உலகில் தொற்றை பரவச் செய்த ‘கொரோனா விஷத்தொற்று’க்குப் பின்னர் இப்போது பரவும் ‘ஓமிக்ரான் விஷத்தொற்றுடன் ஆன்மீக நிலையில் போராட இந்த நாமஜபத்தை செய்யவும்!

Article also available in :

‘வருடம் 2020 முதல் உலகெங்கும் மக்களிடையே ‘கொரோனா விஷத்தொற்று’ என்ற சங்கடம் உள்ளது மற்றும் 2 வருடங்கள் ஆகியும் இன்றும் மக்கள் அதனால் பீடிக்கப்படுகின்றனர். இன்று கொரோனாவின் புது விதமான ‘ஓமிக்ரான்’ என்ற பெயருடைய விஷத்தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. கொரோனா விஷத்தொற்றுடன் ஆன்மீக நிலையில் போராட எந்த நாமஜபத்தை செய்ய வேண்டும் மற்றும் எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற விவரங்களும் இந்த நாமஜபத்தின் ஒலிநாடாவும் ஸனாதன் ஸன்ஸ்தாவின்  ‘Sanatan.org’ என்ற வலைதளத்தில் தரப்பட்டிருந்தது. இதன் மூலம் உலகெங்கும் பலர் பயனடைந்தனர். இன்று ஓமிக்ரான் விஷத்தொற்றுடன் ஆன்மீக நிலையில் போராட நாம் செய்ய வேண்டிய நாமஜபம் பற்றிய விவரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

ஸத்குரு (டாக்டர்) முகுல் காட்கில்

1. நாமஜபம்

‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஸ்ரீ துர்காதேவ்யை நம: | ஸ்ரீ ஹனுமதே நம: | ஓம் நம: சிவாய | ஓம் நம: சிவாய |’ ஆகிய 5 நாமஜபங்களும் ஒருங்கிணைந்து ஒரு நாமஜபமாகிறது. இந்த நாமஜபத்தை இதே வரிசைப்படி அவ்வப்பொழுது கூற வேண்டும்.

 

2. நாமஜபத்தின் கால அளவு

அ. ஓமிக்ரான் என்ற விஷத்தொற்று எந்த இடத்தில் பரவுகிறதோ அங்கு மக்கள் அதற்கு பலியாகின்றனர். இது போன்ற சமயத்தில் அந்த விஷத்தொற்று நமக்கு ஏற்படாமல் இருக்க இந்த நாமஜபத்தை தினமும் 1 மணி நேரம் செய்ய வேண்டும்.

ஆ. அந்த விஷத்தொற்று ஏற்பட்டு விட்டால் அது நீங்குவதற்கு இந்த நாமஜபத்தை அதன் தீவிரத்திற்கேற்ப கீழே கொடுக்கப்பட்டுள்ள கால அளவிற்கு தினமும் செய்ய வேண்டும்.

 

விஷத்தொற்றின் தீவிரம் நாமஜபத்தின் கால அளவு (மணி)
1.    மந்தம் 1 முதல் 2
2.    மத்யமம் 3 முதல் 4
3.    தீவிரம் 5 முதல் 6

 

3. நாமஜபத்தின் ஒலிநாடா

நாமஜபத்தைக் கேட்டு பிறகு ஜபிப்பதற்கு அதன் ஒலிநாடாவைக் கேளுங்கள்…

 

 

‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஸ்ரீ துர்காதேவ்யை நம: | ஸ்ரீ ஹனுமதே நம: | ஓம் நம: சிவாய | ஓம் நம: சிவாய |’

 

4. ‘கொரோனா விஷத்தொற்று’ மற்றும்
‘ஒமிக்ரோன் விஷத்தொற்று’ இடையே உள்ள வித்தியாசம்

கொரோனா விஷத்தொற்றைக் காட்டிலும் ஓமிக்ரான் விஷத்தொற்று குறைந்த அளவே பாதிப்பை ஏற்படுத்துகிறது என நவீன மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனா விஷத்தொற்று ஓமிக்ரான் விஷத்தொற்று
1.    சூட்சுமத் தன்மை அதிக சூட்சுமம் குறைந்த அளவு சூட்சுமம் (குறிப்பு)
2.    இது ஏற்பட்டிருந்தால் உடலில் ஏற்படும் லட்சணங்கள் ஜுரம், சளி மற்றும் இருமல் ஜீரண சக்தியில் பாதிப்பு
3.    லட்சணங்கள் உடனே கவனத்திற்கு வருதல் / வராதிருத்தல் லட்சணங்கள் உடனே கவனத்திற்கு வருவதில்லை லட்சணங்கள் உடனே கவனத்திற்கு வருதல்

