ஒரு நபர் எதிர்கொள்ளும் ஆன்மீக பிரச்சனைகளை ஆன்மீக நிலையில் செய்யப்படும் நிவாரணங்கள் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும்!

Article also available in :

Contents

ஒரு நபரின் வாழ்க்கையில் 80% பிரச்சனைகள் ஆன்மீக காரணங்களால் ஏற்படுகின்றன. இவை உடல் மற்றும் மனநல கோளாறுகள் சம்பந்தப்பட்டவையாகும். இதற்கான காரணங்கள் 80% ஆன்மீக இயல்புடையவையாதலால், இவற்றை தகுந்த ஆன்மீக நிவாரணத்தினால் மட்டுமே குணப்படுத்தமுடியும். இந்த ஆன்மீக தீர்வுகள், முத்திரைகள்  (ஆன்மீக ஆற்றல் ஓட்டத்தை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படும் கைகளின் தோற்றப்பாங்கு), நியாஸ் (ஒன்றாக இணைத்த விரல் நுனிகளின் மூலம் சக்தி ஓட்டத்தை மையப்படுத்துதல் – குவிக்கப்பட்ட சக்தி நிவாரணம்) மற்றும் பிராணசக்தி ஓட்ட சிகிச்சையின் மூலம் கண்டறியப்படும் நாமஜபம் போன்றவைகளாகும். இந்தக் கட்டுரையின் மூலம், பல்வேறு ஆன்மீகக் கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணங்களையும், அவற்றிலிருந்து விடுபட ஆன்மீக நிவாரணம் எவ்வாறு உதவுகிறது என்பதையும் அறிந்து கொள்வோம்.

(ஸத்குரு) டாக்டர் முகுல் காட்கில்

1. கஷ்டங்களுக்கான ஆன்மீக காரணங்கள் மற்றும் அவற்றின் தீர்வுகள்

1 அ . தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்கள்

1 அ 1. அறிகுறிகள்

அ. உடலளவில்

பலவீனம் (குறைந்த பிராண சக்தி), உடல் வலி, தலை பாரம், தலைச்சுற்றல், குமட்டல், பசியின்மை, உடலின் பல்வேறு பகுதிகளில் (கண்கள், வயிறு போன்றவை) எந்த காரணமும் இல்லாமல் கோளாறுகள், கழுத்து நெரிக்கப்படுதல் அல்லது மார்பில் அழுத்தம் போன்ற உணர்வு, கழுத்து அல்லது முதுகில் தசைப்பிடிப்பு, தலைமுடியில் அடிக்கடி பேன்கள் தோன்றுதல், பல மாதங்கள் மருந்து மற்றும் குறிப்பிட்ட உணவு உட்கொண்ட பிறகும் கோளாறு குணமாகாமல் இருப்பது போன்றவை.

ஆ. மனதளவில் 

அனைவர் மீதும் கோபப்படுதல் அல்லது காரணமின்றி எரிச்சல் அடைதல்; எதிர்மறை அல்லது நம்பிக்கையற்ற எண்ணங்களால்  அமைதியற்ற உணர்வு; தொடர்ந்த மன அழுத்தம்; அதிகப்படியான பயம்; மந்தமான உணர்வு; ஒருவரின் சொந்த ஆசைகள் திடீரென அதிகரித்தல் மற்றும் மற்றவர்களிடமிருந்து  திடீரென  அதிகமாக எதிர்பார்த்தல் போன்றவை.

1 அ 2. காரணங்கள்

1 அ 2 அ. ஆன்மீக பயிற்சி இல்லாமை, அதிக அஹம்பாவம் மற்றும் ஆளுமை குறைபாடுகள்

இந்தக் கலியுகத்தில் தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் பிற்போக்கு தன்மை உள்ளது. இதன் காரணமாக, தீய சக்திகளால் ஏற்படுத்தப்படும் கஷ்டங்கள் அதிகரித்துள்ளன. பெரும்பான்மையான மக்கள் ஆன்மீகப் பயிற்சியைச் செய்யாததும், அதிக ஆளுமைக் குறைபாடுகளும், அஹம்பாவமும் கொண்டவர்களாகவும் இருப்பதே தர்மத்தைக் கடைப்பிடிக்காததற்கான காரணங்கள். அப்படிப்பட்டவர்கள் கடவுள் கொள்கையிலிருந்து விலகிச் செல்கிறார்கள். அதனால், தீய சக்திகள் அவர்களைத் துன்புறுத்துவது எளிதாகிறது. மேலும் அவர்களின் உடலில் ஒரு ஸ்தானத்தை உருவாக்குவதும் எளிதாகிறது.  அதிக ஆளுமை குறைபாடுகளும் மற்றும் அஹம்பாவமும் உள்ள நபர் தீய சக்திகளால் அதிகமான அளவில் பாதிக்கப்படுகின்றார்.

