
1. தத்தாவின் நாமஜபம் செய்தல்
ஸத்குரு டாக்டர் முகுல் காட்கில்
“தற்போது பல ஸாதகர்களுக்கு தீய சக்திகளால் கஷ்டங்கள் ஏற்படுகின்றன. பித்ருபக்ஷத்தில் (27 செப்டம்பர் முதல் 10 அக்டோபர் 2௦26 வரையுள்ள காலம்) இக்கஷ்டம் அதிகரிக்கும் என்பதால் இக்காலத்தில் தினமும் ‘ஓம் ஓம் ஸ்ரீ குருதேவ தத்த ஓம்’ என்ற நாமஜபத்தை குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது செய்ய வேண்டும். நாமஜபம் கீழ்க்கண்ட வலைதளத்தில் உள்ளது. நாமஜபத்திர்கான லிங்க் – https://www.sanatan.org/mr/a/824.html
எந்த ஆர்வமுள்ளவர் தனக்கு தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டம் நீங்க நாமஜப உபாயத்தை செய்கிறாரோ, அவர் அவரின் உபாயத்திற்கான நாமஜபத்தோடு கூட தத்த நாமஜபத்தை குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது செய்ய வேண்டும். தத்த நாமஜபத்தை செய்யும்போது கைவிரல்கள் ஐந்தின் நுனியையும் ஒருங்கே கொண்டு வந்து, ஆனால் சிறிது அவற்றிடையே இடைவெளி விட்டு அநாஹத சக்கரம் மற்றும் மணிபூரக சக்கரத்தில் நியாஸ் வைக்கவும்.
யார் உபாயத்தை செய்யவில்லையோ, அவர் தன் தனிப்பட்ட செயல்களின்போது, குளித்தல், சுத்தம் செய்தல் ஆகிய வேளைகளில் தத்த நாமஜபத்தை குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது செய்யும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் மூதாதையர்களால் கஷ்டம் ஏற்படுவதை உணர்பவர்கள், உட்கார்ந்து முத்ராவுடன் தத்த நாமஜபத்தை செய்ய வேண்டும்.
2. தத்தாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்
பித்ருபக்ஷ காலத்தில் மூதாதையர்களால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து பாதுகாப்பு பெற நாள் முழுவதும் இடையிடையே தத்தாவிடம் பிரார்த்தனை செய்யவும்.
3. யாருக்கு இயலுமோ, அவர்கள் அவசியம் பித்ருபக்ஷ காலத்தில் ஸ்ரார்த்த விதிகளைச் செய்ய வேண்டும்

இவ்வாறு செய்தால், மூதாதையர்களால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்குவதோடு கூட அவர்களின் ஆசீர்வாதமும் நமக்குக் கிடைக்கும்.
– (ஸத்குரு) டாக்டர் முகுல் காட்கில், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (10.9.2026)
பெண்கள் எப்போது ச்ரார்த்தம் செய்யலாம்?
மஹாளய ச்ரார்த்தத்திற்கான முன்னேற்பாடுகளும் அதன் வழிமுறைகளும்
ச்ரார்த்தத்தில் உணவு பரிமாறும் முறை