
ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில்
1. ‘நம்முடைய ஸாத்வீகமான சிந்தனை மற்றும் நல்ல கர்மாக்கள் விச்வமண்டலத்தில் குறிக்கப்படுகின்றன. இந்த அதிர்வலைகள் உலகம் முழுவதும் வியாபித்துள்ள பகவானிடம் தானே செல்கிறது மற்றும் பகவானின் ஸகுண ரூபமான குருவின் மனதில் அதன் பிரதிபிம்பம் பதிவாகிறது. அதன் மூலம் நம் மீது குருவருள் பொழிய ஆரம்பிக்கிறது; நாம் குருவருளுக்கு பாத்திரமாகிறோம்.
2. ஏதாவது ஒரு நிகழ்வு நடக்கும்போது அந்நிகழ்வைப் பார்க்கும் நம் பார்வை மற்றும் அந்நிகழ்வைக் கையாளும் விதம் ஆகிய நம் சிந்தனை மற்றும் செயல், ஆன்மீக சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். எப்பொழுதும் எந்த ஒரு சிந்தனையும் செயலும் ஒருதலைப்பட்ச கண்ணோட்டத்துடன் இருக்கக் கூடாது. எல்லா வித கண்ணோட்டங்களிலும் பார்த்து ஒரு விஷயத்தை சிந்திக்க வேண்டும். ஸாதனையில் ஒரு ஸாதகர் சரியான கண்ணோட்டத்தை முழுமையாக பெற்றார் என்றால் அவர் உலகில் எங்கு போனாலும் அவருக்கு எவ்வித கஷ்டமும் ஏற்படாது. இந்த ஆன்மீக பயணத்தில் பல்வேறு இயல்புடைய மனிதர்கள் நம்மை சந்திக்கின்றனர். நம்முடன் பல விஷயங்கள், நிகழ்வுகள் நடக்கின்றன. பரந்த நோக்குடன், எல்லாருடைய நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு, பகவானிடம் கேட்டு, அங்குள்ள மகானிடம் அல்லது பொறுப்பேற்றிருக்கும் ஸாதகரிடம் கேட்டு ஸமஷ்டி நலனுக்காக செய்யப்படும் செயல் மற்றும் சிந்தனையே நம்முடைய ஸாதனையின் கண்ணோட்டத்தை வியாபகமாக்குகிறது. அப்போது அதிலுள்ள ஆன்மீக கண்ணோட்டத்தை புரிந்து கொள்ளும் திறன் நமக்கு வர வேண்டும். “எந்நிலையில் எது நடக்கிறது?’ என்பதை அறியும் அளவிற்கு ஸாதகரின் கண்ணோட்டம் சித்தமாக வேண்டும். காலம் மிகவும் குறைவு. ‘எல்லோரையும் புரிந்து கொள்ளக்கூடிய பரந்து விரிந்த வியாபகத்தன்மை இருப்பது’ என்பது உத்தம கண்ணோட்டத்தின் ஒரு பகுதி.’
– ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில்
ஸ்ரீராமர் – ஒரு ஆதர்ச எதிரி
திருக்கார்த்திகை தீபம்
ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கிலின் அமுத வாக்கு !
மேலைக் கலாச்சாரத்தை பின்பற்றுவதால் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும் இந்தியர்கள்
கைசிக ஏகாதசி
நமஸ்காரத்தை எவ்வாறு செய்வது?