1 அ 2 ஆ.  ஸமஷ்டி ஸாதனை (சமூக மக்களின் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட செய்யப்படும் முயற்சிகள்)

தெய்வீக ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காக சமூகத்தில் ஸாத்வீகத்தைப் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டு, ஸனாதனின் ஸாதகர்கள் பொருள் சார்ந்த சமூகத்தை ஆன்மீகப் பயிற்சியின் பக்கம் திருப்புவதற்கான முயற்சிகளை (கூட்டு ஆன்மீகப் பயிற்சி) மேற்கொள்கிறார்கள். சமுதாயத்தில் உள்ளவர்கள் ஆன்மீக பயிற்சியை செய்ய ஆரம்பித்து, தர்மத்தை கடைப்பிடித்தவுடன், தெய்வீக ராஜ்யம் தானாகவே ஸ்தாபிக்கப்படும். அதை முற்றிலும் விரும்பாத தீய சக்திகள், ஸமஷ்டி ஸாதனை செய்யும் ஸனாதனின் ஸாதகர்களுக்கு மீண்டும் மீண்டும் கஷ்டங்களைத் தருகின்றன. அவர்களைத் தவிர, சமுதாயத்தில் ஸமஷ்டி ஸாதனை செய்கிற வேறு சிலரும் தீய சக்திகளால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் பெரும்பாலான கஷ்டங்கள், தனிப்பட்ட காரணங்களால் அல்ல, மாறாக அவர்கள் ஸமஷ்டி ஸாதனை செய்யும் காரணத்தால் ஏற்படுபவை ஆகும்.

1 அ 2 இ. தீய சக்திகள் மனித உடலை பஞ்சபூத தத்துவங்களின் நிலையில் தாக்கி, உடலிலுள்ள பஞ்சபூத தத்துவங்களில்  ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது

மனித உடலானது பஞ்சபூத தத்துவங்களால் ஆனது. அதாவது பிருத்வி தத்துவம் (பரிபூர்ண பூமி தத்துவம்), ஆப தத்துவம் (பரிபூர்ண நீர் தத்துவம்),  தேஜ தத்துவம் (பரிபூர்ண அக்னி தத்துவம்), வாயு தத்துவம் (பரிபூர்ண காற்று தத்துவம்), ஆகாஷ தத்துவம் (பரிபூர்ண ஆகாய தத்துவம்). தீய சக்திகள் பஞ்சதத்துவ அளவில் மனித உடலைத் தாக்கி, உடலில் பஞ்சபூத தத்துவங்களின் சமநிலையை கெடுக்கின்றன.

1 அ 3. நிவாரணம் 

1 அ 3 அ. பிராணசக்தி ஓட்ட அமைப்பில் உள்ள தடைகளை கண்டறியும் ஆன்மீக நிவாரணத்தை செய்வதன் முக்கியத்துவம்

ஒரு நபருள், தீய சக்திகள் தனக்கென ஒரு ஸ்தானத்தை உருவாக்குகின்றன. பின்னர் கஷ்டம் தரும் சக்திகளை (கருப்பு சக்தி) அனுப்பி அங்கே  தேக்கி வைக்கின்றன. இவை பிராணசக்தி (சேதனா-மனம் மற்றும் உடலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தெய்வீக சைதன்யத்தின் அம்சம்) ஓட்ட அமைப்பில் ஒரு தடையை உருவாக்குகிறது. நமது உடலில் உள்ள பல்வேறு அமைப்புகளான இரத்த ஓட்டம், சுவாசம், செரிமானம் போன்ற செயல்பாடுகளுக்கும் மற்றும் மனதின் செயல்பாட்டிற்கும் பிராணசக்தி ஓட்ட அமைப்பு ஆற்றலை வழங்குகிறது. இவை எந்த இடத்தில் தடைபட்டாலும்
அதன் தொடர்புடைய உறுப்புகளின் செயல்திறன் குறைவதால் கோளாறுகள் ஏற்படுகின்றன. இவற்றிற்கான ஆன்மீக நிவாரண முறைகளே முத்திரை, நியாஸ் மற்றும் பிராணசக்தி ஓட்ட அமைப்பு சிகிச்சையின் மூலம் கண்டறியப்படும் நாமஜபம்/மந்திரங்கள் ஆகும்.

