தேவி பூஜையின் சில வகைகள் 

1. கௌரி த்ரிதீயை அன்று (சித்திரை சுக்ல த்ரிதீயை) செய்யப்படும் தேவி பூஜை

1 அ. சைத்ரகௌரி காலம் மற்றும் அதன் மஹத்துவம்

1.  சைத்ர கௌரி காலத்தின் ஆரம்பம் சித்திரை வருடப்பிறப்பன்று துவங்குகிறது. அன்றைய தினம், வாயு தத்துவ ரூபமான சக்தி தத்துவம், சைதன்ய பிரவாஹமாய் ப்ரம்மாண்டத்திலிருந்து இந்த பூமண்டலத்திற்கு வருகிறது. சித்திரை வருடப்பிறப்பு துவங்கி கௌரித்ரிதீயை வரையுள்ள காலத்தில் நிற்குண ரூபமான ஆதி சக்தி, பாலத்திரிபுர ஸுந்தரியான குழந்தை நிலையில் சைதன்யமயமான சக்தி ப்ரவாஹமாய் பூமியை நிறைக்கிறாள்.  இந்த காலம் அதீத ஆனந்த மயமானது. இக்காலத்தில் சக்தி தத்துவம் வாயு தத்துவ ரூபமாக  இந்த ப்ரம்மாண்டத்தில் செயல்படுவதால் இக்காலம் மனதிற்கு மிகவும் ரம்மியமானதாக உள்ளது.

சித்திரை வருடப்பிறப்பன்று செய்யப்படும் கௌரி ஆவாஹனத்தால் சித்தசுத்தி ஏற்படுகிறது. அதன் மூலம் அவ்வருடம் முழுவதும் செய்யப்படும் காரியங்கள் தேஹ புத்தி இல்லாது செய்யப்படுவதால் அதிக பலனளிப்பதாக அதிக சிறப்பானதாக அமைகின்றன.  தேஹபுத்தி இல்லாது செய்யப்படும் காரியம் என்றால் ‘காரியம் செய்வது இந்த ஸ்தூல உடல் இல்லை, சித்தத்திலுள்ள சைதன்ய சக்தி மூலமாக காரியம் நடக்கிறது’ என்று ஆழ்மனதில் படிந்துள்ள ஸன்ஸ்காரத்தால் காரியம் நடப்பதாகும்.

2. வருட பிறப்பன்று செய்யப்பட்ட கௌரி ஆவாஹனத்தின் மூலம் நிர்மாணமான வாயு தத்துவ ரூபமான சக்தி பிரவாஹம் கௌரி த்ரிதீயை அன்று தேஜ தத்துவத்தால் அலங்கரிக்கப்படுகிறது. சக்தி தத்துவத்தின் இந்த தேஜ ரூபமான வெளிப்பாடு ஸம்பூரண ப்ரம்மாண்டத்தில் பரவுகிறது.  இதுவே சக்தி தத்துவத்தின் அற்புத தேஜோமயமான வெளிப்பாடு எனக் கூறுவர். இந்நிலையில் சக்தி தத்துவம் பாலத்ரிபுரசுந்தரி நிலையிலிருந்து  யவன குமாரி நிலைக்குச் செல்கிறது. இதன் அர்த்தம், சித்திரை மாத வருடாரம்ப காலத்தில் துவங்கி ஆதிசக்தி தத்துவத்தின் நிர்குண ரூபமான உற்பத்தி காரியம் சிறிது சிறிதாக ஸகுண நிலைக்கு வந்து தேஜ தத்துவத்தின் உதவியோடு உருவகமாகும் காரியம் கௌரி த்ரிதீயை அன்று ஆரம்பமாகிறது.

