பெண்கள் எப்போது ச்ரார்த்தம் செய்யலாம்?

1. சுயமாக ச்ரார்த்தம் செய்வதன் முக்கியத்துவம்

‘நாமே சிறந்த முறையில் ச்ரார்த்த சடங்கு செய்ய வேண்டும். இருப்பினும், அதை எப்படி செய்வது என்று நமக்கு தெரியாததால், பிராம்மணர் மூலம் அதைச் செய்கிறோம். இப்போதெல்லாம் ச்ரார்த்தம் செய்வதற்கு பிராம்மணர்கள் கிடைப்பது கடினமாகிவிட்டது. இதற்கு தீர்வாக, சடங்குகளை விவரிக்கும் புனித நூல்களைப் பயின்று அதை மனப்பாடம் செய்து கொள்ளலாம். இந்த சடங்கு கடவுளின் மொழியாகக் கருதப்படும் சமஸ்கிருதத்தில் உள்ளது. மற்ற மொழிகளைக் கற்றுக்கொள்வதைப் போலவே முயற்சி செய்து இதையும் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும், சமஸ்கிருதம் கற்றுக் கொள்வது எளிது.

(மேலே குறிப்பிட்டுள்ள கருத்து சரியானது என்றாலும், சில சமஸ்கிருத சொற்களை உச்சரிப்பதில் உள்ள சிக்கலான தன்மையையும், சாஸ்திரத்தில்  கூறப்பட்டுள்ள சடங்குகளைப் புரிந்துகொள்வதில் உள்ள வரம்புகளையும் கருத்தில் கொண்டு, ஒவ்வொருவரும் தாங்களாகவே சடங்குகளைச் செய்வது இயலாது. பிராம்மணர்கள்  மூலம் சடங்கு செய்யலாம் அல்லது அவர்கள் கிடைக்கவில்லை என்றால், சமுதாயத்தில் உள்ள ஞானமுள்ளவர்களின் உதவியுடன் சடங்கு செய்யலாம். ச்ரார்த்த சடங்கு செய்வது மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் – தொகுப்பாளர்).

2.  ச்ரார்த்தத்தை செய்து வைக்க யாரும் இல்லை என்பதால் செய்யவில்லை என்ற காரணத்தை சொல்ல இடம் தராத ஹிந்து தர்மம்!

மகன் (பூணூல்  போட்டுக் கொள்ளாதவன்), மகள், பேரன், கொள்ளுப் பேரன், மனைவி, மகளின் மகன் (அவர் வாரிசுகளில் ஒருவராக இருந்தால்), சகோதரர், மருமகன், உறவினரின் மகன், தந்தை, தாய், மருமகள், மூத்த மற்றும் இளைய சகோதரிகளின் மகன், தாய் மாமன், ஒரே கோத்திரத்தை சார்ந்த ஏழு தலைமுறையினரில் ஒருவர் (ஸபிண்டி), மற்றும் ஏழு தலைமுறையினருக்கு பின், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் (ஸமனோதகர்), சீடர்கள், பிராம்மணர்கள், நண்பர், இறந்தவரின் மருமகன் என்ற இதே  வரிசைப்படி ச்ரார்த்தம் செய்யலாம்

கூட்டுக் குடும்பமாக இருந்தால், மூத்த மற்றும் சம்பாதிக்கும் ஆண் ச்ரார்த்தம் செய்ய வேண்டும். தனிக்குடும்பமாக இருந்தால், அனைவரும் சுதந்திரமாக ச்ரார்த்தம் செய்ய வேண்டும்.

இறந்த ஒவ்வொருவருக்கும் ச்ரார்த்தம் செய்வதன் மூலம் அவர் ஒரு உயர்ந்த நிலைக்கு முன்னேறுவதற்கான உத்வேகத்தை அளிக்கும் வகையில் ஹிந்து தர்மம் ஏற்பாடு செய்துள்ளது. புனித நூலனா ‘தர்ம சிந்து’வில் ஒரு குறிப்பிட்ட இறந்த நபருக்கு உறவினர் அல்லது நெருங்கிய நபர் யாருமே இல்லை என்றால், அவருக்கு ச்ரார்த்தம் செய்வது அரசனின் கடமையாகும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

3. பெண்கள் ச்ரார்த்தம் செய்தல்

1.     குறிப்பு 2-ல் இறந்தவரின் மகள், மனைவி, தாய் மற்றும் மருமகள் ஆகியோருக்கு ச்ரார்த்தம் செய்யும் அதிகாரம் உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையும் மீறி, தற்போதைய காலகட்டத்தில், ச்ரார்த்தம் நடத்தும் பிராம்மணர்கள், பெண்களை ச்ரார்த்தம் செய்ய அனுமதிப்பதில்லை. இதற்குக் காரணம், முற்காலத்தில் பெண்களுக்கு பூணுல் விழா நடத்தப்பட்டு வந்ததாலும், தற்போதைய காலகட்டத்தில் அனைத்து வகுப்புகளிலும் இந்த வழக்கம் நிறுத்தப்பட்டிருப்பதாலும் இருக்கலாம். இருப்பினும், அவசரகால சூழ்நிலைகளில், ச்ரார்த்தம் செய்ய யாரும் கிடைக்கவில்லை என்றால், ச்ரார்த்தம் செய்யாமல் இருப்பதை விட பெண்கள் செய்வது நல்லது.

2. ச்ரார்த்தம் செய்யும் பெண், ‘சவ்யா-அபசவ்யா’ செய்யும்போது   ஒரு சுத்தமான பருத்தி துணியை தோளில் போட்டுக் கொள்ள  வேண்டும்.

 

குறிப்பு: ஸனாதனின் புனித நூல் ‘ச்ரார்த்தம்’

Leave a Comment