ஸனாதன் ஸன்ஸ்தாவை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சி சானல்கள் ராப்பகலாக பெரும் கூக்குரல் எழுப்பும்போது அதன் ஸ்தாபகரான டாக்டர் ஆடவலே ஏன் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை?

‘இந்த கேள்வி பலரது மனங்களில்
எழுகின்றன. அதன் பதில் பின் வருமாறு.

1. சமூகத்தின் ஸாத்வீகத் தன்மையை அதிகரிக்க வேண்டும் மற்றும் வரும் சந்ததியினருக்கு தர்ம சாஸ்திரத்தின் மொழி தெரிய வேண்டும் என்பதற்காக நான் தொடர்ந்து முயன்று வருகின்றேன். மீடியாக்களுக்கு ஸனாதன் ஸன்ஸ்தா பற்றி என்ன தகவல் தெரிய வேண்டுமோ அதை சொல்வதற்கு நம்முடைய ஸனாதனின் செய்தி தொடர்பாளர்கள் எப்பொழுதும் தயார் நிலையில் உள்ளனர். அதனால் நான் என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயத்தை சொல்ல வேண்டும் என்ற அவசியம் எழவில்லை.

2. என்னுடைய முயற்சி இவ்வாறு நடைபெற்று வருகிறது. இன்றுவரை தர்மம் மற்றும் ஸாதனை சம்பந்தமாக நான் தொகுத்துள்ள 310 – க்கும் மேற்பட்ட நூல்கள் இங்கும் வெளிநாடுகளிலும் 72 லக்ஷத்திற்கும் அதிகமான பிரதிகள் வெளிவந்துள்ளன. மேலும் 7000-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவரும் அளவு விஷயங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. வரும் சந்ததியினருக்கு இவ்விஷயங்கள் அனைத்தும் போய் சேர வேண்டும் என்பதற்காக இவ்விஷயங்களை நூல்களாக தொகுத்தளிக்கும் பணியில் என் அன்றாட நேரம் முழுவதும் செலவிடப்படுகிறது.
இந்த ஆன்மீக நூல்களுடன் கூட தெய்வங்களின் ஸாத்வீக சித்திரங்கள், மூர்த்திகள் மற்றும் தர்மபோதனை வழங்கும் ஒலி நாடாக்கள் போன்ற பல விஷயங்கள் சம்பந்தமாக காரியங்கள் நடந்து வருகின்றன.

ஸனாதன் மீது தடை என்ற கேள்வி தாற்காலிகமானது. இவ்விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக 76 வயதில் உடல்நிலை சரியில்லாத இந்நிலையில் என்னுடைய சேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவது எனக்கு சரியாகப் படுகிறது.

3. பல மகான்களும் என்னுடைய இந்த காரியங்களுக்கு அவர்களின் ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளனர். ஸனாதனின் காரியங்கள் தர்மத்தின் அதாவது ஈஸ்வரனின் புனித காரியங்கள் ஆகும். அவரே அதைப் பார்த்துக் கொள்வார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. முற்காலத்தில் ஸந்த் துகாராம் மகாராஜ் அவர்களின் அபங்கங்களை இந்திராணி நதியில் மூழ்கடிக்க தர்ம விரோதிகள் சதி செய்தனர். அந்த சமயம் துகாராம் மகாராஜ் அவர்கள் பாண்டுரங்க பக்தியில் மூழ்கி திளைத்திருந்தார். நதியில் வீசி எறியப்பட்ட அபங்கங்களை பகவான் அலைகளின் மீது மிதக்க விட்டு கரை சேர்த்தான். அதேபோல் இன்றைய நிலையில் பகவானே ஸனாதன் ஸன்ஸ்தாவை இந்த சங்கடத்திலிருந்து மீட்டு கரை சேர்ப்பார். ஸனாதன் ஸன்ஸ்தாவை தடை செய்ய வேண்டும் என்று ஹிந்து விரோத சக்திகள் எவ்வளவு முயன்றாலும் அது நடைபெறப் போவதில்லை.

மேற்கூறிய அனைத்து காரணங்களாலும் ஸனாதன் ஸன்ஸ்தா மீது தடை என்ற விஷயத்தைப் பற்றி நான் ஒரு வார்த்தையும் இதுவரை கூறியதில்லை. அதோடு மட்டுமல்ல அதைப் பற்றி சிந்தனை செய்தது கூட இல்லை.’

– (பராத்பர குரு) டாக்டர் ஜெயந்த் பாலாஜி ஆடவலே

Leave a Comment