‘இரு உள்ளங்கைகளின் ஒருங்கிணைந்த முத்திரை’ செய்து உடலிலுள்ள கஷ்டம் தரும் சக்தியின் ஆவரணத்தைக் களையும் வழிமுறை!

Article also available in :

Contents

1.     ‘இரு உள்ளங்கைகளின் ஒருங்கிணைந்த முத்திரை’க்கான ஆய்வு

(படம் 1)

‘வருடம் 2021-ல் ஒருமுறை ஸனாதனின் ராம்நாதி ஆச்ரமத்தில் ஒரு யாகம் நடந்தது. அப்போது ‘யாகத்தில் ஆஹுதி அளிக்கும் யஜமானரிடம் கஷ்டம் தரும் கருப்பு சக்தி ஆவரணம் உள்ளது’ என்பதை உணர்ந்தேன். நான் அவரின் இந்த ஆவரணத்தைக் களைய முயற்சித்தேன்; ஆனால் அதை தூர விலக்க முடியவில்லை. அப்போது இது என் கவனத்திற்கு வந்தது, ‘தீய சக்தி, யஜமானர் மீது கஷ்டம் தரும் சக்தி பிரவாஹத்தை வெளியிடுகிறது. அதனால் அவரின் மீதுள்ள கஷ்டம் தரும் சக்தி ஆவரணம் குறையவில்லை. அதனால் கீழும் மேலும் வரும் கஷ்டம் தரும் சக்தி பிரவாஹத்தைத் தடுக்க வேண்டும்.’ இதற்கு பகவான் எனக்கு உணர்த்தினார், ‘ஒரு உள்ளங்கையை (வலது) தலையின் மீது 1-2 செ.மீ. தொலைவில் தன்னை நோக்கி வைத்துக் கொள் மற்றும் அதன் மீது மற்றொரு உள்ளங்கையை (இடது) அதன் மீது எதிர் திசையில் அதாவது மேல் நோக்கிய திசையில் வைத்துக் கொள். (படம் 1 பார்க்கவும்) இந்த புதிய முத்திரைக்கு நான் “இரு உள்ளங்கைகளின் ஒருங்கிணைந்த முத்திரை’ என பெயர் சூட்டினேன். நான் இந்த முத்திரையை செய்து “மஹாசூன்ய’ நாமஜபத்தை செய்தேன். அப்போது 10 நிமிடங்களில் கஷ்டம் தரும் சக்தி பிரவாஹம் நின்றது. அதோடு யஜமானர் மீது ஏற்பட்ட ஆவரணமும் பெருமளவு குறைந்தது.

1 அ. ‘இரு உள்ளங்கைகளின் ஒருங்கிணைந்த முத்திரை’யால் ஏற்பட்ட பரிணாமம்

யாகத்தின் யஜமானருக்காக இந்த புதிய முத்திரை மூலமாக உபாயம் செய்தபோது என் கவனத்திற்கு வந்தது என்னவென்றால், ‘இந்த முத்திரையில் மேல் நோக்கி இருக்கும் உள்ளங்கையால் உபாயம் ஏற்பட்டு தீய சக்திகள் வெளிப்படுத்தும் கஷ்டம் தரும் சக்தி பிரவாஹம் தடுக்கப்பட்டது மற்றும் என்னைப் பார்த்து இருக்கும் உள்ளங்கையால் என் மீது அதாவது நான் உபாயம் செய்யும் யாகத்தின் யஜமானர் மீது உபாயம் நடந்து அவரின் ஆவரணம் குறைந்தது.’ இது போன்று இந்த புதிய ‘இரு உள்ளங்கைகளின் ஒருங்கிணைந்த முத்திரை’ பற்றிய ஆய்வை செய்ய முடிந்தது.

