மாயையை (‘அர்த்தம்’ மற்றும் ‘காமம்’) தர்மவழியில் செயல்படுத்துவதையே ‘புருஷார்த்தம்’ எனக் கூறுவர் !

1. மாயையில் மூழ்காமல் அதை தன்
கட்டுப்பாட்டிற்குள் வைத்து தர்மவழியில் செல்ல
அதை உபயோகப்படுத்துவதே புருஷார்த்தம் ஆகும் !

(ஸநாதன ஹிந்து தர்மம் நான்கு புருஷார்த்தங்களை மனிதர்களுக்கு அளித்துள்ளது. அவை : தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷம்) ‘எந்த மனிதன் அசத்தியத்தில் மூழ்கியிருக்கிறானோ அவன் பிரமையில் இருக்கிறான்; ஆனால் இது நமக்கு புரிபடுவதற்கு குரு மிகவும் அவசியம். குருவானவர் மாயையின் இருப்பை நன்கு நமக்கு புரிய வைக்கிறார். வெறும் மாயையில் மாட்டிக் கொண்டு செயல்படுவது பலவீனமாகும்; மாயையின் மீது லகானிட்டு அதை நம் கட்டுக்குள் வைத்து உபயோகப்படுத்துவது என்பது பலமாகும். மாயையை கட்டுக்குள் வைத்திருப்பது (மாயையில் இருந்து கொண்டு அதை உபயோகப்படுத்திக் கொள்வது) ஆனந்தத்தைத் தருகிறது. மாயையை உபயோகிப்பது என்பது அதை திருப்தி நிலையில் வைத்திருப்பது. மாயையை உபயோகிப்பதையே ‘புருஷார்த்தம்’ (புருஷ + அர்த்த என்பது ‘அர்த்தமுள்ள யோக்யமான செயலை செய்வது’) என்கின்றனர். இந்த புருஷார்த்தம், ‘அர்த்தம் மற்றும் காமத்தை’ தர்மவழியில் நடத்துவித்து மோக்ஷத்திற்கு செல்லும் வழியைக் காண்பிக்கிறது.

 

2. மாயையின் கருவிகளான அர்த்தம் மற்றும்
காமத்தை, தேசம் மற்றும் தர்ம காரியங்களுக்காக
எதிர்பார்ப்பில்லாமல் உபயோகப்படுத்துவதால் அது
பகவானுக்கு செய்யப்படும் சேவையாகி வ்யஷ்டி மற்றும்
ஸமஷ்டி ஸாதனை நடந்து மோக்ஷம் கிடைக்கிறது

(வ்யஷ்டி ஸாதனை – தனிமனித முன்னேற்றத்திற்காக செய்யப்படும் ஆன்மீக பயிற்சி; ஸமஷ்டி ஸாதனை – சமூக முன்னேற்றத்திற்காக செய்யப்படும் ஆன்மீக பயிற்சி) தர்மத்திற்காக ‘அர்த்தத்தை’ உபயோகிப்பது என்பது சத்ய வழியில் செல்வம் ஈட்டுவது மற்றும் சத்தியத்திற்காக அந்த செல்வத்தை செலவழிப்பது ஆகும். தர்மத்திற்காக ‘காமத்தை’ உபயோகிப்பது என்பது தர்மவழியில் விவாஹம் செய்து கொண்டு நல்ல பிள்ளைகளை உருவாக்குவது ஆகும். ஒவ்வொரு காரியத்தையும் தர்மம் மற்றும் ராஷ்ட்ரத்தின் காரியம் என்ற உணர்வுடன் பிரதிபலனை எதிர்பாராது செய்வதால் அது பகவானுக்கு செய்யப்படும் சேவையாக உரு மாறுகிறது. இங்கு ‘காமம் மற்றும் அர்த்தம்’ ஆகியவையும் மோக்ஷத்திற்கு கூட்டி செல்லும் பௌதிக ஸாதனங்கள் ஆகின்றன. அதனால் அவற்றைப் பயன்படுத்துவதால் ஆனந்தம் கிடைக்கிறது; ஆனால் யார் அர்த்தம் மற்றும் காமத்தில் மாட்டிக் கொள்கிறார்களோ அவர்கள் பலவீனமாகிறார்கள். அவர்களுக்கு மோக்ஷம் கிடைப்பதில்லை. அவர்கள் பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியில் மாட்டிக் கொள்கின்றனர்.

மாயையை தன் கட்டுக்குள் வைத்திருப்பவரின் வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனை நடந்து அந்த ஜீவன் மோக்ஷத்தை நோக்கி பயணப்படுகிறது. இங்கு ஜீவனின் உண்மையான புருஷார்த்தம் அவன் செய்யும் வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனையால் வெளிப்படுகிறது.

(‘தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷம் ஆகியவை நான்கு புருஷார்த்தங்கள் ஆகும். தர்மவழி நடந்து அர்த்தம் மற்றும் காமத்தை ஆசார தர்மப்படி கையாண்டு நல்ல காரியங்களை செய்வதால் மோக்ஷம் சித்திக்கிறது. இதுவே ‘உண்மையான புருஷார்த்தம்’ ஆகும். அதாவது அர்த்தம் மற்றும் காமத்தை ஸாதனையின் அங்கமாக கொண்டு ஆன்மீக பயிற்சி செய்வதால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது.’)

– (பராத்பர குரு) பரசுராம் பாண்டே, ஸநாதன் ஆஸ்ரமம், தேவத், பன்வேல். (10.10.2017)

தொகுத்தவர் : திரு சிவாஜி வட்கர்

Leave a Comment