ச்ரத்தா பக்தியின் உச்ச நிலையை வெளிப்படுத்தும் ஜகந்நாத் ரத யாத்திரை

Article also available in :

உலகப்புகழ் பெற்ற ஜகந்நாத் யாத்திரை என்பது பகவான் ஜகந்நாதனின், அதாவது கிருஷ்ணனின் பக்தர்களுக்கு கோலாகல நிகழ்வாகும். அபரிமித பக்தியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் இந்த யாத்திரையைக் காண பாரதத்திலிருந்து மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள பக்தர்கள் ஒன்று கூடுகிறார்கள். கோடிக்கணக்கான விஷ்ணு பக்தர்கள் ஒன்றுகூடும் ஒரே அற்புத யாத்திரை இதுதான். பெரும்பான்மை கோவில்களில் ஸ்ரீகிருஷ்ணன் தன் தேவியோடு காட்சியளிக்கிறான்; ஆனால் இந்தக் கோவில் தனித்துவம் வாய்ந்தது, இதில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தன் அண்ணன் பலராமர் மற்றும் தங்கை சுபத்திரையுடன் காட்சி அளிக்கிறான். இந்த ரத யாத்திரையின் சில சிறப்புகளைப் பற்றி இக்கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1.      ரத யாத்திரையில் முதலில் ஸ்ரீ பலராமர், மத்தியில் சுபத்ரா தேவி மற்றும் இறுதியில் பகவான் ஜகந்நாத் என்பது ரதத்தின் வரிசைகிரமம் ஆகும்!

இடப்பக்கத்தில் ஸ்ரீ பலராமரின் ‘தாலத்வஜ’ ரதம், மத்தியில்
தேவி சுபத்ரையின் ‘தர்பதலன் மற்றும் பத்மரதம்’ மற்றும் மூன்றாவதாக
பகவான் ஸ்ரீ ஜகந்நாதனின்’நந்திகோஷ’ மற்றும் ‘கருடத்வஜ’ ரதம்!

சார்தாமின் 4 பிரசித்தமான யாத்திரை ஸ்தலங்களில் புரியும் ஒன்று. பகவான் ஸ்ரீகிருஷ்ணன் ஜகந்நாத ரூபத்தில் கொலு வீற்றிருக்கும் இன்றைய கோவில் சுமார் 800 ஆண்டுகள் பழமையானது. பகவான் ஸ்ரீகிருஷ்ணனுடன் கூட அவனின் மூத்த சகோதரன் ஸ்ரீ பலராமர் மற்றும் தங்கை சுபத்ராதேவி ஆகியோருக்கும் இங்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. புரி ரத யாத்திரைக்காக ஸ்ரீ பலராமர், ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் தேவி சுபத்ரைக்கு 3 வெவ்வேறு ரதங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ரத யாத்திரையில் எல்லோருக்கும் முன்பு ஸ்ரீ பலராமரின் ரதம், மத்தியில் சுபத்ரா தேவி ரதம் மற்றும் பின்னால் பகவான் ஜகந்நாதனின் (ஸ்ரீகிருஷ்ணனின்) ரதம் உள்ளன.

ரத யாத்திரை ஆரம்பித்தவுடன் வழியில் திரண்டுள்ள பக்தர்களின் கூட்டம்.
ரத யாத்திரை காலத்தில் இந்த மார்க்கத்தில் திட்டமிட்டபடி
பகவானின் மூன்று ரதங்களும் உலா வரும்.

2. மூன்று ரதங்களின் சிறப்புப் பெயர்கள் மற்றும் அவற்றின் விதவிதமான விசேஷங்கள்!

2 அ. ஸ்ரீ பலராமரின் ரதம் ‘தாலத்வஜ’ என அழைக்கப்படுகிறது. இந்த ரதத்தின் நிறம் சிவப்பு மற்றும் பச்சை. தேவி சுபத்ரையின் ரதத்தின் பெயர் ‘தர்பதலன் மற்றும் பத்மரதம்’ ஆகும். அது கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளது. பகவான் ஜகந்நாதனின் ரதத்திற்கு நந்திகோஷ் அல்லது கருடத்வஜ என்பது பெயர். இந்த ரதம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் உள்ளது.

