ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில், பூ. அனந்த் ஆடவலே அவர்களுடனான நேர்காணல் – 2

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் நேர்காணல் மூலமாக வெளிப்படுத்திய, ஸநாதனின் 101-வது மகானான ஞானயோகி பூ. அனந்த் ஆடவலே (பூ. பாவு காகா, வயது 88) அவர்களின் ஞானபிராப்திக்கான செயல்பாடு!

ஸ்ரீமத்பகவத்கீதையை ஆழ்ந்து பயின்றவர், ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸ்தாபகரான பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் மூத்த சகோதரர் மற்றும் ஸனாதனின் 101-வது மகானான ஞானயோகி பூ. அனந்த் ஆடவலே (பூ. பாவு காகா) அவர்களின் குண சிறப்புகளை விவரிக்கும் ‘பூ. அனந்த் ஆடவலே அவர்களின் சரித்திரம் : பகுதி 1 (பூ. அனந்த் ஆடவலே அவர்களின் குண சிறப்புகள்) என்ற மராட்டி நூல் 5.10.2021 அன்று ராம்நாதியில் உள்ள (கோவா) ஸனாதன் ஆச்ரமத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் அவர்கள் பூ. அனந்த் ஆடவலே அவர்களுக்கு கிடைக்கும் ஞானம் சம்பந்தமாக அவர்களை நேர்காணல் கண்டார். அதை இக்கட்டுரையின் 2-ம் பாகம் மூலம் தெரிந்து கொள்வோம்.

8. ஞானம் கிடைக்கும்போது சந்தேகம் ஏற்படுதல்; ஆனால் விகல்பம் ஏற்படாமல் இருத்தல்

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : உங்களுக்கு ஞானம் கிடைக்கும்போது அதில் ஸங்கல்ப-விகல்பம் (நேர்மறை-எதிர்மறை எண்ணங்கள்) ஏற்பட்டது உண்டா? அத்தகைய நிலையை அனுபவித்தது உண்டா?

பூ. அனந்த் ஆடவலே : 25-30 வருடங்களுக்கு முன்னால் அது போன்று ஏற்பட்டிருக்கலாம். ஆனால் தற்போது இல்லை. ஒருமுறை உங்களுக்கு பிரம்ம ஸ்வரூபம் புரிந்து விட்டால் பின்பு விகல்பம் எங்கிருந்து ஏற்படும்? எனக்கு சந்தேகங்கள் வரும்; ஆனால் விகல்பம் வராது. எனக்குத் தோன்றும், ‘கீதையிலும் உபநிஷத்துகளிலும் பகவான் என்ன கூறியுள்ளாரோ அதை நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால் தவறு அந்நூல்களில் இல்லை, நம்மிடமே உள்ளது.’ அதனால் எதுவரை நமக்கு நூல்கள் புரிபடவில்லையோ அதுவரை அதைப் பயின்று சிந்தனை செய்து புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

9. தீவிர ஆர்வத்தால் நூலைப் படிக்கும்போது மனம் ஒருமைப்படுதல் மற்றும் இதுவே தியான நிலை என்பதை உணர்தல்

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : பலர் நாமஜபம் செய்து செய்தே தியான நிலைக்கு செல்கின்றனர். உங்களின் தியான நிலை எவ்வாறிருக்கும்?

பூ. அனந்த் ஆடவலே : நான் எப்போதும் தியான நிலைக்கு செல்ல முயற்சிப்பதில்லை. நான் நூலைப் படிக்கும்போது தீவிர ஆர்வத்தால் என் மனம் அதிலே அமிழ்ந்து போகிறது. ‘மனம் ஒன்றுபடுதலே’ தியானம் ஆகும். நீங்கள் எப்போது ஒரு விஷயத்தில் மனதை ஒருமுகப்படுத்துகிறீர்களோ அப்போது உங்கள் மனம் தியானத்தில் உள்ளது என்று அர்த்தம்.

