அனைத்து ஸாதகர்களும் தங்களின் ரக்ஷை யந்திரத்தை தினமும் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்!
தற்போது கஷ்டங்கள் மிகக் கடுமையாக இருப்பதால், தீயசக்திகளால் ஸாதகர்களுக்கு உடலாலும் மற்றும் சூட்சும நிலையிலும் பாதிப்பு எற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஸாதகர்கள் எப்போதும் ரக்ஷை யந்திரத்தை தங்களுடனேயே வைத்திருக்க வேண்டும். இது தொடர்பான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஒரு வெற்று காகிதத்தில் மேலே உள்ள ரக்ஷை யந்திரத்தை நகல் எடுத்து, அதன் மையத்தில்,’நாம’ என்று எழுதப்பட்ட இடத்தில் உங்களின் பெயரை எழுதுங்கள்.
2. இந்த ரக்ஷை யந்திரத்தை சிறிய உலோகத்தாலான உருளை வடிவிலுள்ள ஒரு தாயத்தில் வைத்து எப்போதும் உடலை தொடும்படி சிவப்பு நூலில் கோர்த்து கழுத்திலோ அல்லது கையிலோ கட்ட வேண்டும்.
3. இந்த ரக்ஷை யந்திரத்தை ஸாத்வீக ஸனாதனின் ஊதுபத்தி ஏற்றி தினமும் தூய்மைப்படுத்த வேண்டும்.
4. இந்த ரக்ஷை யந்திரத்தை மாதவிடாய் காலத்தில் பெண் ஸாதகர்கள் தங்களுடன் வைத்துக் கொள்ளக்கூடாது (அணியக் கூடாது). மாதவிடாய் முடிந்த பிறகு ஸாத்வீக ஸனாதனின் ஊதுபத்தியால் தூய்மைப்படுத்தப்பட்டபின் அணிய வேண்டும்.
– (பராத்பர குரு) பாண்டே மஹராஜ், ஸனாதன் ஆச்ரமம், பன்வேல். (30.08.2018)
ஸாதகர்களே, காலத்திற்கேற்ற ஸாதனை ரூபமாக ராமராஜ்ய ஸ்தாபனத்திற்காக “ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம’ என்ற நாமஜபத்தை செய்யுங்கள்!
கண் திருஷ்டியினால் ஒரு நபர் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான அறிகுறிகள்
கண் திருஷ்டி என்பதன் பொருள் மற்றும் அதனால் பாதிக்கப்படும் செயல்பாடு
ஒரு நபர் எதிர்கொள்ளும் ஆன்மீக பிரச்சனைகளை ஆன்மீக நிலையில் செய்யப்படும் நிவாரணங்கள் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும்!
‘இரு உள்ளங்கைகளின் ஒருங்கிணைந்த முத்திரை’ செய்து உடலிலுள்ள கஷ்டம் தரும் சக்தியின் ஆவரணத்தைக் களையும் வழிமுறை!
கண் திருஷ்டியை அகற்றும் முறையை மனதளவில் எவ்வாறு செய்வது