2.     ‘இரு உள்ளங்கைகளின் ஒருங்கிணைந்த முத்திரை’யால் ஆவரணம் களைவதன் அவசியம்

(படம் 2)

முன்பு தீய சக்திகள் உடலில் ஆவரணத்தை ஏற்படுத்தும்போது அந்த ஆவரணம் ஒரு சக்கரத்திலோ அல்லது அதிகபட்சம் 2 சக்கரங்கள் மீதோ இருக்கும். அப்போது ‘கைகளால் ஆவரணத்தை சேகரித்து தூர எறிதல்’ என்ற வழிமுறை உதவியாக இருந்தது. (படம் 2 மற்றும் படம் 2அ பார்க்கவும்.)

படம் 2அ

பிறகு சூட்சுமத்தில் யுத்தத்தின் நிலை அதிகரித்தது. அப்போது தீய சக்திகள் உடலில் ஒரு சக்கரம் அல்லது இரு சக்கரங்களில் ஆவரணத்தை ஏற்படுத்தாமல் தலையிலிருந்து மார்புவரை 4 சக்கரங்களில் (ஸஹஸ்ராரத்திலிருந்து அநாஹத சக்கரம் வரை) அல்லது தலையிலிருந்து இடுப்புவரை 6 சக்கரங்களில் (ஸஹஸ்ராரத்திலிருந்து ஸ்வாதிஷ்டான சக்கரம் வரை) ஆவரணத்தை நிரப்பியது. அந்த சமயத்தில் ‘கோபுர முத்திரையை (டவர்) உடலில் சுழற்றுதல்’ என்ற வழிமுறையை உபயோகிக்க வேண்டியுள்ளது. இந்த முத்திரை என்றால் இரு கைகளின் நடுவிரல்களை ஒன்றோடொன்று இணைத்து மற்றும் மணிக்கட்டை தலையின் இருபுறமும் சாய்த்து கோபுர முத்திரையை செய்வது (படம் 3 பார்க்கவும்) மற்றும் இந்த முத்திரையை குண்டலினி சக்கரங்களில், அதாவது ஸஹஸ்ராரம் முதல் ஸ்வாதிஷ்டானம் வரை மேலிருந்து கீழே மற்றும் கீழிருந்து மேலே 6 – 7 முறை சுழற்ற வேண்டும்.

படம் 3

பிறகு சூட்சும யுத்தத்தின் நிலை மேலும் உயர்ந்தது. அப்போது தீய சக்தி, ஒருமுறை மட்டும் ஒருவரின் மீது ஆவரணத்தை ஏற்படுத்துவதோடு திருப்தி அடையாமல் அந்த நபரின் மீது கஷ்டம் தரும் சக்தியின் பிரவாஹம் தொடர்ந்து பாயுமாறு செய்தது. அதனால் ‘கைகளால் ஆவரணத்தை சேகரித்து தூர எறியும் வழிமுறை’ அல்லது ‘கோபுர முத்திரை வழிமுறை’ பயன்படவில்லை. ஏனென்றால் கஷ்டம் தரும் சக்தி பிரவாஹம் தொடர்ந்து பாய்வதால் எவ்வளவு முறை ஆவரணத்தைக் களைந்தாலும் அது தீருவதில்லை. அதற்கு அந்த நபரிடம் வரும் கஷ்டம் தரும் சக்தி பிரவாஹத்தை தடுத்து நிறுத்துவது அவசியமாகிறது. இது நடப்பதற்கு ‘இரு உள்ளங்கைகளின் ஒருங்கிணைந்த முத்திரை’ பயன்படுகிறது.

