ஸாதகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கணினி மொழியில் உச்ச நிலை ஆன்மீக வழிகாட்டுதல் வழங்கிய ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் !

1. ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக்
குறைக்கும் செயல்முறையின் முக்கியத்துவம் மற்றும்
இறைவனுடன் எப்பொழுதும் தொடர்பில் இருப்பதன் முக்கியத்துவம்!

1 அ. இறைவன் நமக்குக் கொடுத்த
‘மெமரி கார்ட்’ அதி உச்ச ஆற்றலை கொண்டிருப்பதால்
இறப்பிற்கு பின்னர் அடுத்த உலகிற்கு செல்வதற்கு அந்த ‘மெமரி
கார்ட்’டில் அந்த நபர் நிரப்பியுள்ள அனாவசிய ‘டாடா’வை
(தகவல்களை) அழித்து அதில் பக்தி டாடாவை நிரப்ப வேண்டும்

ஸத்குரு அஞ்ஜலி அவர்கள் கூறுவார், ‘இறப்பு என்பது இவ்வுடலை உகுத்து விட்டு மற்றொரு உடலை எடுத்துக் கொள்வதாகும். நீங்கள் உடையை மாற்றுவது போன்றது இது. செய்துள்ள கர்மாக்களின்படி நீங்கள் மனிதப் பிறவியிலிருந்து ‘நாய்’, ‘பூனை’ போன்ற ஏதோ ஒரு பிறவி எடுப்பது என்பது மனித ரூப ஆடையைக் களைந்துவிட்டு நாய், பூனை போன்ற ஆடைகளை அணிந்து கொள்வது ஆகும்; ஆனால் இந்த செயல்பாடு மிக பயங்கரமானது ஆனதால் இங்கு குருவின் அவசியம் ஏற்படுகிறது. நம்மிடையே மிக உயர்ந்த நல்லதொரு ‘மெமரி கார்ட்’ உள்ளது. இங்கு ‘மெமரி கார்ட்’ என்பது இறைவனின் ‘மெமரி’ ஆகும். பூமியிலுள்ள சில ‘ஜி.பி.’ (கிகா பைட்) மற்றும் ‘டி.பி.’ (டெரா பைட்) ஆகியவற்றின் ‘மெமரி கார்ட்’டுடன் ஒப்பிடும்போது இறைவன் நமக்கு அளித்த ‘மெமரி கார்ட்’ அதி உன்னத ஆற்றல் கொண்டதாகும். இறப்பிற்கு பின்னர் கீழ்பிறவிக்கு செல்லாமல் அடுத்த லோகத்திற்கு செல்வதற்கு இறைவன் அளித்த ‘மெமரி கார்ட்’டில் நாம் நிரப்பி வைத்துள்ள அனைத்து அனாவசிய ‘டாடா’வை அழித்து விட்டு அதில் பக்தி என்ற ‘டாடா’வை நிரப்ப வேண்டும். அப்பொழுதே நம் ‘மெமரி கார்ட்’ இறைவனுடையது ஆகிறது மற்றும் ஜீவன் இறைவனுக்கு அருகில் செல்கிறது. ஒரு ஜீவனின் ‘ஹார்ட் டிஸ்க்’ மற்றும் ‘மெமரி கார்ட்’ நிரம்பி இருந்தால் இறைவனின் சிந்தனை எவ்வாறு கிடைக்கும்? அதற்கு உங்களின் ‘ஹார்ட் டிஸ்க்’ காலியாக இருக்க வேண்டும். அப்பொழுதே உங்களால் இறைவனின் சிந்தனையை க்ரஹித்துக் கொள்ள முடியும். ‘ஹார்ட் டிஸ்க்’ நிரம்பியிருந்தால், அதில் புது டாடாவை உங்களால் எப்படி காபி செய்ய முடியும்?’

1 ஆ. ஈச்வர அதிர்வலைகள் உங்களை
நோக்கி எப்பொழுதும் வந்து கொண்டே
இருந்தாலும் உங்களின் ‘மெமரி’ நிரம்பி இருப்பதால்
ஈச்வர அதிர்வலைகளை க்ரஹிக்க முடிவதில்லை

‘மேலே உள்ள ஆகாயமே ஈச்வரனின் ‘ஸர்வர்’ ஆகும். அது தேடுகிறது, ‘யாருடைய ‘ஹார்ட் டிஸ்க்’ காலியாக உள்ளது?’ என்று. உங்களின் ‘ஹார்ட் டிஸ்க்’ பூரணமாக நிரம்பியிருந்தால் ஈச்வரனின் ‘ஸர்வர்’ சொல்கிறது, ‘வேறு எங்கு ‘ஹார்ட் டிஸ்க்’ காலியாக உள்ளதோ அங்கு நான் செல்கிறேன்’. பிரம்மாண்டத்தின் கதி எப்பொழுதும் இயக்கத்தில் இருப்பதால் ஈச்வர அதிர்வலைகள் எப்பொழுதும் நம்முடைய திசை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. நம்முடைய ‘மெமரி’ நிரம்பியிருப்பதால்தான் நம்மால் ஈச்வர அதிர்வலைகளை க்ரஹிப்பதற்கு முடிவதில்லை. இறைவன் வாயிற்படியில் வந்து நின்றால் கூட நம்மால் அதை உணர முடிவதில்லை.