(‘பிராணசக்தி ஓட்ட அமைப்பு நிவாரணம் ‘ பற்றிய விரிவான தகவல்கள் ஸனாதனின் ‘பிராணசக்தி ஓட்ட அமைப்பில் உள்ள தடைகளை எவ்வாறு கண்டறிவது?’ மற்றும் ‘பிராணசக்தி ஓட்ட அமைப்பில் ஏற்படும் தடைகளால் உண்டாகும் நோய்களுக்கான ஆன்மீக தீர்வுகள்’ ஆகிய நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன.’ – தொகுப்பாளர்)

1 அ 3 ஆ. முத்திரை, நியாஸ் மற்றும் நாமஜபங்களின் முக்கியத்துவம்

1 அ 3 ஆ 1. முத்திரை செய்வதன் முக்கியத்துவம்

விரல்கள் ஒன்றையொன்று தொடும்போதோ அல்லது ஒரு குறிப்பிட்ட முறையில் சேர்த்தோ அல்லது மடித்தோ, வெவ்வேறு வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த வடிவங்கள் முத்திரைகள் என்று அழைக்கப்படுகின்றன.  மனித உடல் ப்ருத்வி, ஆப, தேஜ், வாயு மற்றும் ஆகாஷ் ஆகிய பஞ்சதத்துவங்களால் ஆனது. முத்திரைகள் ஒவ்வொன்றும் பஞ்சதத்துவங்களுடன் தொடர்புடையவை.

1 அ 3 ஆ 2. முத்திரையுடன் சேர்ந்து நாமஜபம் செய்வதன் முக்கியத்துவம்

தீய சக்திகள் பஞ்சபூத தத்துவங்களின் அடிப்படையில் மனித உடலைத் தாக்குகின்றன. ஒவ்வொரு தெய்வமும் ஐந்து பிரபஞ்ச தத்துங்களில் ஒன்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.பஞ்சதத்துவங்களான ப்ருத்வி, ஆப, தேஜ், வாயு மற்றும்  ஆகாஷ் ஆகியனவற்றில் உகந்த தத்துவத்திற்குரிய தெய்வத்தின் நாமத்தை உச்சரிப்பதும், அந்த தத்துவத்திற்கு தொடர்புடைய முத்திரையை செய்வதும் அந்த தத்துவத்திற்குட்பட்ட உறுப்புகளில் ஏற்படும் தாக்குதல்களைத் தடுக்க உதவியாக இருக்கும்.

1 அ 3 ஆ 3. முத்திரையுடன் நியாஸ் செய்வதன் முக்கியத்துவம்

விரல்களைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட முத்திரையை உருவாக்கி, அதை குண்டலினி சக்கரங்கள் இருக்கும் இடத்திலோ அல்லது பிற இடங்களிலோ தொடுவது நியாஸ் எனப்படும். உடலிலிருந்து 1-2 செ.மீ இடைவெளியுடன் நியாஸ் செய்யப்பட வேண்டும். முத்திரைகள் மூலம் கிடைக்கும் நேர்மறை ஆற்றல் உடல் முழுவதும் பரவுகிறது, அதே நேரத்தில் நியாஸ் மூலம், அந்த நேர்மறை ஆற்றலை உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் செலுத்த முடியும். சுருக்கமாக, பிரச்சனைகள் தொடர்புடைய இடத்தில் அதிக ஆற்றலை செலுத்த அனுமதிப்பதால், கஷ்டங்களை விரைவாக தீர்க்க நியாஸ் உதவுகிறது.