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : ஒருமுறை பராத்பர குருதேவர் தியான நிலையில் இருக்கக் கூடிய புகைப்படத்தை எடுக்க விரும்பினோம். இது சம்பந்தமாக நான் குருதேவரிடம் கேட்டேன். அப்போது அவர் கூறினார், ‘நான் விழிப்பு நிலையில் இருக்கும்போது ஏற்படும் தியான நிலையை எவ்வாறு புகைப்படம் எடுப்பீர்கள்?’ அப்போதுதான் புரிந்தது, வெறும் கண்களை மூடிக் கொள்வது தியான நிலை என்பது.

பூ. அனந்த் ஆடவலே : அந்த நிலை என்பது ‘யத்ர யத்ர மனோ யாதி தத்ர தத்ர ஸமாதய: |’ (சாணக்யநீதி, அத்யாயம் 13, ஸ்லோகம் 12) அதாவது ‘எங்கெல்லாம் மனம் செல்கிறதோ அங்கெல்லாம் ஸமாதியை உணர வேண்டும்’. எங்கெல்லாம் உங்களின் மனம் ரமிக்கிறதோ, அதுவே ஸமாதி நிலை. எங்கு உங்களின் மனம் ஒருமுகப்படுகிறதோ அதுவே ஸமாதி நிலை. அதனால் இதைத் தவிர தனியாக அமர்ந்து தியானம் அல்லது ஸமாதியில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

10. தெய்வங்கள் என்றால் பல்வேறு காரியங்களுக்கு ஏற்றாற்போல் வெளிப்படும் சைதன்யத்தின் பல்வேறு பெயர்கள் ஆகும் மற்றும் சைதன்யத்தால் ஞானம் ஊற்றெடுப்பதால் பல்வேறு சக்திகள் மற்றும் தெய்வங்களின் தரிசனம் கிடைக்காதிருத்தல்

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : நீங்கள் பெரிய பெரிய நூல்களைப் படித்துள்ளீர்கள். இது போன்ற நூல்களைப் பார்க்கும்போது எங்களுக்கு ‘இவற்றை நாம் எப்போது படிப்போம்?’ என்று தோன்றும். உங்களுக்கு எப்போதேனும் அவ்வாறு தோன்றியுள்ளதா அல்லது பெரிய பெரிய நூல்களைப் பார்க்கும்போது சலிப்பு ஏற்பட்டுள்ளதா?

பூ. அனந்த் ஆடவலே : நீங்கள் சொல்வது சரிதானே? எங்களுக்கு ஈச்வரனிடமிருந்து ஞானம் கிடைப்பதில்லை. உங்களுக்கு ஈச்வரனிடமிருந்து ஞானம் கிடைக்கிறது. அதனால் உங்களுக்கு நூல்களை வாசிக்க வேண்டும் என்ற அவசியம் எதற்கு?

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : சிலருக்கு குருதேவரிடமிருந்து ஞானம் கிடைக்கிறது, சிலருக்கு கணபதி, ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் ஏனைய இஷ்ட தெய்வத்திடமிருந்து ஞானம் கிடைக்கிறது. நீங்கள் எழுதும்போது ‘என்னுடன் ஸ்ரீகிருஷ்ணன் பேசுகிறான்’ என்று உணர்வீர்களா அல்லது உங்களின் இஷ்ட தெய்வம் உங்களின் ஞானத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறதா?

பூ. அனந்த் ஆடவலே : நீங்கள் நினைக்கும்படியான நிலையில் நான் இல்லை. சைதன்யம் என்பது ஒன்றே. எப்போது நாம் சக்தி உபாசனை செய்கிறோமோ அப்போது நமக்கு ஹனுமார் நினைவுக்கு வருவார். எப்போது சைதன்யம் ஞான ஸ்வரூபத்தில் வெளிப்படுகிறதோ அப்போது நாம் அதை ‘ஸரஸ்வதி’ அல்லது ‘கணபதி’ என்கிறோம். பல்வேறு தெய்வங்கள் என்பவை பல்வேறு காரியங்களுக்கு ஏற்றாற்போல் வெளிப்படும் சைதன்யத்தின் பல்வேறு பெயர்கள் ஆகும். அதனால் எனக்கு பல்வேறு சக்தி அல்லது தெய்வங்கள் தெரிவதில்லை. நானும் தெய்வங்களை நம்புகிறேன். எப்போது நமக்கு சங்கடங்கள் ஏற்படுகிறதோ அப்போது ஹனுமார் நினைவுக்கு வருகிறார். அதுவே சைதன்யமும் ஆகும். ஹனுமானின் ரூபத்தில் அந்த சைதன்யமே உங்களை சங்கடங்களிலிருந்து விடுவிக்கிறது. தெய்வங்களின் குணவிசேஷங்களால் அவர்களுக்கு பல்வேறு பெயர்கள் ஏற்பட்டுள்ளன.

