‘மனிதப்  பிறவி ஸாதனை செய்து இறைவனை அடைவதற்காக ஏற்பட்டுள்ளது’ என்பது பற்றி பராத்பர குரு பாண்டே மஹராஜ் அவர்கள், பல்வேறு தர்ம நூல்களிலிருந்து ஸ்லோகங்களை மேற்கோள் காட்டி கூறியுள்ள விளக்கங்கள்!

‘மனிதப்  பிறவி ஸாதனை செய்து இறைவனை அடைவதற்காக ஏற்பட்டுள்ளது’ என்பது பற்றி பராத்பர குரு பாண்டே மஹராஜ் அவர்கள், பல்வேறு தர்ம நூல்களிலிருந்து ஸ்லோகங்களை மேற்கோள் காட்டி கூறியுள்ள விளக்கங்கள்!

“மனிதப் பிறவி கிடைப்பது அரிது. ‘மனிதப் பிறவி எடுப்பது இறைவனை அடைய’ என்பதை பகவான் பல்வேறு விதங்களில் கூறியுள்ளார். மனித உடல் என்பது ஒரு இயந்திரம். ‘நான் உயிருடன் இருக்கிறேன்’ என்பதை எப்போதும் நினைவில் இருத்தி வாழ்க்கை வாழ வேண்டும். பகவான் மனிதப் பிறவியை, இறைவனை அடைவதற்காகவே தந்துள்ளார். அதற்காக அவர் இந்த படைப்பை உருவாக்கியுள்ளார். இப்படைப்பில் உள்ள பகவானின் சைதன்யத்தை சுவைத்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள குருவின் வழிகாட்டுதலின்படி ஸாதனையை கற்றுக் கொண்டு அதன்படி கர்மாக்களை செய்ய வேண்டும்.

(மறைந்த) பராத்பர குரு பாண்டே மஹராஜ்

ஸச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே அவர்கள் உருவாக்கியுள்ள ‘குருக்ருபாயோக’ப்படியான ஸாதனையின் மூலம் இதையே வலியுறுத்துகிறார். இவ்வழியின் மூலம் செய்யப்படும் ஸாதனையால் விரைவாக இறைவனை அடைய முடியும். இதன் மூலம் இதுவரை (வருடம் 2025) 132 ஸாதகர்கள் மகான் நிலையை அடைந்துள்ளனர், அதோடு 1049-க்கும் மேற்பட்ட ஸாதகர்கள் மகான் நிலையை நோக்கி பயணிக்கின்றனர்.

இது சம்பந்தமாக ஸ்ரீமத்பாகவதம், வேதம், ஸ்ரீமத்பகவத்கீதை, உபநிஷத்துக்கள் போன்ற தர்ம நூல்களில் நிறைய ஸ்லோகங்கள் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

1.    மனித சரீரம் பல பிறவிகளுக்குப் பிறகு கிடைத்துள்ளதால் மனிதன் உயிர் வாழும் வரைதான் இறைவனை அடையவதற்கான வாய்ப்பு உள்ளது

லப்த்வா சுதுர்லபமிதம் பஹுஸம்பவாந்தே மானுஷ்யமர்த்தமநித்யமபீஹ தீர: |
தூர்ணம் யதேத ந பதேதனும்ருத்யு யாவந்நி:ச்ரேயஸாய விஷய: கலு ஸர்வத: ஸ்யாத் ||

–    ஸ்ரீமத்பாகவதம், ஸ்கந்தம் 11, அத்தியாயம் 9, ஸ்லோகம் 29

உள்ளர்த்தம் : மிகவும் கிடைப்பதற்கரியதான இந்த மனிதப் பிறவி பல பிறவிகளுக்குப் பிறகு கிடைத்துள்ளது. இவ்வுடலில் உயிருள்ள வரை பரம புருஷார்த்தங்களை நாம் அடைய முடியும்; அந்த அளவு மகத்துவம் வாய்ந்தது. அடிப்படையில் ‘இவ்வுடல் அழியக் கூடியது’ என்பதை உணர்ந்து மரணம் இவ்வுடலைக் கொண்டு போகுமுன், நம் நிரந்தர நலனுக்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். ஏனென்றால் விஷயசுகம் என்பது எல்லா வகை பிறவிகளிலும் கிடைக்கக் கூடியது.

