பராத்பர குரு பாண்டே மகாராஜ் (பாபா) !

தியானத்தால் மனத்தால் வாக்கால் பராத்பர குருவை ஸ்மரிக்கும்,
தானும் பக்தியுணர்வில் மூழ்கி மற்றவர்களும் அந்த பக்தியுணர்வின் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்ற தீவிர ஆர்வம் கொண்ட

டாக்டர் (குமாரி) மாயா பாடீல்

ஸனாதன் ஸன்ஸ்தாவின் தேவத் ஆஸ்ரமத்தில் வசிக்கும் பராத்பர குரு பாண்டே மகாராஜ் (பரம் பூஜ்ய பாபா) அவர்களின் ஞானம், ஆன்மீக உணர்வு, பக்தி, ஆனந்த நிலை ஆகியவற்றை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ‘தொடர்ந்து ஆன்மீக உணர்வுடன் இருந்தும் சஹஜ நிலையில் எவ்வாறு இருப்பது’ போன்ற பல அற்புத ஆன்மீக விஷயங்களை அவரைப் பார்த்து, பேசி, கவனித்து, கற்றுக் கொண்ட விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், டாக்டர் மாயா பாடீல் அவர்கள்.

 

 

1. பராத்பர குரு பாண்டே மகாராஜ் அவர்களின்
அதி உன்னத நிலையிலான ஆன்மீக உணர்வு!

1அ. ஒவ்வொரு நிகழ்வு, நபர் மற்றும்
பொருளிடம் பகவானின் இருப்பை அனுபவித்தல்

அவர் ஒவ்வொரு நிகழ்வு, நபர் மற்றும் பொருளிடம் பகவானைக் காண்கிறார். அவரின் பார்வை, சிந்தனை, உணர்வு மற்றும் செயல் ஆகிய அனைத்தும் ஆன்மீக உணர்வில் தோய்ந்து உள்ளது. ‘அவரின் உள்ளும் புறமும் ஆன்மீக உணர்வால் நிரம்பியுள்ளது’ என்பதை உணர முடிகிறது.

1ஆ. தனக்குள்ளிருக்கும் தீவிர ஆர்வத்தால்
சாதகர்களை ஆனந்த நிலைக்கு கூட்டி செல்லுதல்

அவர், ‘பகவானை சஹஜமாக எவ்வாறு அனுபவிப்பது?’ என்பதை சிறு சிறு உதாரணங்கள் மூலம் கூறுவார். ‘ஆனந்த நிலையே சாதனை!’ என்பது அவரின் கூற்று. ‘பகவானின் நாமத்தில் மற்றும் அவரை நினைவுபடுத்தி கொள்வதில் கிடைக்கும் ஆனந்தம் வேறு எங்கும் கிடைக்காது’ என்பதை ஆழ்ந்த தாபத்தோடு அவர் கூறும்போது நாமும் அந்நிலைக்கு தானாகவே செல்ல முடிகிறது.

 

2. நம்முடைய தேஹத்திலும் மற்றும் வெளி உலகிலும்
சைதன்யத்தை எவ்வாறு அனுபவிப்பது என்பது பற்றி
பராத்பர குரு பாண்டே மகாராஜ் கற்றுத் தந்த பாடம்!

2அ. ‘தேஹத்தில் பகவானின் சைதன்யம் நிரம்பியுள்ளது’
என்பதை நினைவில் இருத்துவது

‘நம்முடைய தேஹத்தில் பகவானின் இருப்பு உள்ளது’, என்பதை அவர் ஆணித்தரமாக உணர வைக்கிறார். பல சமயங்களில் நாம் நம் தேஹத்தை, ‘இது என்னுடைய தேஹம்’, ‘இது என்னுடைய பெயர்’, என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கிறோம். ‘இம்மாதிரியான எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு எவ்வாறு செல்வது?’ என்பதை அவர் கற்றுத் தருகிறார். இவ்வுடம்பை வெறும் பெயரால் அடையாளம் காண்பதற்கு பதிலாக அதிலுள்ள சைதன்யத்திடம் நம் கவனத்தை செலுத்த வேண்டும். தேஹத்திலுள்ள சைதன்யம் நஷ்டம் அடைந்த பின் இப்பெயரால் இவ்வுடலால் பயனொன்றும் இல்லை.

