கேரளாவின் கடும் மழை சபரிமலை பகவான் ஸ்ரீ ஐயப்பனின் கோப வெளிப்பாடு!

பகவான் ஸ்ரீ ஐயப்பனின் சுந்தர ரூபம்

பராத்பர குரு பாண்டே மகாராஜ் அவர்களின் சுடர் மிகும் சிந்தனை

‘கேரளாவில் சில வாரங்களுக்கு முன்பு கடும் மழை பெய்ததால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 370-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஏழரை லட்சம் மக்கள் வீடிழந்துள்ளனர். மொத்தத்தில் 82 ஆயிரம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து இது ஒரு சாமான்ய நிகழ்ச்சியில்லை, பெரிய இயற்கை பேரழிவு என்பது தெரிகிறது. இது பற்றிய சில விளக்கங்களை இங்கு பார்ப்போம்.

1. நீதிமன்றம் தர்மசாஸ்திர விதிகளைத்
தூக்கி எறிந்து ‘எல்லா பெண்களும் தரிசனம்
செய்து கொள்ளலாம்’ என்ற கருத்தை வெளியிட்டதால் பகவான் ஐயப்பன்
தன்னுடைய சக்தியை பயங்கர
மழையாக வெளிக்காட்டியிருக்கிறார் அல்லவா?

‘கேரளாவின் கடும் மழை சபரிமலை பகவான் ஐயப்பனின் கோபத்தால் ஏற்பட்டுள்ளதால் உச்ச நீதிமன்றம் தன் நிர்ணயத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்’ என்ற கருத்தை ரிசர்வ் பேங்க்கின் முன்னாள் அதிகாரி திரு குருமூர்த்தி அவர்கள் ட்வீட் மூலம் வெளியிட்டுள்ளார்; பகவான் ஐயப்பன், சிவன் மற்றும் ஸ்ரீவிஷ்ணுவின் தவப்புதல்வர் மற்றும் பால பிரம்மச்சாரி ஆவார். அவரிடமுள்ள சைதன்ய ரூபமான தேஜஸ் அதிக ஆற்றல் கொண்டதால் அவருக்கு அருகில் சிறிதளவு ரஜ-தம தன்மை நெருங்கினாலும் அவரை தரிசனம் செய்பவருக்கு அந்த சைதன்யத்தின் பலன் கிட்டாது. இக்காரணத்தால் ‘10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் அவரை தரிசிக்கக் கூடாது’ என்ற நியமம் உள்ளது; இதற்கான காரணம் இந்த வயதில் பெண்கள் ராஜஸீக தன்மை கொண்டவர்களாக உள்ளனர். அந்த சமயத்தில் பெண்களை சுற்றி ரஜ-தம ஆவரணம் அதிக அளவு இருக்கின்றது; ஆனால் நீதிமன்றம் இந்த விதிமுறையை தகர்த்து ‘எல்லாப் பெண்களும் தரிசனம் செய்து கொள்ளலாம்’, என்று கருத்து வெளியிட்டதால் பகவான் ஐயப்பன் தன்னுடைய சக்தியை இந்த பயங்கர பெருமழையின் மூலமாக காட்டியிருக்கிறார் அல்லவா?

 

2. சிருஷ்டி கர்த்தாவான பகவானின் திட்டம்

2அ. சிருஷ்டி விதிகளை மீறிக்
கொண்டே, மாற்றிக் கொண்டே போனால்
அது சுற்றுப்புற சூழலில் வக்கிரத் தன்மையாக பரிணமிக்கிறது!