2.     மனிதப் பிறவியில் பரமாத்ம தத்துவத்திடம் செல்வதற்கான ஆர்வத்தைக் கொள்ள வேண்டும்!

ஏதாவதேவ ஜிஞ்ஞாஸ்யம் தத்வஜிஞ்ஞாஸுநாத்மன: |
அன்வயவ்யதிரேகாப்யாம் யத் ஸ்யாத் ஸர்வத்ர ஸர்வதா ||

–    ஸ்ரீமத்பாகவதம், ஸ்கந்தம் 2, அத்தியாயம் 9, ஸ்லோகம் 35

அர்த்தம் : எது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளதோ அதுவே ஆத்மதத்துவம் ஆகும்.  இத்தத்துவத்தை ஆன்மீகத்தில் ஆர்வமுள்ளவர்கள், அதன் காரிய-காரண பாவத்தின் சத்தியத்தை  தர்க்கத்தின் மூலம் அறிந்து உணர வேண்டும்.

‘மனிதப் பிறவியில் அந்த பரமாத்ம தத்துவத்தை உணர்வதற்கான ஒரே ஆர்வத்தைக் கொள்ள வேண்டும்’ – தகவல் – ‘வாராந்திர ப்ராஜக்த’, தர்மயக்ஞ, மார்ச் 2018, ஸ்வானுபவம்)

3.     பரமேச்வரனை உணர வேண்டும், அவரை அடைய வேண்டும் என்பதே வாழ்க்கையின் லட்சியம் ஆதலால் குருமுகமாக அறிந்து கொண்டு அதன்படி ஸாதனை செய்தால் ஒரு ஜீவன், ‘ஈச்வரபிராப்தி’ என்ற லட்சியத்தை அடைய முடியும்

உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரான்னிபோதத |
க்ஷுரஸ்ய தாரா நிஷிதா துரத்யயா துர்கம் பதஸ்தத்கவயோ வதந்தி || – கடோபநிஷத், அத்தியாயம் 1, வல்லீ 3, வாக்கியம் 14

அர்த்தம் : எழுந்திரு, விழித்துக் கொள், உன்னத புருஷர்களின் (குருவின்) ஸத்சங்கத்தால் பரமேச்வர ஸ்வரூபத்தை அறிந்து கொள்; ஏனென்றால் புத்திமான்களான புருஷர்கள், ‘பரமேச்வரனை அறிந்து கொள்ளும்’ இவ்வழி கத்தி மேல் நடப்பது போல் கடினமானது.

விளக்கம் : இந்த ஸ்லோகத்தின் மூலம் பரமேச்வரனை அறிந்து கொள்வதும் அவனை அடைவதுமே நம் வாழ்வின் லட்சியம் என்பது தெரிகிறது. அதற்கு குருமுகமாக வழிகாட்டுதல் பெற்று ஸாதனை செய்தால் நம் லட்சியமான ‘இறைவனை அடைதல்’ என்பது கைகூடும்.

