கண் திருஷ்டி என்பதன் பொருள் மற்றும் அதனால் பாதிக்கப்படும் செயல்பாடு

 

 கண் திருஷ்டி என்பதன் பொருள்

ஒருவருக்கு மற்றவர் மீது ஏற்படும் மேலாதிக்கமான ரஜ-தம ஆசைகளால் அந்த மற்றவருக்கு  ஏற்படும் கஷ்டம் ‘கண் திருஷ்டியால் ஏற்படும் துன்பம்’ என்று அழைக்கப்படுகிறது.

  1. கண் திருஷ்டி என்பதன் பொருள் : கண் திருஷ்டியால் பாதிக்கப்படும் நிகழ்வுகள்

1 அ. உதாரணமாக கண்திருஷ்டியால் ஒரு குழந்தை பாதிக்கப்படுதல். மகிழ்ச்சியான, ஆரோக்கியமான ஒரு குழந்தையைப் பார்க்கும்போது சிலருக்கு அவர்களை அறியாமலேயே ஆசை தொடர்பான எண்ணங்கள் வந்துவிடும். ஆசை தொடர்பான எண்ணங்களே ரஜ-தம-வின் பிரதானமான குணங்களாகும். குழந்தையின் சூட்சும உடலானது மிகவும் மென்மையானது. எனவே, ரஜ-தம அலைகளால் குழந்தையின் உடலானது   பாதிக்கப்படுகிறது, அதாவது, குழந்தை கண் திருஷ்டியால் பாதிக்கப்படுகிறது.

1 ஆ. சில நேரங்களில் ஒரு தனிநபர் அல்லது தீய சக்திக்கு,  மற்றொரு நபர், விலங்கு அல்லது ஒரு பொருளின் மீது கெட்ட எண்ணங்கள் தோன்றலாம் அல்லது அவர்களின் வெற்றியைக் குறித்து   பொறாமை கொள்ளலாம். இதனால் உருவாகும் எதிர்மறை அதிர்வலைகள் அந்த நபர், விலங்கு அல்லது பொருளை பாதிக்கிறது. இதுதான்  கண் திருஷ்டி பாதிப்பு என அழைக்கப்படுகிறது.

ஒருவரின் மனதில் மற்றொரு நபரின் மேல் அளவுகடந்த                பொறாமை அல்லது வெறுப்பு எண்ணங்கள் 30% க்கு மேல் இருந்தால், மற்றவருக்கு கண்திருஷ்டியினால் கடுமையான பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு உடல் நிலையைவிட உளவியல் நிலையில் அதிகமாக உள்ளது. இது சூட்சும நிலையில் கண்திருஷ்டியினால் ஏற்படும் பாதிப்பு என அழைக்கபடுகிறது

1 இ. மற்றவருக்கு கஷ்டம் தரும் எண்ணத்துடன் அகோரி வித்யா (அகோரிகள் என்பவர் சிவனை வழிபடும் மற்றும் சூனியம் செய்யும் ஒரு பிரிவினர்) மூலம் கருப்பு மாந்த்ரீகம் (சூனியம்) போன்ற சடங்கு செய்யப்படும்போதும், ​​அந்த  நபர் கண் திருஷ்டியால்  பாதிக்கப்படுகிறார்.

கருப்பு மாந்த்ரீகத்தின் விசேஷ தன்மைகள்

1) ‘கருப்பு மாந்த்ரீகமானது’ ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை மனதில் கொண்டு நிகழ்த்தப்படுகிறது.

2) கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டால், தீய சக்திகளின் தீவிரம் (பாதிப்பு) 30% வரை இருக்கும்; இருப்பினும் கருப்பு மாந்த்ரீகத்தின் மூலமாக பாதிக்கப்பட்டால், இதன் விளைவு 30%-ஐ தாண்டி மேலும் தீவிரமாகும்.

3) கண் திருஷ்டியின் அதிர்வலைகள் 30% அதிகமான அளவு கஷ்டங்கள் கொடுக்கும்போது அவை கருப்பு மாந்த்ரீக நிலைக்கு மாறுகின்றன.

1 ஈ. தீய சக்திகளால் வெளியிடப்படும் கருப்பு சக்தியினால் ஒரு தனிமனிதன் கஷ்டப்படுவதும், ‘ஒரு நபர் தீய சக்திகளின் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்’ என்றே அழைக்கப்படுகிறது.

2. கண் திருஷ்டி என்பதன் பொருள்: சூட்சும நிலையில் கண் திருஷ்டியால் பாதிக்கப்படும் செயல்முறை

சூட்சும அறிவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பின்வரும் படமானது ஒரு நபர் மற்றொரு தனிநபரின் கண் திருடியால் பாதிக்கப்படும்போது சம்பந்தப்பட்ட சூட்சும செயல்முறையை சித்தரிக்கிறது.

அடிக்குறிப்புகள்:

  1. படத்தில் உள்ள கஷ்டம் தரும் அதிர்வலைகள் :3%’ – ப.பூ. டாக்டர் ஆடவலே

2. சூட்சும அறிவின் அடிப்படையில் படத்தில் உள்ள அதிர்வலைகளின் சதவிகிதம் : கருப்பு ஆற்றல் 3.25%

3. பிற அம்சங்கள்

·        ஒருவரிடம் மற்றொரு நபரைப் பற்றி உருவாகிய ஆசை-சார்ந்த அலைகள், அந்த நபருக்கு அனுப்பப்பட்டு, அவர் மீது கண் திருஷ்டி படுகிறது.  இந்த ரஜ-தம பிரதானமான ஆசை மேலோங்கிய அலைகள் மற்ற நபரின்  உடல் (ஸ்தூல தேஹம்), உயிர் (பிராண தேஹம்), மனம் (மனோ தேஹம்) மற்றும் புத்தி (காரண தேஹம்) ஆகியவற்றை தாக்குகிறது.  அதன் விளைவாக அந்த நபரைச் சுற்றி கஷ்டம் தரும் ஆவரணம் உருவாகி, அவர் பல்வேறு வகையான துன்பங்களுக்கு ஆளாகிறார்.

·        ஒரு நபர், ஒரு விலங்கு, தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள் ஆகிய எதன்  மீதும் கண் திருஷ்டி பாதிப்பு ஏற்படலாம்.

தகவல் : ஸனாதன் ஸன்ஸ்தாவின் புனித நூல், ‘கண் திருஷ்டியால் ஏற்படும் கஷ்டம்  மற்றும் அதை அகற்றும் ஆன்மீக சாஸ்திரம்’

 

Leave a Comment