1 அ 3 ஆ 4. பிராணசக்தி ஓட்டத்தில் உள்ள தடையைக் கண்டறிவது என்பது நியாஸ் செய்வதற்கான இடத்தைக் கண்டுபிடிப்பதாகும்

பிராணசக்தி ஓட்ட அமைப்பில் தடை ஏற்பட்டுள்ள பகுதியை சுற்றி கை விரல்களை நகர்த்தினால், அந்தத் தடையானது விரல்களில் வெளிப்படும் பிராணசக்தியின் ஓட்டத்திலும் தடையை ஏற்படுத்தி சுவாசத்தை நிறுத்தி விடுகிறது. இதன் மூலம் அடைப்பு உள்ள இடத்தை துல்லியமாக கண்டறிய முடியும். உடலிலிருந்து 1-2 செ.மீ இடைவெளியுடன் நியாஸ் செய்யப்பட வேண்டும். இந்த இடம் ‘நியாஸ்தான்’ என்று அழைக்கப்படுகிறது. தீய சக்திகள் முதன்மையாக குண்டலினி சக்கரங்களைத் தாக்கி, தடைகளை ஏற்படுத்தி, அந்த இடத்தில் கஷ்டத்தை கொடுக்கும் சக்திகளை சேமிக்கிறது. தடைகள் உருவாக்கப்பட்ட இடத்திற்கு, தொடர்புடைய உறுப்புகள் குறைவான பிராணசக்தியை பெறுவதால், தேஹ ஆரோக்கியம் பாதிப்படைகிறது. இந்த தடையை நீக்க, குண்டலினி சக்கரங்களை சுற்றி விரல்களை நகர்த்துவதன் மூலம் தடையின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும். இதேபோல், பல்வேறு ஆற்றல் பாதைகளில் உள்ள தடைகள் கண்டறியப்பட வேண்டும். இதைச் செய்ய, சக்கரங்களின் இருப்பிடத்தைத் தவிர, தலை, கழுத்து, மார்பு, வயிறு, கைகள், கால்கள் போன்ற அனைத்து உடல்பாகங்களையும் சுற்றி விரல்களை நகர்த்தி, தடைக்கான சரியான இடத்தைக் கண்டறிய வேண்டும்.

1 ஆ. திருப்தியடையாத முன்னோர்களால் ஏற்படும் கஷ்டங்கள்

தற்போது கூட்டுக்குடும்ப முறை இல்லாததால் பெரியவர்களை மதிக்கும் கலாச்சாரம் மறைந்து வருகிறது. மரியாதை இருக்கட்டும், பலர் தங்கள் பெற்றோர்களையே சரியாக நடத்துவதில்லை. அத்தகைய குடும்பங்கள் அந்த பெரியவர்கள் இறந்த பிறகு, அவர்களின் சாபத்தைப் பெறுகின்றன. மேலும்,
பெரும்பாலான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் ச்ரார்த்தம் (இறந்த மூதாதையர்களுக்காக செய்யப்படும் சிறப்பு சடங்கு) மற்றும் பக்ஷம் போன்ற சடங்குகளை செய்வதில்லை. எனவே, அத்தகைய குடும்பங்கள் திருப்தியடையாத முன்னோர்களின் ஆன்மாக்களால் ஏற்படும் கஷ்டங்களால் பாதிக்கப்படுகின்றனர். கருத்தரியாமை, கருச்சிதைவு, குறைப்பிரசவம், மனவளர்ச்சி குன்றிய குழந்தை அல்லது ஊனமுற்ற குழந்தை பிறப்பு ஆகியவை குடும்பத்தில் திருப்தியடையாத முன்னோர்களின் ஆன்மாக்களால் ஏற்படும் கஷ்டங்களின் சில அறிகுறிகளாகும். மேலும், போதைக்கு அடிமையாதல், மனநல கோளாறுகள், தோல் நோய் போன்ற உடல் உபாதைகள் ஆகிய பிற அறிகுறிகளும் இருக்கலாம். இறந்த முன்னோர்களால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து பாதுகாப்பு பெற தத்தாவின் நாமத்தை ஜபிப்பதுவே நன்மை பயக்கும்.

இப்பிரச்சனைகளுக்கு மூல காரணமான தத்தாவின் நாமத்தை ஜபிப்பது மட்டுமின்றி, பிராணசக்தி ஓட்ட அமைப்பு முறையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நிவாரணமும் இந்த பிரச்சனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டால் அது கூடுதல் நன்மை பயக்கும்.