2ஆ. ‘மற்றவர்களை அவர்களின் புறத்தோற்றத்தால்
அடையாளம் காண்பதற்கு பதிலாக அவர்களிடமுள்ள
சைதன்யத்தை உணர முயற்சியுங்கள் !

நாம் மற்றவரைப் பார்க்கும்போது அவரின் வெறும் புறத்தோற்றமும் பெயருமே நமக்கு நினைவிற்கு வருகிறது. அதாவது இவர் ஒரு வைத்தியர், அதிகாரி, போலீஸ் என்று. நாம் அவர்களிடமுள்ள சைதன்யத்தைப் பார்ப்பது இல்லை. அதனால் அவர்களிடம் நமக்கு ஆன்மீக உணர்வு ஏற்படுவதில்லை. மாறாக அவர்களிடமுள்ள ஆளுமை குறைகளால் சில சமயங்களில் அவர்களுடன் நாம் ஒத்துப் போவதில்லை. அவர்களிடமுள்ள சைதன்யத்தை நாம் காணத் தவறியதால் நம்மால் அவர்களின் சகவாசத்தில் பகவானின் இருப்பை உணர முடிவதில்லை. ஒரு முறை வேண்டாத உடைந்த பொருட்களை எடுத்துப் போக ஒருவர் ஆஸ்ரமத்திற்கு வந்தார். அப்போழுது பராத்பர குரு பாபா வெளியே உலவிக் கொண்டிருந்தார். அவர் அந்த நபரை சந்தித்தார். அவருக்கு அந்த நபரிடமுள்ள சைதன்யத்தை தரிசிக்க முடிந்ததால் அந்த நபரிடம் ஒரு தெரிந்த சாதகரிடம் பேசுவது போல் சஹஜமாக பேசினார். அதனால் அந்த நபரிடம் தானாகவே மாறுதல் நிகழ்ந்தது. அந்த நபர் ஆஸ்ரமத்தில் இருக்கும் வரை ஒரு சாதகரைப் போலவே மிகப் பணிவுடன் நடந்து கொண்டார்.

2இ. இயற்கையில் இறைவனை அனுபவித்தல்

பராத்பர குரு பாபாவின் திருஷ்டி ஆன்மீக உணர்வில் தோய்ந்து இருப்பதால் அவரால் எங்கும் இறைவனின் இருப்பை உணர முடிகிறது. ‘தேவத் ஆஸ்ரமத்தை சுற்றி பலவிதமான செடி கொடிகள் உள்ளன. அருகில் ஒரு நதியும் ஓடுகிறது. பல சமயங்களில் நாங்கள் இவற்றை கவனிப்பதில்லை. ‘ஆஸ்ரமத்தை சுற்றி இவ்வாறு செடி கொடிகள், மரங்கள் இல்லையென்றால் நமக்கு எப்படி இருக்கும்?’ எனக் கூறி அவர், அவற்றின் இருப்பால் நமக்கு கிடைக்கும் ஆனந்தத்தை, அதாவது பகவானின் இருப்பை உணர கற்றுத் தருகிறார்.

2ஈ. உயிரற்ற பொருட்களிலும் பகவானின் இருப்பை உணர கற்றுத் தருதல்

ஒவ்வொரு பொருளையும் நாம் ஒரு ‘வஸ்து’ என்றே பார்க்கிறோம். ஆனால் பராத்பர குரு பாபா ‘இந்தப் பொருள் எதனால் செய்யப்பட்டுள்ளது?’ என்பது வரை சிந்தனை செய்கிறார். உதாரணத்திற்கு, ‘கட்டில், மரத்துண்டுகளிலிருந்து, மரத்துண்டு மரத்திலிருந்து நமக்கு கிடைக்கிறது. மரத்தை இறைவனே நிர்மாணித்துள்ளான். பகவான் மரத்தை நிர்மாணம் செய்யவில்லை என்றால் மரத்துண்டுகளால் ஆன கட்டில் நமக்குக் கிடைக்காது.’ இது போன்ற அகண்ட பார்வை அவரிடம் இருப்பதால் அவரால் ஒவ்வொரு பொருளிடமும் இறைவனின் இருப்பை உணர முடிகிறது.