1 ஆ. கௌரி த்ரிதீயை அன்று தேவி பூஜை செய்வதால் ஏற்படும் பலன்:

கௌரி த்ரிதீயை அன்று செய்யப்படும் தேவி பூஜையால் தேஜ ரூபமான அணுக்கள் ஜீவனின் உடலில் ஸங்க்ரமித்து அதன் திறன் பரிணமிக்கிறது. அதாவது இந்தக் காலத்தில் பல உன்னதன ஜீவன்கள் மூலமாக புது காவியங்கள் உருவாகின்றன’- ஒரு வித்வான் (ஸத்குரு திருமதி அஞ்சலி காட்கில் மூலமாக 7.9.2006, பிற்பகல் 2.57)

2. ஹரிதாளிகா விரதத்தில் (ஆவணி சுக்ல  திரிதீயை)  செய்யப்படும் தேவி பூஜை

2 அ. மகத்துவம்

ஆவணி சுக்ல த்ரிதீயை அன்று சக்தி தத்துவ ப்ரவாஹம், சிவ தத்துவம் நிறைந்த தேஜ அணுக்களாக ப்ரம்மாண்டத்தில் வெளிப்படுகிறது. அதனால் தேவி பூஜை செய்யும் பெண்ணின் உடலில் சிவ-சக்தியின் ஒருங்கிணைந்த பலத்தால் அந்தந்த நிலையில் கிரியாசக்தி ஸங்க்ரமிக்கிறது.

2 ஆ. பலன்

உடலில் க்ரியா சக்தி சேருவதால் வருடம் முழுவதும் செயல்படக்கூடிய சக்தி கிடைக்கிறது. க்ரியாசக்தி அதிர்வலைகள் உடலில் சேருவதால் ஸ்தூல தேஹம், பிராண தேஹம் மற்றும் பிராணமய கோசம் தூய்மையாகிறது — ஒரு வித்வான் (ஸத்குரு திருமதி. அஞ்சலி காட்கில் மூலமாக 7.9.2006, பிற்பகல் 9.48)

3. விஜயதஸமி அன்று தேவி பூஜை செய்தல்

 3 அ. நவராத்திரியில் ஸரஸ்வதி பூஜை (அஷ்டமி அல்லது நவமி)

விஜயதஸமிக்கு முன்தினம் அதாவது நவமி அன்று ஸரஸ்வதி தேவி, படைத்தலோடு சம்பந்தப்பட்டவள் என்ற கண்ணோட்டத்தோடு பூஜை செய்ய வேண்டும்.  ஆனால் விஜயதஸமி அன்று ஸரஸ்வதி தத்துவம் அதிக அளவில் செயல்படும் ஸகுண தன்மையாக உருக்கொண்டு பின்பு செயலற்று லயமாகிறது. அதனால் அன்றைய தினம் ஸரஸ்வதி பூஜை முக்கியமாக செய்யப்பட வேண்டும்.

ஸரஸ்வதி தேவியை அஷ்டமி என்று ஆவாஹனம் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றுதான் ஸரஸ்வதி தத்துவம் பீஜ ரூபமாக உருவெடுக்கிறது. நவமி அன்று இது பூமண்டலத்தில் நிலைபெற்று செயல்பட ஆரம்பிக்கிறது. அதனால்தான் அன்று ஸகுண, உற்பத்தி ரூபமான ஸரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். வெளிப்பட்ட தேவியின் இந்த ஸ்வரூபத்தை நோக்கி அன்று பக்தர்கள் ஈர்க்கப்படுகின்றனர். விஜயதஸமி அன்று ஸரஸ்வதி, மறுபடியும் ஸகுணரூபத்தை தரிக்கிறாள். பின்பு செயல்படாத நிலைக்குச் சென்று லயமாகிறாள். அன்றே ஸரஸ்வதி மூர்த்தி விஸர்ஜனம் செய்யப்படுகிறது.

