பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் பிறப்பு மற்றும் அதன் ஆன்மீக சிறப்புகள்

 

1. ஆத்மாவின் மொழி

‘ஆத்மாவானது ஒளி மொழி மற்றும் ஒலி மொழி மூலமாக உலகத்துடனும் பாரமாத்மாவுடனும் தொடர்பு கொள்ள முயல்கிறது. ஆத்மாவிடமிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்களால் ஒரு ஜீவனுக்கு பல்வேறு தெய்வங்களின் திவ்ய தரிசனம் கிடைக்கிறது. ஆத்மாவிடமிருந்து வெளிப்படும் நாத அதிர்வலைகளால் ஒரு ஜீவனுக்கு பல்வேறு வகை ஸாத்வீக நாதங்களை கேட்க முடிகிறது.

 

2. பஞ்சமஹாபூதங்களின் சேர்க்கையால் நாதம் உண்டாகிறது

ஆத்மா தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மனதை ஊக்குவிக்கிறது. மனதின் சக்தி உடலில் சூட்சும அக்னியை மூளச் செய்கிறது. உடலில் மூண்ட சூட்சும அக்னி பிரம்மக்ரந்தியில் வாசம் செய்யும் வாயுவை ஸ்பர்சிக்கிறது. பிருத்வி தத்துவமாக உள்ள மூலாதாரத்தில் ஸ்திரமாக உள்ள சூட்சும வாயு மேல் நோக்கி பயணித்து படிப்படியாக குண்டலினி மார்க்கத்தில் ஸ்வாதிஷ்டான், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி, ஆக்ஞா மற்றும் ஸஹஸ்ரார சக்கரம் வரை செல்கிறது, பின்பு வாய் வழியாக வெளிப்படுகிறது. ஆத்மாவின் அதிர்வலைகள் வாய் வழியாக நாதமாக வெளிப்படுகிறது. நாத அதிர்வலைகளின் தீண்டுதலால் மனோமய கோசத்தில் ஆப தத்துவ அதிர்வலைகள் ஏற்பட்டு நர்த்தனமாடுகின்றன.

இவ்வாறு மனதில் அலை அலையாக உண்டாகும் பல்வேறு அதிர்வுகளை நாம் உணர்வு அல்லது ஆன்மீக உணர்வு என்கிறோம். இவ்வாறு பஞ்சமஹாபூதங்களின் சேர்க்கையால் நாதம் உண்டாகிறது. பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தில் ஸப்த ஸ்வரங்களின் மூலமாக ஆத்மாவின் தெய்வீக ஒளி மற்றும் திவ்ய நாதம் ஸகுணத்தில் ஆவிர்பவித்து வெளிப்படுகின்றது.

 

3. பாரதீய சாஸ்த்ரீய சங்கீதம்

அ. விளக்கம்

மனம் ஸாத்வீக நிலையில் இருக்கும்போது வாயிலிருந்து அல்லது வாத்தியத்திலிருந்து வெளிப்படும் நாதம் ஸாத்வீகமானதாக உள்ளது. இத்தகைய ஸாத்வீக நாதத்தை ‘பாரதீய சாஸ்த்ரீய சங்கீதம்’ என்கிறோம்.

ஆ. சிறப்புகள்

1. சங்கீதம் திவ்யத்துவம் நிரம்பிய தெய்வீக கலையானதால் சங்கீத உபாசனை அல்லது நாத உபாசனை என்பது இறைவனிடம் செய்யும் பிரார்த்தனையாகும்.

2. சங்கீதம் என்பது ஆத்மாவின் ஓசையைக் கேட்பது மற்றும் இறைவனுடன் தொடர்பு கொண்டு அவனுடன் ஒன்றிணைவது ஆகும்.

3. பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் மூலம் திவ்ய சக்தி, ஆன்மீக உணர்வு, சைதன்யம், ஆனந்தம் மற்றும் சாந்தி ஆகிய அனுபூதிகள் ஒரு ஜீவனுக்கு கிடைக்கின்றன.