2உ. ஒவ்வொரு சாதகரிடமும் பகவானைக் காண்பதற்கு கற்றுத் தருதல்

ஒவ்வொரு சாதகரிடமும் பகவானைக் காணும் கண்ணோட்டம் நம்மிடம் நிர்மாணமாக அவர் மிகுந்த ஆர்வத்தோடு தீவிரமாக தொடர்ந்து முயற்சிக்கிறார். ‘நான் எத்தகைய ஆனந்தத்தை அனுபவிக்கிறேனோ அந்த ஆனந்தத்தை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும்’ என்று அவருக்கு தோன்றும். அதனால் சாதகர்கள், ஹிந்துத்வவாதிகள் அல்லது வேறு யாரை சந்தித்தாலும் அவரின் நிலைக்கு சென்று மிக சுலபமாக, எளிமையாக அவர் புரிந்து கொள்ளும் விதமாக ‘பகவானை எப்படி அனுபவிப்பது’ எனக் கூறுவார். அதனால் எதிரிலுள்ளவருக்கு மிகுந்த ஆனந்தம் கிடைக்கும்; அதோடு ‘இது மிகவும் சுலபமான ஒன்று’ எனவும் அவருக்குத் தோன்றும்.

 

3. பராத்பர குரு பாபாவிடம் உள்ள அற்புத ஆன்மீக தன்மைகள்

3அ. சாதகர்களிடமுள்ள ஆன்மீக உணர்வு
– சாதகர்களை பகவானின் ரூபமாக கருதுதல்

3அ1. சாதகர்களின் தியாகத்தைப் பார்த்து அவர்களிடம் நன்றியுணர்வு மிகுதல்

‘சனாதனின் ஒவ்வொரு சாதகரும் பகவானின் ரூபமாகும்’, என்பது அவரின் ஆன்மீக உணர்வு. சாதகர்களின் தியாகத்தைப் பார்த்து அவர்களிடம் மிகுந்த நன்றியுணர்வு கொள்வார். சாதகர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களிடமுள்ள அவரின் அன்பு சிறிதும் குறைவதில்லை. ‘குருதேவரின் ஒவ்வொரு சாதகரும் ஆனந்தமாக இருக்க வேண்டும்’ என்பதற்காக அவர் ஒவ்வொருவருக்கும் மிகுந்த உதவி செய்துள்ளார். அவரால் சாதகர்களின் கண்களில் துக்கத்தையோ சோகத்தையோ பார்க்க சகிக்காது. உடனே அவருக்கு நிலைகொள்ளாது. பாபாவுக்கு சாதகர்களிடமுள்ள அன்பு வார்த்தைகளுக்கு, வர்ணனைக்கு அப்பாற்பட்டது.

3அ2. புது பேருந்திற்கு பூஜை செய்யும்போது அதை ஓட்டும் சாதகருக்கும் சேர்ந்து பூஜை செய்தல்

ஒரு நாள் பராத்பர குரு பாபாவின் திருக்கரங்களால் புது பேருந்தின் பூஜை செய்யப்பட்டது. பிறகு அவர் பேருந்திற்கு எவ்வாறு பூஜை செய்தாரோ அவ்வாறே பேருந்தை ஓட்டும் சாதகருக்கும் பூஜை செய்தார். அப்பொழுது அவர், ‘அவர் செய்யும் பூஜை சாதகருக்கு இல்லை; சாக்ஷாத் பகவானுக்கு’, எனத் தோன்றியது. சாதகரின் பூஜை முடிந்த பின் பாபா கூறினார், ‘இப்பொழுதே எல்லாம் சரியாக முடிந்தது. இவரின் பூஜையை செய்யாமல் விட்டால் அது பாதியிலேயே பூஜையை விட்டு விடுவது போலாகும்’.