அஷ்டமி முதல் விஜயதசமி வரை சக்தி ரூபம் படைப்பாற்றலோடும் ஞானத்தோடும் மிளிர்கிறது. ஸ்ரீ ஸரஸ்வதியின் காக்கும் அதிர்வலைகளின் ஸ்பர்சத்தால் உபாஸகரின் ஆத்மசக்தி விழிப்படைந்து மடைதிறந்த வெள்ளமென படைப்பாற்றல் பெருகுகிறது. இத்தகைய ஞானப்பெருக்கால் அவருக்கு ஆனந்த அனுபவம் கிட்டுகிறது’ – ஒரு வித்வான் (ஸத்குரு திருமதி அஞ்சலி காட்கில் மூலமாக 7.9.2006, மாலை 4.20 – 6.32)

 3 ஆ. அபராஜித தேவியின் பூஜை

வன்னி மரம்

எங்கு வன்னி மரத்தின் பூஜை நடக்கிறதோ அங்கு தரையில் அஷ்டதள தாமரையை வரைந்து அங்கு அபராஜிதா  தேவியின் மூர்த்தி வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

1. பூமியில் அஷ்டதள கோலத்தை வரைந்து அதன் மீது அபராஜிதா  மூர்த்தியை வைப்பது என்பது அபராஜிதா  என்ற சக்தி தத்துவம் எட்டு திசைகளை வெற்றி கொள்ளும் திறன் உடையது என்பதைக் குறிக்கிறது. அபராஜிதா என்ற தேவியின் அழிக்கும் ஸ்வரூபம்  ப்ருத்வி தத்துவத்தின் உதவியோடு இந்த பூமண்டலத்தில் தோன்றி மனித குல நலனிற்காக செயல்படுகிறது. எட்டு இதழ் கொண்ட ஸிம்மாசனத்தில் வீற்றிருக்கும் இந்த த்ரிசூலதாரணி, சிவனுடன் சேர்ந்து கொண்டு, திக்பாலகர்கள் மற்றும் க்ருஹ தேவதைகளின் உதவியோடு அசுர சக்திகளை அழிக்கிறாள்.  எட்டு இதழ் ஆஸனத்தில் வீற்றிருக்கும் இந்த அபராஜிதா என்ற சக்தி தத்துவம் பக்தர்களின் பிரார்த்தனைக்கு இணங்க பூமியின் பூகர்ப்பத்திலிருந்து வெளிப்படும் பொழுது அவளை வரவேற்க அஷ்ட தேவதைகளும் அங்கு குழுமுகின்றனர். எட்டு இதழ்களின் நுனிகளும் இந்த அஷ்ட தேவதைகளைக் குறிக்கின்றன. அபராஜிதா தோன்றிய உடன் வெளிப்படும் அழிக்கும் அதிர்வலைகள் அஷ்ட தேவதைகள் மூலமாக எட்டு திசைகளிலும் சிவந்த ஆரஞ்சு வர்ண ஒளி அதிர்வலைகளாக பரவுகின்றன. அதனால் மூலை முடுக்கெல்லாம் சேர்ந்துள்ள ரஜ-தம தன்மையை அழிக்கின்றன. அதன் மூலம் பூமியில் மனிதர்கள் எந்தவித தங்குதடையுமின்றி தங்களின் காரியங்களை மேற்கொள்ள வாயு மண்டலத்தை சுத்தமாக்குகின்றன.

2.  வன்னிமர இலைகள் தேஜ தத்துவத்தை உன்னத முறையில் தக்க வைத்துக் கொள்வதால் வன்னி மரத்தின் அடியில் ஸ்ரீ துர்கா தேவியின் அபராஜிதா ரூபத்திற்கு பூஜை செய்தல் : வன்னி மரத்தின் கீழ் ஸ்ரீதுர்கா தேவியின் அபராஜிதா ரூபத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. வன்னி மர இலைகள், தேஜ தத்துவத்தை உன்னத முறையில் தக்க வைத்துக் கொள்ளும் திறன் படைத்தவை. அபராஜிதாவிலிருந்து நீரூற்றுபோல் வெளிப்படும் சக்தியை அதிக காலம் தக்க வைத்துக் கொள்ளும் திறன் வன்னி மர இலைகளுக்கு உண்டு. அதனால் வன்னி மர இலைகளை வீட்டில் பாதுகாத்து வைப்பதால் வருடம் முழுவதும் இந்த அதிர்வலைகளின் பயன் கிட்டுகிறது – ஒரு வித்வான் (ஸத்குரு திருமதி அஞ்சலி காட்கில் மூலமாக 28.9.2005, மாலை 6.18).

