ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கிலின் அமுத வாக்கு !

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில்

1.     தவறுக்காக ஸாதகர்கள் எடுக்கும் பிராயச்சித்தம் எப்போதும் குருகாரியத்தை மேலே கொண்டு செல்வதாக இருக்க வேண்டும்!

‘ஸாதனை செய்யும்போது ஸாதகர்கள் தவறுகளை இழைத்தால், அந்த தவறுக்கான பாவம் குறைவதற்காக அவர்கள் பிராயச்சித்தம் எடுத்துக் கொள்கின்றனர். ஸாதகர்கள் எடுக்கும் பிராயச்சித்தம் எப்போதும் குருகாரியத்தை மேலே கொண்டு செல்வதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, சேவையின் கால அளவை அதிகப்படுத்துதல், சேவையை அதிக வேகத்தோடு செய்தல், பொறுப்பை ஏற்றுக் கொண்டு சேவை செய்தல் போன்றவை. சேவை செய்யும்போது வ்யஷ்டி ஸாதனை மீது கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது.

2.     ஸாதனை மற்றும் சேவை செய்யும்போது அதன் இறுதி பலன் ‘ஆனந்தம்’ என்பதாக இருக்க வேண்டும்!

3.     குருகாரியத்திற்கு எவ்வித தீங்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஸமஷ்டி சேவை செய்யும்போது அவ்வப்போது அந்த சேவை பற்றி பயில்வது அவசியமானது!

ஸமஷ்டி சேவை செய்யும்போது அந்த சூழ்நிலை நம் கையை விட்டுப் போவதற்கு முன்பு முன்முயற்சி எடுத்து அதைப் பயில வேண்டும். சேவையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு மற்றவரிடமும் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் ஸமஷ்டி சேவையின் மீது அதன் பரிணாமம் ஏற்பட்டு குருகாரியத்திற்கு தீங்கு நேரிடக் கூடும். அதாவது சேவையின் பலாபலன் குறைந்து போகும்.

4.     சேவையை ஏற்கும்போது ஸாதகர்களின் கண்ணோட்டம் எவ்வாறிருக்க வேண்டும்?

ஸாதகர்கள், ‘என் மூலமாக இந்த சேவை நடக்குமா?’ என்று யோசிப்பதைக் காட்டிலும் ‘இந்த சேவையை என் குருவானவர் எனக்கு அளித்திருக்கிறார். அதனால் அதை நான் நிச்சயம் செய்வேன்; குருவே என் மூலமாக அந்த சேவையை செய்விப்பார்’ என்று சிந்திக்க வேண்டும். அதன் மூலமாக நேர்மறைத் தன்மை ஏற்படுகிறது மற்றும்  குருவிடம் ச்ரத்தை அதிகரிக்கிறது.

5.     நாம் சலிப்படையாமல் முயற்சி செய்தால் பகவான் நம் பக்கம் நிச்சயம் இருப்பார். பகவானின் உதவி கிடைத்த பிறகு நடக்க முடியாததும் நடந்தேறும்!

6.     ஸாதகர்கள் நேர்மறைத் தன்மையுடன் இருப்பது மகத்துவமானது!

சூழ்நிலை மாறாது. அதனால் ஸாதகர்கள் சூழ்நிலையை மாற்ற முயற்சிப்பதற்கு பதிலாக தங்களின் சிந்தனையோட்டத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். நேர்மறையான சிந்தனையோட்டம் சூழ்நிலையை எதிர்கொண்டு வெற்றியை வாங்கித் தரும்!’

–    ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில்

 

 

Leave a Comment