3ஆ. தினசரி சனாதன் பிரபாத் மீதுள்ள நன்றியுணர்வு

3ஆ1. ‘பரம் பூஜ்ய குருதேவர் அளித்துள்ள செய்தி’ என்ற உணர்வோடு சனாதன் ப்ரபாத்திலுள்ள செய்திகளை உள்ளே க்ரஹித்து கொள்ளுதல்

பராத்பர குரு பாபாவிற்கு தினசரி சனாதன் பிரபாத் என்றால் மிகுந்த விருப்பம். இப்பத்திரிக்கை என்பது அவருக்கு தன் உயிரைப் போன்றது. அவர் காலை எழுந்தவுடன் முதலில் சனாதன் ப்ரபாத்தை வார்த்தைக்கு வார்த்தை விடாமல் படிப்பார். அவர் வெறும் வாசிப்பதோடு விட்டு விடுவதில்லை; குருதேவர் அதன் மூலம் தெரிவிக்கும் செய்தியை மனதின் ஆழத்தில் பதித்துக் கொள்வார். அவர் குருதேவரின் சிந்தனையோடு பூரணமாக ஒன்றி விட்டவர். ‘பாகவதம் எப்படி பக்தர்களுக்கு வழிகாட்டுதல் வழங்க எழுதப்பட்டதோ அப்படி மனித வாழ்வை வாழ்வதற்கு தினசரி சனாதன் பிரபாத் வழிகாட்டுதல் வழங்குகிறது’ என்பது அவரின் பக்திபூர்வமான கருத்து. இன்றைய காலகட்டத்தில் எல்லா கஷ்டங்களுக்கும் அதில் தீர்வு எழுதப்பட்டிருப்பதால் எல்லோரும் அதை பாராயணம் செய்ய வேண்டியது அவசியமாகிறது’ என்று அவருக்குத் தோன்றும். சனாதன் வெளியிட்டுள்ள நூல்களைப் பற்றியும் அவர் இதைப் போன்ற ஆன்மீக உணர்வே கொண்டுள்ளார்.

3ஆ2. தினசரி சனாதன் ப்ரபாத்தில் எந்த வித தவறும் நேரக் கூடாது என்பதில் ஆழ்ந்த தாபம்

‘தினசரி சனாதன் பிரபாத் என்பது பராத்பர குருதேவரின் முகபத்திரமாக விளங்குவதால் அதில் ஒரு தவறும் நேரக் கூடாது’, என்று அவருக்குத் தோன்றும். அதனால் அவர் கீழ்க்கண்டவாறு காரியங்களை செய்கிறார்.

அ. ‘தினசரி சனாதன் பிரபாத் வாசிக்கும்போது அதிலுள்ள ஒவ்வொரு விஷயமும் குருதேவரின் எதிர்பார்ப்பின்படி உள்ளதா’, என்பதை அவர் கூர்ந்து கவனிப்பார்.

ஆ. எழுதியதில் ஏதாவது ஒரு இலக்கணப் பிழை இருந்தாலும் உடனே அதைப்பற்றி சனாதன் பிரபாத் அலுவலகத்திற்கு தெரிவிப்பார், அதோடு அந்தப் பிழையை சரி செய்யவும் முயற்சி மேற்கொள்வார்.

இ. ‘எந்த நிலையில் அத்தவறு நிகழ்ந்தது?’ என்பதைத் தெரிந்து கொண்டு மறுபடியும் தவறு நடக்காமல் இருக்க உபாயத்தை கண்டுபிடிக்க சொல்வார். பிறகு ‘சரியான உபாயம் கண்டுபிடிக்கப்பட்டதா’ என்றும் கேட்டு தெரிந்து கொள்வார்.

ஈ. ‘இந்த தவறு சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லப்பட்டதா என்பதையும் கேட்டு தெரிந்து கொள்வார்.

உ. சாதகர்களின் மனங்களில் தவறிப் பற்றிய சீரிய சிந்தனையை ஏற்படுத்தி அதற்காக பிராயச்சித்தமும் எடுக்க சொல்வார்.

அவரின் முயற்சிகளைப் பார்க்கும்போது குருசசேவையிடம் ‘நம் ஆன்மீக உணர்வு எவ்வாறிருக்க வேண்டும்?’ என்பதை கற்க முடிகிறது.