3, ‘இரு உள்ளங்கைகளின் ஒருங்கிணைந்த முத்திரை’ மூலம் உடலிலிருந்து ஆவரணத்தைக் களையும் வழிமுறை

முதலில் ‘பிராணசக்தி ஓட்ட உபாய வழிமுறை’ மூலமாக (உடல் மற்றும் உடலின் சக்கரங்கள் மீது கை விரல்களை சுழற்றி விரல்நுனியிலிருந்து வெளிப்படும் பிராணசக்தி மூலமாக ஆன்மீக கஷ்டத்திற்கு காரணமாக உள்ள உடலின் ஸ்தானங்களைக் கண்டுபிடித்தல், அதன் பிறகு அந்த ஸ்தானத்தில் கஷ்டத்தின் தீவிரத்திற்கேற்ப கைவிரல்களின் முத்திரை மற்றும் நாமஜபத்தை கண்டுபிடித்து அதன் மூலம் உபாயம் செய்தல்’) எந்த நாமஜபத்தை செய்வது? என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். (இதற்கான ஸனாதன் நூலான ‘நோய்-நிவாரணத்திற்காக பிராணசக்தி ஓட்டத்தில் ஏற்படும் தடைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது?’ என்பதைப் படிக்கவும்.) உடலில் ஆவரணத்தைக் களையும்போது இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட நாமஜபத்தை தொடர்ந்து செய்யவும். உடலிலிருந்து ஆவரணம் விலகுவதற்கு , ‘இரு உள்ளங்கைகளின் ஒருங்கிணைந்த முத்திரை’யை செய்து குண்டலினி சக்கரங்களின் மீது (ஸஹஸ்ராரம் முதல் ஸ்வாதிஷ்டானம் வரை) மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் 7 – 8 முறை சுழற்றவும். ஒவ்வொரு சக்கரத்திற்கு அருகே வரும்போது சுமார் அரை நிமிடம் தாமதிக்கவும். முத்திரையை சக்கரங்களின் மீது சுழற்றும்போது உடலிலிருந்து 2-3 செ.மீ. தொலைவில் வைக்கவும்.

இம்முறைப்படி ஆவரணத்தைக் களையும்போது உடலின் மீது ஆவரணத்தால் ஏற்பட்ட பாரம் மற்றும் அழுத்தம் வெகுவாக குறைவதை உணர முடிகிறது. பிறகு மீதமுள்ள ஆவரணத்தை நீங்கள் ‘கைகளால் ஆவரணத்தை சேகரித்து தூர எறியும் வழிமுறை’ (குறிப்பு 2 பார்க்கவும்) மூலமாகவும் தேவையானால் ‘கோபுர முத்திரை’ உபயோகித்தும் பூரணமாக தூர விலக்க முடியும்.

4. ‘இரு உள்ளங்கைகளின் ஒருங்கிணைந்த முத்திரை’யால் மேலும் கவனத்திற்கு வந்த சில பயன்கள்

(படம் 4)

4 அ. சேவை செய்யும் அறையில் மேலிருந்து வரும் கஷ்டம் தரும் சக்தி பிரவாஹத்தைத் தடுத்தல் மற்றும் பாதாளத்திலிருந்து அதாவது பூமியிலிருந்து வரும் கஷ்டம் தரும் சக்தி பிரவாஹத்தைத் தடுத்தல்