4.      யமராஜன் நசிகேதஸிடம் ‘ஸச்சிதானந்த பரமாத்மாவை அடைவதே’ மனிதப் பிறவியின் லட்சியம் எனக் கூறுதல்

ஏதச்சுத்வா ஸம்பரிக்ருஹ்ய மர்த்ய: ப்ரவ்ருஹ்யா தர்மயமணுமேதமாப்ய |
ஸ மோததே மோதநீயம் ஹி லப்த்வா விவ்ருதம் ஸத்ம நசிகேதஸம் மன்யே || – கடோபநிஷத், அத்தியாயம் 1, வல்லீ 2, வாக்ய 13

அர்த்தம் : இறக்கப் போகும் மனிதன் இந்த தர்ம தத்துவத்தைக் கேட்டு, நல்லவிதமாக புரிந்து கொண்டு, ஆழ்ந்து சிந்தனை செய்து இந்த சூட்சும ஆத்மதத்துவத்தை எப்போது அறிகிறானோ அப்போது ஆனந்த ஸ்வரூபமான பரமாத்மாவை அடைந்து அவனும் ஆனந்தத்தில் மூழ்கியவனாக ஆகிறான். அதனால் ஹே நசிகேதா, உனக்காக இந்த பரமபத வாசல் திறந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

விளக்கம் : நசிகேதஸ் (உலகின் முதல் ஜிக்ஞாசு, ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டவன்) எப்போது யமராஜனிடம் செல்கிறானோ அப்போது அவரும் நசிகேதஸிடம் இதைக் கூறுகிறார், ‘ஸச்சிதானந்தகன (குறிப்பு) பரமாத்மாவை அடைவதே மனிதப் பிறவியின் நோக்கம்; ஏனென்றால் பரமேஸ்வரனிடத்தில் ஆனந்தம் உள்ளது; அதனால்தான் மனிதனுக்கு ‘ஆனந்தமாக இருக்க வேண்டும்’ எனத் தோன்றுகிறது; இருந்தாலும் மாயையில் மூழ்கியிருப்பதால் மனிதனுக்கு எவ்வாறு ஆனந்தத்தை அடைவது என்பது தெரிவதில்லை. அதற்கு குரு அவசியம். அவரே சரியான வழியை நமக்குக் காண்பிக்கிறார்.

குறிப்பு : ஸச்சிதானந்தகன : 1. ‘ஸத்’ என்றால் ‘ஸத்யம்’. ‘சித்’ என்றால் ‘சைதன்யம்’ ‘கன’ என்றால் ‘நிறைந்திருத்தல்’. ‘ஸச்சிதானந்த’ என்றால் யார் சத்யம், சைதன்யம் மற்றும் ஆனந்தத்தால் நிறைந்திருக்கிராரோ அத்தகையவர்; அவரே ‘ஈச்வரன்’.

2. ஸம்ஸ்க்ருத மொழியில் ‘சித்’ என்பதற்கு பிறிதொரு அர்த்தமும் உள்ளது. அதுவே ‘ஞானம்’. ‘கன’ சப்தத்திற்கும் இன்னொரு அர்த்தம் உள்ளது. அதுவே ‘மேகம்’. இந்த அர்த்தத்தில் ‘ஸச்சிதானந்தகன’ என்றால் ஸத்யம், ஞானம் மற்றும் ஆனந்தம் நிறைந்த மேகமாக இருப்பவர். இந்த அர்த்தத்தை எடுத்துக் கொண்டால் இந்த வார்த்தை யாராவது ஒரு ஸத்புருஷரை குறிப்பதாகவும் இருக்கலாம்.

5. ஸாதனை செய்து பரமாத்மாவுடன் லயமாவதற்காகத் தான் மனிதப் பிறவி ஏற்பட்டுள்ளது

மனஸஸ்பத இமம் நோ திவி தேவேஷு யக்ஞம் |
ஸ்வாஹா திவி ஸ்வாஹா ப்ருதிவ்யாம் ஸ்வாஹாந்தரிக்ஷே ஸ்வாஹா வாதே தாம் ஸ்வாஹா || – அதர்வ வேதம், காண்டம் 7, சூக்தம் 17, ருசா 8

