குருக்ருபாயோகத்தின் மஹத்துவம்

அ. அர்த்தம்

குருக்ருபையின் மூலம் ஒரு ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைவதே குருக்ருபாயோகம் ஆகும்.

 

ஆ. குருக்ருபாயோகத்தின் மஹத்துவம்

பலவித யோக மார்க்கங்களில் ஸாதனை செய்து நேரத்தை வீணாக்காமல், இந்த எல்லா மார்க்கங்களையும் விடுத்து குரு க்ருபையை எவ்வாறு விரைவில் அடைவது என்பதை குருக்ருபாயோகம் கற்றுத் தருகிறது. அதன் மூலம் விரைவான ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுகிறது.

குரு மற்றும் குரு க்ருபை அடைய என்ன செய்ய வேண்டும்?

தீவிர ஆர்வம் மற்றும் குரு விரைவில் கிடைக்க வேண்டும் என்கிற தீவிர தாபம் ஆகிய குணங்கள் ஒருவரிடம் இருக்கும்போது அவருக்கு குருப்ராப்தி விரைவில் நடக்கிறது; குரு அருளும் தொடர்ந்து கிடைக்கிறது. ஒரு பெண்ணை காதலிக்கும் ஒரு வாலிபன் எப்படி இரவு பகலாக அதே நினைவோடு நான் என்ன செய்தால் அவளின் மனதை வெல்ல முடியும் என முயற்சி செய்கிறானோ அதே போல் ஒரு குரு இவன் என்னுடையவன் என்று எண்ண வேண்டும், அவருடைய அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இரவு பகலாக சிந்தித்து, நான் என்ன செய்து குருவை சந்தோஷப்படுத்துவது என்ற தாபத்தோடு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது. இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் குருவின் அருளில்லாமல் அவரை அடைய முடியாது. குருவின் க்ருபையை அடைய கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆன்மீக பயிற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும். இதை நடைமுறைபடுத்த ஸனாதனின் ‘சிஷ்யன்’ என்ற புனித நூலில் விளக்கப்பட்டுள்ள சிஷ்யனுக்கான குணநலன்களை நம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குருக்ருபாயோகப்படியான ஆன்மீக ஸாதனை

குரு கிடைப்பதற்கும் அவர் அருளைத் தொடர்ந்து பெறுவதற்கும் செய்யப்படும் ஆன்மீக ஸாதனையே குருக்ருபாயோகப்படியான ஸாதனையாகும்.

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘குருக்ருபாயோகம்’

Leave a Comment