நீங்கள் கணினியில் சேவை செய்யும்போது சில சமயங்களில் கணினி திடீரென்று அணைந்து போகலாம் அல்லது செய்யும் சேவையில் தவறுகள் (error) ஏற்படலாம். அதேபோல் மற்ற சில சேவைகளிலும் தடங்கல்கள் ஏற்படலாம். அப்போது சூட்சுமத்தில் பார்த்தால் தீய சக்திகள் சேவைகளின் மீது கஷ்டம் தரும் சக்தியை வெளிப்படுத்துகின்றன என்பது கவனத்திற்கு வருகிறது. அச்சமயத்தில் அந்த கஷ்டம் தரும் சக்தியைத் தடுப்பதற்கு , ‘இரு உள்ளங்கைகளின் ஒருங்கிணைந்த முத்திரை’ உபயோகமாக உள்ளது. அப்போது உங்களின் ஒரு உள்ளங்கையை மேல் நோக்கி இருக்குமாறும் மறு கையின் உள்ளங்கை கீழ் நோக்கி இருக்குமாறும் முத்திரையை உங்களுக்கு முன்னால் வைக்கவும். (படம் 4 பார்க்கவும்) (முடிந்தால் நீங்கள் சேவை செய்ய உபயோகிக்கும் பொருள், உதா. கணினி அல்லது வேறு ஒரு யந்திரத்தின் மீதும் நேரிடையாக இந்த உபாயத்தை செய்யலாம். அப்போது , ‘இரு உள்ளங்கைகளின் ஒருங்கிணைந்த முத்திரை’யை கணினி அல்லது யந்திரத்தின் முன் செய்யலாம். அதன் மூலம் கணினி/யந்திரத்தின் மீது உபாயம் ஏற்படும். அதோடு கஷ்டம் தரும் சக்தி பிரவாஹமும் தடைபடும்.) எந்த திசையில் தீய சக்தியை தூர விலக்க வேண்டுமோ அந்த திசையை நோக்கி கையின் உள்ளங்கை இருக்க வேண்டும். மற்றும் கஷ்டத்திற்கு ஏற்றபடி தேவையான ‘சூன்ய, மஹாசூன்ய, நிர்குண் அல்லது ஓம்’ இவற்றில் ஒரு நாமஜபத்தை செய்யவும். எப்போது உங்களின் அறையில் லேசான தன்மையை உணர்கிறீர்களோ அப்போது உபாயத்தை நிறுத்தலாம்.

அதேபோல் அவ்வப்பொழுது தீய சக்திகள் பாதாளத்திலிருந்து, அதாவது பூமியிலிருந்து கஷ்டம் தரும் சக்தியை வெளியிடுகிறது. இந்த கஷ்டம் தரும் சக்தியை தடுப்பதற்கு படம் 4-ல் காண்பித்துள்ள முத்திரையை உபயோகிக்கலாம்.அச்சமயம் பூமியிலிருந்து வெளியாகும் கஷ்டம் தரும் சக்தி பூமி திசையில் உள்ள உள்ளங்கையாலும் நாமஜபத்தாலும் தடுக்கப்படுகிறது.

படம் 5

4 ஆ. உங்கள் முன்னாலிருந்து கஷ்டம் தரும் அந்த சக்தியை தடுத்தல் அதோடு உங்களின் முன்னாலுள்ள கஷ்டம் தரும் சக்தி திரையை நீக்குதல்

சில சமயங்களில் தீய சக்திகள் உங்களுக்கு முன்னாலிருந்து கொண்டு கஷ்டம் தரும் சக்தியை வெளியிடுகிறது. அதேபோல் சில சமயங்களில் தீய சக்திகள் உங்களுக்கு முன்னால் கஷ்டம் தரும் சக்தித் திரையை ஏற்படுத்துகிறது. இது போன்ற சமயங்களில் ‘இரு உள்ளங்கைகளின் ஒருங்கிணைந்த முத்திரை’ உபயோகமாக உள்ளது. அச்சமயம் ஒரு உள்ளங்கை உங்களைப் பார்த்தும் மற்றொரு உள்ளங்கை வெளிப்புறம் பார்த்தும் இருக்குமாறு முத்திரை வைக்க வேண்டும். (படம் 5 பார்க்கவும்) அதோடு அவசியமானால் நாமஜபம் செய்யவும். உங்களின் உடலில் லேசான தன்மை வரும்வரை இந்த உபாயத்தைத் தொடர்ந்து செய்யலாம்.

குருவருளால் உடலில் ஆவரணத்தை களையும் வழிமுறையின் ஆய்வு நடந்தது. அதற்காக ஸாதகர்களாகிய நாம் ஸ்ரீ குருவின் சரணங்களில் நன்றியை அர்ப்பணமாக்குவோம்.’

–    (ஸத்குரு) டாக்டர் முகுல் காட்கில், கோவா. (9.7.2023)

 

Leave a Comment