மனிதனின் வாழ்வு மேலை நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுவதால், தீய பழக்கங்களால் நிரம்பி உள்ளது. இதனால் மனிதனின் ஆயுட் காலமும் குறுகி உள்ளது. நமது வாசகர்களின் நன்மைக்காக : வஜ்ரதாரி மாத பத்திரிகையிலிருந்து – போதைப் பழக்கத்துக்கு அடிமையானதற்கான அடையாளம் மற்றும் அதன் தீய விளைவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. போதைப் பழக்கத்தால் தனி மனிதன் மட்டுமின்றி, குடும்பம் மற்றும் சமூகமும் அதன் தீய விளைவுகளை எதிர் கொள்ள நேரிடுகிறது
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள் இருவகைப்படும்.
1. உடனடி விளைவுகள் 2. நீண்ட கால விளைவுகள்.
போதைப் பழக்கம் ஆரம்பித்த உடனேயே அதன் உடனடி விளைவுகள் தென்பட ஆரம்பிக்கின்றன. ஆனால் நீண்ட கால விளைவுகளோ, அம்மனிதன், போதைக்கு முழுமையாக அடிமையான பிறகே தெரிய வருகின்றன. உண்மையில், போதைக்கு அடிமையானவனின் உடல், மனம், குடும்பம், சமூகம் மற்றும் குழந்தைகளும் பாதிக்கப் படுகிறார்கள்.
2. போதைக்கு அடிமையானவர்களின் அகத்தோற்றம்
போதைக்கு அடிமையானவர்களின் மனம் துவக்கதிலிருந்தே மிகவும் பலவீனமாக இருக்கும். அதனால்தான் ஒரு பிரச்சனைக்கு முடிவு காண்பதற்கு பதிலாக, அவன் போதை பழக்கத்தை தேர்ந்தெடுக்கிறான். அதன் காரணமாகவே, அவன் தீய பழக்கத்துக்கு அடிமையான பிறகு அவனது அகத்தோற்ற மாற்றங்கள் எளிதில் தென்பட ஆரம்பிக்கிறது.
அ. போதைப் பொருட்களுக்காக ஏங்குதல்.
ஆ. அளவில்லாமல் போதைப் பொருட்களை உபயோகித்தல்.
இ. போதையிலேயே மூழ்கியிருத்தல்.
ஈ. போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீங்குகளை அனுபவித்தாலும்,போதைப்பழக்கத்தையே தொடர்தல்.
உ. தான் போதைக்கு அடிமை என்பதை மறுத்தல்.
இந்த எல்லா எதிர்மறை எண்ணங்களும் அவனது போதைப் பழக்கத்தின் தீவிரத்தை அதிகரிக்கின்றன. மேலும், அவன் அதில் இருந்து வெளிவர விரும்புவதில்லை. பின்னர் உடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.
3. உடல் சம்பந்தமான பிரச்சனைகள்
போதைப் பழக்கத்தினால் உடல் உறுப்புகள், தீவிரமாக பாதிக்கப்பட்டு, பல வியாதிகளை தோற்றுவிக்கின்றன. உடலை பலவீனமடையச் செய்கிறது. உடலின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கின்றது. இதனால் நோயினை எதிர்த்து போராடுவது கடினமாகி விடுகிறது. முக்கியமாக, வயிறு, உணவுக் குழாய், வாய், கல்லீரல் மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள் வருகின்றன.
4. மனோரீதியான பிரச்சனைகள்
மனச்சோர்வு, கவலை, உள்முகமாக இருத்தல், ஒரே செயலை மறுபடியும் மறுபடியும் செய்வது., குற்ற உணர்வு, மூளையை சுயக் கட்டுப்பாட்டில் வைக்கும் திறனை இழத்தல், உடல், மற்றும் மனதினிடையே ஒத்துழைப்பு இல்லாமை, கவனக்குறைவு, போதை பொருள்களில் நாட்டம், சிந்தனைத் திறன் மிகவும் குறைவாக இருப்பது, நினைவாற்றலை இழத்தல், ஆராயும் திறன் இல்லாமை, அதிக மனக்கிளர்ச்சி அல்லது அது இல்லாமல் இருத்தல், அமைதியற்ற உறக்கம், மன அழுத்ததை சமாளிக்க முடியாமல் இருத்தல், நீண்டு தொடரும் அசாதாரண நடத்தை, எதைக் கண்டாலும் பயம், காணாவிட்டாலும் பயம். தன்னிடமும் , மற்றவரிடமிருந்தும் நியாமற்ற எதிர்பார்ப்பு, திறமையின்மை முதலியன மனோரீதியான பிரச்சனைகள்.