‘இயற்கையின் காரியம் சூட்சுமமாக உள்ளது’, என்ற விஷயத்தை அரசு மற்றும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இயற்கை என்பது இறைவனே; காரணம் இயற்கை என்றால் சிருஷ்டி, பிரகிருதி ஆகும்! அத்தகைய இயற்கையிடம் அதாவது இறைவனின் தெய்வீக சக்தியிடம் விளையாடுவது என்பது யோக்யமானது அல்ல. சைதன்ய சக்தியால் அதாவது தெய்வீக சக்தியால்தான் அனைத்து காரியங்களும் நடக்கின்றன. எப்போழுது உங்கள் மூலமாக பாவ காரியம் அதிகமாக நடக்கிறதோ அப்பொழுது ரஜ-தம தன்மையின் தாக்கம் அதிகரிக்கிறது, அதன் பரிணாமம் சுற்றுப்புற சூழலிலும் ஏற்படுகிறது. எப்பொழுது சுற்றுப்புற சூழலில் சிருஷ்டி விதிகள் மீறப்பட்டு விபரீத பலன்கள் ஏற்படுகிறதோ அது வக்கிரத்தன்மைக்கு அடிகோலுகிறது.

2ஆ. சுற்று சூழலில் வக்கிரத்தன்மை
ஏற்படுவதன் காரணம் மற்றும் அதை தவிர்ப்பதற்கான உபாயம்

அதிவ்ருஷ்டி: அனாவ்ருஷ்டி: ஷாலபா மூஷகா: சுகா: |
ஸ்வசக்ரம் பரசக்ரம் ஸ ஸப்தைதா ஈதய: ஸ்ம்ருதா: ||

– கௌசிகபத்ததி

அர்த்தம் : (ஆட்சி செய்பவர்கள் தர்மவழி பின்பற்றாததால் மக்களும் தர்மவழி பின்பற்றுவதில்லை. மக்கள் தர்மவழி நடக்காததால்) அதிக மழை, வறட்சி, வெட்டுக்கிளிகளின் ஆக்கிரமிப்பு, எலிகளின் தொல்லை, கிளிகளின் தொல்லை, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளுதல், எதிரிகளின் ஆக்கிரமிப்பு போன்ற ஏழு வகை சங்கடங்கள் (தேசத்திற்கு) ஏற்படுகின்றன.

இதன் தாத்பர்யம் என்னவென்றால், குடிமக்கள் மற்றும் ராஜா ஆகிய இருவரும் தர்மவழி நடந்து ஸாதனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான் ஆபத்துக் காலத்தின் தீவிரம் குறைந்து அதை எதிர்கொள்ள இயலும். இன்று பாவ காரியங்கள் வரம்பை மீறி விட்டன. இந்த பாவத்தால் ஆயிரக்கணக்கான வருடங்கள் இயற்கையை அழிக்கும் நாச வேலை தொடர்ந்து நடைபெறுகின்றன, இவ்வாறு இருந்தும் நீங்கள் அதை பொருட்படுத்தாமல் புறக்கணித்தீர்கள் என்றால் அது புத்திசாலித்தனம் ஆகுமா?

 

3. இயற்கை நியமங்களை
அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் பரிணாமம்!

இயற்கை விதிகளின்படி பிறப்பு மற்றும் இறப்பு ஏற்படுகிறது, மற்ற எல்லாமும் நடக்கின்றன என்றபோதும் அரசாங்கம் அதை அலட்சியப்படுத்துகிறது. அலட்சியப்படுத்திய பின் அதை உணர்ந்து சரி செய்யப்பட்டதா என்றால் அதுவும் இதுவரை நடந்ததாக தெரியவில்லை. மாறாக நவீனம் என்ற பெயரில் எல்லா இடங்களிலும் மாசு மற்றும் ‘க்ளோபல் வார்மிங்’ நடந்து வருகிறது. இது அதோகதிக்கு வழிகோலுகிறது. இதன் விளைவாக மனிதன் ஆன்மீக முன்னேற்றம் அடையாமல் அதோகதிக்கு சரிந்து கொண்டிருக்கிறான்.

 

4. பகவானே உள்ளும் புறமும் காரியங்களை நடத்துவிப்பவன்!

