சமூகத்தில் நடக்கும் கெட்ட நிகழ்வுகளைப் பார்க்கும் ஸாதகர்களின் கண்ணோட்டம் இவ்வாறிருக்க வேண்டும்!

சமூகத்தில் ஊழல், கடையடைப்பு, போராட்டம், வெள்ளம், பூகம்பம், தீவிரவாத தாக்குதல் போன்ற கெட்ட நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் உள்ளன. இந்த நிகழ்வுகளை கீழ்க்கண்ட கண்ணோட்டத்துடன் ஸாதகர்கள் பார்க்க வேண்டும்.

 

அ. இறைவன் சமூக நிகழ்வுகளின் மூலம்
ஹிந்து ராஷ்ட்ரத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டியது
எவ்வளவு அத்தியாவசியமானது என்பதை உணர வைக்கிறார்.

விளக்கம் :  ஹிந்து ராஷ்ட்ரம் அமைந்து விட்டால் இவையெல்லாம் உடனே நின்று விடுமா என சிலர் கேட்கலாம். சமூக கெட்ட நிகழ்வுகள் இரு வகைப்படும். அவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை மற்றும் இயற்கையாக நிகழ்பவை. ஹிந்து ராஷ்ட்ரத்தில் அனைத்து மக்களும் ஆன்மீக பயிற்சி செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள்; அதிலும் முக்கியமாக அவர்களின் குறைகளைக் களையவும் அகம்பாவத்தை குறைக்கவும் கற்றுத் தரப்படும். இதன் பலனாக மக்களால் நடக்கும் கெட்ட நிகழ்வுகளான ஊழல், தீவிரவாதம் போன்றவை குறையும். இரண்டாவதாக எப்பொழுதெல்லாம் சமூகத்தில் ஸாத்வீகத் தன்மை குறைந்து ரஜ-தம அதிகமாகிறதோ அப்பொழுதெல்லாம் மறுபடியும் சமநிலை உருவாக இயற்கை உத்பாதங்கள் நடக்கின்றன. ஹிந்து ராஷ்ட்ரத்தில் ரஜ-தம தன்மை குறைந்து ஸாத்வீகத் தன்மை அதிகரிக்கும் என்பதால் இயற்கை தானே சமநிலைக்கு வரும்; இயற்கை உத்பாதங்கள் குறையும்.

 

ஆ. ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபன காரியங்களை பன்மடங்கு
அதிகமாக்க வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்துகிறார்.

விளக்கம் : ரஜ-தம தன்மை அதிகரிக்கும் வேகத்தைக் காட்டிலும் ஸாத்வீகத் தன்மை அதிக வேகத்துடன் அதிகரித்தால்தான் ஹிந்து ராஷ்ட்ரம் ஸ்தாபனம் ஆகும். அதனால் ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபன காரியங்களை பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதை அதிகரித்து வரும் கெட்ட நிகழ்வுகளால் நமக்கு இறைவன் குறிப்பால் உணர்த்துகிறார்.

 

இ. ஸனாதன் ஸன்ஸ்தா செய்து வரும்ஹிந்து
ராஷ்ட்ர பிரசாரம் மூகத்தினரை ன்றடையவில்லை
என்பதையும் சமூகத்தினரின்மனங்களில் இன்றைய பயங்கர
நிலை உணரப்படவில்லை என்பதையும் காண்பிக்கிறார்.

விளக்கம் : பராத்பர குரு டாக்டர் ஜெயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் வழிகாட்டுதல்படி ஹிந்து ராஷ்ட்ர காரியங்களில் ஈடுபடுவது என்பது நமது ஸமஷ்டி ஸாதனை ஆகிறது. மக்களின் மனங்களில் தர்ம சிந்தனைகள், தர்ம விழிப்புணர்வு மற்றும் தர்ம ரக்ஷணம் ஆகியவற்றை பதிய வைக்க வேண்டும் என்பதற்காக வலைதளங்கள், பல தலைப்புகளில் ஆன்மீக நூல்கள், தர்மஸத்சங்கங்கள், தர்ம சபாக்கள், ஹிந்து மாநாடுகள் ஆகிய உபகரணங்களை பராத்பர குருதேவர் நமக்கு வழங்கியுள்ளார். சொல்பவரின் வாக்கில் சைதன்யம் இருந்தால்தான் கேட்கும் சமூகத்தினரின் மனங்களில் உண்மையான மாற்றம் ஏற்படும்; இன்றைய பயங்கர நிலையை உணர்வார்கள்; அதற்கான முயற்சியிலும் ஈடுபடுவார்கள். நம்முடைய வாக்கில் தெய்வீக சைதன்யம் நிரம்ப நாம் நம்முடைய ஆளுமை குறைகளைக் களைதல், அகம்பாவத்தை குறைத்தல் ஆகியவற்றை இன்னும் தீவிரமாக செய்ய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

 

ஈ. இது போன்று இறைவன் ஒரு விதத்தில்
ஸனாதன் ஸன்ஸ்தா செய்து வரும் சமூகபிரசாரரியங்களின்
ஸமஷ்டி மதிப்பாய்வுரையை நமக்குத்  தெரிவிக்கிறார்.

விளக்கம் : ஒரு மாணவன் எந்த நிலையில் உள்ளான் என்பதை அவன் பரீட்சையில் வாங்கிய மதிப்பாய்வுரை கூறும். அதேபோல் இறைவன் இந்நிகழ்வுகளின் மூலம் நம் சமூக பிரசார காரியங்களின் மதிப்பாய்வுரையை தருகிறார்; நாம் எங்கு குறை படுகிறோம், எங்கு மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார்.

 

உ. சமூகத்தின் ஒவ்வொரு நிகழ்விற்கும்
சரியான கண்ணோட்டத்தைத் தர ஸனாதன் ஸாதகர்கள்
தவறி விட்டார்கள் என்பதையும் நமக்குக் காண்பிக்கிறார்.

விளக்கம் : உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு காரண காரிய பாவம் உள்ளது. அதாவது இறைவன், ஏதாவதொரு காரணத்திற்காக ஒவ்வொரு காரியத்தையும் நடத்துவிக்கிறான்; அல்லது நடப்பதை தடுக்காமல் இருக்கிறான். அத்தகைய ஆன்மீக கண்ணோட்டம் என்ன என்பதை நாம் சமூகத்தினருக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

இதிலிருந்து இறைவன் எவ்வளவு கருணைமயமானவனர் என்பது தெரிகிறது. இந்த அளவு பிரம்மாண்ட நிலையில் நமக்கு வழிகாட்டுகிறார் மற்றும் தர்மஸன்சஸ்தாபன காரியங்களின் பரிணாமத்தையும் நமக்கு காண்பிக்கின்றார். இறைவனின் பரந்து விரிந்த இந்த திட்டத்திற்காக அவருக்கு நன்றி தெரிவித்து ஒவ்வொரு நிகழ்வையும் ஸாதனை கண்ணோட்டத்துடன் பார்ப்பது அவசியமாகிறது.’

(பராத்பர குரு) பரசுராம் பாண்டே மகாராஜ், தேவத் ஆஸ்ரமம், பன்வேல். (8.6.2017)

Leave a Comment