2. ஆன்மீக நிவாரண முறைகளின்போது கவனிக்கப்பட்ட பல்வேறு அம்சங்கள்

2 அ. உடலைச் சுற்றியுள்ள கருப்பு சக்தியை அகற்றிய பிறகுதான் ஆன்மீக நிவாரணம் செய்யப்பட வேண்டும்

எந்த ஒரு நபருக்கும் கஷ்டத்தை ஏற்படுத்தும்போது, தீய சக்திகள் முதலில் கஷ்டம் தரும் சக்தியை வெளியிட்டு, அவரது குண்டலினி சக்கரங்களில் ஒன்றைச் சுற்றி கருப்பு சக்தி படலத்தை உருவாக்குகிறது. பின்னர் இந்தப் படலம் விரிவடைந்து அவரது முழு உடலையும், வெளிப்புறமாகவும் சூழ்ந்து கொள்கிறது. கருப்பு சக்தி படலம் உருவாக்கப்பட்டவுடன், அவரது தற்போதைய கஷ்ட நிலை பெரிதாகிறது. கறுப்பு சக்தி படலம் இருப்பதால், உடல், மன அல்லது ஆன்மீக கஷ்டங்களைப் போக்க, செய்யப்படும் நாமஜபம் மற்றும் பிற நிவாரணங்களிலிருந்து வரும் ஸாத்வீக அதிர்வலைகள் போதுமான அளவு அவரை சென்றடையாததால்,  கஷ்டமானது விரைவாக அகற்றப்படுவதில்லை. கருப்பு சக்தி படலத்தின் காரணமாக மருத்துவ சிகிச்சை கூட பலனளிக்காது. எனவே நம் உடலைச் சுற்றியுள்ள கருப்பு ஆவரணத்தை அகற்றுவது அவசியம்.

2 ஆ. துன்பம் முற்றிலும் நீங்கும் வரை, பிராணசக்தியின் ஓட்டத்தில் ஏற்படும் தடையின் இருப்பிடத்தை மீண்டும் மீண்டும் கண்டுபிடித்து, அந்த இடத்தில் ஆன்மீக நிவாரணத்தைத் தொடர வேண்டியது அவசியம்

நியாஸ் செய்ய அடையாளம் காணப்பட்ட இடத்தில் ஆன்மீக நிவாரணம் செய்த பிறகு, தடைகள் நீங்குகின்றன. பிறகு பிராணசக்தி ஓட்ட அமைப்பில் வேறு எங்கும் தடைகள் இருக்கிறதா என்று ஒருவர் சரிபார்த்து , அப்படி ஏதேனும் தடைகள் இருந்தால் அந்த இடத்திற்குரிய முத்திரை மற்றும் நாமஜபத்தை கண்டறிந்து ஆன்மீக நிவாரணம் செய்து அவற்றை அகற்ற வேண்டும். இந்த வழியில், பிராணசக்தி ஓட்ட அமைப்பில் வேறு எந்தத் தடையும் இல்லை என்பதை உறுதிப்படுத்த இந்த செயல்முறையை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும், அப்போதுதான் கஷ்டத்தை முழுமையாக அகற்ற முடியும். தீய சக்திகள் ஒன்றுக்கு மேற்பட்ட சக்கரங்களைத் தாக்கி, அந்த இடங்களில் கஷ்டம் தரும் சக்தியை சேமிக்கின்றன. எனவே, ஒருவர் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் கண்டுபிடித்து, அந்த இடங்களில் ஆன்மீக நிவாரணம் செய்து, அவற்றை தூய்மைப்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆன்மீக நிவாரணம் செய்யும்போது, அந்த இடத்திலிருந்த தடை நீங்கிவிட்டதாக உணர்கிறோம், ஆனால் உண்மையில் தீய சக்திகள் நம்மை ஏமாற்றுவதற்காகத் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டிருக்கும். எனவே, தடையின் இடம் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட வேண்டும்.

2 இ. சூட்சும பரிமாணங்களில் தீய சக்திகளின் தாக்குதலின் தந்திரத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆன்மீக நிவாரணத்தை வழங்குவதும் முக்கியம்

ஒருமுறை, ஒரு ஸாதகர் முத்திரை, நியாஸ் மற்றும் நாமஜபம் ஆகியவற்றைக் கண்டுபிடித்து ஆன்மீக நிவாரணம் செய்தார். இரண்டு மணி நேரம் நிவாரணம் செய்தும், கஷ்டம் குறையவில்லை என்பதை உணர்ந்து, இதுபற்றி என்னிடம் தெரிவித்தார். நான் ஆன்மீகத் தீர்வைத் தேடத் தொடங்கியபோது, ​​ தீய சக்திகள் அவரது தலையின் மேல் தொடர்ச்சியான கஷ்டம் தரும் சக்தி பிரவாஹத்தை வெளியிடுவதை  உணர்ந்தேன். அதனால் தான் எத்தனை ஆன்மீக நிவாரணம் செய்தாலும் அவருடைய கஷ்டம் குறையவில்லை.