11. ஞானத்தால் வெளி மாற்றம் நிகழாமல் உள்மாற்றம் ஏற்படுதல்

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : எங்களுக்கு குருதத்துவம், ஸ்ரீகிருஷ்ணன் ஆகியோரிடமிருந்து ஞானம் கிடைக்கின்றது. ஆனால் உங்களின் ஸாதனை நிர்குண ஞானயோகமாகும். ஸாதனையின் நிலை அதிகரித்துக் கொண்டே போகும்போது வாழ்வில் மாற்றங்களும் ஏற்படுகின்றன. உங்களின் வாழ்விலும் அதுபோன்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா?

பூ. அனந்த் ஆடவலே : இது சந்தர்ப்பமாக நான் 10-15 வருடங்களுக்கு முன்பு எழுதியுள்ளேன். நீங்களும் அதை வெளியிட்டிருக்கிறீர்கள். எப்போது உங்களுக்கு ஞானம் கிடைக்கிறதோ அப்போது உங்களின் வெளியே எந்த மாற்றமும் நிகழ்வது இல்லை. எப்படி பக்திமார்க்கத்தில் சிறிது பெரிதான அற்புதங்கள் நிகழ்கிறதோ அப்படி ஞானமார்க்கத்தில் நிகழ்வது இல்லை. ஞானமார்க்கத்தில் ஒருவர் மற்ற நபரை, பொருளை, நிகழ்வை, சம்பவத்தை, நிலையை பார்க்கும் கண்ணோட்டம் மாறுகிறது. உள்முக மாற்றம் மட்டுமே நடக்கிறது. ஞானத்தால் வெளி மாற்றம் ஏதும் நிகழாது.

12. இறைவனோடு ஒன்றிய நிலை ஏற்பட்ட பின்னர் தெய்வ தரிசனத்திற்கான அவசியம் ஏற்படுவதில்லை

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : பூ. பாவு காகா, உங்களுக்கு ஞானம் கிடைக்கும்போது ‘இது ஆத்மஞானம் ஆகும்’ என்று எப்போதாவது தோன்றியது உண்டா?

பூ. அனந்த் ஆடவலே : ‘இறைவனுக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை’ என்பதே ஆத்மஞானம். வேறு எதுவும் இல்லை.

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : ஆத்மாவின் ஒளி நீல ஒளியாகும். அது போன்ற ஒளி தரிசனம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா?

பூ. அனந்த் ஆடவலே : ‘ஸ்ரீகிருஷ்ணனின் தரிசனம் கிடைக்க வேண்டும் அல்லது ஒளி தெரிய வேண்டும்’ என்று எதிர்பார்ப்பதில்லை. அது போன்ற சிந்தனையும் என் மனதில் எழுவதில்லை. இது பக்திமார்க்கத்தில் அல்லது யோகமார்க்கத்தில் நடக்கிறது. ஞானமார்க்கத்தில் உள்மாற்றம் நடக்கிறது. உங்களின் ஆன்மீக உணர்வு தீவிரமாக இருந்தால், ஆத்மசுத்தி ஏற்பட்டிருந்தால் மற்றும் இறைவனுக்கு ‘உங்களிடம் அந்த தகுதி உள்ளது’ என்று தோன்றினால் அப்போதே அந்த ரூபத்தில் தரிசனம் தருகிறார். தரிசனம் க்ஷண நேரமே கிடைக்கிறது. அது எப்போதும் தொடர்ந்து கிடைப்பதில்லை. உங்களுக்கு உண்மையில் தரிசனம் கிடைக்கிறது. உங்களுக்கு தரிசனம் தருவதற்காக சைதன்யம் அந்த தெய்வத்தின் ரூபத்தை தாரணம் செய்து கொண்டிருக்கிறது. சிறிது நேரத்திற்கு பிறகு அது முடிந்து விடும். சைதன்யம் என்பது என்னுடையதே ஆகும். அப்படி இருக்கும்போது இன்னொரு தரிசனம் எதற்கு? பகவான் ஸ்ரீகிருஷ்ணன் உங்களுக்கு தரிசனம் தந்தால் என்ன கேட்பீர்கள் அல்லது அவர் ஏதாவது கொடுப்பாரா? அவரின் தரிசனத்தால் என்ன லாபம்? உங்களுக்கு அத்தகைய தகுதி வரும்போது நீங்கள் கேட்காமலேயே அவர் தரிசனம் தருவார்.