 

4. சங்கீதத்தில் ஸப்த ஸ்வரங்களின் நிர்மாணம்

அ. பஞ்சமுக சிவன் தந்தருளிய ஞான உபதேசமான வேதம் மற்றும் அதன் உச்சாரணத்தின் ஏற்ற இறக்கத்தால் பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் மூலாதாரமான ஸப்த ஸ்வரங்கள் நிர்மாணமாயின

புராண கதையின்படி பஞ்சமுக சிவனின் பஞ்சானன ரூபத்தின் மூலம் ஸப்த ஸ்வரங்களின் நிர்மாணம் ஆனது. பஞ்சமுக சிவன் எந்த ஆன்மீக ஞானத்தை உபதேசித்தாரோ அதிலிருந்து வேதம்
வெளிப்பட்டது; சிவனின் உச்சாரணத்திலிருந்து எழும்பிய நாதத்தின் ஏற்ற-இறக்கத்தால் ஸப்த ஸ்வரங்கள் உண்டாயின. இந்த ஸப்த ஸ்வரங்கள்தான் பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் மூலாதாரமாயின.

(இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் ஞானத்தின் மூலம் கிடைத்தவை. கால ஓட்டத்தில் இந்த புராண கதை மறைந்து போயுள்ளது.’ – கு. மதுரா போஸ்லே)

ஆ. ஸப்த ஸ்வரங்கள் நிர்மாணமாகும் செயல்முறை

அநாஹத நாதத்தால் ஸ்ருதி எனப்படும் வேதங்கள் வெளிப்பட்டன. அதன் பிறகு ஸாமவேதம் வெளிப்பட்டது, அதிலிருந்து ஸப்த ஸ்வரங்கள் உண்டாயின. ஸப்த ஸ்வரங்களிலிருந்து பாரதீய சாஸ்த்ரீய சங்கீதம் உருவாயிற்று. சிவன் உச்சரித்த சப்தங்களிலிருந்து பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் மூல தத்துவமான ஸப்த ஸ்வரங்கள் நிர்மாணமாயிற்று. ஸப்த ஸ்வரங்களின் பிறப்பிடம் நடராஜரான சிவசங்கரன் ஆகும்.

 

5.சங்கீதத்தின் பல்வேறு ராகங்கள்

அ. சங்கீதத்தில் ராகங்களின் நிர்மாணம்

5 அ 1. ராகம்

சிறப்பு ஸ்வரக் கூட்டங்களை நிர்மாணிக்கும்போது அதற்கு வர்ணத்துவமும் கிடைக்கிறது. இவ்வாறான த்வனி கோர்வையை ‘ராகம்’ என்கின்றனர். ஸ்வரங்களின் மூலம் சிறப்பான சூட்சும சக்தி நிர்மாணமாகி அதிலிருந்து சூட்சும வர்ணமும் வெளிப்படுகிறது. இதையே ‘ஸ்வரத்திலிருந்து வர்ண நிர்மாணம்’ என்கின்றனர்.

5 அ 2. ராகங்களிலுள்ள ஸ்வரங்களை உச்சரிக்கும் விதத்தால் ராகங்களில் பல்வேறு வகைகள் நிர்மாணமாகின்றன

ஸப்த ஸ்வரங்களின் உச்சாரணம் சிறப்பு முறைகளில், உதாரணத்திற்கு தீவிர, மத்யம மற்றும் நளினமாக கையாள்வதன் மூலம் சிறப்பு ராகங்கள் உருவாகின்றன.

5 அ 3. ராகங்களில் ஸ்வரங்களின் எண்ணிக்கை

சில ராகங்களிலுள்ள ஸ்வரங்களின் எண்ணிக்கை 7 அல்லது அதற்கு கீழே உள்ளது. ஸ்வரங்களின் எண்ணிக்கையை கூட்டி அல்லது குறைப்பதன் மூலம் பல்வேறு ராகங்கள் உருவாகின்றன; உதா. மால்கௌன்ஸ் மற்றும் துர்கா ராகத்தில் 5 ஸ்வரங்கள் உள்ளன, பைரவ், மார்வா, சோஹ்னி,புரியா லலித், அடாணா போன்ற ராகங்களில் 6 ஸ்வரங்கள் உள்ளன மற்றும் யமன் ராகத்தில் 7 ஸ்வரங்கள் உள்ளன.