அர்த்தம் : ஹே ஆழ்ந்து சிந்திக்கும் ஆத்மா மற்றும் சித்தத்தின் ஸ்வாமியான பரமாத்மாவே, நான் இந்த்ரியகணங்களால் வியாபித்திருக்கும் யக்ஞஸ்வரூபமான ஆத்மாவை மோக்ஷப் பாதையில் அர்ப்பணித்து விட்டேன். இது பரம தேஜோமயமான பிரம்மத்திடம் நல்ல முறையில் ஆஹுதியாகி அதிலேயே லயமாகட்டும், அந்த சர்வத்திற்கும் ஆதாரமான பிரம்மத்திடம் ஆத்மா தானே லயமாகட்டும், எல்லோருள்ளும் வீற்றிருக்கும், எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் பரபிரம்மத்திடம் அது லயமாகி எல்லாவற்றின் பிராணனாக உள்ள ஈச்வரனிடம் அந்த ஆத்மா லயமாகட்டும்.

மேற்கூறிய விளக்கத்திலிருந்து ‘மனிதப் பிறவி ஸாதனை செய்து இறைவனை அடைவதற்காக ஏற்பட்டுள்ளது, அதோடு இறைவனிடமிருந்து வந்துள்ள இந்த மனித ஜீவன் ஸாதனை செய்து அவனிடமே லயமாக ஏற்பட்டுள்ளது’ என்பது தெளிவாகத் தெரிகிறது.

6. கடந்த பல பிறவிகளின் ஸன்ஸ்கார பலத்தில் முயற்சியுடன் ஆன்மீக பயிற்சி செய்யும் யோகியானவன் இப்பிறவியில் பூர்ண சித்தி அடைந்து எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு உடனே பரமகதி கிடைக்கப் பெறுகிறான்

ப்ரயத்னாத்யதமானஸ்து யோகி ஸம்சுத்தகில்பிஷ: |
அநேகஜன்மஸம்சித்தஸ்ததோ யாதி பராம் கதிம் || – ஸ்ரீமத்பகவத்கீதை,  அத்தியாயம் 6, ஸ்லோகம் 45

அர்த்தம் : முயற்சியுடன் ஆன்மீக பயிற்சி செய்யும் யோகி, கடந்த பல பிறவிகளின் ஸன்ஸ்கார பலத்தில் இப்பிறவியில் பூர்ண சித்தி அடைந்து எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு உடனே பரமகதி கிடைக்கப் பெறுகிறான்.

7. பரமபதத்தை அடைவதே ஒரு ஜீவனின் லட்சியம்!

கர்மஜம் புத்தியுக்தா ஹி ஃபலம் த்யக்த்வா மனீஷிண: |
ஜன்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யனாமயம் || – ஸ்ரீமத்பகவத்கீதை, அத்தியாயம் 2, ஸ்லோகம் 51

அர்த்தம் : சமபுத்தியுடைய ஞானிகள் கர்மபலனை தியாகம் செய்து பிறவி பந்தத்திலிருந்து விடுபட்டு நிர்விகார பரமபதத்தை அடைகின்றனர்.

இதிலிருந்து பரமபதத்தை அடைவதே ஜீவனின் லட்சியம் என்பது தெரிகிறது.

8. ஆத்மாவை பகவானுடன் இணைக்கும்போது அது பகவானுக்கே அர்ப்பணமாகி பகவானையே அடைகிறது.

மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு |
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மானம் மத்பராயன: || – ஸ்ரீமத்பகவத்கீதை, அத்தியாயம் 9, ஸ்லோகம் 34

அர்த்தம் : ஹே அர்ஜுனா! நீ என் பக்தனாக ஆகு. உன் மனதில் என்னையே மையமாகக் கொள். என்னையே தியானம் செய், எனக்கு நமஸ்காரம் செய். இது போன்று உன்னை என்னிடம் சமர்ப்பணம் செய்து என்னையே அடைக்கலமாகக் கொண்டால் எவ்வித சந்தேகமுமின்றி என்னையே அடைவாய்.