3 இ. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களிடமுள்ள பக்தி

3இ1. தியானத்தால், மனத்தால், வாக்கால் எப்பொழுதும் குருதேவரைப் பற்றிய ஸ்மரணம்

பராத்பர குரு டாக்டர் ஆடவலே தான் அவருக்கு யாதுமாக விளங்குபவர். தியானத்தால், மனத்தால், வாக்கால் எப்பொழுதும் குருதேவரைப் பற்றிய ஸ்மரணம் அவரிடம் நடந்து கொண்டிருக்கும். அவர் நாள் முழுவதும் குருதேவரின் லீலைகளை நினைவு கூர்தல், அனுபவித்தல், பயிற்சி செய்தல் மற்றும் அதிலிருந்து ஆனந்தத்தை அனுபவித்தல், மற்றவரையும் அனுபவிக்க வைத்தல் ஆகிய அனைத்தையும் செய்கிறார். குரு ஸ்மரணத்தால் அவரிடம் எந்த அளவிற்கு ஆனந்தம் ஏற்படுகிறது என்றால் அவரைப் பார்க்கும்போதே நம் மனம் நெகிழ ஆரம்பிக்கும். அவர், குருதேவரின் மகத்துவத்தை எளிய உதாரணங்கள் மூலம் வர்ணிக்கும்போது அது நம் ஆழ்மனம் வரை சென்று பதிகிறது. அதனால் ‘நாம் குருதேவரை எந்த அளவிற்கு குறைவாக தெரிந்து கொண்டுள்ளோம்’ என்பதை உணர்ந்து அவரிடம் நன்றியுணர்வு பெருகுகிறது.

3இ2. குருதேவர் எதிர்பார்ப்பின்படி காரியங்களை செய்ய எப்பொழுதுமே தயார் நிலையில் இருத்தல்

குருதேவரிடம் அவருக்குள்ள பக்தியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. குருதேவருக்கு நன்றி தெரிவிக்கும்போது அவருக்கு நாத் தழுதழுக்கிறது; தொண்டை அடைக்கிறது. ‘குருதேவருடன் ஒப்பிடும்போது நாம் எதுவுமே செய்வதில்லை’, என்ற உணர்வால் அவர் சிறு வயது இளைஞரைப் போன்று உற்சாகத்துடன் செயல்படுகிறார். குருதேவர் எதிர்பார்ப்பின்படி எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்பதில் அவர் சர்வ ஜாக்கிரதையாக செயல்படுகிறார். அவரின் உடனடியாக செயல்படும் குணம், உற்சாகம் மற்றும் ஊக்கத்தை பார்க்கும்போது ’92 வயது பெரியவராக இருந்தாலும் பராத்பர குரு பாபா இன்னும் இளைஞரே’ எனத் தோன்றுகிறது.

 

4. உன்னத ஆன்மீக நிலையில்
இருந்தாலும் சாதாரண நபரைப் போல் வாழ்தல்!

அவரின் ஆன்மீக நிலை அதி உன்னதமாக இருந்தாலும் அவர் ஒரு சாதாரண நபரைப் போலவே நடந்து கொள்வார். அவரிடம் எப்பொழுதும் பணிவு காணப்படும். நான் செய்தேன் என்ற உணர்வு அவரிடம் எப்பொழுதும் கிடையாது. அவரின் உடைகளிலிருந்து பல்வேறு சுகந்தங்கள் வெளிப்படுகின்றன. பண்டைய காலத்து ரிஷியைப் போன்ற மகானான அவரின் சத்சங்கம் எங்களுக்கு கிடைத்தது பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் சங்கல்பத்தாலும் அருளாலும் என்பது உறுதி. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் சரணங்களிலும் பராத்பர குரு பாபா (பாண்டே மகாராஜ்) அவர்களின் சரணங்களிலும் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்!

– டாக்டர் (குமாரி) மாயா பாடீல், சனாதன் ஆஸ்ரமம், தேவத், பன்வேல். (18.11.2017)

 

Leave a Comment