பகவான், மனிதனுக்கு பஞ்சஞானேந்த்ரியங்கள் மற்றும் பஞ்சகர்மேந்த்ரியங்களைத் தந்துள்ளான். அதேபோல் மனம், புத்தி, சித்தம் மற்றும் அஹம் ஆகியவற்றையும் தந்துள்ளான். அது மட்டுமல்லாது ஆத்மஸ்வரூபமாக நம்முள் உறைந்து இந்த்ரியங்கள் மூலமாக எல்லா காரியங்களையும் நடத்துவிக்கிறான்; அதாவது பகவத்கீதையில் பகவான் கூறுகிறான்…

ப்ராமயன்ஸர்வபூதானி யந்த்ராரூடானி மாயயா ||

– ஸ்ரீமத்பகவத்கீதை, அத்யாயம் 18, ஸ்லோகம் 61

அர்த்தம் : ஹே அர்ஜுனா! அந்தர்யாமியான பரமேஸ்வரன் இந்த மாய சரீர ரூப யந்திரத்தில் குடிகொண்டிருக்கும் எல்லா பிராணிகளையும் அவற்றின் கர்மாப்படி ஆட்டுவித்து எல்லா பிராணிகளின் ஹ்ருதயத்தில் உறைகிறான்.

 

5. இன்றைய சூழ்நிலையில் மனிதகுலம் அடைந்துள்ள பரிதாபகர நிலை!

5அ. தர்மவழி நடக்காத அரசியல்வாதிகளே இதன் மூல காரணம் !

மனிதனுக்கு எல்லாவற்றையும் கொடுத்தும் கூட அவன் சத்தியத்தை உணரவில்லை. பகவானை நினைவு கொள்ளாமல், அதாவது தர்மவழியில் நடக்காமல் அதர்ம ராஜ்யத்திற்கு மகத்துவம் அளித்து இன்றைய அரசு காரியங்களை செய்வதில் மூழ்கியுள்ளது. முற்காலத்தில் அரசாட்சி செய்பவர் தர்மவழி நடப்பவர்களாக இருந்தனர். அதனால் அந்த சமயத்தில் ராஜா மற்றும் குடிமக்கள் ஆகிய இருபாலாரும் தர்மவழி நடப்பவர்களாக இருந்தனர். முற்காலத்தில் ரிஷிமுனிவர்கள் எவ்வாறு கடும் முயற்சி செய்து சத்தியத்தை உணர முற்பட்டனரோ அவ்வாறு இன்று யாரும் முயற்சி செய்வதாக தெரியவில்லை.
அதனால் இன்று இப்படிப்பட்ட பரிதாபகர நிலை வாய்த்துள்ளது.

5ஆ. தர்மவழி நடக்கும், சூட்சும ஞானம் உடைய நீதிபதிகள்
இருந்தால்தான் சரியான மற்றும் உடனடி நியாயம் கிடைக்கும் !

இன்றைய நிலையில் ஒருவர் நீதி கிடைப்பதற்காக நீதிமன்றத்திற்கு சென்றால் அவருக்கு நீதி கிடைக்க பல வருடங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. அதனால் அவரின் ஆயுள் துக்கமயமாக மாறுகிறது. இது போன்ற சம்பவங்களால் சாமான்ய மனிதர்கள் அனாவசியமாக குழப்பத்தில் ஆழ்கின்றனர். அதிகபட்ச ரஜ-தம ஆவரணத்தால் இவையெல்லாம் நடக்கின்றன என்பது தெளிவாகிறது. இதற்கான நிவாரணம், தர்ம வழி நடக்கும் மற்றும் சூட்சும ஞானம் உடைய நீதிபதிகள் இருந்தால்தான் சரியான மற்றும் உடனடி நியாயம் கிடைக்கும்.

5இ. மனித வாழ்க்கையின் உண்மையை
உணர்ந்து ஆனந்தமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்!

பாரதத்தில் உண்மையாக தர்மவழி நடப்பவர் அரிதாக இருப்பதால் சூட்சும ஞானம் கொண்ட ஞானிகளும் காணக் கிடைப்பதற்கு அரிதாகவே உள்ளனர்; இதன் காரணம் இன்றைய சூழ்நிலையில் நடக்கும் கெட்ட மற்றும் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளை யாரும் தடுப்பது இல்லை. இதனால் எல்லா ஜனங்களும் ரஜ-தம ஆவரணத்தினால் மூடப்பட்டு உள்ளனர்.

