‘ஸ்ரீ தச மகாவித்யா’ யந்திரங்களின் சிறப்புகள் மற்றும் அஷ்டாங்க ஸாதனையுடன் அதன் சம்பந்தம்!

ஸத்குரு டாக்டர் முகுல் காட்கில்

நவராத்திரி காலத்தில் தேவி உபாசனையை முக்கியமாக செய்கின்றனர். ஆதிசக்தி மாதா துர்காதேவின் பத்து ரூபங்களே ‘ஸ்ரீ தச மகாவித்யா’ என கூறப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இவை அனைத்தும் பார்வதி தேவியின் பத்து ரூபங்களாகும். அவை தேவியின் 10 விஷயங்களின் அதாவது சிறப்புகளின் (காரியங்களின்) சமூகம் ஆகும். இந்த தச மகாவித்யாவுக்கு எப்படி விதவிதமான 10 ரூபங்கள் உள்ளனவோ அப்படியே 10 வெவ்வேறான யந்திரங்களும் உள்ளன. அவற்றின் சித்திரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

ஸப்தரிஷிகள், நாடிபடிவங்களை வாசிக்கும்  பூ. டாக்டர் ஓம் உலகநாதன் அவர்களின் மூலமாக நவராத்திரி 9 தினங்கள் மற்றும் பத்தாவது நாள் ஆகிய 10 நாட்களில் தச மகாவித்யாக்களின் ஒவ்வொரு ரூபத்துடன் சம்பந்தப்பட்ட யக்ஞத்தை  செய்யக் கூறியுள்ளனர். இந்த யக்ஞங்களின்போது எனக்கு தச மகாவித்யா யந்திரங்களைப் பார்த்தபோது ஸாதனையின் எட்டு அங்கங்களுடன் உள்ள அவற்றின் சம்பந்தத்தை உணர முடிந்தது. ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸ்தாபகர் ஸச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே அவர்கள் ஸாதகர்களிடம் ‘அஷ்டாங்க ஸாதனை’ செய்யுமாறு கூறியுள்ளார். இந்த அஷ்டாங்க ஸாதனை என்பது ஆளுமைக் குறைகளைக் களைதல், அஹம்பாவத்தைக் களைதல், நாமஜபம், ஆன்மீக உணர்வு விழிப்படைதல், ஸத்சங்கம், ஸத்சேவை, தியாகம் மற்றும் ப்ரீதி ஆகிய எட்டு அங்கங்களை தினமும் பயிற்சி செய்தல் ஆகும். அவ்வாறு செய்தால் விரைவான ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும். தச மகாவித்யாவின் ஒவ்வொரு யந்திரமும் அஷ்டாங்க ஸாதனையின் ஒவ்வொரு அங்கத்துடன் எவ்வாறு சம்பந்தம் கொண்டுள்ளது என்பது கீழே அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ காளி யந்திரம் ஸ்ரீ தாரா யந்திரம் ஸ்ரீ ஷோடசீ யந்திரம் ஸ்ரீ புவனேச்வரி யந்திரம் ஸ்ரீ த்ரிபுரபைரவி யந்திரம்
1. ஸாதனையுடன் சம்பந்தப்பட்ட அங்கம் ஆளுமைக் குறைகளைக் களைதல் அஹம்பாவம் களைதல் நாமஜபம் ஆன்மீக உணர்வு ஸத்சங்கம்
2. கிடைக்கும் அனுபூதி மனம் உள்முகமாகுதல் மனம் உள்முகமாகுதல் காம்பீர்ய உணர்வு ஏற்படுதல், கண்களில் சக்தியை உணர்தல் ஆன்மீக உணர்வு விழிப்படைதல், சிறிது ஆனந்த அனுபவம் மனம் ஒருமுகப்படுதல்
3. அதிர்வலைகளை உணரும் குண்டலினி சக்கரம் ஆக்ஞாசக்கரம் விசுத்தசக்கரம் ஆக்ஞா மற்றும் அநாஹத சக்கரம் அநாஹத சக்கரம் ஆக்ஞாசக்கரம்
4. வெளிப்படும் அதிர்வலைகள்
4 அ. சக்தி 70 70 100 10 25
4 ஆ. ஆன்மீக உணர்வு 0 0 0 50 25
4 இ. சைதன்யம் 10 20 0 10 25
4 ஈ. ஆனந்தம் 10 5 0 20 10
4 உ. சாந்தி 10 5 0 10 15
மொத்தம் 100 100 100 100 100
5. காக்கும்/அழிக்கும் சக்தி
5 அ. காக்கும் 30 65 50 90 75
5 ஆ. அழிக்கும் 70 35 50 10 25
மொத்தம் 100 100 100 100 100

