சைதன்யத்தால் காரியங்கள் எவ்வாறு நடக்கின்றன ?

சைதன்யம் என்பது சாஸ்வதமான ஈச்வர சக்தி; அத்தகைய ஈச்வர சக்தியால்தான் நாம் உயிரோடிருக்கிறோம். இந்த ஈச்வர சக்தி நம் உடலை விட்டு போய்விட்டால் நாம் வெறும் சவம் தான். இறந்த பின் நம்மால் எந்த காரியத்தையும் செய்ய முடியாது; அதனால் ‘நான் உயிருடன் இருக்கிறேன்’ என்பதே எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் ஆகும். ‘நம்மால் நடக்கும் எந்த காரியமும் இந்த சைதன்ய சக்தியின் பலத்தாலேயே நடக்கிறது’ என்ற உணர்வை எப்பொழுதும் மனதில் பதிய வைத்துக் கொண்டால் நம்மிடமுள்ள இந்த ஈச்வர சக்தியாகிய சைதன்யம் பெருகுகிறது, காரியங்களில் ஏற்படும் தடங்கல்கள் தானாகவே விலகுகின்றன. சைதன்ய சக்தியால் மட்டுமே காரியங்கள் நடப்பதால் ‘நான் இந்த காரியத்தை செய்தேன்’ எனக் கூறும்போது நம்மிடமுள்ள சைதன்ய சக்தி குறைகிறது. அதனால் ‘சைதன்ய சக்தியால் எல்லாக் காரியங்களும் நடக்கின்றன’ என்ற உணர்வை எப்பொழுதும் வைத்திருப்பது அவசியம் ஆகும்.

நம்மிடமுள்ள சைதன்ய சக்தியை விழிப்படைய செய்வதற்கு ஒவ்வொரு காரியத்தையும் ஈச்வரன் எப்படி எதிர்பார்க்கிறானோ அப்படி ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவம் இல்லாமல் இறை குணங்களுடன் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் விளம்பரம் செய்யும்போது யாராவது ஒருவரின் பெயரை உபயோகித்து விளம்பரம் செய்கின்றீர்கள். அதற்கு பதிலாக சைதன்யத்திற்கு முக்கியத்துவம் அளித்து வாக்கியத்தை அமைப்பது அவசியம். எப்படி ‘சைதன்ய சக்தியால் ‘விலாஸ்’ என்ற ஜீவன் மூலமாக இந்த குறிப்பிட மகத்துவம் நிறைந்த காரியம் நிறைவேறிற்று’ என்ற இந்த வாக்கியத்தில் சைதன்யத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டு விலாஸ் என்ற பெயருக்கு அடுத்த கீழ் ஸ்தானமே கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் ‘விலாஸ்’ என்ற ஸகுண ரூப பெயருடன் அஹங்காரம் ஒட்டிக் கொள்ளாமல் அஹங்காரம் அழிந்து சைதன்யம் நிறைகிறது. இதன் நேர்மறை பரிணாமம் ஜீவன் மீது ஏற்பட்டு ஜீவனின் முன்னேற்றம் நடக்கிறது. இது போன்று சைதன்யத்திற்கு முதலிடம் தந்து ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது அது வெற்றியடைகிறது. அதுமட்டுமல்ல, நம்மிடமுள்ள ஆளுமை குறைகளும் அகம்பாவமும் கூட நஷ்டமடைகிறது. அதன் மூலம் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட்டு அதன் பரிணாமம் சமூகம் மற்றும் தேசத்தின் மீது ஏற்படுகிறது. இவ்வாறு ஒரு தேசம் பலம் பொருந்தியதாக ஆகிறது.’

(பராத்பர குரு) பரசுராம் பாண்டே (மகாராஜ்)

Leave a Comment