2 ஆ. ஸ்ரீ பலராமரின் ரதம் 45 அடி உயரம், சுபத்ரையின் ரதம் 44.6 அடி உயரம் மற்றும் பகவான் ஜகந்நாதனின் நந்திகோஷ் ரதம் 45.6 அடி உயரம்  உள்ளன.

2 இ. இம்மூன்று ரதங்களும் வேப்ப மரத்தின் பவித்ரமான பரிபக்குவமடைந்த கட்டைகளால் உருவாக்கப்படுகின்றன. இதற்காக ஆரோக்கியமான சுபமான வேப்ப மரம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதற்காக ஒரு சிறப்பு கமிட்டி ஸ்தாபனம் செய்யப்படுகிறது. இந்த ரதங்களின் உற்பத்தியில் வேறு எந்த விதமான ஆணிகளும் உலோகங்களும் உபயோகிக்கப்படுவதில்லை. இதுவும் ஒரு சிறப்பு.

2 ஈ. ரதத்திற்கு வேண்டிய மரக்கட்டைகள் முஹூர்த்த நேரத்தில் தேர்வு செய்யப்படுகிறது. வசந்த பஞ்சமி அன்று இந்த தேர்வு நடக்கிறது. அந்நாளிலிருந்து மரக்கட்டைகளின் தேர்வு ஆரம்பமாகின்றன. ரதத்தின் நேரடி நிர்மாணம் அக்ஷய திருதியை அன்று ஆரம்பமாகிறது.

2 உ. இந்த மூன்று ரதங்களும் தயாரான பிறகு சர் பஹன்ரா என்ற பெயருடைய அனுஷ்டானம் செய்யப்படுகிறது. இதில் புரியின் கஜபதி ராஜா பல்லக்கில் வந்து இம்மூன்று ரதங்களின் விதிப்படியான பூஜைகளை செய்கிறார். இந்த சமயத்தில் தங்க துடைப்பத்தால் ரதத்தின் மண்டபம் மற்றும் வழி சுத்தம் செய்யும் வழக்கம் உள்ளது.

2 ஊ. இதன் பிறகு ரத ஓட்டம் நடக்கிறது. ஆனி மாத சுக்ல பக்ஷ த்விதீயை அன்று ரத யாத்திரை ஆரம்பமாகிறது. அன்றைய தினம் டோல், நகாரே, துதாரி மற்றும் சங்கு ஆகிய நாதங்களுக்கு மத்தியில் பக்தர்கள் ரதத்தை இழுக்கின்றனர். யாருக்கு ரதத்தை இழுக்கும் வாய்ப்பு கிடைக்கிறதோ அவர்கள் பாக்கியவான்களாக கருதப்படுகின்றனர். புராதன நம்பிக்கையின்படி ரதத்தை இழுப்பவர்களுக்கு மோக்ஷம் சித்திக்கிறது.

3. மாமியிடம் 7 நாட்கள் முகாமிடுகிறார் பகவான் ஜகந்நாத்!

3 அ. ஜகந்நாத் கோவிலிலிருந்து இந்த ரத யாத்திரை கிளம்பிய பின் புரி நகரத்தை வலம் வந்து இந்த ரதம் குண்டிச்சா கோவிலை அடைகிறது. இங்கு பகவான் ஜகந்நாத், ஸ்ரீ பலராமர் மற்றும் சுபத்ரா தேவி 7 நாட்கள் முகாம் இடுகின்றனர்.

3 ஆ. குண்டிச்சா கோவில் குண்டிச்சா பாடி எனவும் அழைக்கப்படுகிறது. இது பகவான் ஜகந்நாதனின் மாமி வீடாகும். இங்குதான் விஸ்வகர்மா பகவான் ஜகந்நாத், ஸ்ரீ பலராமர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோரின் மூர்த்திகளை நிர்மாணித்தார்

3 இ. ரத யாத்திரையின் மூன்றாவது நாளன்று அதாவது பஞ்சமி அன்று தேவி லக்ஷ்மி, பகவான் ஜகந்நாத்தை தேடி வருகிறாள். அப்போது தேதாபதி வாயிலை அடைத்து விடுகிறார். அதனால் தேவி கோவமடைந்து ரதத்தின் காலை முறித்து விடுகிறாள். பிறகு ஹீரா கோஹிரி ஸாஹி (இவ்விடம் புரியிலே உள்ளது) என்ற இடத்தில் உள்ள லக்ஷ்மி கோவிலுக்கு திரும்பி விடுகிறாள்.