 

ஸ்ரீ சின்னமஸ்தா யந்திரம் ஸ்ரீ தூமாவதி யந்திரம் ஸ்ரீ பகளாமுகி யந்திரம் ஸ்ரீ மாதங்கி யந்திரம் ஸ்ரீ கமலா யந்திரம்
1. ஸாதனையுடன் சம்பந்தப்பட்ட அங்கம் தியாகம் அஷ்டாங்க ஸாதனையின் எல்லா அங்கங்கள் ஸத்சேவை ப்ரீதி
2. கிடைக்கும் அனுபூதி தியானம் ஏற்படுதல், சக்தியையும் உணர்தல் வியாபகத் தன்மை ஏற்படுதல், ஸமஷ்டி ஸாதனை பற்றிய சிந்தனை மனதில் ஏற்படுதல் இயல்பு ஸ்திரமாதல், மனம் ஒருமுகப்படுதல் மற்றும் தீவிர ஆர்வம் ஏற்படுதல் அமைதியை அனுபவித்தல் ஆகர்ஷண சக்தியை உணர்தல்
3. அதிர்வலைகளை உணரும் குண்டலினி சக்கரம் ஆக்ஞாசக்கரம் எல்லா சக்கரங்கள் ஆக்ஞாசக்கரம் ஸஹஸ்ரார  சக்கரம் ஆக்ஞாசக்கரம்
4. வெளிப்படும் அதிர்வலைகள்
4 அ. சக்தி 25 20 25 10 70
4 ஆ. ஆன்மீக உணர்வு 20 20 10 10 25
4 இ. சைதன்யம் 20 20 25 20 5
4 ஈ. ஆனந்தம் 10 20 15 20 0
4 உ. சாந்தி 25 20 25 40 0
மொத்தம் 100 100 100 100 100
5. காக்கும்/அழிக்கும் சக்தி
5 அ. காக்கும் 40 50 75 100 25
5 ஆ. அழிக்கும் 60 50 25 0 75
மொத்தம் 100 100 100 100 100

மேற்கூறிய விவரங்களிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், தச மகாவித்யா எந்த அளவிற்கு அஷ்டாங்க ஸாதனையுடன் சம்பந்தப்பட்டுள்ளதோ அதே அளவு யந்திரங்களைப் பார்க்கும்போது அனுபூதிகளும் ஏற்படுகின்றன. உதா. ஆளுமை குறைகளைக் களைதல் மற்றும் அஹம் களைதல் இவற்றுடன் சம்பந்தப்பட்ட யந்திரத்தைப் பார்க்கும்போது மனம் உள்முகமாகிறது, நாமஜபத்துடன் சம்பந்தப்பட்ட யந்திரத்தைப் பார்க்கும்போது மனதில் காம்பீர்ய உணர்வு ஏற்பட்டு சக்தியை உணர முடிதல் போன்றவை. யந்திரத்தின் மூலம் உணரப்படும் சக்தி, ஆன்மீக உணர்வு, சைதன்யம், ஆனந்தம் மற்றும் சாந்தி  ஆகியவற்றின் அதிர்வலைகளும் யந்திரத்திற்கு ஏற்றார் போல் மாறுகின்றன, உதா. ஆளுமை குறைகளைக் களைதல், அஹம் களைதல் மற்றும் நாமஜபம் இவற்றுடன் சம்பந்தப்பட்ட யந்திரங்களிலிருந்து சக்தி அதிர்வலைகள் மிக அதிக அளவு வெளிப்படுகின்றன. ஆன்மீக உணர்வுடன் சம்பந்தப்பட்ட யந்திரத்திலிருந்து ஆன்மீக உணர்வு அதிர்வலைகள் மிக அதிகபட்ச அளவு வெளிபடுகின்றன போன்றவை. யந்திரங்களிலிருந்து வெளிப்படும் காக்கும் மற்றும் அழிக்கும் அதிர்வலைகளின் பிரமாணமும் ஸாதனையின் அங்கத்திற்கு ஏற்றார் போல் மாறும்.

இந்த எல்லா விவரங்களும் எனக்கு ஸச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே மற்றும் ஸ்ரீ துர்காதேவி ஆகியோரின் அருளால் கிடைத்தவை. அதற்காக நான் அவர்களின் சரணங்களில் என் அனந்த கோடி நன்றி கலந்த நமஸ்காரங்களை ஸமர்ப்பிக்கிறேன்.’

– ஸத்குரு டாக்டர் முகுல் காட்கில், ஸனாதன் ஆச்ரமம்,  ராம்நாதி, கோவா. (19.10.2023)

Leave a Comment