திருக்கார்த்திகை தீபம் இமயம் முதல் குமரி வரை அநாதி காலத்திலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் சொல்வதற்காக ஒரு ஸ்லோகம் தர்மசாஸ்திரத்தில் எழுதப்பட்டுள்ளது.
கீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
ஸுகின பவந்து ச்வபசா ஹி விப்ரா
இதன் அர்த்தம் : இன்றைய தினம் இந்த தீபத்திலே ஆவாஹனம் செய்யப்பட்ட மூர்த்தியை (தாமோதரன் அல்லது உமாதேவியுடன் கூடிய த்ரயம்பகன்) நினைத்துக் கொண்டு யார் இந்த பிரகாசத்தைப் பார்த்தாலும் அல்லது அந்தப் பிரகாசம் எந்தப் பொருளின், ஜீவனின் மீது பட்டாலும் (புழு, பூச்சி, கொசு, மரம், நிலத்தில் அல்லது நீரில் வாழும் உயிரினங்கள்) அவர் – அவை எல்லாவற்றின் பாபங்களும் நிவர்த்தியாகி புனர்ஜன்மம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே பிரார்த்தனை.
இக்காரணத்தினால்தான் அண்ணாமலை தீபம் என்று திருவண்ணாமலை உச்சியின் மேல் மைல் கணக்காக தள்ளி இருக்கும்படியானவர்களுக்கும் கூட தரிசனம் பண்ணும்படியாக தீபம் ஏற்றி வருகிறார்கள். இந்த ஜ்வாலையைப் பார்க்கும்படியான மனிதர்களின் பாவங்கள் மட்டும் நிவர்த்தியாவது இல்லை; மாறாக உலகின் அனைத்து ஜீவராசிகளின், புழு, பூச்சி, செடிகொடி உட்பட அனைத்தின் பாவங்களும் நிவர்த்தியாகின்றன.
‘லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து’ என்ற உன்னத நோக்கத்தை இது வெளிப்படுத்துகிறது. ஆலயங்களில் கிருத்திகை நக்ஷத்திரத்தன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. கிருத்திகை நக்ஷத்திரம் முருகனுடன் சம்பந்தப்பட்டது. ஆறு கிருத்திகா நக்ஷத்திரங்கள் முருகனின் தாயார்களாக இருந்தார்கள். எல்லா கோவில்களிலும் எல்லா க்ஷேத்ரங்களிலும் ஒரே நாளில் கொண்டாடப்படும் ஒரே உற்சவம் திருக்கார்த்திகை தீபம் என்பது இதன் சிறப்பு.
தகவல் : ‘ஆச்சாரிய ஸ்வாமிகள் உபந்நியாசங்கள்’ நூல்
ஸ்ரீராமர் – ஒரு ஆதர்ச எதிரி
கைசிக ஏகாதசி
ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸ்தாபகரான ஸச்சிதானந்த பரபிரம்ம (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே அவர்களின் குருபூர்ணிமா செய்தி! (2024)
த்ரிபுராரி பௌர்ணமி (கார்த்திகை பௌர்ணமி)
குருபூர்ணிமா
குருபூர்ணிமா என்பது பகவானிடம் வெளிப்படுத்தப்படும் நன்றியுணர்வு மற்றும் தனக்குள் அதிகப்படுத்தும் சைதன்யம்!