“நாம ஸ்மரணம் எவ்வாறு செய்வது?”, என்பது பற்றி ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் அளித்த அற்புத வழிகாட்டுதல்!

1. நாம ஸ்மரணம் பக்திபூர்வமாக நடப்பதற்கு நாமத்தை சொல்லும்போது புதுப்புது பக்தி பிரயோகங்களை செய்து மனதை ஸாதனையில் ரமிக்கும்படி செய்ய வேண்டும்!

‘நாம ஸ்மரணம் என்பது நாமம் மற்றும் அதன் ஸ்மரணம். நாம் நாமத்தை எடுத்துக் கொள்கிறோம்; ஆனால் அதை ஸ்மரணம் செய்வது இல்லை. நாம ஸ்மரணத்தின் அடுத்த நிலை என்பது பக்திபூர்வமான நாம ஸ்மரணம். இந்த நிலையில் நாமத்தை பக்தி உணர்வுடன் இணைக்க வேண்டும். பக்தி உணர்வுடன் இணைப்பது என்றால் ஒவ்வொரு முறையும் நாமத்தை சொல்லும்போது ஆன்மீக உணர்வு பெருக ஏதாவது ஒரு பிரயோகத்தை செய்ய வேண்டும். முதல் படியில் மனதை புதுப்புது பக்தி பிரயோகங்களுடன் இணைத்து ஸாதனையில் ரமிக்கும்படி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு நாமஜபம் பக்திபூர்வமாக நடப்பதற்கு சில சமயம் மனதிலுள்ள அனாவசிய எண்ணங்களை பெருக்கி மனதை சுத்தப்படுத்துவோம், சில சமயம் குருவுக்கு, கிருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்வோம், சில சமயம் குருதேவருக்கு பாதபூஜை செய்வோம், சில சமயம் கிருஷ்ணனை நம்முடைய மனக்கோவிலில் அமர்த்தி ஆரத்தி செய்வோம், சில சமயம் கோவிலை பிரதட்சிணமாக வலம் வருவோம், இது போன்ற விதவிதமான பிரயோகங்களை செய்வோம். இது போன்று நம்முடைய மன ரூபமான குழந்தையை விதவிதமான காட்சிகளை காட்டி சும்மா இருக்க வைப்போம். இதன் மூலம் மனம் நல்ல ஸன்ஸ்காரங்கள் பதியக் கூடிய விளைநிலமாக மாறுகிறது. ஸன்ஸ்காரங்களை பதிய வைக்க வேறு முயற்சிகள் தேவையிருப்பதில்லை.

 

2. மனதில் நாம ஸ்மரணம் ஆழமாக பதிய,விதவிதமான பக்தி
பிரயோகங்களை கண்டுபிடிக்க புத்தியை பழக்குங்கள்!

எப்படி ஒரு குழந்தைக்கு புது விளையாட்டு பொம்மையைக் கொடுத்தவுடன் அது அதைக் குளிப்பாட்டி, உணவூட்டி, தாலாட்டி விளையாடுகிறது. பின்பு வேறு ஒரு பொம்மையிடம் அதன் கவனம் செல்லுகிறது. அதேபோல் நம் மனதை நாம ஸ்மரணத்தில் லயித்திருக்கும்படி செய்வதற்கு புத்தியை, வெவ்வேறு பக்தி பிரயோகங்களை தேடிக் கண்டுபிடிக்க பழக்க வேண்டும். அதன் மூலம் மனம் மற்றும் புத்தி ஆகிய இரண்டுமே அதில் லயிக்க ஆரம்பிக்கிறது. இது போன்று ஸன்ஸ்காரங்கள் மனதில் பதிந்த குழந்தை பெரியவன் ஆன பின்பு எப்பொழுதும் ஆனந்தத்திலேயே அவனால் இருக்க முடிகிறது.

 

3. நாமத்தோடு பகவானின்
ஸ்மரணம் மற்றும் பக்தி பிரயோகத்தை
இணைக்கும்போது அது பூரணத்துவம் பெறுகிறது!

ஒவ்வொரு நாமத்துடனும் பக்தியுணர்வு பெருகக் கூடிய காட்சியை இணைக்கும்போது பக்தியோகம் மற்றும் நாமயோகம் ஆகிய இரண்டும் நடக்கிறது. நாமத்தால் பல யோகங்கள் சாத்தியமாகின்றன. பக்தியில்லாமல் நாமம் யந்திரத்தனமாக இருக்கும். நாமத்தோடு பகவானின் ஸ்மரணம் மற்றும் பக்தி பிரயோகத்தை இணைக்கும்போதே அது பூரணத்துவம் பெறுகிறது. அப்பொழுதே நாமஜபத்தின் உண்மையான அநுபூதி கிடைத்து அதன் ஆனந்தத்தை அனுபவிக்க முடிகிறது.

 

4. ஒவ்வொரு நாமத்தையும் பக்தியுணர்வு காட்சியுடன் இணைக்கும்போது கர்மயோகம் மற்றும் ஞானயோகம் மட்டுமல்லாது மனம் பக்தியால் நிரம்பியிருப்பதால் பக்தியோகமும் கைகூடுகிறது; எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் தரத்திலும் உயர்ந்த நாமஜபத்தை செய்ய முடிகிறது; நாமஜபத்தின் பலன் அதிகமாக கிடைக்கிறது!

நாமஜபத்தில் ஒவ்வொரு நாமத்துடனும் பக்தியுணர்வு காட்சியை இணைத்து செய்யும்போது கர்மயோகம் சாத்தியமாகிறது; காரணம் மனம் ஏதாவது ஒரு ஸாத்வீக காரியத்தில் ஈடுபடுகிறது. வெவ்வேறு பக்தியுணர்வு காட்சிகளை கண்டுபிடிக்க புத்தியும் சேவையில் ஈடுபட வேண்டி உள்ளது. அதன் மூலம் புத்தி புதுப்புது விஷயங்களை கற்கிறது; அதன் மூலம் ஞானயோகம் சாத்தியமாகிறது. நாமஜபத்தை செய்யும்போது மனம் பக்தியால் நிரம்பியிருப்பதால் பக்தியோகமும் சாத்தியமாகிறது. இது போன்று நாமஜபம் செய்வதால் தரத்தில் உயர்ந்த நாமஜபத்தை செய்ய முடிகிறது; அதோடு நாமஜபத்தின் பலனும் அதிகமாக கிடைக்கிறது.

– குமாரி ஐஸ்வர்யா ஜோஷி (14 வயது), ஸனாதன் ஆஸ்ரமம், மீரஜ் (20.10.2017)

 

Leave a Comment