5. சமுக பிரச்சனைகள்
போதைக்கு அடிமையானவரும், அவரது குடும்பமும், சமூகத்தில், அவர்களது, இடத்தையும், மதிப்பையும் இழக்கின்றனர். சமூகத்தின் தொடர்பற்று இருத்தல், மற்றும் தனிமை அவர்களின் மன இறுக்கத்தை கூட்டுகிறது. அந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையானவரின் குடும்பம் மக்களின் அனுதாபதிற்கு ஆளாக நேரிடுகிறது.
6. உடலில் ஏற்படும் தீய விளைவுகள்
அ. அதிகரிக்கும் விபத்துக்கள்.
ஆ. போதைப் பொருளை குறைத்தாலோ அல்லது நிறுத்தினாலோ உடல் நடுங்குதல் போன்ற பின்னடையும் விளைவுகள்.
இ. அதிகமாக வியர்த்தல்.
ஈ. இதயத் துடிப்பு அதிகரித்தல்.
மேலே குறிப்பிட்ட தீய விளைவுகளை (பின்னடைவுகளை) அனுபவிக்கும் அந்த போதைக்கு அடிமையான மனிதர் , போதை பொருளை உபயோகிப்பதே தன்னைக் காப்பாற்றும் என எண்ணுகிறார்.
7. உள்ளத்தில் ஏற்படும் தீய விளைவுகள்
அ. போதைக்கு அடிமையான மனிதர், தன்னை சமூகத்திலிருந்தும், நண்பர்களிடமிருந்தும், மற்றும் குடும்பத்திலிருந்தும் தனிமைப்படுத்திக்கொள்கிறார்.
ஆ. மனம் கட்டுப்பாட்டை இழப்பதால், எதிர்விளைவுகளும் அவரது காட்டுபாட்டில் இருக்காது.
இ., வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மகிழ்ச்சியை தேடுவதிலும் அவருக்கு ஆர்வம் இருப்பதில்லை.
ஈ. வாழ்க்கையில் ஏற்படும் அலுப்பு.
உ. நிம்மதியற்ற உறக்கம், அதீத கவலை, திடீர் திடீர் என வெடிக்கும் கோபம்.
உ. தீவிரமான தற்கொலை எண்ணம்.
போதைக்கு அடிமையானவனை விட, ஒரு சராசரி மனிதனால் மேற்கண்ட தீய விளைவுகளை எளிதாக எதிர் கொள்ள இயலும். ஏனெனில், போதைக்கு அடிமையானவனின் மூளையின் செயல் திறமை, மன அழுத்தங்களை சமாளிப்பதில் குறைவாகவே இருக்கும்.
8. போதைக்கு அடிமையானவருக்கு ஏற்படும் நோய்கள்
பலவீனம், வைட்டமின்(உயிர் சத்து) குறைபாட்டால் உண்டாகும் நோய்கள்
அனைத்து விதமான புற்று நோய்கள், -வாய் முதல் குடல் வரை, கல்லீரல் சம்பந்தமான நோய்கள், பார்வைக் கோளாறு. புரதச்சத்து குறைபாடு முதலியன.
(ஆதாரம்: வஜ்ரதாரி மாத பத்திரிகை-9-7-2015)
ஸ்ரீராமர் – ஒரு ஆதர்ச எதிரி
திருக்கார்த்திகை தீபம்
ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கிலின் அமுத வாக்கு !
ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கிலின் அமுத வாக்கு
கைசிக ஏகாதசி
நமஸ்காரத்தை எவ்வாறு செய்வது?