5 அ 4. பூரண ராகம் மற்றும் ஸ்வல்ப ராகம்

எந்த ராகங்களில் 7 ஸ்வரங்களும் உள்ளனவோ அவற்றை ‘பூரண ராகம்’ என்கின்றனர். சில ராகங்களில் 5 அல்லது அதற்கும் கீழே ஸ்வரங்கள் உள்ளன. இவற்றை ‘ஸ்வல்ப ராகம்’ எனக் கூறுகின்றனர். ஆன்மீக மொழியில் கொடுக்கப்பட்ட பெயர்கள் இவை.

ஆ. சங்கீதத்தில் ராகங்களின் சிறப்புக்கள்

1. ஒவ்வொரு ராகத்திற்கென்று ஒரு தனிப்பட்ட தன்மை உள்ளது.

2. ஒவ்வொரு ராகத்தின் மூலம் பல்வேறு தரப்பட்ட உணர்வுகள் மற்றும் ஆன்மீக உணர்வுகள் வெளிப்படுகின்றன.

3. சங்கீதத்தில் பல்வேறு ராகங்களுக்கு பரஸ்பரம் நெருங்கிய சம்பந்தம் உண்டு.

4. சங்கீதத்தில் ராகங்கள் இயற்கையின் பஞ்ச தத்துவங்கள், நாள் சுழற்சி மற்றும் கால சுழற்சியுடன் சம்பந்தப்பட்டவை.

5. ராகங்கள் மனித உணர்வுகள் மற்றும் நிலைகளுடனும் சம்பந்தப்பட்டவை.

6. ஒவ்வொரு ராகத்தினின்றும் ஒருவித விசேஷ சக்தி வெளிப்படுகிறது.

7. ஒவ்வொரு ராகத்தின் சூட்சும வர்ணமும் வேறு வேறானவை.

8. ராகங்கள் ஆன்மீக சாஸ்திரத்துடன் சம்பந்தம் கொண்டவை. வெவ்வேறு ராகங்கள் வெவ்வேறு தெய்வங்களுடன் சம்பந்தப்பட்டவை.

9. சங்கீதத்திலுள்ள நாதம் மற்றும் ஸப்த ஸ்வரங்கள் உடலிலுள்ள பஞ்சபிராணனுடன் சம்பந்தம் கொண்டவை.

10. பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தில் ராகங்கள் ஸாத்வீகமாக இருப்பதால் அவற்றில் தெய்வத்தன்மை நிறைந்துள்ளது.

இ. சங்கீதத்தில் ராகங்களின் வகைகள்

எல்லா ராகங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை. இந்த சம்பந்தம், மனித உருக்கொடுத்து வகைப்படுத்தப் பட்டுள்ளது ‘புருஷ ராகம்’, ஸ்த்ரீ ராகம் மற்றும் புத்திர ராகம்’ என மூன்று முக்கிய பிரிவுகள் ஆக்கப்பட்டுள்ளன. ராகத்தை தேவதையாக பாவித்து அதன் குடும்பமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சங்கீதத்தில் முக்கியமாக 6 ராகங்கள் புருஷ ராகங்களாகவும், ராகிண்யாக்கள் அவற்றின் பத்னி ராகங்களாகவும் உபராகங்கள் அவற்றின் புத்திர ராகங்களாகவும் கருதப்படுகின்றன. இவ்வகையில் பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தில் மொத்தம் 84 ராக, ராகிண்யாக்கள் உள்ளன.

5 இ 1. புருஷ ராகங்கள் (முக்கிய ராகங்கள்)

பைரவ், மாலகௌன்ஸ், ஹிந்தோளம், தீபக், ஸ்ரீராகம் மற்றும் மேகராகம் ஆகிய ஆறும் முக்கிய புருஷ ராகங்களாகும்.

5 இ 2. ஸ்த்ரீ ராகம் (ராகிண்யா)

ஒவ்வொரு ராகத்திற்கும் 5 பத்தினி என்ற விகிதத்தில் 30 ராகிண்யாக்கள் உள்ளன.

5 இ 3. புத்திர ராகம் (உபராகம்)

ஒவ்வொரு ராகத்திற்கும் 8 புத்திரர்கள் என்ற விகிதத்தில் 48 உபராகங்கள் உள்ளன.’

– குமாரி மதுரா போஸ்லே (சூட்சுமத்தில் கிடைத்துள்ள ஞானம்) ஸனாதன் ஆஸ்ரமம், ராம்னாதி, கோவா. (11.3.2018, இரவு 11.38)

Leave a Comment