ஒருமுறை, ஒரு ஸாதகர் தனக்குத்தானே ஆன்மீக நிவாரணம்  செய்துகொண்டிருந்தபோது, கஷ்டம் தரும் தீய சக்திகள்  அவருக்கு முன்னால் கருப்பு சக்தி திரையை உருவாக்கியது. இதனால் அவரது கஷ்டம் குறையவில்லை. மற்றொரு ஸாதகர் தனக்குத்தானே ஆன்மீக நிவாரணம் செய்து கொண்டிருந்தபோது, தரையில் இருந்து ஒரு கஷ்டம் தரும் தீய சக்தி அவரை நோக்கி பாய்ந்தது, அது பாதாளத்திலிருந்து வந்தது. இதனால் அவரது கஷ்டமும் குறையவில்லை. எனவே, ஆன்மீக நிவாரணத்தை செய்யும்போது, கஷ்டம் தரும் தீய சக்திகளின் தாக்கும் திசையை சூட்சும பரிமாணங்களிலிருந்து புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு நிவாரணம் செய்து, கஷ்டங்களிலிருந்து திறம்பட விடுபடுவது அவசியம்.

2 ஈ. ஆன்மீக நிவாரண முறையை செய்து முடித்த பின், நம் கண்களில் இருந்து கருப்பு சக்தியை அகற்றுவது முக்கியம்

ஆன்மீக நிவாரணத்தின் மூலம் நமது எல்லாச் சக்கரங்களிலும் உள்ள கருப்புச் சக்தியை முழுவதும் அகற்றிய போதும், இறுதியாக நம் கண்களில் உள்ள கஷ்டம் தரும் சக்தியை அகற்றுவது அவசியம், இல்லையெனில் தீய சக்திகள்  நம்மைத் தாக்குவதற்கு எளிதில் அந்த இடத்தைப் பயன்படுத்திக்கொள்ளும். நாம் நம் கண்களில் இருந்து கஷ்டம் தரும் சக்தியை அகற்றத் தொடங்கும்போது, நம் உடலில்  எஞ்சியிருக்கும் கஷ்டம் தரும் சக்திகள் அனைத்தும் கூட வெளியேறி நாம் இன்னும் லேசாக உணருவோம். சில சமயங்களில் நம் கண்களில் இருந்து கஷ்டம் தரும் சக்தியை வெளியேற்றும்போது சக்கரங்களில் ஒன்றின் மீது கடுமையான அழுத்தத்தை நாம் உணரலாம் மற்றும் கஷ்டம் அதிகரிக்கலாம். ஏனென்றால் தீய சக்திகளால் அந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கருப்பு சக்தி (நிர்குண நிலையில் வைக்கப்பட்டிருக்கும்) அப்போதுதான் வெளிப்படுகிறது.  தீய சக்திகள் நம் கண்களை விட்டு வெளியேறுவதால், நம் கண்கள் லேசாக ஆகிறது, பார்வையும் தெளிவாகிறது. இது நிகழும்போது, ஆன்மீக நிவாரண செயல் முறை முடிந்ததாகக் கருதலாம். இது நம் கண்களுக்கு ஆன்மீக நிவாரணம் செய்வதன் மற்றொரு பலன்.

3. சுருக்கம்

இவ்வாறு, மிக துல்லியமான முறையில் ஆன்மீக நிவாரணம் செய்வதன் மூலம் நமது ஆன்மீக கஷ்டங்களை சமாளிக்க முடியும். கஷ்டங்களின் தீவிரத்திற்கு ஏற்ப, அதை அகற்றுவதற்குத் தேவைப்படும் காலம் குறுகியதாகவோ அல்லது நீண்டதாகவோ இருக்கலாம். ஆன்மீக நிவாரணம்  செய்யும்போது, அந்த சமயத்தில் நாம் எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகள், உளவியல் சிகிச்சை போன்ற  சிகிச்சைகளும் குறுகிய காலத்தில் முழுமையான பலனை அளிக்கும். நாமஜபம் முதலான ஆன்மீக நிவாரணங்கள் மூலம் நமது கஷ்டங்கள் குறையும்போது,  நம்முள் கடவுள் நம்பிக்கை மேலும் வலுப்படுகிறது. மேலும் ஆன்மீக நிவாரணங்களால் ஏற்படும் பயன்களால் நமது வாழ்க்கையில் ஸாதனை  செய்வதன் முக்கியத்துவம் உறுதிப் பெறுகிறது. ‘இத்தகைய ஆன்மீக நிவாரணங்களின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்’ என்று குருதேவரின் திவ்ய சரணங்களில் பிரார்த்திக்கிறேன்.

