கண் திருஷ்டியினால் ஒரு நபர் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான அறிகுறிகள்

 

1. ஸ்தூலதேஹம் (உடல்), மனோதேஹம் (மனம்), காரணதேஹம் (சூட்சும) ஆகியவை தொடர்பான கண் திருஷ்டியின் அறிகுறிகள்

கண் திருஷ்டியால் பாதிக்கப்படும் இந்த செயல் முறையில்,பாதிக்கப்படும் நபரை சுற்றி ரஜ-தமவின் ஆசை சார்ந்த அதிர்வலைகள் உருவாகின்றன. இத்தகைய ரஜ-தம பிரதானமான ஒலி அதிர்வலைகள் நிறைந்த சூழலில்  அந்த நபரின் ஸ்தூல, மனோ, சூட்சும தேஹங்கள் மோசமாக பாதிக்கப்படுகின்றன.

1 அ.ஸ்தூலதேஹம் (உடல்)

ஸ்தூலதேஹமானது ரஜ-தமவின் முக்கிய ஆசை சார்ந்த அதிர்வலைகளால் ஆட்கொள்ளப்படும்போது, ​​அந்நபர் கடுமையான தலைவலி, காதுவலி, கண்களில் வலி, மயக்கமடைதல், கைகால்களின் உணர்வின்மை, படபடப்பு, உடல் சூடு குறைதல் மற்றும் பலவீனத்தை அனுபவிப்பது போன்ற பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்படுகிறார். இத்தகைய அறிகுறிகளைக் கவனித்தவுடன், கண் திருஷ்டியை உடனடியாக கழித்தால்தான், அது தொடர்புடைய கஷ்டங்கள் குறையும்.

1 ஆ.மனோதேஹம் (மனம்)

ரஜ-தமவின் முக்கியமான ஆசை சார்ந்த அதிர்வலைகளின் ஆற்றல் அதிகரித்து, அது விரைவாக செயல்படத் தொடங்கும் போது, மனிதனின் மனோதேஹத்தை (மனதை) பாதித்து, அவற்றின் விளைவைக் காட்டத் தொடங்குகின்றன. மனோதேஹத்தின் ரஜ-தம மேலாதிக்க இயல்பு மற்றவர்களைப் பற்றிய தேவையற்ற எண்ணங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது. இதனால் பெரும்பாலும் வீட்டில் சச்சரவுகள் ஏற்பட்டு, சண்டையில் முடிவடைகின்றன, மேலும் மனக்கிளர்ச்சியுடன் வீட்டை விட்டு வெளியேறுதல், அவசரமாக வாகனம் ஓட்டி விபத்தை சந்தித்தல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

1 இ .சூட்சும தேஹம்

சிறிதுகாலத்திற்கு பிறகு சூட்சும தேஹமும் இந்த அதிர்வலைகளால் பாதிக்கப்படத் தொடங்குவதால், அது தனி நபரின் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.

2. கண்திருஷ்டி அறிகுறிகள்  தொடர்பான சில பிரச்சனைகள்

உடல் பிரச்சனைகள் :  போதை பழக்கத்திற்கு அடிமையாதல், மீண்டும் மீண்டும் நோய்கள், மீண்டும் வரும் தோல் நோய்கள்

மனநல பிரச்சனைகள்: எப்போதும் ஒரு பதற்ற நிலை மற்றும் மனச்சோர்வு, அதிகப்படியான பயம்

கல்வி தொடர்பான  பிரச்சனைகள்: கடினமாக உழைத்தும் தேர்வில் தோல்வி, நல்ல அறிவு இருந்தாலும் மறதி

நிதிச் சிக்கல்கள்: வேலை கிடைக்காமை, வியாபாரத்தில் தோல்வி, தொடர்ச்சியான நிதி இழப்புகள் அல்லது மோசடி

தாம்பத்திய மற்றும் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள்: திருமணம் ஆகாமல் இருப்பது, திருமணத்திற்குப் பின் கருத்து வேறுபாடு, குழந்தையின்மை, கருக்கலைதல், பிரசவத்தில் பிரச்சனைகள்,  மனநலம் மற்றும் உடல் வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பு, குழந்தைகள் இளம் வயதிலேயே இறப்பது.

இதுபோன்ற பிரச்சனைகள் நெடுநாள்களாக இருப்பதாக கண்டறியப்பட்டால் அவை கண்திருஷ்டியின் அறிகுறிகளாகும், அவற்றை களைவதற்குரிய ஆன்மீக நிவாரண முறையை பின்பற்றவேண்டும்.

குறிப்பு: ஸனாதன் ஸன்ஸ்தாவின் புனித நூல், ‘கண்திருஷ்டியால் ஏற்படும் கஷ்டம் மற்றும் அதை அகற்றும் ஆன்மீக சாஸ்திரம்’

 

Leave a Comment