ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில், பூ. அனந்த் ஆடவலே அவர்களுடனான நேர்காணல் – 1

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் நேர்காணல் மூலமாக வெளிப்படுத்திய, ஸநாதனின் 101-வது மகானான ஞானயோகி பூ. அனந்த் ஆடவலே (பூ. பாவு காகா, வயது 88) அவர்களின் ஞானபிராப்திக்கான செயல்பாடு!

ஸ்ரீமத்பகவத்கீதையை ஆழ்ந்து பயின்றவர், ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸ்தாபகரான பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் மூத்த சகோதரர் மற்றும் ஸனாதனின் 101-வது மகானான ஞானயோகி பூ. அனந்த் ஆடவலே (பூ. பாவு காகா) அவர்களின் குண சிறப்புகளை விவரிக்கும் ‘பூ. அனந்த் ஆடவலே அவர்களின் சரித்திரம் : பகுதி 1 (பூ. அனந்த் ஆடவலே அவர்களின் குண சிறப்புகள்) என்ற மராட்டி நூல் 5.10.2021 அன்று ராம்நாதியில் உள்ள (கோவா) ஸனாதன் ஆச்ரமத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் அவர்கள் பூ. அனந்த் ஆடவலே அவர்களுக்கு கிடைக்கும் ஞானம் சம்பந்தமாக அவர்களை நேர்காணல் கண்டார். அதை இக்கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பூ. அனந்த் ஆடவலே மற்றும் ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில்

1.    ‘ஒரு விஷயத்தை தெளிவாக்க வேண்டும்’ என்று தோன்றியவுடன் பூ. பாவு காகா அதுபற்றி எழுதுதல்

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : உங்களின் நூல் என்பது ஞான ஸ்வரூபமே ஆகும். உங்களின் எண்ணவோட்டம் தெளிவான பின்பு எழுதுவீர்களா அல்லது எப்படி?

பூ. அனந்த் ஆடவலே : ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி எழுத வேண்டும் என தீர்மானித்து எழுதுவதில்லை. ‘ஏதோ ஒரு விஷயத்தை தெளிவாக்க வேண்டும்’ என்று நினைக்கும்போது எழுதுகிறேன்.

ஆரம்பத்திலிருந்து இன்றுவரை என் எல்லா எழுத்துக்களும் சுருக்கமாகவே எழுதப்பட்டுள்ளன. அதனால் அவை மக்களின் கவனத்தைக் கவரவில்லை. அவற்றை இன்னும் விரிவாக எழுத வேண்டும் என நினைக்கிறேன். என் மனதில் தற்போது இருப்பது , ‘ஸத்யம் ஞானமனந்தம் பிரம்ம |’ (தைத்ரியோபநிஷத், பிரம்மவல்லி, அனுவாகம் 1) அதாவது ‘பிரம்மமே ஸத்யம், ஞானஸ்வரூபம் மற்றும் அனந்தம் ஆகும்.’ இதில் ‘ஸத்யம் என்பது என்ன? ஞானம் என்பது என்ன மற்றும் அனந்தத்வம் என்பது என்ன?’ ஆகியவற்றை மறுபடியும் புரிந்து கொள்வது நல்லது. ஸத்யத்தின் ஸ்வரூபம் ஞானம், பிரம்மம் மற்றும் அனந்தத்வம் ஆகும்.

1 அ. ‘அனந்தத்வம்’ சம்பந்தமான விளக்கம் : அனந்தத்வம் என்பது 3 விதங்களில் உள்ளது – தேசம், பொருள் மற்றும் காலம். தேசம் என்றால் ஸ்தானம். ஈச்வரனின் ஸ்தானம் அனந்தமாகும். அவர்க்கு எந்த எல்லையும் இல்லை. பொருட்கள் பிரம்மாண்டத்தில் வெளிப்படும்போது அவை எல்லையற்றவையாக உள்ளன. சமுத்திரக் கரையோரம் உள்ள மணல் துகள்களை எண்ண ஆரம்பித்தால் நம் ஆயுட்காலம் முழுவதும் அதிலேயே கழிந்துவிடும். அப்படியும் முடியாது. உலகமும் சம்பூர்ண பிரம்மாண்டமும் அனந்தமாகும். காலம் என்றால் அதற்கும் எல்லையே இல்லை. ‘பிரம்மம் என்பது இவ்வளவு காலம் தான் நிலைத்திருக்கும், பிறகு முடிந்து விடும்’ என்பது இல்லை. அனந்தத்வம் இவ்வாறு 3 விதங்களாக உள்ளது. இது போன்று ஒவ்வொரு பொருளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

