கம்யூனிசமும் அத்வைதமும்

கம்யூனிஸவாதிகளே, உலகில் எங்கும் பொது உடைமைக் கொள்கை என்ற கம்யூனிஸம் இல்லை, வெறும் அத்வைதமே உண்டு என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்!

உலகிலுள்ள உயிருள்ள உயிரில்லாத பொருட்கள் அனைத்திலும் உதாரணம். மண், செடிகொடிகள், பிராணிகள், மனிதன் என பல கோடிக்கணக்கான வகைகள் உள்ளன. இவ்வாறிருக்க பொது உடைமைக் கொள்கை என்பதே நகைப்புக்குரியது. கம்யூனிஸம் என்பது வெறும் அத்வைத நிலையில் மட்டுமே உண்டு; ஏனென்றால் அங்கு வெறும் ப்ரம்மம் மட்டுமே உள்ளது. இவ்வாறிருக்க கம்யுனிஸம் என்ற வார்த்தையை உச்சரிப்பது ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்பதன் மற்றும் மற்றவரிடம் இவ்வார்த்தையை கூறுவது, ‘அஞ்ஞானத்தை பரப்புவது’ என்பதற்கும் ஒப்பாகும்.

(ஸனாதனின் மராட்டி நூல் ‘ஸுகம் ஸாத்வீக ஜீவன்’)

 

இறைவனும் எண்கணிதமும் (அல்ஜீப்ரா)

அல்ஜீப்ராவில் உதாரணத்திற்கு விடையைக் கண்டுபிடிக்க ஒரு தெரியாத எண்ணை எக்ஸ் என வைத்துக் கொள்வர். உதாரணத்தின் விடை தெரியும் வரை அந்த எக்ஸ் எண்ணின் உண்மை மதிப்பு என்ன என்பது நமக்குத் தெரியாது; ஆனால் அதை எடுத்துக் கொள்ளாமல் விடையை கண்டுபிடிக்க முடியாது. அதேபோல் வாழ்க்கை எனும் மாயத் தோற்றத்திலிருந்து விடுபடுவதற்கு இன்று நமக்குத் தெரியாத விஷயமான பகவானை அவன் இருக்கிறான் என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அந்த பகவானின் உண்மை ஸ்வரூபம், வாழ்க்கை எனும் புதிருக்கு விடை காணும்போது நமக்குத் தெரிய வரும்.

(ஸனாதனின் மராட்டி நூல் ‘ஸுகம் பக்தியோக்’)

 

புத்திவாதிகளின் நாஸ்திகவாதம்

புத்திவாதிகளே, உங்களால் இறைவனை உணர
முடியாததன் காரணம், உங்களுக்கு வழிகாட்ட குரு இல்லாததுதான்!

இறைவன் எங்கும் உள்ளான் என்றால் ஏன் நம்மால் பார்க்க முடிவதில்லை? என்று நாஸ்திகவாதிகள் கேட்கின்றனர். ஒரு தண்ணீர் நிரம்பிய வாளியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கரண்டி உப்பு போடுங்கள். உப்பு கரைந்து போகிறது. அது கண்ணுக்குத் தெரிவதில்லை. வாளியின் கீழ் பக்கம், நடுப்பக்கம், மேல் பக்கம் ஆகிய எங்கிருந்து தண்ணீரை சுவைத்தாலும் அதில் உப்பு கரிப்பது தெரியும்; ஆனால் உப்பை கண்ணால் பார்க்க முடிவதில்லை. அதேபோல் இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான். இங்கு, அங்கு, என அங்கிங்கெனாதபடி வியாபித்துள்ளான்; ஆனால் கண்ணால் பார்க்க முடிவதில்லை. நாஸ்திகர்கள், இறைவன் எங்கும் இல்லை எனக் கூறும்போது இறைவன் இங்கு இப்பொழுது இருக்கிறான் என பதிலளிக்க ஒரு குரு அவசியம்.

பரமாத்மா மற்றும் மாயை சம்பந்தமான ஒரு உதாரணத்தைப் பாருங்கள்! சினிமா தியேட்டரில் இருளாக இருக்கும்போது படம் நன்றாக தெரிகிறது. அப்பொழுது தியேட்டரிலுள்ள திரை கண்ணுக்குத் தெரிவதில்லை. தியேட்டரில் விளக்கு எரியும்போது திரை கண்ணுக்குத் தெரிகிறது; அப்பொழுது அதிலுள்ள திரைப்படம் தெரிவதில்லை. உண்மையில் படம் ஓடும்போது திரை அங்கேயேதான் உள்ளது. பரமாத்மாவும் இது போன்ற ஒரு திரையாக உள்ளார்; அதில் அனைத்து பொருட்களும் அசைந்து கொண்டே இருக்கின்றன. ஆத்மஞானம் என்ற ஒளியால் அந்த உலகப் பொருட்கள் மறைந்து போகின்றன.

(ஸனாதனின் மராட்டி நூல் ‘ஸுகம் அத்யாத்ம’)

 

இறைவனைப் பார்க்க முடியுமா?

இந்த சராசரத்தில் ஈச்வரன் மட்டுமே நிரந்தரமானவர்!

ஒருவர் வினோபாஜியைப் பார்த்துக் கேட்டார், உங்களுக்கு முன்னால் எரியும் இந்த தீபத்தை எவ்வளவு தெளிவாக பார்க்கிறீர்களோ அவ்வளவு தெளிவாக தெய்வத்தின் இருப்பை உங்களால் உணர முடியுமா? வினோபாஜி அதற்கு, தெய்வத்தின் இருப்பைப் பற்றி நான் உறுதியாகக் கூற முடியும்; ஆனால் எதிரே உள்ள தீபத்தை பற்றி என்னால் ஏதும் கூற இயலாது; காரணம் அது இந்த க்ஷணம் இருக்கும், மறு க்ஷணம் இருக்காமல் போகலாம் என விடையளித்தார்.

Leave a Comment