13. தற்போது மனதில் உள்ள சந்தேகங்கள் விலகி அமைதியை உணர முடிதல்

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : ’27 வருடங்களுக்கு முன்னால் உங்களுக்கு இருந்த எண்ணவோட்டம் மற்றும் இன்றைய எண்ணவோட்டம்,’ இவற்றில் ஏதாவது வித்தியாசத்தை நீங்கள் கவனித்தீர்களா?

பூ. அனந்த் ஆடவலே : நான் என்ன சொல்வது? எனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. திருப்தி என்பதே அமைதி. எப்போது நம் மனதில் உள்ள சந்தேகங்கள் விலகுகிறதோ அப்போது மன அமைதி ஏற்படும்.’

–    ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (5.10.2021)

‘ஆத்மஸ்வரூபத்தின் அனுபவம் எப்போதும் இருத்தல்’, என்பதே உண்மையான அநுபூதி! – பூ. அனந்த் ஆடவலே

ஸத்குரு டாக்டர் முகுல் காட்கில்

‘பூ. அனந்த் ஆடவலே அவர்களின் சரித்திரம் : பாகம் 1 (பூ. அனந்த் ஆடவலே அவர்களின் குண விசேஷங்கள் )’ என்ற நூல் வெளியிடும் வைபவம் முடிந்தபின் ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில்  பூ. பாவு காகாவை நேர்காணல் கண்டார். அப்போது குழுமியிருந்தவர்களுக்கு மலர்களின் சூட்சும சுகந்தத்தை நுகர முடிந்தது. இந்த அநுபூதி சம்பந்தமாக பூ. பாவு காகாவிடம் ‘உங்களுக்கு வேறு ஏதாவது வித்தியாசமாக உணர முடிகிறதா?’ எனக் கேட்டேன். அப்போது அவர் கூறினார், ‘ஞானயோகத்தில் அனுபூதிகள் ஏற்படுவது இல்லை. மாற்றங்கள் உள்ளேயே நிகழ்கின்றன. அனுபூதிகள் ஏற்பட்டால் ‘இறைவனும் நாமும் வேறல்ல’ என்ற அனுபவம் சித்திக்கிறது. ஆத்மஞானம் கிடைத்த பிறகு வெறும் ஆத்ம ஸ்வரூபத்தின் அநுபூதி மட்டுமே கிடைக்கிறது. ஆத்ம ஸ்வரூபத்தை விடுத்து வேறு எதுவும் ஸத்யம் இல்லை. அநுபூதி என்பதும் பொய்யன்று. ஆனால் அது நிலைத்திருக்காது. இப்போது சுகந்தம் ஏற்பட்டால் அது சிறிது நேரமே நீடிக்கும். அதனால் அதுவும் நிரந்தரம் இல்லை. ஆத்ம ஸ்வரூபத்தின் அனுபவம் எப்போதும் இருத்தலே உண்மையான அனுபூதியாகும். ‘

– (ஸத்குரு) டாக்டர் முகுல் காட்கில், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (5.10.2-21)

 

 

 

 

Leave a Comment