2.    ‘தர்மம் என்றால் என்ன?’ இதை பற்றி எழுத நினைத்தபோது அது சம்பந்தமாக படிப்படியாக விஷயங்கள் மனதிற்குள் தோன்றுதல் மற்றும் அவற்றை முழுவதுமாக எழுதிய பின் அதில் எவ்வித மாற்றமும் தேவைப்படாமல் இருத்தல்

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : பூ. பாவு காகா கூறுவார், ‘எனக்கு முதலில் அர்த்தம் தெளிவாகத் தெரிந்த பின்னரே எழுதுகிறேன்’. ஆனால் நான் ஞானத்தைப் பெறும் சமயத்தில்  அவற்றை எழுதிக் கொண்டே வரும்போது அர்த்தங்களும் புரிகின்றன. ஈச்வரன் பலவிதங்களில் ஞானத்தை அருளுகிறான். நம்முடைய ஞானத்தின் ஸ்வரூபம் எப்படி பலவகைகளில் உள்ளன அல்லவா!

பூ. அனந்த் ஆடவலே : தார்மீக ஸ்தாபனங்கள் தர்மத்தைக் கற்றுத் தருகின்றன. ஆனால் அவர்களில் யாருக்கும் தர்மத்தின் அர்த்தம் விளங்குவது இல்லை. நான் ‘தர்மம் என்றால் என்ன?’ என்று எழுத நினைத்தேன். அப்போது 3-4 குறிப்புகள் மனதில் தோன்றின. அப்போது பாக்கியவசமாக அயல்நாடு (ஆஸ்திரேலியாவில் உள்ள பிள்ளையிடம்) செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கும் எனக்கு பல குறிப்புகள் மனதில் தோன்றின. அவற்றை எழுத ஆரம்பித்தேன். முதலாவது குறிப்பை எழுதும்போதே இரண்டாவது குறிப்பு புத்தியில் தோன்றியது. அதையும் எழுதினேன். பிறகு எனக்கு மூன்றாவது குறிப்பு தோன்றியது, நான்காவது குறிப்பு தோன்றியது. இவ்வாறு நான் எழுதிக் கொண்டே போனேன். இவை எல்லாவற்றையும் எழுதிய பின்னர் அவற்றில் எந்த திருத்தமும்  செய்ய வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது.

3.    ஞானம் கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி மனம் அதே நிலையில் இருத்தல்

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : எங்களுக்குள் என்ன தோன்றுகிறதோ அதை நாங்கள் எழுதுகிறோம். நாங்கள் எங்கிருந்தாலும் இது போன்று ஞான சிந்தனைகள் தோன்றும். எப்போதாவது தோன்றவில்லை என்றால் ஈச்வரனிடம் பிரார்த்தனை செய்வோம், அவர் ஞானத்தை அளிப்பார். இதை எல்லாம் ஈச்வரன் எங்களின் மூலமாக தானே நடத்தி வைக்கிறார். இதையே ‘ஞானம்’ என்கிறோம்.

பூ. அனந்த் ஆடவலே : நான் இறைவனிடம் பிரார்த்தனையும் செய்வதில்லை.

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : ‘ஞானத்தை எழுதும்போது உள்ள மனதின் நிலை மற்றும் எழுதாதபோது உள்ள மனதின் நிலை’ இவற்றுள் ஏதாவது வேறுபாடு உள்ளதா?

பூ. அனந்த் ஆடவலே : ஏதும் இல்லை. ஞானம் கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் சரி மனதின் நிலை ஒரேமாதிரியாக உள்ளது.

4.    26-27 வருடங்களுக்கு முன்பு ஞானம் கிடைக்கும்போது பூ. பாவு காகாவிற்கு கஷ்டம் ஏற்படுதல்

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : எப்போது எங்களுக்கு ஞானம் கிடைக்கிறதோ அப்போது சில சமயங்களில் தீய சக்திகளால் கஷ்டங்கள் ஏற்படும். அதனால் எங்களுக்கு மனதவிப்பு, தலைவலி ஆகியவை ஏற்படும். உங்களுக்கும் அதே போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளதா? ‘உடலும் மனமும் தவித்தாலும் ஞானம் கிடைக்கும்; ஞானம் கிடைக்கும்போதும் மனம் வேறெங்கோ அலையும்’ இது போன்ற அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா?