4. ஐப்பசி அமாவாசையில் (தீபாவளி அமாவாசை)  லட்சுமி பூஜை செய்தல்

4 அ. லக்ஷ்மி பூஜைக்கு முன்பாக அலட்சுமியை ஏன் வெளியேற்ற வேண்டும்?

புதிய துடைப்பத்தால் குப்பையை பெருக்கி அள்ளி வெளியே கொட்டுவதே அலக்ஷ்மியை வெளியேற்றுவதாகும். வீட்டில் உள்ள குப்பை என்பது ரஜ-தம தன்மையின் சின்னமாகும். எதில் ஸாத்வீக தன்மை சிறிதும் இல்லையோ, சைதன்யத்தின் பலன் சூன்யமோ அதை லக்ஷ்மி இல்லாதது  அதாவது அலஷ்மி என்று கூறுவர். நடு இரவில் அதிகபட்ச அளவு ரஜ-தம அதிர்வலைகள் வீட்டில் நிறைந்து இருப்பதால் அப்பொழுது குப்பையை அள்ளி வெளியே கொட்டுவதால் வீட்டில் வாஸ்துசுத்தி ஏற்பட்டு ஸாத்வீக அதிர்வலைகள் உள்ளே வருவது சுலபமாகிறது. பின்பு லஷ்மிபூஜை செய்வதால் உண்டாகும் சைதன்யத்தின் முழு பலனை பெற முடிகிறது – (ஒரு வித்வான், ஸத்குரு திருமதி அஞ்சலி காட்கில் மூலமாக 7.9.2006, பிற்பகல் 03.42)

4 ஆ. லஷ்மிக்கு எந்த பொருளை நைவேத்தியமாக அர்ப்பணிக்க வேண்டும்?

நெய்வேத்தியத்தில் லவங்கம், ஏலக்காய், பால் மற்றும் சர்க்கரை சேர்ந்திருக்க வேண்டும்.  இப்பொருட்களை ‘திரிகுண அவதாரம்’ என்பர். இப்பொருட்கள் ஜீவனின் மூன்று குணங்களை குறைக்கவோ அதிகப்படுத்தவோ உதவுகின்றன.

 4 இ. லஷ்மி பூஜை செய்வதால் ஏற்படும் நன்மை

அன்று ப்ரம்மாண்டத்தில் லஷ்மி தேவி மற்றும் குபேரனின் 30% தத்துவம் வெளிப்படுகிறது.  அன்று அவர்களை பூஜிப்பதால் ஜீவனின் பக்தியுணர்வு அதிகரிக்கிறது. மேலும் மூன்று மணி நேரம் அது நீடிக்கிறது. –  ஸ்ரீ கிருஷ்ணா (திருமதி பிரார்த்தனா பூவா மூலமாக 6.10.2005,  இரவு 3.05)

லக்ஷ்மிதேவியின் காக்கும் அதிர்வலைகளின் ஸ்பர்சத்தால் ஜீவனின் தேஹத்திலும் தேஹத்தை சுற்றியும் உள்ள ரஜ-தம அணுக்கள் அழிகின்றன. அதோடு பாதுகாப்பு கவசமும் ஏற்படுகின்றது – (ஒரு வித்வான் ஸத்குரு திருமதி அஞ்சலி காட்கில் மூலமாக, 9.9.2006, இரவு 8.09)

தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘தேவி பூஜையின் சாஸ்திரம்.’

 

 

Leave a Comment