இன்றைய நிலையில் எல்லா இடங்களிலும் என்ன பார்க்க முடிகிறது? ‘பிறந்தோம், இறந்தோம்’ என்ற நிலையே எங்கும் உள்ளது. ‘வாழ்க்கை என்பது என்ன?’ என்பது இந்த மக்களுக்கு புரியவே இல்லை. விலங்கு, பறவை மற்றும் படைப்பிலுள்ள சில நிமிடங்களே வாழும் உயிரினங்கள் கூட ஆனந்தமாக வாழ்க்கை நடத்துகின்றன. மனிதன் மட்டுமே வெறுப்பு, மன அழுத்தம், சுயநலம் போன்ற அஹங்காரத்தால் துக்கம் நிறைந்த வாழ்க்கை வாழ்கிறான். அதிலேயே உழன்று அதையே சுகம் என நினைக்கிறான். உண்மையில் வாழ்க்கை என்பது உள்ளே இருக்கும் ஸ்திரமான சைதன்யசக்தியை, தீயவர்கள் நடத்தும் தீய நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு தன்னுயிரை பொருட்படுத்தாமல் உபயோகிப்பதே ஆகும். இதிலேயே உண்மையான ஆனந்தம் உள்ளது.

 

6. தர்மத்திற்கு தீங்கு ஏற்படும்போது பகவான்
இப்பூமியில் அவதரித்து காரியங்களை நடத்துவிக்கிறார் !

ஸ்ரீமத்பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்,

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ஸ துஷ்க்ருதாம் |
தர்மஸன்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

– ஸ்ரீமத்பகவத்கீதை, அத்யாயம் 4, ஸ்லோகம் 8

அர்த்தம் : நல்லவர்களை கைதூக்கி விடவும் பாவகர்மா செய்பவர்களை அழிக்கவும் மற்றும் தர்மத்தை உத்தம ரீதியில் ஸ்தாபனம் செய்யவும் நான் யுகத்திற்கு யுகம் வெளிப்படுகிறேன்.

இதற்காக இப்பொழுது அவதரித்து உள்ள அவதார புருஷர் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் ஸனாதன் ஸன்ஸ்தா மூலமாக சைதன்ய சக்தியை பல்வேறு வழிகளில் பெருக்கி இன்றுள்ள ரஜ-தம நிறைந்துள்ள சூட்சும கஷ்டம் தரும் சக்தியை நஷ்டமடைய செய்து வருகிறார்.

அதற்காக அவர் இன்று வரை ஸனாதனின் மகான்களாகிய ரத்னங்கள் கோர்க்கப்பட்ட மாலையில் 81 மகான்களை உருவாக்கி சேர்த்துள்ளார். அத்துடன் 1,163-க்கும் அதிகமான ஸாதகர்களை இந்த முன்னேற்றப் பாதையில் செல்ல வழிநடத்தியுள்ளார். அதன் மூலமாக எங்கும் நிரந்தரமான சைதன்யத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த தாக்கத்தால் வருடம் 2023-ல் ‘ஹிந்து ராஷ்ட்ரம்’ (ஸனாதன தர்மராஜ்யம்) அமைக்கப்பட உள்ளது. ஹிந்து ராஷ்ட்ரம் உருவான பின்பு எங்கும் தர்மத்தின் மீது இழைக்கப்படும் தீங்கு மறைந்து எல்லோரும் தர்மவழிப்படி நடக்க ஆரம்பிப்பார்கள். அதன் மூலமாக ராமராஜ்யத்தை ஒத்த சூழ்நிலை எங்கும் ஏற்படும்.’

– (பராத்பர குரு) பரசுராம் பாண்டே மகாராஜ், ஸனாதன் ஆஸ்ரமம், தேவத், பன்வேல். (20.8.2018)

Leave a Comment