பூ. அனந்த் ஆடவலே : 26-27 வருடங்களுக்கு முன்பு ஞானம் கிடைக்கும்போது எனக்கும் கஷ்டம் ஏற்பட்டது.

5.    வரிசைப்படி ஒவ்வொரு நூலாக படிக்கும்போது மனதின் ஒவ்வொரு கேள்விக்கும் விடை கிடைத்தல்

பூ. அனந்த் ஆடவலே : வேலையிலிருந்து ஒய்வு பெற்ற பின் நான் ‘பிரம்மம் என்றால் என்ன? ஈச்வரன் என்றால் என்ன?’, என்பனவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிவெடுத்தேன். அப்போது என்னிடம் உபநிஷத்துக்கள், யோகவாசிஷ்டம், கீதை, தாஸபோதம், ஏக்னாதி பாகவதம், ஞாநேச்வரி ஆகிய நூல்கள் இருந்தன. அப்போது நான் ஒரு முடிவெடுத்தேன், ‘ இந்த நூல்களை மட்டுமே படிப்பது, வேறு நூல்களை படிப்பதில்லை. வேறு ஒன்றும் செய்வதில்லை’.அப்போது என் மனதில் சில கேள்விகள் இருந்தன. இப்போது எந்த அளவிற்கு புரிகிறதோ அந்த அளவிற்கு அப்போது புரியவில்லை. என் மனதில் முதல் கேள்வி எழுந்தபோது எந்த நூலை முதலில் படிக்க வேண்டும் என்பதை முடிவெடுக்கவில்லை. பாக்கியவசமாக நான் முதல் நூலைப் படித்தேன், அதிலிருந்து என் முதல் கேள்விக்கு பதில் கிடைத்தது. பிறகு என் மனதில் இரண்டாவது கேள்வி எழுந்தது. அப்போது இரண்டாவது நூலைப் படித்தேன். அதிலிருந்து எனக்கு இரண்டாவது கேள்வியின் பதில் கிடைத்தது. இதுபோன்று அடுத்தடுத்து 9 முறைகள் நடந்தன. என்னுடைய இறுதி கேள்விக்கும் விடை கிடைத்தது. ‘காலத்தின் ஸ்வரூபம் என்ன?’ என்பதுதான் என் இறுதி கேள்வி. இதன் பதில் எனக்கு ‘பாகவத புராணம்’ என்ற நூலிலிருந்து கிடைத்தது. நான் அந்நூலை இறுதியாக படிக்க எடுத்துக் கொண்டேன்.

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : இந்நூல்களின் பெயர்கள் இன்றும் உங்களுக்கு மனதில் தோன்றுகிறதா?

பூ. அனந்த் ஆடவலே : இல்லை. நான் வரிசைப்படி ஒவ்வொரு நூலாக படித்தேன். ‘காலத்தின் ஸ்வரூபம் என்ன?’ என்ற கேள்வி மட்டும் இறுதியில் என் மனதில் இருந்தது. அப்போது நான் ‘பாகவத புராணம்’ படிக்க ஆரம்பித்தேன். அதில் என் கேள்விக்கான பதில் எனக்கு கிடைத்தது. ‘குணவ்யதிகராகாரோ கால: |’ அதாவது ‘குணங்களில் ஏற்படும் மாற்றமே காலத்தின் ஸ்வரூபம் ஆகும்’ என்பதே இதன் பதிலாகும். வார்த்தைகள் அளவில் இந்த பதில் எனக்கு புரிந்தது. ஆனால் காலத்தின் ஸ்வரூபம் இன்னும் புரியவில்லை. பிறகு நான் சிந்தித்துக் கொண்டே இருந்தேன். அப்போது எனக்குத் தோன்றியது, ‘இந்த ஞானம் என் வசத்தில் இல்லை. இதை விட்டுவிடுவோம். பக்தியோகம் சுலபமான வழி என்று அனைவரும் கூறுகின்றனர். அதனால் பக்தியோகத்தைப் பின்பற்றுவோம்.’ நான் நாமஜபம் செய்ய ஆரம்பித்தேன். ஆனால் ஆழ்மனதில் அமைதி இல்லை. மூன்றாவது நாளும் வந்தது. என் கேள்விக்கான விடை கிடைக்கவில்லை. அப்போது எனக்குத் தோன்றியது, ‘பக்தியும் என் வசத்தில் இல்லை’. ஆனால் எனக்கு விடை வேண்டும். ‘குணவ்யதிகராகாரோ கால: |’ என நூலில் கூறப்பட்டிருந்தது. அப்படி என்றால் ‘குணங்களில் மாற்றத்தை ஏற்படுத்தினால் காலம் கிடைக்குமா?’ என்பதை சோதித்துப் பார்த்து விடலாம் என எண்ணினேன். நான் அவ்வாறே செய்து பார்த்தபோது காலம் கிடைத்தது. (ஆளுமைக் குறைகள் தூர விலகிய பின் காலத்திற்கு அப்பால் சென்று விடும் நிலை ஏற்படும்.)