3 ஈ. பிறகு பகவான் ஜகந்நாத் தானே சென்று கோவமாக அமர்ந்திருக்கும் லக்ஷ்மியை சமாதானப்படுத்தும வழக்கம் பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த உற்சவத்தின் மூலமாக இது போன்று ஒரு அற்புத பக்தி ரசானுபவம் அனைவருக்கும் ஏற்படுகிறது.

3 உ. ஆனி மாத 10-ம் நாளன்று இந்த ரதம் மீண்டும் பிரதான கோவிலை நோக்கி திரும்புகிறது. இவ்வாறு திரும்பும் யாத்திரைக்கு ‘பஹுதா யாத்ரா’ என்று பெயர்.

3 ஊ. ஸ்ரீ ஜகந்நாத் கோவிலுக்கு திரும்பிய பின்னும் மூர்த்திகள் ரதங்களிலேயே இருக்கின்றன. அவர்களுக்காக கோவிலின் கதவு மறுநாள் அதாவது ஏகாதசியன்று திறக்கப்படுகிறது. அப்போது அந்த மூர்த்திகளுக்கு வெவ்வேறு ஸ்நானங்கள் செய்விக்கப்பட்டு வைதிக மந்திர உச்சாரணங்களுடன் மீண்டும் அவை புனர் பிரதிஷ்டாபனம் செய்யப்படுகின்றன.

3 எ. புரியின் ரதோத்ஸவம் என்பது ஒரு சமூக உற்சவம் ஆகும். இக்காலத்தில் புரியிலுள்ள பக்தர்கள் உபவாசம் இருப்பதில்லை.

சமுத்திரக் கரையோரம் உள்ள புரி புண்ணிய க்ஷேத்திரத்தில் நடக்கும் உலகபிரசித்த பகவான் ஜகந்நாதனின் ரத யாத்திரையை நேரில் காண்பவர்கள் பரமபாக்கியவான்களாக கருதப்படுகின்றனர். வருடம் முழுவதும் இந்த பக்தி உணர்வை ஆழ மனதில் பதித்து பக்தகோடிகள் அடுத்த வருட ரத யாத்திரைக்காக பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரத யாத்திரையில் காணக் கிடைக்கும் இத்தகைய ச்ரத்தா-பக்தியை உலகில் வேறு எங்கும் காண இயலாது. இக்காரணங்களால் இந்த விழா கிடைப்பதற்கு அரியது, ஈடு இணையற்றது. (தகவல் : வலைத்தளம்)

4. புரி ஜகந்நாத் கோவிலின் அற்புதமான, புத்திக்கு எட்டாத சிறப்புகள்!

4 அ. ஸ்ரீ ஜகந்நாத் கோவில் உலகப்புகழ் பெற்றது. சுமார் 800 வருடங்கள் பழைமையான இக்கோவிலின் வாஸ்துசாஸ்திர நிபுணத்துவம் எவ்வளவு உன்னதமானது என்றால் அது சம்பந்தமாக ஆய்வு செய்வதற்காக உலகெங்கும் உள்ள வாஸ்துக் கலை நிபுணர்கள் இங்கு குழுமுகிறார்கள்.

4 ஆ. இந்த தீர்த்த க்ஷேத்திரம் பாரதத்தின் 4 பவித்ர தீர்த்த க்ஷேத்திரங்களில் ஒன்று.

4 இ. ஸ்ரீ ஜகந்நாத் கோவிலின் உயரம் 214 அடிகள் ஆகும். கோவிலின் விஸ்தீரணம் 4 லக்ஷ சதுர அடிகளாகும்.

4 ஈ. புரியில் எங்கிருந்து பார்த்தாலும் கோவிலின் கலசத்திலுள்ள சுதர்சன சக்கரம் நம் முன்னே இருப்பது போல் தோன்றும்.