8 அ. விளக்கம் மற்றும் பகுப்பாய்வு

1.     மனமே, ஸ்தூல சரீரத்தையும் வெளிப்படாத அதி சூட்சுமமான ஆத்மாவையும் இணைப்பதால் அது சூட்சுமமாக உள்ளது

இங்கு பகவான் போர்க்களத்தில் நின்று கொண்டு உபதேசிக்கிறான், ‘என்னை அடைவதற்காக ஸாதனை செய்’. அதற்காக பகவான், சரீர ரக்ஷணத்திற்கு தேவையான வெளி அங்கங்களான பஞ்சகர்மேந்த்ரியங்கள் மற்றும் பஞ்ச ஞானேந்த்ரியங்கள் ஆகியவற்றை அளித்துள்ளார். சரீர ரக்ஷணத்திற்கு எவ்வளவு ஆற்றல் தேவையோ அந்த அளவே இந்த இந்த்ரியங்களுக்குத் தந்துள்ளார். அதாவது அவற்றின் காரியம் ஒரு கட்டுப்பாட்டிற்குட்பட்டது. உள் அங்கங்களான மனம், புத்தி, சித்தம் மற்றும் அஹங்காரம் என்ற 4 இந்த்ரியங்களை உள்முகக் காரியங்கள் செய்வதற்காகத் தந்துள்ளார். மனம் என்பது இவ்விரண்டையும் இணைப்பது. மனதின் ஆற்றல் எல்லாவற்றைக் காட்டிலும் பெரிது. மனமே ஸ்தூல சரீரம் மற்றும் வெளிப்படாத ஆத்மா ஆகிய இரண்டையும் இணைப்பதால் அது சூட்சுமமாக உள்ளது; காரணம் ஆத்மா அதி சூட்சுமமானது.

2.     ஆத்மாவுடன் ஆன்மீக உணர்வுபூர்வமாக தொடர்பில் இருந்து கொண்டு கர்மாக்களை செய்யும்போது, ‘இறைவனை அடைய வேண்டும்’ என்ற மனிதனின் லட்சியம் சாத்தியமாகி ஆனந்தம் மேலிடுகிறது

மனம், ஆத்மாவையும் சரீரத்தையும் இணைக்கிறது; மனம் + காது = கேட்டல், மனம் + கண் = பார்த்தல் என்பது போன்றது இது. யாராவது ஒருவரின் மனம் ஆத்மாவுடன் இணையவில்லை என்றால் உலக சுகங்களின் பக்கம் ஈர்க்கப்பட்டு வெளிப்புற இந்த்ரியங்களின் மூலம் காரியங்களை செய்து கொண்டு மாயையில் அவர் மாட்டிக் கொள்கிறார்; ஆத்மஸ்வரூபத்திலிருந்து வெகு தூரம் விலகி விடுகிறார். அதனால் மனிதப் பிறவியின் லட்சியமான ‘இறைவனை அடைதல்’ என்பது கைகூடுவதில்லை. அவருக்கு வாழ்வில் ஆனந்தம் கிடைக்காது துக்கத்தில் ஆழ்கிறார். ஆனால் எப்போது அவர் ஆத்மாவுடன் ஆன்மீக உணர்வுபூர்வமாக தொடர்பில் இருந்து கொண்டு கர்மாக்களை செய்யும்போது ‘ஈச்வரபிராப்தி’ என்ற லட்சியம் அவருக்கு சாத்தியப்பட்டு ஆனந்தம் கிடைக்கிறது. இதிலிருந்து ஏன் ஒவ்வொருவருக்கும் ‘ஆனந்தம் கிடைக்க வேண்டும்’ எனத் தோன்றுகிறது என்பது தெளிவாகிறது.

