
ஸச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே
1. வருடம் 1999 முதல் ஸாதகர்கள் முக்கியமாக தினமும் கீழே குறிப்பிட்டுள்ள வ்யஷ்டி ஸாதனையை செய்து வருகின்றனர்
1 அ. குலதெய்வ நாமஜபம் : இந்த ஜபத்தை அதிகபட்ச அளவு செய்ய வேண்டும். இந்த ஜபம் பிராரப்தத்தால் ஏற்படும் கஷ்டங்களைக் குறைக்க உதவுகிறது.
1 ஆ. தத்தரின் நாமஜபம் – ‘ஸ்ரீ குருதேவ தத்த’ : கஷ்டத்தின் தீவிரத்திற்கேற்ப இந்த ஜபத்தை 3 முதல் 9 மாலைகள் செய்ய வேண்டும். இந்த ஜபம் மூதாதையர்களால் ஏற்படும் கஷ்டங்களைக் குறைக்க உதவுகிறது.
2. வருடம் 2010 முதல் வ்யஷ்டி ஸாதனை செய்பவர்களுக்காக ஸமஷ்டிக்கான ஜபம்
வருடம் 2010-ல் கூறப்பட்டது என்னவென்றால் ‘காலத்திற்கேற்ற ஸமஷ்டி ஸாதனை செய்து வரும் ஸாதகர்கள் ‘ஓம் நமோ பகவதே வாஸுதேவாய’ என்ற ஜபத்தை அதிகபட்ச அளவு செய்ய வேண்டும்.
3. வருடம் 2021-ல் ‘நிர்விசார்’ நாமஜபம் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.
4. வருடம் 2026-ன் மஹாசிவராத்திரி முதல் வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனை செய்பவர்கள் செய்ய வேண்டிய நாமஜபம்
தற்போது மூன்றாம் உலகப் போர் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதில் நாம் காப்பாற்றப்படவும் ‘ராமராஜ்யம் ஸ்தாபனம்’ ஆவதற்கும் ‘ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம’ என்ற நாமஜபத்தை குறைந்தபட்சம் 10 மாலைகளும் அதிகபட்சமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்யவும்.
இதோடு கூட தினமும் ஒருமுறை ராமரக்ஷா மற்றும் ஹனுமான் சாலீசா (ஹிந்தி தெரிந்தவர்கள்) அல்லது மாருதி ஸ்தோத்திரம் (மராட்டி தெரிந்தவர்கள்) அர்த்தத்தைப் புரிந்து கொண்டு பாராயாணம் செய்யவும்.
இந்த நாமஜபத்தை மூன்றாம் உலகப் போர் முடிவடைந்து ராமராஜ்யம் ஸ்தாபனம் ஆகும்வரை செய்யவும்!’ – ஸச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே (31.1.2026)
5. மஹாசிவராத்திரி முதல் இந்த நாமஜபத்தை ஆரம்பிப்பதன் காரணம்
‘பகவான் சிவன், தானே எப்போதும் ராமநாம ஜெபத்தில் ஆழ்ந்திருக்கிறார். அதனால் அவரின் ஆசீர்வாதத்துடன் காலத்திற்கேற்ற ஸாதனையாக நாம் இந்த நாமஜபத்தை ஆரம்பிக்கலாம்!’ – ஸச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே (31.1.2026)
சில முக்கிய குறிப்புகள்
1. வ்யஷ்டி ஸாதனை கண்ணோட்டத்தில் நாமஜபம்
1 அ. புது ஸாதகர்களுக்கான நாமஜபம் : புது ஸாதகர்கள் குலதெய்வ நாமஜபத்தை குறைந்தபட்சம் 1 மணி நேரமும் மற்றும் தத்தரின் நாமஜபத்தை மூதாதையர்களின் கஷ்டத்திற்கேற்ப 3, 6 அல்லது 9 மாலைகளும் செய்யவும் மற்றும் மீதியுள்ள நேரத்தில் ஸ்ரீராமரின் நாமஜபத்தை செய்யவும்.
1 ஆ. தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்களின் நிவாரணத்திற்கு : ‘பிராணசக்தி ஓட்ட வழிமுறை’யின்படி கண்டுபிடிக்கப்பட்ட நாமஜபம் மற்றும் நோயுற்றவர்களுக்காக தரப்பட்ட சிறப்பு நாமஜபம் எதுவோ அது பூரணமடைந்த பின்னர் மீதியுள்ள நேரத்தில் ஸ்ரீராமரின் நாமஜபத்தை செய்யலாம்.
2. ஸமஷ்டி ஸாதனை கண்ணோட்டத்தில் நாமஜபம்
எந்த ஸாதகர்கள் ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் ‘நிர்விசார்’ நாமஜபத்தை செய்து வந்தார்களோ அவர்கள் அதை நிறுத்திவிட்டு ஸ்ரீராமரின் நாமஜபத்தை மட்டுமே செய்ய வேண்டும்.
3. மகரிஷிகள் கூறியுள்ளபடி நாமஜபம்
இதற்கு முன்னர் மகரிஷிகள் கூறியபடி ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே | ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே |’ என்ற ஜபத்தை 108 முறைகள் செய்யவும்.
4. பூஜையறையில் ஸ்ரீராமருடன் ஹனுமானின் பூஜையையும் செய்யுங்கள்!
‘ஸ்ரீராமரும் ஹனுமாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள்; அதனால் ஸ்ரீராமரின் உபாசனையில் ஹனுமாருக்கும் இடம் உண்டு. ஸ்ரீராமரக்ஷாவிலும் ஹனுமாரைப் பற்றிய குறிப்பு வருகிறது. இக்காரணத்தால் பூஜையறையில் ஸ்ரீராமரின் படத்திற்கு அருகில் ஹனுமாரின் படத்தையும் வைத்து பூஜை செய்யுங்கள்’ – – ஸச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே (23.1.2026)
கண் திருஷ்டியினால் ஒரு நபர் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான அறிகுறிகள்
கண் திருஷ்டி என்பதன் பொருள் மற்றும் அதனால் பாதிக்கப்படும் செயல்பாடு
ஒரு நபர் எதிர்கொள்ளும் ஆன்மீக பிரச்சனைகளை ஆன்மீக நிலையில் செய்யப்படும் நிவாரணங்கள் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும்!
‘இரு உள்ளங்கைகளின் ஒருங்கிணைந்த முத்திரை’ செய்து உடலிலுள்ள கஷ்டம் தரும் சக்தியின் ஆவரணத்தைக் களையும் வழிமுறை!
கண் திருஷ்டியை அகற்றும் முறையை மனதளவில் எவ்வாறு செய்வது
உறங்க முடியாமல் கஷ்டப்படும்போது கண்களைச் சூழ்ந்திருக்கும் கருப்பு சக்தி படலத்தை அகற்ற முயற்சிக்கவும்