் என்று முக்காலமும் உணர்ந்த மகான்கள் பலர் கூறியுள் ளனர் 1947-ல் நடந்த ஜாதீய கலவரத்தை ஒத்த நிலவரம் ஏற்படும். வருடம் 2021-ல் தேசத்தின் எல்லையில் யுத்தம் உருவாகக் கூடிய சூழல் ஏற்படும். சுருக்கமாக 2020 முதல் 2023 வரை பாரதத்தைப் பொருத்தவரை யுத்த காலமாக இருக்கும். இந்த பயங்கர ஆபத்துக் காலத்தில் வாழ்க்கை வாழ்வதற்கே மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் ஸாதனை செய்து, ஆன்மீக முன்னேற்றம் அடைந்து, யுத்தகால கண்ணோட்டத்தில் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை இன்றிலிருந்தே ஏற்பாடு செய்து கொள்வது அவசியமாகிறது. வரக்கூடிய இந்த மகாபயங்கர காலத்தைப் பற்றி சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இந்தக் காலகட்டத்தில் செய்ய வேண்டிய அவசியமான காரியமாகும்.

3 அ. யுத்த காலத்தில் ஸத்வகுண மக்களைக் காப்பாற்றுங்கள்! 

பல நாடி படிவங்களில் வருங்காலத்தைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது ‘மூன்றாவது உலக யுத்தத்தில் உலக மக்கட்தொகையில் பாதி உயிரிழக்க நேரிடும்.’ இதன் அர்த்தம் 100 கோடி ஹிந்துக்களில் 50 கோடி ஹிந்துக்கள் அழிவார்கள். அந்த சமயத்தில் ‘தெரிந்தவர், உறவுக்காரர், நண்பர்’, என்று சிந்தனை செய்யாமல் ராஷ்ட்ர தர்மத்திற்காக ஏதாவது செய்பவர்கள் மற்றும் ஸாதனை செய்பவர்கள் ஆகியோரை காப்பாற்றுங்கள். அவர்களே ஹிந்து ராஷ்ட்ர அமைப்பை உருவாக்குபவர்கள்.

3 ஆ. ஹிந்து ராஷ்ட்ர கண்ணோட்டத்தில் யுத்த காலத்தின் மகத்துவம் : இன்று பாரதத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் குறிப்பாக நியுசீலாந்து மற்றும் ஸ்ரீலங்காவிலுள்ள தீவிரவாதிகளைப் பற்றிய செய்திகளை படிக்கின்றோம். அவை மூன்றாம் உலக யுத்தத்தின் சில அறிகுறிகள் என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சங்கட காலத்திற்காக இப்பொழுதிருந்தே உடலால், மனதால், புத்தியால் மற்றும் ஆன்மீக நிலையில் ஆகிய எல்லா நிலைகளிலும் முயற்சி செய்தால்தான் மூன்றாவது உலக யுத்தம் முடிந்த பின் 2023-ல் ஹிந்து ராஷ்ட்ரம் ஸ்தாபனமாகும்.
பிரசவ வேதனையை சகித்துக் கொண்ட பின் ஒரு பெண்ணுக்கு குழந்தைப்பேறு வாய்க்கிறது. அதேபோல் மூன்றாம் உலக யுத்தத்தின் கஷ்டத்தை அனுபவித்த பின்னர் ஹிந்து ராஷ்ட்ரத்தின் ஆனந்தம் கிடைக்கும்!

4. அறைகூவல்

இறுதியில் இந்த அறைகூவலை விட விழைகிறேன்,

பூர்வக்ரஹான் பரித்யஜ்ய ஸ்ம்ருத்வா சிம்ஹ பராக்கிரமம் |
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே விஜயீ பவ பாரத ||

ஹே பாரத, நீ தோற்று விட்டாய் என்ற எண்ணத்தை விடு. உன்னுடைய மூதாதையரின் பராக்கிரமத்தை நினைவு கூறு. தர்ம க்ஷேத்திரமாயிருந்தாலும் சரி குருக்ஷேத்திரமாயிருந்தாலும் சரி வெற்றி உனக்கே!

Leave a Comment