3.     மனமே, மனிதன் பந்தப்படுவதற்கும் அல்லது மோக்ஷமடைவதற்கும் காரணமாக உள்ளது

பகவான் கூறுகிறார், ‘அதனால் ஹே மனிதா, உன் மனதை என்னுடன் (ஆத்மஸ்வரூபத்துடன்) தொடர்பில் வை. நானே உன் சரீர யந்திரங்களை இயக்குபவன் ஆதலால், நானே கர்த்தா, மாதா, பிதா, குரு ஆகிய அனைத்துமாக இருப்பவன்; நீ என் பக்தன்; என்னைப் பூஜை செய்.’ அதாவது ‘எந்த ஒரு காரியத்தை செய்யும்போதும் அதில் ஈஸ்வரன் இருக்கிறான்’ என்று உணர்ந்து ஆன்மீக உணர்வுபூர்வமாக பூஜையைப் போல் பூஜ்ய (சுத்த, பவித்ர) உணர்வுடன் கர்மாக்களை செய்! என்னை சரணடை, அதாவது அஹத்தைத் துறந்து ‘இதம் ந மம’ என்பது போல் எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்துவிடு! அவ்வாறு செய்தால் எப்போதும் ஆத்மசம்பந்தம் ஏற்பட்டு உன்னைச் சுற்றியுள்ள ரஜ-தம ஆவரணம் குறையும், அதாவது ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவம் குறைந்து சித்தசுத்தி ஏற்படும். அதனால் ஆத்மஜோதி வெளிப்பட்டு உனக்கு ஆனந்தம் ஏற்படும். அதோடு பரமேஸ்வரனை அடைவாய்.’ அதனால்தான் ‘மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்தமோக்ஷயோ: |’ என கூறப்பட்டுள்ளது. அதாவது மனமே, மனிதன் பந்தப்படுவதற்கும் அல்லது மோக்ஷமடைவதற்கும் காரணமாக உள்ளது

மனிதப்பிறவி இறைவனை அடைவதற்காக ஏற்பட்டுள்ளது. அந்த கண்ணோட்டத்தில் சிஷ்யன் குருவிடம் பயின்றிருந்தால் இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது. ஸாதனையால் ஆத்மபலம் அதிகமாகி மனிதப் பிறவியின் லட்சியமான ‘ஈச்வரபிராப்தி’ என்பது சாத்தியமாவதால் ஒருவருக்கு நலன் ஏற்படுகிறது. சூழலில் உள்ள ரஜ-தம ஆவரணமும் இருக்காது, மனித மனமும் வக்கிரமாக மாறாது.

9. ஸச்சிதானந்தகன பிரம்மத்தில் ஐக்கியமாகும் தகுதி பெற்ற புருஷர்களின் லட்சணங்கள்

புத்யா விசுத்யா யுக்தோ த்ருத்யாத்மானம் நியம்ய ச |
சப்தாதீன்விஷயான்ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச ||

விவிக்தசேவி லக்வாஷீ யதவாக்காயமானஸ: |
த்யானயோகபரோ நித்யம் வைராக்கியம் ஸமுபாச்ரித” ||

அஹங்காரம் பலம் தர்பம் காமம் குரோதம் பரிக்ரஹம் |
விமுச்ய நிர்மம: சாந்தோ பிரஹ்மபூயாய கல்பதே || – ஸ்ரீமத்பகவத்கீதை, அத்தியாயம் 18, ஸ்லோகம் 51 – 53

அர்த்தம் :  நல்ல சுத்த புத்தி நிரம்பிய, லேசான ஸாத்வீக மற்றும் வேளைக்குரிய உணவை உட்கொள்ளும், சப்த விஷயங்களைத் தியாகம் செய்து ஏகாந்தமாக தூய்மையான இடத்தில் வசிக்கும், ஸாத்வீக தாரணாசக்தியால் அந்தக்கரணங்கள் மற்றும் இந்த்ரியங்களை கட்டுக்குள் வைத்து, மனோ, வாக்கு காயத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஆசை மற்றும் கோபத்தை அடியோடு அறுத்து நல்ல முறையில் உறுதியான வைராக்கியத்தை கைக்கொண்டு அஹங்காரம், வலிமை, ஆணவம், ஆசை, கோபம், பொருட்களை சேர்த்து வைத்துக் கொள்ளும் இயல்பு ஆகிய அனைத்தையும் தியாகம் செய்து எப்போதும் தியானயோகத்தில் மூழ்கி இருந்து, பற்றில்லாத சாந்தி நிறைந்த அத்தகைய புருஷரே ‘ஸச்சிதானந்தகன பிரம்ம’த்தில் ஐக்கியமாகும் தகுதி பெற்றவர் ஆவார்.