4 உ. கோவிலின் கொடி, காற்றடிக்கும் திசைக்கு எதிர்திசையில் பறக்கிறது. (ஒவ்வொரு விஷயத்தையும் புத்தி அளவில் சுக்கல்நூறாக பிய்த்து அலசும்  புத்திவாதிகளுக்கு இந்த கோவில் என்பது அவர்கள் கன்னத்தில் விழும் அறையாகும்! மேற்கூறிய சிறப்புகளிலிருந்து ஹிந்து தர்மத்தின் ஒப்புயர்வற்ற மகத்துவம் கவனத்திற்கு அவசியம் வரும்! – தொகுத்தவர்) ஒவ்வொரு நாள் மாலையும் கோவில் கொடி மாற்றப்படுகிறது.

அற்புத வாஸ்துக்கலையின் சின்னமாக விளங்கும் ஸ்ரீ ஜகந்நாத் கோவில்!
காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் எப்போதும் பறக்கும் கோவில் கொடி!

4 ஊ. சாதாரணமாக தினமும் காற்று சமுத்திரத்திலிருந்து பூமியை நோக்கி வீசும்; மாலையில் இதற்கு எதிர்திசையில் வீசும். ஆனால் புரியில் மட்டும் இதற்கு மாறாக நடக்கிறது.

4 எ. முக்கிய கோபுரத்தின் நிழல் நாள் முழுவதும் எங்கும் விழுவதில்லை.

4 ஏ.  கோவில் கோபுரத்தின் மீது பறவைகளோ விமானங்களோ பறப்பதை எப்போதும் காண முடியாது.

4 ஒ. கோவிலில் ஒரு வருடத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் உள்ளன. இதில் சிறப்பு என்னவென்றால் மகாபிரசாதம் எப்போதும் வீணாக்கப்படுவதில்லை. லக்ஷக்கணக்கான பக்தர்கள் மிகுந்த பக்தியோடு இந்த பிரசாதத்தை உட்கொள்கின்றனர்.

4 ஓ. வேறு எங்கும் காணக் கிடைக்காத அளவு பெரியது இங்குள்ள சமையல் அறை. இங்கு சமையலுக்கு ஒன்றன் மேல் ஒன்றாக பானைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. சமையலுக்கு விறகுகளே பயன்படுத்தப்படுகின்றன.

4 ஔ. இந்த விசாலமான சமையல் அறையில் பகவான் ஜகந்நாதனுக்கு பிடித்தமான மகாபிரசாதம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக இங்கு 500 சமையல்காரர்களும் 300 உதவியாளர்களும் ஒரே நேரத்தில் வேலை செய்கிறார்கள்.

ஆசியா கண்டத்திலேயே மிகப் பெரியதான சமைக்கும் இடம் கொண்ட
கோவில் சமையல் அறை. லக்ஷக்கணக்கான பக்தர்கள் இந்த பிரசாதத்தை
மிகுந்த பக்தி உணர்வுடன் உட்கொள்கின்றனர்.

5.      ஸ்ரீ ஜகந்நாதனுக்கு கிச்சடி நைவேத்தியம் முதலில் அர்ப்பணம் செய்வதன் காரணம்

முன்னொரு சமயம் கர்மாபாயி என்ற பெயருள்ள, ஜகந்நாதனின் பெரும் பக்தர் இருந்தார். அவர் ஏழையானதால் கிச்சடி மட்டுமே சமைப்பார். பகவான் ஜகந்நாத் தினமும் காலை கர்மாபாயி வீட்டிற்கு கிச்சடி உண்பதற்காக வருவான். என்று கர்மாபாயி தன் உடலை உகுத்தாரோ அன்று ஜகந்நாதனின் கண்களில் கண்ணீர் பெருகியது. அதை எல்லா பூஜாரிகளும் பார்த்தனர். அப்போது பகவான் அவர்களிடம் கூறினான் ‘கர்மாபாயி தினமும் காலை எனக்கு கிச்சடி தந்தான். இனி யார் எனக்கு கிச்சடி தருவார்கள்?’ அப்போது எல்லா பூஜாரிகளும் ‘பகவானே, நாங்களே தினமும் காலை கிச்சடி நைவேத்தியம் செய்கிறோம்’ என்று கூறினர். அதிலிருந்து ஸ்ரீ ஜகந்நாதனுக்கு தினமும் காலை கிச்சடி நைவேத்தியம் செய்யும் வழக்கம் ஆரம்பமானது.

Leave a Comment