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : எவ்வளவு நாட்களில் காலம் கிடைத்தது?

பூ. அனந்த் ஆடவலே : மூன்றாவது நாள் கிடைத்தது! இந்த செயல்முறை மிகப் பழைமையானது. அப்போது விடை கிடைக்க நான் சிந்தனை செய்ய வேண்டியிருந்தது. தற்போது சிந்தனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுவது இல்லை.

6.    சைதன்யத்தின் அருளால் ஆன்மீக சாஸ்திர விஷயங்கள் கவனத்தில் தங்குதல்; ஆனால் உலக விஷயங்கள் மட்டும் வயதிற்கேற்றபடி மறந்து போதல்

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : ‘ஞானம் கிடைப்பது’ என்பது இறை புத்தியில் இருந்து கிடைப்பது. ஆனால் உங்களுக்கு ஸ்லோகங்களும் அப்படியே மனப்பாடமாக உள்ளன. உலக விஷயங்களும் கூட இவ்வாறு உங்களுக்கு மனப்பாடமா?

பூ. அனந்த் ஆடவலே : ஸ்லோகங்களின் மகத்துவம் என் மனதில் ஆழப் பதிந்துள்ளது. அதனால் அவை எனக்கு மனப்பாடமாக உள்ளன. ஆயிரம் ஸ்லோகங்கள் உள்ளன; இருந்தாலும் மனதில் அவை ஆழப்பதிந்ததால் என் கவனத்தில் உள்ளன. வயதானதால் மறதியும் உண்டு; ஆனால் அந்த சைதன்யத்தின் அருளால் நான் ஆன்மீக சாஸ்திர விஷயங்களை மறக்கவில்லை. மற்றவை என் கவனத்தில் நிற்பதில்லை.

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில் : ஈச்வர புத்தியோடு காரியங்களை செய்பவர்களுக்கு மறதி ஏற்படுவதில்லை என்று குருதேவர் எங்களுக்குக் கற்றுத் தந்துள்ளார். பூ. பாவு காகா இதற்கான ப்ரத்யக்ஷ உதாரணம் ஆவார்.

7.    எப்போதும் ஸமாதி நிலையில் இருக்க முடிவதில்லை; ஆனால் ஞானம் கிடைத்துவிட்டால் அந்த ஞானம் எப்போதும் கூடவே இருக்கும்

பூ. அனந்த் ஆடவலே : ஸமாதி நிலை ஏற்படுவது இல்லை என்பதால் மக்களுக்கு துக்கம் ஏற்படுகிறது. ஸமாதி என்பதும் ஒரு நிலைதான். உங்களுக்கு எவ்வளவு எண்ணங்களற்ற விகல்பமில்லாத ஸமாதி ஏற்பட்டாலும் எப்போது நீங்கள் உலக விஷயங்களுக்கு திரும்புகிறீர்களோ அப்போது அது துண்டிக்கப்படுகிறது. ஞானம் அப்படி இல்லை. ஒருமுறை உங்களுக்கு ஆத்மஞானம், பிரம்மஞானம் ஏற்பட்டுவிட்டால் அந்த ஞானம் எப்போதும் உங்களுடனேயே இருக்கும். நம்முடனேயே நிலைத்திருக்கும். ஆனால் ஸமாதி நிலை எப்போதும் நிலைத்திருப்பதில்லை. தெய்வபூஜையும் எப்போதும் நிலைத்திருப்பதில்லை. ஞானம், ஜீவாத்மாவில் ஆழப் பதிந்து விடுவதால் அது நிலைத்திருக்கிறது.

(தொடரும்..)

–    ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி முகுல் காட்கில், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (5.10.2021)

 

 

 

 

Leave a Comment