–       (ஸத்குரு) டாக்டர் முகுல் காட்கில், Ph.D., கோவா.

தீய சக்திகள்

சுற்றுச்சூழலில் நல்ல மற்றும் தீய சக்திகள் செயல்பாட்டில் இருக்கின்றன. நல்ல சக்திகள் மனிதர்களுக்கு நற்செயல் செய்வதற்கு உதவுகின்றன. அதே சமயம் தீய சக்திகள் மனிதர்களைத் தொந்தரவு செய்கின்றன. முற்காலத்தில், இறந்தவர்களின் ஆவி, பேய்களின் வடிவில் உள்ள தீய சக்திகள் முனிவர்களைத் தொந்தரவு செய்யும். அந்த தீய சக்திகளையும், கருப்பு மாந்த்ரீகர்களையும் தடுக்க அவர்கள் மந்திரங்களை ஓதினர். தீய சக்திகளால் எற்படும் கஷ்டங்களிலிருந்து விடுபட பல்வேறு ஆன்மீக நிவாரணங்கள் வேத சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆன்மீக கஷ்டங்கள்

இது, ஒரு நபரிடம் உள்ள எதிர்மறை அதிர்வலைகளைக் குறிக்கிறது. ஒருவரிடம் எதிர்மறை அதிர்வலைகள் 50 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான இருப்பின் அது தீவிர கஷ்டம் என்றும், 30 முதல் 49 சதவிகிதம் இருப்பின் மத்யம கஷ்டம் என்றும், 30 சதவிகிதத்திற்கும் குறைவாக இருப்பின் லேசான கஷ்டம் என்றும் கூறப்படுகிறது. ஆன்மீக கஷ்டங்கள், ஒருவரது விதி மற்றும் அவர்களின் முன்னோர்களின் ஆன்மாக்களால் உண்டாகும் கஷ்டங்கள் போன்ற ஆன்மீக காரணங்களால் ஏற்படுகின்றன. ஆன்மீக கஷ்டங்களைப் பற்றி  சூட்சும அதிர்வலைகளை உணரக்கூடிய மஹான்கள் அல்லது ஸாதகர்களே கூற முடியும்.

சூட்சுமம்

மூக்கு, காது, கண்கள், நாக்கு மற்றும் தோல் ஆகிய ஐந்து புலன்கள் ஒரு நபரின் ஸ்தூல உறுப்புகளாகும். இந்த ஐந்து புலன்களுக்கும், மனம் மற்றும் புத்திக்கும் அப்பாற்பட்டது, சூட்சுமமாகும். இந்த சூட்சும உணர்வுகளை ஆன்மீகப் பயிற்சியின் மூலம் ஆன்மீகத்தில் முன்னேறும் சிலரால் உணர முடியும். இந்த ‘சூட்சுமம்’ பற்றிய ஞானம்  பல்வேறு சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூட்சும பார்வை மற்றும் கேட்டல் போன்றவை (ஐந்து சூட்சும புலன்கள் மூலம் ஆத்மஞானம் அடைதல்)

சில ஸாதகர்களுக்கு உள்முக பார்வை விழிப்படைந்துள்ளது. அதாவது அவர்களால் சூட்சும பரிமாணத்தில் பார்க்க முடியும், மற்றவர்களால்  சூட்சுமமான ஒலிகள் அல்லது வார்த்தைகளைக் கேட்க முடியும்.

எங்கே ஆன்மீக உணர்வு இருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஸாதகர்கள் அடைந்த தனிப்பட்ட ஆன்மீக அனுபவங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஆன்மீக அனுபவங்களை அனைவரும் பெறுவார்கள் என்று கூற முடியாது. – ஆசிரியர்

Leave a Comment