குறிப்பு – ஆபத்துக்காலத்தின் தீவிரம் அதிகமாகும்போது எப்படி தீய சக்திகளுடனான யுத்தம் சூட்சும யுத்தத்திலிருந்து ஸ்தூல யுத்தத்தை நோக்கி (மூன்றாம் உலக யுத்தம்) முன்னேறுகிறதோ அதேபோல் உடல் நோய்களை உண்டாக்கும் விஷத்தொற்று ரூபமான தீய சக்திகளும் சூட்சுமத்திலிருந்து ஸ்தூலத்தை நோக்கி செல்கிறது. அதன்படி கொரோனா விஷத்தொற்றைக் காட்டிலும் ஓமிக்ரான் விஷத்தொற்று குறைந்த அளவே சூட்சுமமானது.

 

5. பிரார்த்தனை

‘இங்கு கொடுக்கப்பட்டுள்ள நாமஜபம் குருவருளால் உலகெங்கும் உள்ள அனைவருக்கும் பயனளித்து ஒமிக்ரான் விஷத்தொற்றின் தாக்கம் உலகெங்கும் குறைந்து அது பரவுவதும் நிற்க வேண்டும், அதோடு இந்த நாமஜபம் செய்வதன் மூலம் பலருக்கு இந்த ஆபத்துக்காலத்தில் ஸாதனை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் கவனத்திற்கு வந்து அவர்களும் ஸாதனை செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்பதே ஸ்ரீ குருசரணங்களில் செய்யப்படும் பிரார்த்தனை!’

 

6. ஸாதகர்களுக்கான குறிப்புகள்!

1. எந்தப் பகுதிகளில் ஓமிக்ரான் நோயாளிகள் உள்ளனரோ அங்கு ஓமிக்ரான் விஷத்தொற்றை ஆன்மீக நிலையில் தடுப்பதற்கு உரிய நாமஜபம் செய்ய வேண்டும் என்பதால் தற்போது கொரோனாவை எதிர்த்து சக்தி தரும் நாமஜபமான ஸ்ரீ துர்கா-ஸ்ரீ தத்த -சிவன் என்ற ஒருங்கிணைந்த நாமஜபத்தை நிறுத்தி விடலாம். எங்கு ஓமிக்ரானின் பாதிப்பு இல்லையோ அங்கு தொடர்ந்து கொரோனா எதிர்ப்பு சக்தி தரும் நாமஜபத்தை செய்து வரலாம்.

2. ஓமிக்ரான் மற்றும் கொரோனா ஆகியவற்றை எதிர்த்து ஆன்மீக பலத்தைத் தரும் நாமஜபத்தை செய்து முடித்த பின்னர் மற்ற சமயங்களில் ஸாதகர்கள் இப்போது பிராணசக்திஓட்ட வழிப்படி கண்டுபிடிக்கப்பட்ட எந்த நாமஜபத்தை செய்கிறார்களோ அதையே தொடர்ந்து செய்யலாம்.

3. இதற்கு முன்பே ‘நிர்விசார்’, ‘ஓம் நிர்விசார்’ மற்றும் ‘ஸ்ரீ நிர்விசாராய நம:’ ஆகிய நாமஜபங்களைப் பற்றிய குறிப்புகள் எல்லா ஸாதகர்களுக்கும் தெளிவாக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த நாமஜபங்களைத் தொடர்ந்து செய்து வரலாம்.

– ஸத்குரு (டாக்டர்) முகுல் காட்கில், பிஹெச்.டி., கோவா. (7.12.2021)

Disclaimer : At the outset, Sanatan Sanstha advises all our readers to adhere to all local and national directives to stop the spread of the coronavirus outbreak (COVID-19) in your region. Sanatan Sanstha recommends the continuation of conventional medical treatment as advised by medical authorities in your region. Spiritual remedies given in this article are not a substitute for conventional medical treatment or any preventative measures to arrest the spread of the coronavirus. Readers are advised to take up any spiritual healing remedy at their own discretion.
 

Leave a Comment