1 இ. ஸாதகரின் ‘ஹார்ட் டிஸ்க்’கில் ‘ஃபங்கஸ்’ ஏற்பட்டால்
அவரை ஆளுமை குறைகளை மற்றும் அஹம்பாவத்தைக்
களையும் செயல்பாட்டிற்கு அனுப்ப வேண்டி உள்ளது

எப்பொழுது ‘ஹார்ட் டிஸ்க்’கில் ‘ஃபங்கஸ்’ (ஒரு வித கோளாறு) ஏற்படுகிறதோ அப்பொழுது ‘ஹார்ட் டிஸ்க்’கை சரி செய்ய வேண்டி உள்ளது. அதேபோல் எப்பொழுது ஸாதகரின் ‘ஹார்ட் டிஸ்க்’கில் ஃபங்கஸ் ஏற்படுகிறதோ அப்பொழுது அந்த ஸாதகரை ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களைதல் செயல்பாட்டிற்காக அனுப்ப வேண்டி உள்ளது. இந்த செயல்பாட்டை செய்த பிறகு சிறிது காலம் ‘ஹார்ட் டிஸ்க்’ நன்றாக இயங்குகிறது; ஆனால் கவனம் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் ஸாதகர் மறுபடியும் மறுபடியும் இந்த செயல்பாட்டை செய்ய வேண்டி இருக்கும். அதற்கு இறைவனுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது மகத்துவம் வாய்ந்தது; ஆனால் நீங்கள் மனம் மற்றும் புத்தியிடையே மாட்டிக் கொண்டுள்ளீர்கள்.

2. ஒரு ஜீவனின் ஆன்மீக பயணத்தின் அழகான செயல்பாட்டைப் பற்றி ஸத்குரு அவர்கள் செய்துள்ள வர்ணனை!

‘இன்னும் நாம் எவ்வளவு ஆழமாக செல்ல வேண்டி உள்ளது! ‘ஜீவ, ஜீவாத்மா, சிவ மற்றும் சிவாத்மா’, இவ்வாறு செல்ல செல்ல அடுத்து ஆத்மகோசம் வருகிறது. அதன் பின்னர் ‘ஆத்மா’. அதுவரை நாம் செல்ல வேண்டி உள்ளது.

அ. எப்பொழுது நீங்கள் ஜீவாத்மா வரை செல்கிறீர்களோ அப்பொழுது உங்களால், ‘என் மூலமாக தவறு நேர்ந்து விட்டது. நான் திருந்த வேண்டும்’ என்ற புரிதல் உண்டாகிறது.

ஆ. ஜீவாத்மா நிலையைத் தாண்டி செல்லும்போது நிகழ்வு அல்லது தவறு நடக்கும் முன்னரே தனக்கு தெரிய வருகிறது, ‘இந்நிலையில் என் மூலமாக தவறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது’ என்று. அதனால் எச்சரிக்கையாக நடந்து கொள்ள முடிகிறது.

இ. சிவாத்மா எப்பொழுதும் ஆனந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் ஒரு ஜீவன் மூலமாக தானாகவே காரியங்கள் சரியான முறையில் நடக்கின்றன மற்றும் அவருக்கு அதைப் பற்றிய உள்ளுணர்வும் இருப்பதில்லை.

ஈ. எப்பொழுது ஒரு ஜீவன் ஆத்மாவை நெருங்குகிறதோ அப்பொழுது அது தொடர்ந்து ஆனந்த நிலையை அனுபவிக்கின்றது. இந்நிலையில் பகவானே எல்லாவற்றையும் செய்கிறான். உண்மையில் இந்நிலையில் இருப்பவர்களுக்காக பகவான் எல்லாவற்றையும் செய்ய வேண்டி உள்ளது. தெய்வம் உங்களுக்காக மனித உருவெடுக்கிறார் மற்றும் நீங்கள் தெய்வ உரு எடுக்கிறீர்கள். அதாவது நிலை தலைகீழாக மாறுகிறது. ஸந்த் ஏக்நாத்திற்காக ஸ்ரீகண்ட் தோன்றினார். ஸந்த் ஜனாபாயிக்காக பாண்டுரங்கன் உரலில் மாவு அரைத்தான். இவ்வாறாக வாழ்க்கை நடக்க ஆரம்பிக்கிறது.

இவ்வாறான அதி அற்புதங்கள் நடக்கின்றன. ‘ஆன்மீகத்தின் அத்வைதம் இதுவேதான்’ என்று தெரிந்த பின் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் உங்களிடம் சலனம் ஏற்படாது. உங்களின் ஸாதனை ஒரே லயத்தில் சீராக நடந்து நீங்கள் இறைவனுக்கு அருகில் சென்று விடுவீர்கள்.

– தொகுத்து வழங்கியவர் திரு. விநாயக் ஷான்பாக், சிக்கிம் (19.12.2018)

Leave a Comment