9 அ. விளக்கம் மற்றும் பகுப்பாய்வு

1.     ஸாதனை செய்வதால் குருவருளால் புத்தியானது ‘ஞானமாக’ மாறி ‘மேதா’ அதாவது ‘ஈச்வரேச்சா’ சித்தமாகி மனிதன் ‘ஸச்சிதானந்தகன பிரம்ம’ நிலையை நோக்கி பயணித்தல்

எப்போது மனம் விகல்பமில்லாமல் காரியங்களை செய்கிறதோ அப்போது புத்தி தூய்மையாகி ‘விவேகம்’ ஏற்படுகிறது. ஸாதனையால் குருவருள் கிடைத்து புத்தி, ‘பிரக்ஞா’வாகி ‘மேதா’விலாசமாக பரிணமிக்கிறது. ‘மேதா’ என்றால் ‘ஈச்வர இச்சை’ ஆகும். எப்போது மனிதன் இவ்வாறு ஈச்வர இச்சைப்படி நடக்க ஆரம்பித்து, லேசான ஸாத்வீக மற்றும் வேளைக்குரிய உணவை உட்கொண்டு, சப்த விஷயங்களைத் தியாகம் செய்து ஏகாந்தமாக தூய்மையான இடத்தில் வசிக்கிறானோ அப்போது அவன் ‘ஸச்சிதானந்தகன பிரம்ம’ நிலையை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறான். அந்நிலையையும் அடைகிறான்.

2.     மாயையிலிருந்து விடுபடுதல், அதாவது பிரம்மஸ்வரூபத்தில் லயித்தல், இதுவே ஈச்வரபிராப்தி என்பது

ஏகாந்தம் என்பது ஏக + அந்த். இங்கு 1 என்பது ‘சூன்யத்தை பிளப்பதால் கிடைப்பதே 1 அல்லது ஏகம். (ஏக்நாதி பாகவதம்) இங்கு 1 என்பதில் ‘சூன்யம்’ பிரம்மத்தையும் ‘பிளப்பது’ என்பது மாயையும் குறிக்கின்றன. மாயையே காரிய-காரண பாவத்தைக் காட்டுகிறது. இதன் மூலம் ஸாதனை செய்யும்போது ஏகாக்ரமாக (ஒருமுத்த) எப்போதும் பிரம்மத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது சூன்யத்திடன் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்யக் கூடிய காரியங்களை பகவானிடம் அர்ப்பணம் செய்வது என்பது ‘மாயையை முடிவுக்கு கொண்டு வருவது’ ஆகும். இவ்வாறு செய்தால் பிரம்மஸ்வரூபத்தில் லயமாக முடியும். இதுவே ஈச்வரபிராப்தி ஆகும். காரணம் அடிப்படையில் எல்லா படைப்புகளும் சைதன்யத்தின் மூலம் படைக்கப்பட்டதால் சைதன்யம் இல்லாமல் எதுவும் இல்லை. இதை குருவின் வழிகாட்டுதலின்படி ஸாதனை செய்யும்போதே உணர முடியும்.

இந்த எல்லா விவரங்களின் மூலம் ‘மனிதப் பிறவி, ஸாதனை செய்து இறைவனை அடைவதற்காகவே ஏற்பட்டுள்ளது’ என்பது தெளிவாகிறது.’

–    பராத்பர குரு பாண்டே மஹராஜ், ஸனாதன் ஆச்ரமம், தேவத், பன்வேல். (ஏப்ரல் 2018)

 

 

Leave a Comment